Saturday, January 1, 2011

அமெரிக்க நீர்மூழ்கி கப்பலில் இன்று முதல் புகைக்க தடை



அமெரிக்க கடற்படையில் 73 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவற்றில் 13 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர் சிகரெட் பிடிக்கும்  பழக்கம் உடையவர்கள். வீரர்களின் சிகரெட் புகையை, நீர்மூழ்கி கப்பல்களில் உள்ள காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் சுத்தம் செய்துவிடும்.

அப்படியிருந்தும் நீர்மூழ்கி கப்பல் களுக்குள் காற்றை சோதனை செய்தபோது, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மாசு அதிகம் இருந்தது. இதனால் சிகரெட் புகைக்காத 60 சதவீத வீரர்கள் பாதிக்கப்படும் அபாயம்  உள்ளது தெரிய வந்தது.

இதைத் தவிர்க்க அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களில் புத்தாண்டு (இன்று) முதல் புகைபிடிக்க தடை விதிப்பதாக நீர்மூழ்கி கப்பல்களின் கமாண்டர் வைஸ் அட்மிரல் ஜான் டோன்லி  உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ராணுவ வளாகத்தில் புகை பிடிப்பதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.

அதற்கு பின் இப்போது,நீர்மூழ்கி கப்பலுக்குள் புகைப்பி டிக்க தடை விதிக்கப்படுகிறது. புத்தாண்டில் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள் குவியத் தொடங்கியுள்ளன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF