
இன்று உலக அளவில் சமூக வலையமைப்பில் முன்னனியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துருக்கிறது பேஸ்புக். அதிகரித்துவரும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி பல்வேறு தனியுரிமைக் கடுப்பாடுகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றது.தற்போது பேஸ்புக்கில் படங்கள், கருத்துக்களை இடுபவர்கள் அதனை யார் யார் பார்க்க வேண்டும் என்று தனியாக செட் செய்யலாம். புவியியல் அமைவிடங்களையும் குறிக்க முடியுமாம்.இவை பயன்படுத்த எளிதானது என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் புதிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள் உடனான பேஸ்புக் தளம் இயங்கத் தொடங்குமாம்.