Tuesday, January 4, 2011

சிலியில் பாரிய பூமியதிர்ச்சி


சிலியின் மத்திய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதால், மின்சாரம் மற்றும் தொலைபேசித் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இப்பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளது. டெமுகோவின் வடமேற்கு பகுதியிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவிலேயே இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுனாமி ஏற்படுமென்று அச்சமடைந்த கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் எதுவும் இல்லையெனத் தெரிவித்த சிலியின் தேசிய அவசர முகவர் நிலையம், இப்பூமியதிர்ச்சியில் ஏற்பட்ட சேதவிபரங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லையென குறிப்பிட்டது. இந்நிலையில், தொலைபேசித் தொடர்புகளும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சிலியின் தேசிய அவசர முகவர் நிலையம் தெரிவித்தது.
சுனாமி அபாய எச்சரிக்கை இல்லாத நிலையில், வீடுகளிலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அவர்களது வீடுகளுக்கு திரும்பிச்செல்லுமாறு தாம் கூறியுள்ளதாக சிலியின் தேசிய அவசர முகவர் நிலையத்தின் பணி;ப்பாளர் தெரிவித்தார்.
இதேபகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்பட்டிருந்த பாரியளவிலான பூமியதிர்ச்சியில் 400 பொதுமக்கள் பலியாகியிருந்ததுடன், இப்பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவாகியிருந்தது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF