Tuesday, January 4, 2011
கிரிடிட் கார்டுகளைப் பயன்படுத்தி 14 மில்லியன் ரூபா மோசடி
அதிநவீன மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி ஏ.டி.எம் களிலிருந்து பணத்தை எடுத்துவந்த இரு சந்தேகநபர்களை இலங்கை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் கைது செய்துள்ளதாம்.
இம்மோசடியில் மொத்தமாக 4 பேர் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இலங்கையிலுள்ள ஏ.டி.எம் நிலையங்களில் தமது அதிநவீன மின்னணு சாதனங்களைப் பொருத்துவதன் மூலம் இவர்கள் 4 பேரும் ஏ.டி.எம் இலிருந்து பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி வந்தனர்.
இத்தகவல்கள் பின்னர் இத்தாலிக்கு அனுப்பப்பட்டன. அங்கு மேற்படி தகவல்களைப் பயன்படுத்தி போலியான ஏ.டி.எம் கார்டுகள் தயாரிக்கப்பட்டு அவை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இந்த ஏ.டி.எம் கார்டுகளைப் பயன்படுத்தி 4 சந்தேகநபர்களும் பணத்தை எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நால்வரில் இருவரே தற்போது கைதாகியுள்ளனர். அடுத்த இருவரும் ரோமானிய வழி வந்தவர்கள் என நம்பப்படுகிறது. இம்மோசடி குறித்த மேலதிக விசாரணைகளைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF