இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர வருவாய் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒருலட்சம் ரூபாய்க்கு நனோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்தது. அடுத்தக்கட்டமாக தண்ணீரில் ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் முதல் கட்டமாக 75 கோடி ரூபாயை முதலிடு செய்துள்ளார்.
தண்ணீரில் ஓடும் காரை வெற்றிகரமாக தயாரிக்க அமெரிக்க தொழில் நுட்பம் ஒன்றை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி எத்தகைய தண்ணீரிலும் கார் இயங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. தண்ணீரில் ஓடும் காரின் விலை எவ்வளவு என்று இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை. என்றாலும் சர்வதேச கார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கும் வகையில் விலை இருக்கும் என்று கூறப்படுகிறது.
2011- ம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே டாடா நிறுவனத்தின் தண்ணீரில் ஓடும் கார் தயாரிப்புக்கு உலக அளவில் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.