எதிர்த்துப் பேசிய பிள்ளைகளை சுட்டுக் கொன்ற தாய்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தாய் ஒருவர் சொந்தப் பிள்ளைகள் இருவரையும் படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 50 வயதுடைய யூலி என்பவரேகொலைகாரத் தாய். பிள்ளைகள் இவரை எதிர்த்து கதைத்த காரணத்தினால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பிள்ளைகள் தற்கொலை செய்து விட்டனர் என மற்றவர்களை நம்ப வைக்கின்றமைக்கு திட்டம் தீட்டினார்.இவரின் மகனுக்கு வயது 13, கால்ப்பந்து பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவனை தாயரின் கையிலிருந்த துப்பாக்கி பதம் பார்த்தது. இதன் பின்னர் மகளை நாடிச் சென்றார். மகளுக்கு வயது16. மகளின் மண்டையை குறிவைத்தார். இரண்டு பிள்ளைகளும் இறந்து விட்டனர். மறு நாள் காலை கொளையாளியான தாயை பொலிஸார் கைது செய்தனர். பிளளைகளை கொன்றமைக்கான காரணத்தை பொலிஸார் கேட்டமைக்கு எதிர்த்து பேசினார்கள், வாய்க்காரப் பிள்ளைகள் என கூறினார்.
எகிப்திலிருந்து வெளியேறுமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு எச்சரிக்கை.
எகிப்திலிருந்து வெளியேறுமாறு சுவிட்சர்லாந்து பிரஜைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தள்ளது.
ஒபாமாவின் புதிய திட்டத்திற்கு தடை.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புதிய சுகாரதார திட்டத்திற்கு பல்வேறு மாகாணங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என கூறியுள்ளது.
சுதந்திர தினத்தன்று சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் - ஐ.தே.க.
வடமராட்சி முனைக்கடற்பரப்பில் 32 அடி நீளம் கொண்ட திமிங்கல வகை இராட்ச மீன் ஒன்று செத்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
முயலுக்கு சிலை எடுத்த சீனர்கள்.
சீனாவில் இப்போது முயல் வருடம்.இந்த முயல் வருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்று கோலாகலமாக கொண்டாடுகின்றனர் சீனர்கள். இக்கொண்டாட்டங்களின் உற்சாகத்தில் மிகவும் பிரமாண்டமான இராட்சத முயல் சிலை ஒன்றை வடிவமைத்து உள்ளனர்.30 ஆயிரம் கோப்பைகளை பயன்படுத்தி இந்த வித்தியாசமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
கோழிகளை தங்க வைக்க விசேட ஹோட்டல்.
உலகில் எத்தனையோ வித்தியாசமான ஹோட்டல்கள் உள்ளன.இவற்றை எல்லாம் 'மனிதன்' அவ்வப்போது வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வந்து இருக்கின்றது.ஆனால் இப்போது எம்மால் அறிமுகம் செய்யப்பட இருக்கின்ற ஹோட்டல் மிகவும் வித்தியாசமானது.மனிதர்கள் தங்குகின்றமைக்கு பதிலாக கோழிகள் தங்குவதற்கு என்று அமெரிக்காவின் ஹெல்ஸ்ரன் நகரில் இத்த விநோதமான ஹோட்டல் அமைக்கப்பட்டு உள்ளது.31 வயது உடைய David Roberts என்பவரின் சிந்தனையில் இந்த ஹோட்டல் உருவாகி உள்ளது.கோழிகள் இங்கு தங்க வைக்கப்படுகின்றமைக்கு கோழிகளின் உரிமையாளர்களிடம் இருந்து தலா 02 பவுண்டுகள் வரை அறவிடப்படுகின்றது.கோழிகளை வளர்ப்பவர்கள் தூரப் பயணங்களை செல்லும்போது பாதுகாபு கருதி இந்த ஹோட்டலில் கோழிகளை தங்க வைத்து விட்டு செல்ல முடியும்.இந்த ஹோட்டல் மிகவும் வெற்றிகரமாக இயங்குகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எகிப்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களினால் ஆபத்து ஏற்படக் கூடுமென சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாகவேனும் சுவிட்சர்லாந்து பிரஜைகள் எகிப்திலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
எகிப்திற்கான விஜயம் ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் 1574 சுவிட்சர்லாந்து பிரஜைகள் தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து பிரஜைகள் எகிப்தை விட்டு வெளியேறுவதற்கு உதவிகளை வழங்கும் நோக்கில் தூதரக அதிகாரியொருவர் கெய்ரோ விமான நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எகிப்தில் திடீர் திருப்பம்: ராணுவம் அதிபருக்கு கட்டுப்பட மறுப்பு.
எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக்கு எதிராக தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை முபாரக் ஏவிவிட்டார். ராணுவ டாங்கிகள், பீரங்கி வண்டிகள், தெருக்களில் நிறுத்தப்பட்டன எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே தயாராக நின்றனர். போராட்டகாரர்களை ஒடுக்கும்படி முபாரக் ராணுவத்துக்கு உத்தரவிட்டபடி இருந்தார்.
ஆனால் முபாரக் உத்தரவுக்கு கட்டுப்பட ராணுவம் திடீரென மறுத்து உள்ளது. பொதுமக்களை சுட முடியாது என்றும் ராணுவம் கூறிவிட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எகிப்து மக்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் அவர்கள் சட்டப்பூர்வமாக போராடுகின்றனர். அவர்களுக்கு போராட உரிமை உள்ளது. எங்கள் சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்கமாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது.

ராணுவமும் மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டதால் முபாரக்கின் நிலைமை மோசமாகி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முபாரக் முயற்சித்து வருகிறார்.
இது தொடர்பாக துணை அதிபர் உமர் சுலைமான் டெலிவிஷனில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார். அதில் அவர் கூறியதாவது: அதிபர் முபாரக் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறார். எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம். அரசியல் சட்டம், சட்டவிதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம். பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்று அவர் கூறினார்.

ஆனால் போராட்டகாரர்கள் சமாதானத்துக்கு தயாராக இல்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர். அதிபர் உத்தரவுக்கு ராணுவம் கட்டுப்பட மறுத்துவிட்ட நிலையில் எதிர்கட்சியினரும் சமாதான பேச்சு நடத்த தயாராக இல்லாததால் முபாரக் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பி.பி.சி தமிழோசையை நிறுத்தும் முடிவை திரும்ப பெற்றது.
உலகப் பிரசித்திப் பெற்ற ஒளி - ஒலி பரப்பு ஊடகமான BBC தனது தமிழ் மொழி ஒலிபரப்புச் சேவையை முடிவுக்குக் கொண்டு வருகின்ற திட்டத்தை பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் தடை செய்துவிட்டார்.
இதன்மூலம் தமிழோசை தொடர்ந்து ஒலிக்க வழி ஏற்பட்டுள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காக பி.பி.சி நிறுவனம் ஒலிபரப்புச் சேவைகள் ஐந்தை நீக்க உத்தேசித்து இருந்தது. அவற்றுள் பி.பி.சி தமிழோசையும் ஒன்று.
இந்நிலையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் தலையிட்டு மேற்படி ஒலிபரப்புச் சேவைகளை இல்லாமல் செய்யும் திட்டத்தை பி.பி.சி செய்தி நிறுவனம் கை விடச் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு வெள்ள பாதிப்பால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு.
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான நகரங்கள் மூழ்கின. சுரங்கத் தொழில் மற்றும் சுற்றுலா துறையில் செழிப்பாக உள்ள குயின்ஸ்லேண்டு மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.டுவூம்பா நகரின் கார்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இவை எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.
தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் சேதம் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அதன்படி குயின்ஸ்லேண்டு மாகாணத்தில் மட்டும் வெள்ளத்தால் ரூ.30 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இழப்பை சரி கட்டுவதற்காக பட்ஜெட்டில் இடைக்கால வரிகளை விதிக்கப்போவதாக பிரதமர் ஜுலியா அறிவித்துள்ளார்.
ஒபாமாவின் புதிய திட்டத்திற்கு தடை.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புதிய சுகாரதார திட்டத்திற்கு பல்வேறு மாகாணங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா மருத்துவம், காப்பீட்டு திட்டம் குறித்து புதிய சட்டத்தினை கடந்த மார்ச் மாதம் பார்லிமென்ட்டா காங்கிரஸில் தாக்கல் செய்தார். இதற்கு ஓப்புதல் பெறப்பட்டது. அப்போது பேசிய ஒபாமா, 30 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த புதிய சட்டத்தினால் பலன் பெறுவர் நடுத்தர குடும்பத்தினர் வரிச்சலுகையும் பெறலாம் என தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த புதிய சட்டத்திற்கு குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து வெர்ஜினியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் 78 பக்க தீர்ப்பில் உடனடியாக இந்த சட்டத்திற்கு தடைவிதித்துள்ளது.
அமெரிக்கர்களின் தனிப்பட்ட உரிமையினை பறிக்கும் செயல் என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 26 மாகாணங்களில் இந்த புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் பேரணி: அதிபர் மனைவி லண்டன் ஓட்டம்.
எகிப்தில் மக்களின் போராட்டத்தினால் திணறி வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக கோரி 10 லட்சம் பேர் கொண்ட பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தியது.
தலைநகர் கெய்ரோவின் சதுக்கத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொய்ரோ மட்டுமின்றி அலெக்சாண்ட்ரியா உள்பட நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. மக்களை அமைதிப்படுத்த ஏற்கனவே இருந்த மந்திரி சபையை அதிபர் முபாரக் கலைத்துவிட்டார்.
புதிய இடைக்கால மந்திரி சபையை அமைத்துள்ளார். இருந்தும் மக்கள் அமைதியாகவில்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார்.
புதிய இடைக்கால மந்திரி சபையை அமைத்துள்ளார். இருந்தும் மக்கள் அமைதியாகவில்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார்.
தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டம் கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்ததை தொடர்ந்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மனைவி சுஷானே (69) லண்டன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
லண்டனில் இவர்களுக்கு சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது. இது ரூ.60 கோடி மதிப்புடையது. மனைவி சுஷானேயை தொடர்ந்து அதிபர் முபாரக்கும் திடீரென லண்டன் தப்பி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் உறவு கெடும்-இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை.
மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய, இலங்கை நல்லுறவு கெடும் என்பதை இலங்கைக்கு இந்தியா, திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியை இன்று கிருஷ்ணா சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஒரு விஷயத்தை நான் இலங்கைக்குத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். எந்த மாதிரியான சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் படை பலத்தை அப்பாவி மீனவர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது கடந்த காலமாக இனி இருக்க வேண்டும். இது தொடரக் கூடாது. இனி எப்போதும் இது நடக்கவே கூடாது.
இந்திய மீனவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது.
இதை மீறி இலங்கை கடற்படையினர் தாக்குதலைத் தொடர்ந்தால், இரு நாடுகளின் நல்லுறவை அது பாதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உறவு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இலங்கையின் கடமையாகும்.
பாகிஸ்தான் நமது மீனவர்களைத் தாக்குவதில்லை, கொல்வதில்லை. வேறு எந்த நாட்டிலும் கூட இப்படி நடப்பதில்லை. ஆனால் இலங்கை மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று அந்த நாட்டிடம் கேட்கப்பட்டுள்ளது. இனிமேல் இது தொடரக் கூடாது என்றும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுன் இந்தியாவுக்கு இதயப்பூர்வமான, தோழமையான, பாரம்பரியமான உறவு உள்ளது. இதை இலங்கை அரசு மனதில் கொள்ள வேண்டும். எனவே இது கெடாத வகையில், தனது படையினருக்கு அது அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.
சுதந்திர தினத்தன்று சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் - ஐ.தே.க.
சுதந்திர தினத்திலன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த சரத் பொன்சேகா சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த குமரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கொண்டாடப்படும் சுதந்திரம் அர்த்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வுகளை தமது கட்சி புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக பாடுபட்ட சரத் பொன்சேகாவை சுதந்திர தினத்திலன்று விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமராட்சி முனைக்கடற்பரப்பில் 32 அடி நீளம் கொண்ட திமிங்கல வகை இராட்ச மீன் ஒன்று செத்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இன்று அதிகாலை 6 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்களே இதனை அவதானி;த்துள்ளனர்
இம் மீன் 32 அடி நீளம் கொண்டதாகவும் 10 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான நிறையைக் கொண்டதாகவும் உள்ளது
இது தொடர்பில் வயது முதிர்ந்த மீனவரான வயோதிபர் ஒருவரிடம் வினவிய போது இவ்வாறன இராட்சத திமிங்கல வகையான மீன் ஒன்று 35 வருடங்களுக்கு முன்னர் பருத்தித்துறை சக்கோட்டைப்பகுதியில் கiரையொதிங்கியதென்றும் இவ்வாறு கரையொதுங்கும் இவ்வகையான மீன்கள் 50 வருடத்திற்கும் அதிகமாக உயிர் வாழக் கூடியது என்றும் தெரிவித்தார்
ஆயினும் குறித்த மீனை அவதானித்தவர்கள் அதன் பல்லைவைத்துக்கொண்டு இது 60 வயதிற்கும் அதிகமான மீன் என்று தெரிவித்தனர்.