Friday, August 19, 2011

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்!

உலகில் விசித்திரமான ஹோட்டல்கள் பல அமைக்கப்பட்டு உள்ளன. மரங்கள், குகைகள், சிறைகள் என்று விசித்திரமான இடங்களில் எல்லாம் பல நாடுகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. இப்போது மிகவும் புதுமையான பிரமாண்ட ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல் ஒன்று ஹட்டாரில் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. இதன் பெயர் Amphibious 1000இத்தாலி நாட்டின் Giancarlo Zema Design Group நிறுவனம் இப்புதுமையான ஹோட்டலை நிர்மாணிக்கின்றது. படகுகள், படகு வீடுகள், அரை நீர்மூழ்கி கட்டிடங்கள் என்று அசத்துகின்றனர்.வதிவிடங்கள், அலுவலகங்கள், நவீன மரீனாக்கள் அமைக்கப்படுகின்றன. ஹோட்டலின் மத்திய கோபுரத்தில் உணவு விடுதி ஒன்று கட்டப்படுகின்றது.

80 அரை நீர்மூழ்கி கட்டிடங்களில் விருந்தினர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வகை கட்டிடங்களுக்கு ஜெலிஃபிஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள காட்சிகளை இரசிக்கக் கூடிய வகையில் அறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் எஞ்சின்களுடன் கூடிய சிறிய ரக அலுமினிய படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தியே ஹோட்டல் வளாகத்துக்குள் பிரவேசிக்க முடியும். ஹோட்டல் நிர்மாணத்துக்கான திட்டத்துக்கான மொத்தச் செலவு 500 மில்லியன் டொலர் வரை ஆகுமென கணக்கிடப்பட்டு உள்ளது.













பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF