Wednesday, January 12, 2011

Apple iPad ஐ வீழ்த்துமா Blackberry PlayBook?



BlackBerry , RIM (Research In Motion) எனப்படும் கனேடிய நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் 1976 இல் கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.
ஆரம்பத்தில் தனியே கணணி துறையில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் காலப்போக்கில் iPod, iPhone மற்றும் இறுதியாக iPad என தனது சிறு எல்லையை சாம்ராஜ்ஜியமாக விரிவுபடுத்திக்கொண்டது. ஆனாலும், மறுபக்கத்தில் இதற்கெல்லாம் நான் சளைத்தவன் இல்லை என்பது போல் BlackBerryயும் தனது சேவையை மேம்படுத்திக்கொண்டு வந்தது. இதற்க்கு உதாரணமாக iPhone க்கு நிகராக இல்லை என்றாலும் அதற்க்கு போட்டியாக Blackberryயின் BlackBerry Torch, BlackBerry Bold மற்றும் BlackBerry Curve ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இதுவரை தன்னை வென்று கொண்டு வந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக, குறிப்பாக சொல்லப்போனால் ஆப்பிள் இறுதியாக அறிமுகப்படுத்திய iPad க்கு போட்டியாக RIM ஏவ இருக்கும் பிரமாஸ்திரம்தான் BlackBerry PlayBook. இது BlackPad மற்றும் BlackBerry iPad எனவும் செல்லமாக அழைக்கபடுகிறது. iPadல் இல்லாத பல தொழில்நுட்ப வசதிகளை PlayBook கொண்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தவிருக்கும் இதன் விலை $350 க்கும் $500 க்கும் இடையில் இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
iPad மற்றும் PlayBook பற்றிய ஒரு ஒப்பீடு.
அளவீடு
iPad (9 inch,0,5, 1.5 pound) உடன் ஒப்பிடும் போது நீளம் , தடிப்பு மற்றும் நிறை ஆகிய மூன்றிலும் PlayBook (7 inch, 0.4, 0.9 pound) முன்னிலை வகிக்கின்றது.
Processor திறன்
இதுவரை ஆப்பிள் பயன்படுத்திவருவது A4 என்னும் processor. PlayBook இதற்க்கு ஒரு படி அல்ல ஒரு தலைமுறை முன்னுள்ள (Generation Forward) ARM Cortex A9 என்னும் processor ஐ பயன்படுத்தியுள்ளது.
Camera
iPad குறைந்தது VGA தரமுள்ள முகத்திரை கூட இல்லை. ஆனால் PlayBook, முன்பக்கம் 3MP, இது காணொளி மூலமான தொடர்பாடல்களுக்கும்(Video Conferencing Calls), பின் பக்கமுள்ள 5MP, புகைப்படம் எடுப்பதற்க்கும் பயன்படும். முதன்முறையாக 1080p காணொளி எடுக்கும் வசதி கொண்ட smartphone ஆக PlayBook வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ PlayBook க்கு போட்டியாக ஆப்பிள் தனது 2 வது தலைமுறை iPad தயாரிக்கும் வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. யாரை யார் வெல்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF