Monday, January 17, 2011

பாகிஸ்தானில் 18 பெட்ரோல் லாரிகளுக்கு தீ வைப்பு; தலிபான் தீவிரவாதிகள் அட்டூழியம்


ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் முகாமிட்டுள்ளனர். இவர்களின் வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தேரா முராத் ஜமாலி அருகே உள்ள பெட்ரோல் “பங்க்”களில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. நேற்று அங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டன. 

அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் அந்த டேங்கர் லாரிகள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் பெட்ரோல் ஏற்றி வந்த 18 லாரிகள் தீ பிடித்து எரிந்தன. தூரத்தில் நிறுத்தி வைத்திருந்ததால் 2 லாரிகள் சேதமின்றி தப்பின. இச்சம்ப வத்துக்கு தலிபான்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர். துப்பாக்கி ஏந்திய 8 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். 

அதில் பன்னாட்டு படை டேங்கர் லாரியின் டிரைவர் ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டதாகவும் தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அசாம் தாரிக் கூறியுள்ளார். வசிரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இதை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF