



துபாயில் உள்ள அழகிய தீவுகள் கடலில் மூழ்கி வருகின்றன. எண்ணை வளம்மிக்க துபாய் நாடு பல அழகிய தீவுகளால் ஆனது. இந்த தீவுகளில் தான் பிரமாண்டமான நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என உள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக இங்குள்ள கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
எனவே இங்குள்ள பல அழகிய தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. தீவுகளில் உள்ள மணல் அதாவது நிலப்பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன்வசம் உள் இழுத்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் துபாயின் பெரும்பாலான தீவுகள் கடலில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீவுகள் கடலில் மூழ்கி வருவதால் அங்கு தொழில் தொடங்க கோடீஸ்வரர்கள் தயங்குகின்றனர். ஏற்கனவே, இங்கு நடத்தி வரும் தொலை நிறுவனங்களில் முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.