Tuesday, January 4, 2011

இன்று இரவு அதிசயம் வானில் இருந்து கொட்டும் விண் எரி கற்கள் இந்திய விஞ்ஞானிகள் தகவல்


வானில் இருந்து இன்று இரவு விண் எரி கற்கள் கொட்டும்" என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல 100 ஆண்டுகளுக்கு முன்பு சிதைந்த வால்நட்சத்திரங்கள் வானில் விண் எரிகற்களாக உலா வருகின்றன. இவை பாறைகள், உலோக துகள்கள் மற்றும் பனிக்கட்டிகள் அடங்கிய கலவையாகும். 

இந்த வால்நட்சத்திரங்கள் வியாழன், செவ்வாய் கிரகங்களுக்கு இடயே சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் சில விண் எரிகற்கள் விண்வெளியை கடந்து பூமிக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும்போது புவிஈர்ப்பு விசையால் ஊராய்வுக்குட்பட்டு எரிந்து சாம்பலாகின்றன. 

இது ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஒரே நேரத்தில் அதிகமான விண் எரிகற்கள் பூமிக்குள் நுழைகின்றன. இப்படி நுழையும் விண் எரிகற்கள் எரிந்து மழையாக கொட்டுகின்றன. இந்த அரிய காட்சி இந்த ஆண்டு இன்றும், நாளையும் (செவ்வாய்க் கிழமை) அதிக அளவில் நடக்க இருப்பதாக இந்திய வானியியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான விண்கற்கள் எரிந்து விழ உள்ளன. அவை மணிக்கு சராசரியாக 40 முதல் 60 கற்கள் வரை எரிந்து விழ வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எரிந்து விழும் விண் எரிகற்களை இரவில்தான் தெளிவாக காணமுடியும். இன்று அமாவாசை என்பதால் அவற்றை மக்கள் தெளிவாக கண்டுகளிக்க முடியும்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF