சிந்தனை தெளிவாக இருந்தால்
வாழ்க்கை சுகமாக இருக்கும்.....
வாழ்க்கை சுகமாக இருக்கும்.....
சிந்திக்காமல் மனிதன் வாழ முடியாது. சிந்திக்காத மனிதனை, அல்லது சிந்தனையை தன் கட்டுப்பாட்டில் கொண்டிராத மனிதனை நாம் ஒரு சராசரி மனிதனாக
ஏற்றுக் கொள்வதில்லை.
ஏற்றுக் கொள்வதில்லை.
வார்த்தை வெளிவருவதற்கு முன்பு அல்லது செயலை செயல்படுத்துவதற்கு முன் என்னில் செயற்படும் விடயம் என் சிந்தனை.
சிந்திக்காமல் செயற்படுவது பைத்தியத்தனம் என்று சொல்லுவார்கள். என் சிந்தனைக்கு வார்த்தையினால் அல்லது செயலினால் உயிர் கொடுக்கின்றேன்.
மறுபக்கத்தில் பார்த்தால் என்னுடைய சொல்லோ, செயலோ என்னுடைய சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கிறது.
எதை நான் சிந்திக்கின்றேனோ, அதுவே வாழ்வின் முக்கிய அம்சமாக வெளிவருகின்றது.
என்னில் என் சிந்தனை பல வேளைகளில் அதன் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது.
சிந்தனை அளவு கடந்து போகும் போது, அதனுடைய வெளிப்பாடும் அளவு கடந்து போகின்றது. பல வேளைகளில் அது எல்லையைத் தாண்டுகின்ற போது, அது
மனதின் சமநிலையைக் கெடுக்கின்றது. சமநிலை பாதிக்கப்படுகின்ற போது, மனித நிலை ஒரு பக்கத்திற்கு சாய்கின்றது. அதுவே வாழ்வில் வந்த புதிய வரவாய்
இருந்து மன அமைதியையும், வாழ்வையும் பாதிக்கின்றது.
மனதின் சமநிலையைக் கெடுக்கின்றது. சமநிலை பாதிக்கப்படுகின்ற போது, மனித நிலை ஒரு பக்கத்திற்கு சாய்கின்றது. அதுவே வாழ்வில் வந்த புதிய வரவாய்
இருந்து மன அமைதியையும், வாழ்வையும் பாதிக்கின்றது.
நல்லதே சிந்தி என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
நீ எதைச் சிந்திக்கின்றாயோ அதுவே நீயாவாய்.
நல்லதைச் சிந்திக்கின்ற போது அதுவே நற்செயலாக வடிவெடுக்கின்றது.
கெட்டதைச் சிந்திக்கின்ற போது அதுவே தீமையாக வெளிவருகின்றது.
சிந்தனை என்பது நிரந்தரம் இல்லாத ஒன்று. அது செயல்வடிவம் பெறுகின்ற போது அது நிரந்தரமாக மாறுகின்றது.
சிந்தனையை நாம் சிந்திக்கின்ற போது அது நம் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
என்னை அறியாமல் சிந்தனை விரிகின்ற போது அது கட்டுப்பாட்டை இழக்கின்றது.
சிந்தனையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன் தன்னையே வென்றவனாவான்.
தியானம் என்பது உண்மையில்; எம் சிந்தனையை நாம் எமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.
பல சிந்தனைகள் உருப்பெற்று, சிறிது சிறிதாக குறைவடைந்து, சில முக்கியமான, தேவையான, உண்மையான சிந்தனைகள் மாத்திரம் மிஞ்சுகின்றது.
அந்த மிகுதியான சிந்தனையையும் ஒழுங்கமைத்து ஒருங்கமைக்கின்ற போது அதில் தெளிவும் கட்டுப்பாடும் ஏற்படுகின்றது.
இதைத்தான் நாம் தியானம் என்கின்றோம்.
சிந்தனைகள் தப்பாக சிறகடிக்காத வரைக்கும், நாம் சிதறமாட்டோம்.
நம்முடைய சிந்தனையே நமக்கு அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கின்றது. ஏனெனில் நம் சிந்தனைகள் நமக்குள்ளே இருந்து பிறக்கின்றது.
அது நலமான சிந்தனையாக இருந்தால் நலத்தைக் கொடுக்கின்றது.
நீ என்ன சிந்திக்கின்றாயோ அதுவே நீ ஆவாய்.
சிந்தனை அமைதியையும் கொண்டுவரும் துன்பத்தையும் கொண்டுவரும்.
சிந்தனை அமைதியையும் கொண்டுவரும் துன்பத்தையும் கொண்டுவரும்.
ஒழுங்கமைக்கப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட சிந்தனைகள் பல வேளைகளில் மனதிற்கும் வாழ்விற்கும் அமைதியைக் கொடுக்கின்றது.
அடுத்தவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்; அதுவே நன்மையின் வெளிப்பாடாக இருக்கின்றது.
அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்; அதுவே உதவியின் வெளிப்பாடாக இருக்கின்றது.
அடுத்தவருக்கு இரக்கம் காட்டவேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்; அதுவே இரக்கத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது.
எனவே; சிந்தி நிறையவே சிந்தி. ஆனால் நல்லவற்றையே சிந்தி. உன் நல்ல சிந்தனை உன் நலத்தினை வளமாக்குகின்றது.
பல சிந்தனைகள் மனதில் தோன்றலாம். அதில் சில தப்பானவையாக இருக்கலாம்.
சிந்தனை மனதில் இருக்கும் வரை அதற்கு தோற்றமும் அல்ல உயிரும் அல்ல. அப்படி உயிர் இருப்பின் அது என்னை மீறி எதுவும் செய்ய முடியாது.
அதற்கு நாம் செயல் வடிவம் கொடுக்கின்ற போது அது நல்லதோ, கெட்டதோ அது தோற்றம் பெறுகின்றது, உயிர் பெறுகின்றது. நம்மை மீறிச் செல்லுகின்றது.
ஒரு தாயின் வயிற்றில் ஒரு குழந்தை உருவாகும் போது, கருப்பையில் இருக்கும் வரை அது முழுவதும் தாயின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அது பிறந்தவுடன்
உயிரும், உருவமும், தனித்துவமும் பெறுகின்றது.
உயிரும், உருவமும், தனித்துவமும் பெறுகின்றது.
அதே போன்று தான் எம் சிந்தனையும் செயல்வடிவம் பெறும் போது, உயிரும் தோற்றமும் பெறுகின்றது.
எனவே என் சிந்தனையை நான் நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
என் சிந்தனையை நான் ஆராய நேரம் கொடுக்க வேண்டும்.
நான் அமைதியையும், நிம்மதியையும் வாழ்வில் உணர வேண்டும் என்றால், என் சிந்தனையை சீர்ப்படுத்த வேண்டும். அது ஒரு விதமான தியானம்.
நீ எதைச் சிந்திக்கின்றாயோ, அதுவே நீ.