Friday, December 31, 2010

கூகுளை முந்தியது பேஸ்புக்


இணையதள ஜாம்பவனான கூகுள் சர்ச் இஞ்ஜினை முந்தி முதன்முறையாக பேஸ்புக் சாதனை படைத்துள்ளது. அமெரி்க்காவில், கூகுள் சர்ச் இஞ்ஜினைக் காட்டிலும் பேஸ்புக் இணையதள‌த்தை அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.
இது குறித்து எக்ஸ்பீரியன் ஹிட்வைஸ் நிறுவனம் ‌நடத்திய கருத்துக்கணி்ப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஜனவரி முதல் நவம்பர் மாத வரையிலான காலகட்டத்தில், சமூகவலைத்தளங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது. கூகுள் பயன்பாடு இரண்டாம் இடத்திலும் (7.2 சதவீதம்), யாகூ மெயில் 3.52 சதவீதம், யாகூ 3.30 சதவீதம், யூடியூப் 2.65 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில், 400 மில்லியன் மக்கள் பேஸ்புக் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்


இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.
நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது.
மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.
டென்ஷன் அதிகமாகும்போது நம்மால் சிறிய வேலையைக் கூட சரியாக செய்யமுடிவதில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன. இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.
நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.
நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம். வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது. உள் மனம் சக்தி வாய்ந்தது – ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது. வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.
உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது? அப்படித்தான் நம் உள்மனமும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

3D ஐபோன்கள் விரைவில் அறிமுகம்


கண்ணாடிய அணிய அவசியமில்லாத 3டி ஐபோன்களை தயாரித்து விற்பனைக்கு விடஉள்ளது ஆப்பிள் நிறுவனம்.
தற்போதுள்ள 3டி வீடியோக்களும், படங்களும் பார்ப்பதற்கு அதற்கான பிரத்யேக கண்ணாடிகள் அவசியம் தேவை.
தற்போது ஆப்பிள் நிறுவனம் அதற்கான திரைகளை தயாரித்து அதன்வழியாக படங்களை காண்பிக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ஹாலோகிராம் சங்கேத குறியீடுகளை உபயோகித்து சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் ஐபோனிலும், கம்ப்யூட்டரிலும்பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இரண்டு தலை பாம்புகளின் வாழ்க்கை போராட்டம்

இதுவரை நாம் கண்டிராமல் இருந்தாலும் உலகில் அதிகமாக இரண்டுதலையுடன் காணப்படும் விலங்கினம் இரண்டுதலை பாம்புகளே!
இரண்டு தலை இருந்தாலும் உடலிலில் உள்ள மற்ற உறுப்புகள் யாவும் ஒன்றே.
கரு உருவாகும் போதே இரண்டும் தனி தனியாகவே பிறப்பதற்கு முயற்ச்சிக்கும் ஆனால் இரண்டாக பிரிவதற்கு முன்பாகவே பிறந்துவிடும் ஆகவே இரண்டு தலையும் ஒரு உடலும் இருக்கும்.
இரண்டு தலைகளும் ஒரு உடலை பெற்றிருந்தாலும் இரண்டு தலைகளுக்குமே தெரியாது தாங்கள் இரட்டையர்கள் என்று.
உணவு உண்ணும் போது ஏதேனும் ஒரு தலையால் மட்டுமே உண்ணமுடியும், ஆனால் மற்ற தலையின் பசியும் காணமல் போய்விடும் அதனால் உணவு உட்கொள்ளாத தலைக்கு குழப்பம் ஏற்படும். ஆனால் உணவுக்காக வேட்டையாடும் பொழுது இரண்டு தலையும் வேட்டையாடும்.
உணவு உண்ணும் பொழுது மட்டுமல்ல குழப்பம், தான் போகும் பாதையை முடிவு செய்வதில் கூட குழப்பம் ஏற்படும், அதில் எது பலமானதாக இருக்கிறதோ அது மற்ற தலையுடைய பாம்பையும் தன்னுடனே இழுத்து செல்லும்.
எதிரி பாம்புகளை காணும் பொழுது பாம்பின் ஒரு தலை தப்பித்து கொள்ள நினைத்தாலும், மற்ற தலையானது சண்டையிட முயற்ச்சிக்கும், எனவே இறுதியில் மரணமே ஏற்படும். எனவே தான் காடுகளில் இரண்டு தலை பாம்புகளை காண்பது அரிது.
இரண்டுதலை பாம்புகள் சுமார் இருபது வருடம் வரை வாழும் திறனுடையது, அதைபோன்று இரண்டு தலை பாம்புகளின் வலது தலை தான் முடிவுகளை எடுக்கும் திறனுடையது, அதாவது எந்த உணவை உண்பது, எந்த பாதையில் செல்வது போன்ற முடிவுகளை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களால் வண்ணமயமாகியுள்ள உலகின் முக்கிய நகரங்கள்


புத்தாண்டை வர்ணமயமான வாண வேடிக்கைகளுடனும் மகிழ்ச்சி ஆரவாரங்களுடனும் வரவேற்பதற்காக இலட்சக்கணக்கான மக்கள் சிட்னி "ஹாபர் பிரிட்ஜ்' ஜில் கூடியுள்ளனர்.
அத்துடன் கண்களைக் கொள்ளை கொள்ளும் வர்ணமயமான அலங்காரங்களுடன் புத்தாண்டை வரவேற்பதில் உலகளவில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற அதீத ஆர்வத்துடன் அவுஸ்திரேலியர்கள் "ஹாபர் பிரிட்ஜ்'ஜை அலங்கரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டு மலரும் நேரத்தில் குறைந்தது 15 இலட்சம் பேர் இங்கு குழுமியிருப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆசியாவிலும் களைகட்டியுள்ள நிலையில் வியட்நாம் முதல் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.அமெரிக்கா கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவிக்கின்ற நிலையிலும் நியூயோர்க்கின் ரைம்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு வேளையில் சுமார் 10 இலட்சம் பேர் கூடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாமியர்களின் லுனார் வருடப் பிறப்பையே வழமையாகக் கொண்டாடி வருகின்ற போதும் மேற்குலக கலாசாரத்தின் செல்வாக்கு இங்கு அதிகரித்துள்ளதன் காரணமாக இம்முறை புதுவருடக் கொண்டாட்டங்கள் களை கட்டுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பொருளாதார நெருக்கடி நிலையை மறந்து புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஐரோப்பியர்களும் மூழ்கியுள்ள நிலையில் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களில் புத்தாண்டை மிகக் கோலாகலமாக வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்தேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

"சிலோன்' இனி "ஸ்ரீலங்கா'



"சிலோன்' இனி "ஸ்ரீலங்கா' என்று அழைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது, "சிலோன்' என்றும், "ஸ்ரீலங்கா' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அரசு ஆவணங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வெவ்வேறு பெயர்களே குறிப்பிடப்பட்டு வருகின்றன.

மின்சார வாரியம், "சிலோன் மின்சார வாரியம்' என்றும், பெட்ரோலிய நிறுவனம், "சிலோன் பெட்ரோலிய நிறுவனம்' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிலோன் என்ற பெயரை அனைத்து ஆவணங்களிலும் ஸ்ரீலங்கா என்று ஒரே பெயராக மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிரிட்டிஷ் ஆட்சி காலத்திற்கு முன்பு ஸ்ரீலங்கா "செய்லாவோ' என்று அழைக்கப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்த பெயர் மருவி "சிலோன்' ஆனது. விடுதலைக்குப் பின்னர், குடியரசானதும், "சிலோன்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. தற்போது, ஸ்ரீலங்கா, சிலோன் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது.

இதனை மாற்றி ஸ்ரீலங்கா என்று ஒரே பெயராக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இனி அனைத்து ஆவணங்களிலும், ஸ்ரீலங்கா என்றே அழைக்கப்படும். சிலோன் என்ற பெயரில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பெயரும் விரைவில் மாற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, December 30, 2010

இன்டர்நெட் மற்றும் "டிவி'யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து


குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் "டிவி' மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள
குறைவான நேரமே செலவிடுகின்றனர்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் உள்ள சவுத் கலிபோர்னியா பல்கலை சார்பில், "நவீன தொழில்நுட்ப காலத்தில் குடும்ப உறவுகளின் நிலை' குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 57 சதவீத வீடுகளில் இன்டர்நெட் பயன்படுத்தவும், 60 சதவீத வீடுகளில் "டிவி' பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது.

ஆய்வுக்குழுத் தலைவர் மைக்கேல் கில்பர்ட் இதுகுறித்து கூறியதாவது: தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது, பெரும்பாலான பெற்றோர்கள் "டிவி' மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதும், அமெரிக்க சிறுவர்கள் உண்மையான நண்பர்களை விட, ஆன்-லைன் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் தெரிந்தது.

"டிவி' மற்றும் இன்டர்நெட் காரணமாக, சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. அவர்களின் விளையாட்டு நேரமும் குறைகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக தங்களுக்குள் பேசிக்கொள்வதும் குறைந்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டுகளில், சிறுவர் சிறுமியர் ஒரு நாளில் நான்கு மணிநேரம் தங்கள் பெற்றோருடன் செலவிட்டனர். இப்போது, இரண்டு மணிக்கும் குறைவான நேரமே ஒதுக்குகின்றனர்.

இதனால், குடும்ப உறவுகள் பலவீனமடைகின்றன; தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆன்-லைன் வீடியோ கேம்ஸ் மற்றும் சமூக வலைதளங்கள் தான் இதற்கு முக்கிய காரணம். நவீன தொழில்நுட்பத்தால், குடும்ப உறவுகள் பலப்படுவதற்கு மாறாக, பலவீனமடைந்து வருகின்றன. அதேசமயம், செல்போன் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் தங்களுக்கு பெரும் உதவிபுரிவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறினர். இவ்வாறு மைக்கேல் கில்பர்ட் கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்” விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு



நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஆய்வு நடத்தினார்கள்.

அவர்கள் புதிய “சிப்” ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் கம்ப்யூட்டரை அதிவேகமாக செயல்பட வைக்க முடியும். பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பிராசசர் மைக்ரோ “சிப்”பில் பொதுவாக 2 அல்லது 4 பாகங்கள் இருக்கும் சில “சிப்”களில் 16 பாகங்கள் வரை இருக்கும்.

இப்போது விஞ்ஞானி கள் உருவாக்கியுள்ள மைக்ரோ “சிப்”பில் 1000 பாகங்களை உருவாக்க முடியும். இதனால் இந்த கம்ப்யூட்டர் தற்போதைய கம்ப்யூட்டரைவிட 20 மடங்கு வேகமாக வேலை செய்யும். இது பெர்சனல் கம்ப்யூட்ட ராக இருந்தாலும் அதிநவீன கம்ப்யூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

இந்த கம்யூட்டர் இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க



இணைய இணைப்பில் பிரச்சனைகள் உருவாகும் போது அவற்றை ஒவ்வொன்றாக கண்டறிந்து தீர்த்துக்கொள்வது சற்றே
கடினமான பணியாகும். இதைவிட இணைய இணைப்பில் பிழைகளை ஏற்படுத்தும் பொதுவான விடயங்களை ஒரே கிளிக்கில் கண்டறிந்து அதற்குரிய தீர்வை காண்பதென்றால் இலகுதான். அதற்கு உதவும் ஒரு டூல் Complete Internet Repair என்பதாகும்.
இந்த டூலை நிறுவியதும் திறக்கும் பிரதான விண்டோவில் இன்ரநெட் கனெக்ஸன் தடைப்படுவதற்கான IP conflicts, ping supplied DNS servers, flush DNS, check hosts போன்ற காரணங்களை தொகுத்து அவற்றை திருத்துவதற்கான வசதியும் காட்டப்படுகிறது. இதில் நீங்கள் விரும்புவதை தேர்வு செய்யலாம்.
பின்னர் Go ஐ கிளிக் செய்ததும் இணைய இணைப்பு மீண்டும் கிடைக்கும். Error Log வசதியும் உண்டு.
டவுண்லோட் செய்ய Complete Internet Repair
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விண்டோஸ் 7 ஐ டூவீக் செய்ய ஒரு மென்பொருள்



விண்டோஸ் 7 இயங்குதளத்தை பாவிப்பவர்கள் தற்போது அதிகமானோர் இருப்பீர்கள்அவர்களுக்கு உதவும் வகையில் சன்ரைஸ் செவன் என்ற மென்பொருள் பற்றி பார்க்கலாம்.
Sunrise Seven  என்னும் மென்பொருள் விண்டோஸ் 7 இல் UAC, start menu, Explorer, பாதுகாப்பு மற்றும் பலவற்றை டுவீக் செய்ய உதவுகிறது.
ஒவ்வொரு பிரிவுகளும் நேர்த்தியாக தொகுக்கபட்டு பயன்படுத்த இலகுவாக இருப்பது இதன் சிறப்பாகும்.
70 வகையான start menu  அனிமேட்டட் பட்டன்களை கொண்டிருக்கிறது. இதன் மூலம் உங்கள் start menu  பட்டனை அழகாகா மாற்றிக்கொள்ள முடிகிறது.
OEM தகவல்களையும் இதன் மூலம் மாற்றம் செய்ய முடியும். 

டவுண்லோட் செய்வதற்கு 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அடுத்தவர் கண்ணை குருடாக்கிய வாலிபரின் கண்ணை பறிக்க கோர்ட்டு உத்தரவு



ஈரான் நாட்டில் குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது வாலிபர் ஒருவரின் கண்ணை பறிப்பதற்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அந்த வாலிபரின் பெயர் அமீது. இவருக்கும் தாவூத் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அமீது, தாவூத் மீது “ஆசிட்”டை வீசினார். இதில் தாவூத்தின் முகம் முழுவதும் கருகி ஒரு கண் குருடானது. ஒரு காதும் சேதம் அடைந்தது. இது தொடர்பாக அமீதை கைது செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது.

நீதிபதி அஜீஸ் முகமது விசாரித்தார். அவர் தாவூத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதே போல அமீதுக்கும் பாதிப்பு ஏற்பட வேண்டும். எனவே அமீதுவின் ஒரு கண்ணை பறிக்க வேண்டும் ஒரு காதை துண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இலங்கையில் சீறிப் பாயப் போகும் அதி நவீன ரக சீன யுத்த விமானங்கள்!



JF -17 நவீன ரக பேர் விமானங்களை சீனா இலங்கைக்கு வழங்கவுள்ளதாக படைத்துறை இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் விலையுர்ந்த போர் விமானங்களுக்கு ஈடாக குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டவை இந்தப் போர் விமானங்கள்.

JF-17 ரகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் சீன உதிரிப்பாகங்களுடன் பாகிஸ்தானிலும் தயாரிக்கப்படவுள்ளன என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் F- 16 போர் விமானத்தின் முன்னைய வடிவமைப்புக்கு ஈடாகும் வகையில் JF-17 போர் விமானத்தை தயாரிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் போர் விமானம் 3.6 தொன் வெடிபொருட்களைச் சுமந்து செல்லக் கூடியது. ராடரில் வழிநடத்தப்படும் ஏவுகணைகளை செலுத்தும் வசதிகளையும் கொண்டது. மணிக்கு 2000கி. மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, December 29, 2010

ஐக்கிய அரபுக் குடியரசில் வேலை விசா விதிகளில் சிறிது தளர்வு



ஐக்கிய அரபு நாடுகள் எமிரேட், அடுத்தாண்டு முதல் அமல்படுத்த உள்ள புதிய வேலை அனுமதிச் சட்டப்படி, அங்குள்ள தொழிலாளர்களுக்கு விசா வழங்க ஏற்கனவே நடைமுறையில் இருக்கும். ஆறு மாத காலத் தடை ரத்து செய்யப்படும். ஐக்கிய அரபு நாடுகளில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

அங்குள்ள வெளிநாட்டவர்களில் ஏற்கனவே உள்ள வேலை அனுமதிச் சட்டப்படி, ஒரு தொழிலாளர், தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து இன்னொரு நிறுவனத்துக்குச் செல்ல வேண்டுமானால் அவருக்கு ஆறு மாத காலம் தடை விதிக்கப்படும்.ஆனால் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள, புதிய வேலை அனுமதிச் சட்டப்படி, அந்தத் தடை ரத்து செய்யப்படும்.

இதனால் தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து புதிய நிறுவனத்துக்குச் செல்ல உடனடியாக விண்ணப்பம் அனுப்பி, தனது வேலையை தொழிலாளர் மாற்றிக் கொள்ளலாம். இதற்குக் குறைந்தபட்சத் தகுதியாக, ஒரு தொழிலாளர் ஒரு நிறுவனம் அல்லது தொழில் வழங்குவோரிடம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும்.

இது குறித்து துபாய் வானொலியில் பேசிய அந்நாட்டு தொழிலாளர் துறை செயல் இயக்குனர் ஹூமைத் பின் டீமாஸ் கூறியதாவது:

இரண்டு ஆண்டுகள் ஒரு நிறுவனம் அல்லது வேலை வழங்குவோரிடம் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு இனி ஆறு மாதத் தடை என்பது கிடையாது.

அவர்கள் உடனடியாக தங்கள் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளலாம்.இதனால் வேலை வழங்குவோர், தங்களிடம் தான் வேலை பார்த்தாக வேண்டும் என்று தொழிலாளர்களை அவர்களின் விருப்பமின்றி கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தொழிலாளர் விலகினால் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

அதேபோல், ஒருவர் தனது குடியுரிமை விசாவை ரத்து செய்து விட்டு, மீண்டும் ஐக்கிய அரபு நாட்டுக்கு சுற்றுலா விசாவில் வந்தால் அவருக்கு புதிய அனுமதி கிடைக்காது. குறைந்த பட்சம் அவர் மீண்டும் இரண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்தால் தான் புதிய அனுமதி கிடைக்கும்.ஒரு தொழிலாளருக்கும் அவருக்குத் தொழில் வழங்குவோருக்கும் இடையில் உள்ள உறவு புதிய சட்டப்படி இரண்டு ஆண்டுகளோடு முடிந்து விடுகிறது.இவ்வாறு டீமாஸ் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, December 28, 2010

நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சியின் வரலாறு மீள எழுதப்படுமா?


இன்றைய நவீன மனிதனாவன் ஓமோசேபியன்ஸ் எனப்படும் ஆதிகால மனிதனின் வழித்தோன்றல்களே எனவும் இது 200,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
ஆதி மனித பரம்பரை ஆபிரிக்காவிலேயே தோன்றியதாகவும் பின்னர் படிப்படியாக மத்திய கிழக்கினூடாக ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடம்பெயர்ந்ததாகவும் இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டு வந்ததாகும்.
ஆனால் நேற்று மத்திய இஸ்ரேல் குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால மனிதனின் பற்கள் சுமார் 400,000 வருடங்கள் பழமையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவை நவீன மனிதனின் பற்களுடன் பெரிதும் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப் பற்களை எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் ஆகியவற்றிற்கு உட்படுத்தியதாகவும் இவ்வாய்வில் ஈடுபட்டிருந்த டெல் அவிவ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடர்பான வரலாறானது மீள எழுதப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதனை உறுதி செய்ய மேலும் பல ஆராய்ச்சிகள் அவசியம் என ஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசியர் அவிவ் கோபர் தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலகின் மிக சிறிய ஆவர்த்தன அட்டவணை

கீழே உள்ள வீடிவோவை பாருங்கள் இதுவே உலகின் மிகச்சிறிய ஆவர்த்தன அட்டவணை ஆகும். ஒரு தனி தலைமுடியில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர் ஐக்கிய ராச்சியத்தின் நோட்டிங்கம் பல்கலைகழகத்தை சேர்ந்த இரசாயனவியல் பேராசிரியர் மார்டின் போலியகொப் ஆவார்.


முதலில் இலத்திரனியல் நுண்நோக்கி (Electron Microscope) மூலம் அந்த தலைமுடியை பெரிதாக்கி பின்னர் அயனி பரிமாற்ற கற்றைகள் எழுத்துரு (Ion Beam writer) மூலமாக ஆவர்த்தன அட்டவணையை அப்படியே அம்முடியில் பதிவு செய்ததன் மூலமாக இச்சிறிய ஆவர்த்தன அட்டவணையை உருவாக்க முடிந்ததாக பேராசிரியர் தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஊனமானவர்களுக்கு ஒர் வரபிரசாதம் : ரோபோ இயந்திர கவச ஆடை!

உடல் உறுப்புக்களில் ஊனம் அல்லது இயலாமை உடையவர்களுக்கு நல்ல காலம் பிறந்து உள்ளது.
யப்பானிய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் இவர்கள் ஏனைய சாதாரண மனிதர்களைப் போல் செயல்பட கூடிய நிலைமை உருவாகி உள்ளது.
ரோபோ இயந்திர கவச ஆடை மூலம் இச்சாதனை சாத்தியம் ஆகி உள்ளது.
மூளைக்கும் இக்கவச ஆடைக்கும் இடையில் இலத்திரனியல் சமிக்ஞைகள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மூளையின் கட்டளைப்படி கவச ஆடை செயல்படும்.
மனித உறுப்புக்கள் செய்கின்ற வேலையை இந்த கவச ஆடை செய்து கொள்ளும்.
அதாவது காலில் ஊனம் அல்லது இயலாமை உடைய ஒருவர் நடக்க வேண்டும் என்று நினைத்தால் போதும்.
இத்தகவல் மூளையில் இருந்து கவச ஆடைக்கு பரிமாறப்படும். கவச ஆடை அவ்வுத்தரவை ஏற்று செயல்படும்.
இதன் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட பரிசோதனைக்ள் முழுமையாக வெற்றி பெற்று உள்ளன.
யப்பானில் உள்ள சுமார் 50 வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் இந்த இயந்திர ஆடைகள் பாவனைக்கு வந்துள்ளன.
2015 ஆம் ஆண்டு இந்த இயந்திர ஆடைகள் சந்தைக்கு வரும். இவை மனித குலத்துக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஆபரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மை பணிகள்



கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம் (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை 1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output) 2) நினைவக (Memory) மேலாண்மை 3) பணி (Task) மேலாண்மை 4) பைல் மேலாண்மை கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவை-யும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்ப-ரேட்டிங் சிஸ்டம் கண்-காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்-துக்களை மானிட்ட-ரில் வெளிப்-படுத்துகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்ப-ரேட்-டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்-ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்-கான இடம், அப்ளி-கேஷன் சாப்ட்-வேர்கள் தங்குவதற்-கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கி-லுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்-களை வைக்க வேண்-டிய இடம் போன்ற-வற்றை ஆப்-பரேட்டிங் சிஸ்-டமே தீர்மானிக்கிறது. பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multi-task என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்-கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது.

ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்-களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்-திற்குத் தெரியும். நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்ற வற்றை ஆப்ப-ரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்-துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கை-யில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்-றை மேற்கொள்கிறது. பைலைச் சேமிக்-கும் பொழுது அதன் நேரம், தேதி ஆகியவற்றைக் குறிக்கிறது.

பை-லைப் படிக்க/மட்டும் (Read only), மறைக்க (Hidden), சிஸ்டம் என்ற பண்பு-களை (Attributes) பைல்களுக்கு நீங்கள் கொடுக்கும் போது அவற்றை மேற்-கொள்-வதும் ஆப்பரேட்டிங் சிஸ்-டமே. படிக்க/மட்டும் என ஒதுக்கிய பைலில் மாற்றம் செய்ய விடாமல் தடுப்பது, அதே பெயரில் வேறொரு பைலைச் சேமிக்க விடாமல் தடுப்பது எல்லாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேலை தான்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்

Unearth a Classic. Sony presents free public domain books from Google.

கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம்.

கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம். அல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம்.

நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம். நூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன.

நூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, December 27, 2010

இந்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறீர்களா?



காலையில் எழும்போது தேநீருக்கு பதில் தேனும், சுடுநீரும், காலை உணவாக பாலில் ஊறிய அவல், காரட் மற்றும் துளசி, மதிய உணவாக இஞ்சி சூப்புடன், ஆவியில் வெந்த
பச்சை காய்கறிகளுடன் சுட்ட சப்பாத்தி மற்றும் பருப்புக்கூட்டு, மாலையில் பாகற்காய் சூப் அல்லது எலுமிச்சை சர்பத், இரவில் முளைவிட்ட தானியங்களுடன் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, மாதுளை, அன்னாசி, திராட்சை பழக்கலவைகள் என, ஒருநாள் உணவில் இடையிடையே போதுமான அளவு, தண்ணீருடன் கூடிய இயற்கையான வாழ்க்கை எல்லோருக்கும் பிடிக்கக் கூடியது தான்.

 ஆனால், பலவகையான பணி, மாறுபட்ட பழக்க வழக்கம், இயற்கை உணவு கிடைப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் வேகவைத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளின் ஆதிக்கம், நம் வாழ்க்கை சூழலை மாற்றியமைத்து விட்டது. இதனால், பல உணவுகள் தன் இயற்கை குணத்தை இழந்து விடுகின்றன. ஆனால், எளிதில் கிடைக்கக்கூடிய சில பழங்களில் கூட ஏராளமான இயற்கை ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன.

"சிட்ரஸ் மேக்சிமா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட, "ரூட்டேசியே' குடும்பத்தைச் சார்ந்த சுளைகள் உள்ள, பம்ப்ளிமாஸ் பழம் மட்டுமின்றி அனைத்து பாகங்களும் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளன. பழச்சுளைகள் இதயத்தை வலுப்படுத்தி உடல் வீக்கத்தை குறைக்கும். இலைகள் நரம்பு மண்டலம் மற்றும் ரத்தக்குழாய் களை பாதுகாக்கும்.

வேர் மற்றும் பட்டைகளிலுள்ள கவமாரின்கள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பல வகையான ஒட்டுண்ணி கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடையன. பம்ப்ளிமாஸ் பழங்களை கழுவி, சாறெடுத்து, எட்டு பங்கு நீருடன் கலந்து, தேவையெனில் சர்க்கரை சேர்த்து குடித்துவர, உடல் குளிர்ச்சியடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கால் வீக்கம் வற்றும். எலுமிச்சம் பழத்தை ஜூஸ், ஊறுகாய், சாதம் செய்து சாப்பிடுவதை போல் பம்ப்ளிமாஸ் பழத்தையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள உடல் பருமனும் குறையும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பூமியில் 330 கோடி ஆண்டுக்கு முன்பே உயிரினங்கள் தோற்றம்



மண்ணுக்குள் இருந்து விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களில் ஆய்வை மாசா சு செட் தொழிற்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எரிக் ஆலம் மற்றும் லாரன்ஸ் டேவிட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். அதிலிருந்து மரபணு மூலக்கூறுகளை எடுத்து பூமியில் உயிரினங்கள் எப்போது தோன்றின என ஆராய்ச்சி செய்தனர்.

அதன்படி 280 கோடி முதல் 330 கோடி ஆண்டுகளுக்கு இடையே உயிரினங்கள் தோன்றியிருக்க கூடும். அப்போது தற்போதுள்ள 27 சதவீத மரபணு குடும்பங்கள் உருவாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். உயிரி ரசாயன முறை ஏற்பட்டு உயிரியல் பணி நடைபெற சூரிய ஒளிசக்தி முக்கிய பங்கு வகுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பாடும் எலியை உருவாக்கிய ஜப்பான் விஞ்ஞானிகள்



ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகளிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் திட்டத்தில் ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலியை உருவாக்கினார்கள். அந்த எலியில் “டி.என்.ஏ.” மூலக்கூறு மாற்றப்பட்டிருந்தது.

இந்த எலியில் சில பரிணாம மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. பின்னர் இந்த எலியில்கலப்பின சேர்க்கை நடத்தப்பட்டது. இதன் மூலம் தோன்றிய எலிகளை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அவற்றில் ஒரு எலி பறவைகளின் சத்தமான “கிரீச்” என்று ஒலி எழுப்பியது. அது பாடல் போன்று கேட்டது.

இந்த எலி மூலம் தோன்றும் மற்ற எலிகளும் இது போன்று பாடும் தன்மையுடன் கூடியதாக பிறக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த தகவலை ஜப்பான் விஞ்ஞானி அரிகுனி உசிமுரா தெரிவித்துள்ளார். மேலும் மனிதனின் குரலில் எலியை பாட வைப்பது எப்படி? என ஆராய்ச்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF