பொதுவாக நம் மரியாதைக்குரியவர்கள் முன்னால் நாம் நிற்கும்போது நம் உடல் மொழியில் மரியாதை வெளிப்பாடு மிகையாக இருக்கும். அவர்களை விட்டு அகன்றவுடன் நம் முக பாவனை – உடல் அசைவு – பேச்சு எல்லாம் மாறும். இதை நீங்கள் அன்றாட வாழ்வின் எல்லா இடங்களிலும் காணலாம்.
நம் உடல் மொழி வெளிப்பாடு, நம்மைப் பற்றிய மதிப்பீடுகள் செய்யும் இடங்களில் முக்கிய பங்காற்றுவதால் இந்த உடல் வெளிப்பாடு மூளையில் எப்படி உருவாகி உடலில் வெளிப்படுகிறது என்பதிப் பற்றி சிறு ஆய்வு.
மற்றவர்கள் நம்மிடம் மொழி மற்றும் செயல்கள் மூலம் ஏற்படுத்தும் தாக்கம் நம் மூளையில் அந்தந்த சூழலுக்கேற்ப உருவங்களாக பதிவாகும். மீண்டும் அந்த உருவங்களை காணும்போது மூளை தூண்டுதல் பெற்று உடல் மொழியாக வெளிப்படுகிறது. தெய்வ உருவம் – வாழ்க்கைத் துணை – போலிஸ் – நண்பன் – விருப்பமான எதிர் பாலின நட்பு – முதலாளி இன்னும் பல உருவங்களை கண்டவுடன் நம் உடல் மொழி இப்படித்தான் இயங்க ஆரம்பிக்கிறது.