உலக புகழ் பெற்ற தலைவர்களுக்கு சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா பரிசு பொருட்களை அன்பளிப்பாக வழங்குவது வழக்கம்.இந்நிலையில் அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ரூ.3 1/2 கோடிக்கும் அதிகமான பரிசு பொருட்களை வழங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவற்றை தங்கம், வைரம், வைடூரியம் போன்ற விலை உயர்ந்த ரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் மற்றும் பொருட்களாக வழங்கி இருக்கிறார்.
ஒபாமா பதவி ஏற்று முதலாம் ஆண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து அவருக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் இவற்றை கொடுத்துள்ளார். அதில் ஒபாமாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கு மட்டும் ரூ. 1.5 கோடிமதிப்புள்ள ஆடம்பர வைரங்களை கொடுத்துள்ளார்.
ஒபாமாவின் மனைவி மிச்சேலுக்கு ரூ. 90 லட்சம் மதிப்புள்ள ரூபி மற்றும் வைர நகைகளை பரிசாக அளித்துள்ளார். மேலும் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட பேரிச்சை மரங்கள், ஒட்ட கங்கள், கடிகாரங்கள் போன்றவையும் வழங்கப்பட் டுள்ளது. ஒபாமாவின் மகள்கள் சாஷா, மலியா ஆகியோருக்கு ரூ. 6 லட்சம் மதிப்புள்ள வைர கம்மல்கள், நெக்லஸ் நகைகளும், வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விலை உயர்ந்த கை கடிகாரங்கள், பிரேஷ்லெட்டுகள் மற்றும் பேனாக்களையும் மன்னர் அப்துல்லா வழங்கியுள்ளார்.
இந்த தகவலை சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது.