Monday, August 29, 2011

இன்றைய செய்திகள்.

அமெரிக்காவிடம் சரணடைகிறார் சிறிலங்கா அதிபர்.

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் விடயத்தில் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவையும் அணுக வேண்டும் என்று நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவி செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏனைய நாடுகள் விடயதில் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, சிறிலங்கா விடயத்தில் மாறுபாடான கொள்கையைக் கடைப்பிடித்து தனிமைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே தம்மையும் நடத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவிடம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

நாளை கொழும்பு வரும் றொபேட் ஓ பிளேக்கிடம் இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க விருப்பம் வெளியிட்டிருந்தார். இந்தச் சந்திப்பு நாளை நடைபெறும் என்று கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையை முன்வைப்பதற்காகவே பிளேக்கைச் சந்திக்க மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக அமெரிக்காவுடன் மோதல் போக்கை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது சற்று இறங்கிப் போக முடிவு செய்துள்ளதையே இது வெளிப்படுத்துவதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிளேக் வலியுறுத்தி வந்தநிலையில், கடந்தமுறை கொழும்பு வந்த அவரை சிறிலங்கா அதிபர் சந்திக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு நெருக்கடிகளை அதிகரித்து வரும் நிலையிலேயே, ஏனைய நாடுகளைப் போன்று தம்மையும் அணுகுமாறு அமெரிக்காவிடம் சரணடைய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியையில் கலந்து கொண்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் சகோதரர் மஹிந்தலால் பொன்சேகாவின் புதல்வி பெனிகா சதுராணியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டார்.
களனியில் நடைபெற்ற இந்த இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா சுமார் 20 நிமிடங்கள் அங்கு இருந்ததாகவும் உறவினர்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மோசடிகாரர்கள், ஊழல்பேர்வழிகள், திருடர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள், நாட்டைச் சுரண்டும் அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள் போன்றோருக்கே நாட்டில் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உடற்கூற்றியல் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்காக அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ளக் கூடிய அரசியல்வாதிகளின் அவசியம் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
விசாகபட்டினம் சென்ற இலங்கை போர் விமானம் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கம்.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில் நுட்ப கோளாறு காரணமாக இன்று சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது என விமான நிலைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏழு பேருடன் கொழும்பிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற குறித்த விமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசரமாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் காலை 8.15 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமானத்தில் சென்றவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் 'ஐரேன்' சூறாவளி: இலங்கையருக்கு பாதிப்பு இல்லை.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள ‘ஐரேன்’ சூறாவளி அபாயத்தினால் இலங்கையருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடல் பகாமஸ் பகுதியில் சூறாவளி புயல் உருவானது. அதற்கு “ஐரீன்” என பெயரிடப்பட்டது. அந்த புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாஷிங்டனில் இருந்து பூஸ்டன்வரை பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இயற்கை இடர்பாடுகளில் இருந்து முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள நியூயோர்க், வாஷிங்டன், விர்ஜீனியா, மேரிலேண்ட் ஆகிய நகரங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அங்கு தாழ்வான பகுதியில் தங்கியிருந்த சுமார் 25 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் நியூயோர்க், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு 7 ஆயிரம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
விடுமுறையில் சென்று இருந்த அதிபர் ஒபாமா அதை ரத்து செய்து விட்டு உடனே வாஷிங்டன் திரும்பினார். புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் கேப் அருகே உள்ள வடக்கு கரோலினாவில் “ஐரீன்” புயல் கரையை கடந்தது.
அப்போது மணிக்கு 500 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதைத் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. அப்போது வடக்கு கரோலினா, புளோரிடா, விர்ஜினீயா ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் அங்குள்ள 6 லட்சம் பேர் இருளில் தவித்தனர். புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்தது. இதனால் நியூயோர்க், வடக்கு கரோலின, விர்ஜினீயா. புளோரிடா ஆகிய இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடுகளை சுற்றி சுமார் 11 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்து இருப்பதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
புயல் கரையை கடக்கும் போது நியூயோர்க் நகரில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஆஸ்பத்திரிகளில் தங்கி சிசிக்சை பெற்ற நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் 200 லொறிகளில் அவசர தேவைக்கான உதவி பொருட்களுடன் தயாராக வைத்திருந்தது.
அவசரகால சட்ட நீக்கம், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதில் சிக்கல் : சுசில் பிரேம்ஜயந்த.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை அடுத்து, அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்தவர்கள்  விடுதலை செய்யப்படமாட்டார்கள் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 
சந்தேகநபர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவர்களை சாதாரண சட்டத்தின் கீழ் விடுவிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், அந்த சட்டம் அகற்றப்பட்டுள்ளமையால், தற்போது சாதாரண சட்டத்தின்கீழ் கொண்டு வரப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இதற்காக அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் என்று நீதியமைச்சின் செயலாளர் சுகத்த கம்லத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ் பூதங்கள் தொடர்பில் கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள்.

கிறிஸ் பூத சர்ச்சை தொடர்பில் கண்காணிப்பு மேற்கொள்ள ஆளில்லா உளவு விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கில் படை முகாம்களில் கிறிஸ் பூதங்கள் இருப்பதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்வோரை அடையாளம் காணும் நோக்கில் இந்த உளவு விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பொதுமக்கள தொடர்பிலான புகைப்படங்கள் ஏற்கனவே இவ்வாறு ஆளில்லா உளவு விமானங்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ் பூத வதந்திகளை கிளப்பி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியோரின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் இயங்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் : பொலிஸார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டுமென பொலிஸ்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம், தடுப்புக் காவல் உத்தரவு அடிப்படையில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த அனைத்து சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, பயங்கரவாத குற்றச் சாட்டுக்கள் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றினால் கைது செய்யப்பட்ட பலர் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான உரிமை பொலிஸாருக்கு கிடையாது.
பேச்சுவார்த்தை நடத்த கிளர்ச்சியாளர்களுக்கு கடாபி அழைப்பு.
ஆட்சிமாற்றத்தை உருவாக்குவது குறித்து பேச்சு நடத்த வருமாறு கிளர்ச்சியாளர்களுக்கு லிபிய அதிபர் கடாபி அழைப்பு விடுத்துள்ளார்.
கடாபியின் செய்தித்தொடர்பாளரான மெளஸா இப்ராஹிம் அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் நியுயார்க் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இதைத் தெரிவித்தார்.
தானும், கடாபியும் இன்னும் திரிபோலியில் தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும் கடாபியின் இந்த அழைப்பை நேஷனல் டிரான்ஸ்சிஸ்னல் கவுன்சில் நிராகரித்துவிட்டது.
கடாபி சரண் அடையாதவரை கிளர்ச்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தமாட்டார்கள் என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் சரண் அடைய விரும்பினால் பேச்சுவார்த்தை நடத்தி அவரைப் பிடிப்போம் என கிளர்ச்சியாளர்கள் அலுவலகத்தில் எண்ணெய் மற்றும் நிதி விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் அலி டர்ஹெளனி என்பவர் தெரிவித்தார்.
சைபீரியா வான் பகுதியில் பறந்த மர்ம தட்டு: பச்சை நிற குள்ள மனிதர்கள் நடமாட்டம்.
பனி சூழ்ந்த பகுதியான சைபீரியாவின் வான் பகுதியில் அடிக்கடி மர்ம தட்டு பறக்கும் அதிசயம் நடைபெறுகிறது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள வான் காட்சியில் மர்ம தட்டு இறங்கியதும் பச்சை நிறத்தில் ஒரு குள்ள மனிதன் நடந்து செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள சைபீரியாவில் மட்டும் அடிக்கடி இது போன்று மர்ம தட்டுகள் பறப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சைபீரியா பனி உறைந்த பகுதி ஆகும். இந்த பகுதி சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்ப்பது கிடையாது. ஆனால் தற்போது இந்த மர்ம தட்டுகளால் சைபீரியா மீது ஒரு மோகம் ஏற்பட்டுள்ளது.
சைபீரியாவின் பின் தங்கிய இர்க்ட்ஸ்க் பகுதியில் ஒரு மர்ம தட்டு சீறி இறங்குவதையும் அதில் இருந்து 5 அயல் கிரக மனிதர்கள் இறங்கி நடக்கும் காட்சியும் பதிவாகி இருந்தது.
பதிவான படத்தில் அயல் கிரக மனிதன் 4 அடி உயரத்தில் காணப்பட்டார். விண்கலம் ஒளிரும் இடத்தில் இருந்து 15 அடி தொலைவில் இந்த அயல் கிரக மனிதன் நின்று கொண்டிருந்தார்.
அவருக்கு அருகாமையில் அவரது அளவில் 4 குள்ள மனிதர்கள் நின்று கொண்டிருந்தனர். சைபீரியாவின் பேயன் பகுதியில் இரவு நேரத்தில் வான் தட்டு இறங்கிய 2 நாட்களில் அந்த குள்ள மனிதர்கள் தரை இறங்கி நிற்பது பதிவாகி உள்ளது.
வான் தட்டு நிகழ்வு மற்றும் குள்ள அயல் கிரக மனிதன் வருகை ரஷ்யாவில் மர்ம வான் தட்டு இறங்கியதை உறுதிப்படுத்துகிறது என அடையாளம் தெரியாத பொருளை ஆய்வு செய்யும் நிபுணர் மைக் கோகன் கூறுகிறார்.
பறக்கும் தட்டு இறங்கிய போது பயங்கர வெடிப்பு சத்தம் காணப்பட்டது. ரஷ்ய கிராம மக்கள் வான் தட்டு இறங்கியதை பார்த்து அதிசயத்து உள்ளனர்.
முஷாரப்பின் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் முஷாரப் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து முஷாரப் தலைமறைவானவர் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது வங்கி கணக்குகளையும் முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் சூறாவளி புயல் தாக்கியது: 6 பேர் பலி. 
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடல் பகாமஸ் பகுதியில் சூறாவளி புயல் உருவானது. அதற்கு ஐரின் என பெயரிடப்பட்டது.
அந்த புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாஷிங்டனில் இருந்து பூஸ்டன்வரை பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இயற்கை இடர்பாடுகளில் இருந்து முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள நியூயார்க், வாஷிங்டன், விர்ஜீனியா, மேரிலேண்ட் ஆகிய நகரங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அங்கு தாழ்வான பகுதியில் தங்கியிருந்த சுமார் 25 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு 7 ஆயிரம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடுமுறையில் சென்று இருந்த அதிபர் ஒபாமா அதை ரத்து செய்து விட்டு உடனே வாஷிங்டன் திரும்பினார்.
புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் கேப் அருகே உள்ள வடக்கு கரோலினாவில் ஐரின் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 500 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதைத்தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. அப்போது வடக்கு கரோலினா, புளோரிடா, விர்ஜினீயா ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் அங்குள்ள 6 லட்சம் பேர் இருளில் தவித்தனர். புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்தது. இதனால் நியூயார்க், வடக்கு கரோலின, விர்ஜினீயா. புளோரிடா ஆகிய இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடுகளை சுற்றி சுமார் 11 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்து இருப்பதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை.
புயல் கரையை கடக்கும் போது நியூயார்க் நகரில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஆஸ்பத்திரிகளில் தங்கி சிசிக்சை பெற்ற நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் 200 லாரிகளில் அவசர தேவைக்கான உதவி பொருட்களுடன் தயாராக வைத்திருந்தது.




ஐ.நா அலுவலகம் மீது தாக்குதல்: தீவிரவாதத்தை ஒடுக்க நைஜீரிய ஜனாதிபதி சபதம்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையக கட்டிடம் நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க நைஜீரிய ஜனாதிபதி குட்லக் கே.ஜோனதன் சபதம் செய்தார். நைஜீயாவின் தலைநகர் அபுஜாவில் நடந்த தாக்குதலுக்கு தாங்களே காரணம் என்று போகோ ஹரம் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு தெரிவித்தது.
தலைநகரில் நடந்த இந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இந்த தீவிரவாத கும்பல் உள்ளூர் பிரச்சனையாக உள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நைஜீரியாவில் சகிரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த தீவிரவாத அமைப்பு மாகரப்பில் உள்ள அல்கொய்தா அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது.
மாகரெப் அமைப்பு வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் சோமாலியாவில் உள்ள அல்சகா பாப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிற அமைப்பு ஆகும்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 26 பேர் பலி.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் சிட்ரால் மாவட்டம் உள்ளது. நேற்று ஆப்கானிஸ்தானில் இருந்து இப்பகுதிக்குள் சுமார் 300 தீவிரவாதிகள் ஊடுருவினார்கள்.
பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.
பதிலுக்கு ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ தரப்பில் 36 பேர் பலியாகினர். அவர்களில் 26 பேர் ராணுவத்தை சேர்ந்தவர்கள்.
10 பேர் எல்லை பாதுகாப் புப்படையைச் சேர்ந்த பொலிசார் ஆவர். இந்த தாக்குதலுக்கு மலாகண்ட் பகுதி தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ராணுவ வீரர்கள் 80 பேரை கொன்றதாகவும், 6 பேரை சிறை பிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே துப்பாக்கி சண்டையில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.
அல்கொய்தா இயக்கத்தின் 2வது பெரிய தலைவர் சுட்டுக் கொலை.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் 2வது பெரிய தலைவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். அந்த தலைவரின் பெயர் அதியா அப்டல் ரகுமான் என்பதாகும்.
அவர் கொல்லப்பட்ட விவரத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதிகளில் பதுங்கி உள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் அருகாமையில் உள்ள ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தி வரும் தலிபான்களுக்கு உதவி வருகிறார்கள்.
இந்த அல்கொய்தா அமைப்பு அமெரிக்காவையும், அதற்கு ஆதரவாக இருக்கும் ஐரோப்பிய நாடுகளையும் தகர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த அமைப்பின் பிரதான தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் 2ந் திகதி இரவு பாகிஸ்தானில் அமெரிக்க சிறப்பு கமண்டோக்களால் கொல்லப்பட்டார்.
அல்கொய்தா அமைப்பினர் 2001ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தை தகர்த்து 3 ஆயிரம் பேரை கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து அல்கொய்தாவை அடியோடு ஒழிக்க அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுக்கும் அமெரிக்கா அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. பின்லேடன் கொல்லப்பட்ட 4 மாத காலத்தில் அந்த இயக்கத்தின் 2வது பெரிய தலைவர் அதியா அப்டல் ரகுமானை பாதுகாப்பு படையினர் கொன்று இருக்கிறார்கள். அவர் கொல்லப்படட தகவலை அமெரிக்கா அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளது.
இளைஞர்களின் குடிபழக்கத்திற்கு பெற்றோர்களே காரணம்: ஆய்வில் தகவல்.
பெற்றோர்களிடம் காணப்படுகின்ற குடிபழக்கமே அவர்களது பிள்ளைகளின் குடிபழக்கத்திற்கு காரணம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
டெமோஸ் என்ற சுய அமைப்பு 1940 ஆண்டுகளில் பிரிட்டனில் பிறந்த 30 ஆயிரம் குழந்தைகளின் நிலையை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது பிள்ளைகளிடம் தங்களது பெற்றோரின் பழக்கத்தில் தீவிர ஈடுபாடு இருப்பது தெரியவந்தது.
அவர்கள் 16 மற்றும் 34 வயது காலகட்டத்தில் இருந்த போது பெற்றோர் பழக்கத்தை பார்த்து தாங்களும் தீவிரமாக குடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது தெரியவந்தது.
10 வயது வரை குழந்தைகளிடம் பெற்றோர் அன்பாகவும், அரவணைப்புடனும் இருக்க வேண்டும என்றும் 15 மற்றும் 16 வயதுகளில் கண்காணிப்புடன் இருக்க வேண்டி உள்ளது என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
பெற்றோர்களின் மோசமான பழக்கத்தால் 16 வயதில் குழந்தை 8 மடங்கு அதிகமாக குடிபழக்கத்திற்கு ஆளாகிறது. அதே நேரத்தில் 34 வயதில் இந்த பழக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆல்கஹால் சார்ந்த விழிப்புணர்வு நிகழச்சிகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேட்டோ படைக்கு ஜேர்மனி அதிபர் மார்கெல் பாராட்டு.
லிபியாவில் கடந்த 6 மாதமாக கடாபிக்கு எதிராக நடந்த போராட்டம் முடிவடைந்துள்ளது. கடாபி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.
இந்த நிலையில் புரட்சிப்படையினர் அமைத்துள்ள தேசிய மாற்ற கவுன்சில் புதிய ஆட்சி அமைக்கிறது.
லிபியாவில் அப்பாவி மக்களை கொன்று குவித்த கடாபி ராணுவத்தை ஒடுக்குவதற்காக மார்ச் மாதம் சென்ற நேட்டோ படைகள் புரட்சி படையினருக்கு உதவியாக செயல்பட்டது. அதனால் கடாபி ராணுவம் தாக்கு பிடிக்க முடியாமல் தோற்றுப்போனது.
நேட்டோ படையில் ஜேர்மனி இடம்பெறவில்லை. இருப்பினும் கூட்டுப்படையில் இடம் பெற்று இருந்த பிரிட்டன், பிரான்ஸ், கனடா, அமெரிக்கா படைகளுக்கு தனது பாராட்டை ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் தெரிவித்துள்ளார்.
கடந்த 42 ஆண்டுகளாக லிபியா பொது மக்களை துன்புறுத்திய கடாபியை சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எங்களது கூட்டாளிகளை மதிக்கிறோம். நேட்டோ படைகளை பெரிதும் மதிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
லிபியாவில் அமைதி மேம்பாடு நடவடிக்கைக்கு ஜேர்மனி துருப்புகளை அனுப்புவது குறித்து அதிகாரிகள் தெளிவான அறிக்கை தரவில்லை.
பட்ஜெட் பற்றாக்குறையை தவிர்க்க பிரான்ஸ் 1200 கோடி யூரோ செலவின ரத்து நடவடிக்கை.
பிரான்சின் பொது பட்ஜெட்டில் கடும் பற்றாக்குறை காணப்படுகிறது. பற்றாக்குறை அளவை குறைக்க பிரான்ஸ் அரசு 1200 கோடி செலவின ரத்து நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு வளர்ச்சி இலக்கு 2 சதவீதத்தில் இருந்து 1.75 சதவீதமாக குறையும் என பிரதமர் பிரான்கய்ஸ் பிலான் தெரிவித்தார். அரசின் வருவாயை அதிகரிக்க வசதி மிக்கவர்களுக்கு வரி விதிக்கவும் வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொது பட்ஜெட்டில் உள்ள 4.5 சதவீத பற்றாக்குறை இந்த செலவின குறைப்பு நடவடிக்கை மூலம் சரி செய்யப்படும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரான்சின் கடன் தர்ணய நிலை ஏஏஏ பிளஸ் நிலையில் இருந்து இறங்குவதாக வந்த வதந்தியை தொடர்ந்து உலக பங்கு சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
பிரான்சின் நிதி நிலை மோசமடையவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி உறுதி அளித்தார். ஆனால் பிரதமர் பிரான்கய்ஸ் பிலான் கூறுகையில்,"கடன் அபாய நிலையில் இருந்து பிரான்ஸ் விலகி விட்டது" என்றார்.
ஐரின் புயலால் கனடாவில் புயல் காற்று அபாயம்.
ஐரின் புயலின் சீற்றம் நேற்றும் வலுவிழக்கவில்லை. இதனால் கனடாவில் கடும் காற்று மற்றும் கனமழை அபாயம் காணப்பட்டது. இந்த புயல் வார இறுதியில் கிழக்கு கனடா பகுதியை நெருங்கியது.
ஹாலிபிக்சில் உள்ள புயல் ஆய்வு மையம் கூறுகையில் வடக்கு கரோலினாவை ஒன்றாம் எண் கொண்ட புயல் மையம் கொண்டுள்ளது. நேற்று அதிகாலை இந்த புயல் அந்த பகுதியில் இருந்நது.
இந்த புயல் மெல்ல கிழக்கு நோக்கி நகர்ந்து அமெரிக்க கடல் பகுதிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த புயல் நீள தீவு பகுதிக்கும், பின்னர் மெய்னேவுக்கும் நகரும் என்று கூறப்பட்டது.
ஐரின் புயலால் வடமேற்கு நியூபிரான்ஸ்விக் மற்றும் கியூபெக்கின் கிழக்கு பகுதி நகரங்களில் கன மழை இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை இந்த கன மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க நகரங்களான வாஷிங்டன், பில்டெல்பியா, நியூயார்க், போஸ்டன் மற்றும் ராலேக் என்.சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 ஆயிரம் இணையதளங்கள் முடக்கம்.
சக வியாபார போட்டியாளர்கள் மீது அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் தொடர்பு நிறுவனங்களின் 6,600 இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது.
இந்த மக்கள் தொடர்பு நிறுவனங்கள் இணையதளங்களின் வாயிலாக மற்ற நிறுவனங்களின் மீது தவறான செய்திகளை பரப்புவது, அவர்களின் செய்திகளை நீக்குவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுவந்தன.
இணையதளங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டறிந்து முடக்கும் சிறப்பு இயக்கம் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் சீன அரசு தொடங்கியுள்ளது. இதுவரை 150 சட்டவிரோத செயல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சிரியாவில் மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரம்: ஐ.நா குற்றச்சாட்டு.
சிரியா அதிபர் பஷர் அல் அசாத் உடனடியாகப் பதவி விலகக் கோரி தலைநகர் டமாஸ்கசில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி நடத்தினர்.
அரசு வன்முறையில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா விசாரணைக் குழு குற்றம்சாட்டியுள்ளது. சிரியாவில் தலைநகர் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியான கபார்சூசேயின் பல இடங்களில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு அதிபருக்கு எதிராக பேரணி நடத்தினர்.
கபார்சூசேயின் பிரதான மசூதி ஒன்றில் நேற்று தொழுகை முடிந்த பின் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தின் மீது சிரியா ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள லடாகியா துறைமுகத்திலும், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. டைர் அல் ஜோர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது நேற்று முன்தினம் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாயினர்.
இதற்கிடையில் சிரியாவில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அரசு வன்முறை குறித்து விசாரிக்க குழு ஒன்றை ஐ.நா அமைத்தது. தொடர்ந்து அதற்கு அனுமதி மறுத்த சிரிய அரசு கடந்த வாரம் அக்குழு விசாரணையில் ஈடுபட நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடந்த இடங்களுக்குச் சென்று அக்குழு விசாரணை நடத்தியது. இக்குழுவின் விசாரணை நேற்று முடிவடைந்தது.
விசாரணை குறித்து ஐ.நா செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியதாவது: அசாத்தின் ராணுவம் இதுவரை தன் வன்முறை நடவடிக்கையால் 2,200 அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளது. மக்கள் மீதான அரசு வன்முறை நாடு முழுவதும் காணப்படவில்லை.
எனினும் மக்கள் எப்போதும் ஒரு வித மிரட்டலிலும் தங்கள் பாதுகாப்பு குறித்த பீதியிலும் உள்ளனர். அதனால் அவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பளிக்க வேண்டும். ஐ.நா குழு சென்ற இடங்களில் எப்போதும் அரசு அதிகாரிகள் இருந்ததால் குழுவினர் நினைத்த இடங்களில் நினைத்தபடி விசாரணை நடத்த இயலவில்லை.
ஐ.நா பாதுகாப்புக் குழுவில் சிரியா மீது தீர்மானம் கொண்டு வருவதில் இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிக மோசமான நிலையில் திரிபோலி: அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு.
லிபிய தலைநகர் திரிபோலியில் அமைதி திரும்பியுள்ள நிலையில் நகரின் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. குடிநீர், மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
நகரின் பல பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் பிணங்கள் குவிந்து கிடப்பதால் சுகாதாரம் பெரும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது.
கடாபியின் மகள் ஆயிஷா, மகன்கள் சாடி மற்றும் ஹானிபல் ஆகியோரின் வீடுகளை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றினர். கடாபியின் குடியிருப்பு வளாகமான பாப் அல் அஜீசியாவில் இருந்த சுரங்கப் பாதை ஒன்றின் மூலம் திரிபோலிக்கு அடியில் பல திசைகளுக்குச் செல்லும் ரகசிய சுரங்கப் பாதைகளை எதிர்ப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு பேர் செல்லக் கூடிய அகலம் உடைய இந்த சுரங்கப் பாதைகளில் கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தப்படும் கார்கள் இயக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அந்தக் கார்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த லிபியா, துனிஷியா எல்லை அருகில் உள்ள பகுதி ஒன்றை எதிர்ப்பாளர்கள் நேற்று கைப்பற்றினர். அதேநேரம் தலைநகர் திரிபோலியின் தென்பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியிலும் அவர்கள் கடாபி ஆதரவாளர்களை முறியடித்தனர்.
திரிபோலியில் சண்டை ஓய்ந்து விட்டதால் பெங்காசியில் இயங்கி வரும் லிபியாவின் தேசிய இடைக்கால கவுன்சில் தனது நிர்வாகத்தை திரிபோலிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் திரிபோலியின் பெரும்பாலான பகுதிகளில் நிலவரம் மிக மோசமாக உள்ளது.
டாக்டர்களும், நர்சுகளும் பல மருத்துவமனைகளைக் கைவிட்டு விட்டுப் போய்விட்டதால் அவற்றில் உள்ள பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது. அதேபோல் நகரில் இரு தரப்பினருக்கும் சண்டை நடந்த பகுதிகளில் பல பிணங்கள் கிடக்கின்றன. அவை இன்னும் அகற்றப்படாததால் நகரில் சுகாதாரம் மோசமாகியுள்ளது.
குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் ஆகிய அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. தேசிய இடைக்காலக் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் மகமூத் ஷம்மாம் கூறுகையில்,"ஞாயிற்றுக் கிழமைக்குள்(இன்று) அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்படும்" என்றார்.
திரிபோலி மக்களுக்கு பல்வேறு வகைகளிலும் உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார். கடாபி எங்கிருக்கிறார் என்பது, இன்னும் தெரியவராத நிலையில் அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
"எங்களைப் பொருத்தவரை அவர் கதை முடிந்து விட்டது. அவர் ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து பிடித்துவிடுவோம் என்றாலும், அவர் மற்றும் அவரது மகன்களின் கைது வரை எல்லாக் காரியங்களையும் தள்ளிப் போட முடியாது" என ஷம்மாம் தெரிவித்தார்.
திரிபோலி தற்போது அமைதிக்குத் திரும்பியுள்ள நிலையில் கடாபியின் சொந்த ஊரான சிர்ட் நகரில் கடாபி ஆதரவாளர்களுடன் எதிர்ப்பாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக இடைக்கால அரசின் சார்பில் சிர்ட் நகரின் பழங்குடியினத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவை தோல்வி அடைந்தன.
அமெரிக்காவை மிரட்டும் ஐரின் சூறாவளி: 7 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்.
ஐரீன் சூறாவளி இன்று அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை கடுமையாகத் தாக்கும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள ஏழு மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சூறாவளிகள் அடிக்கடி உருவாவது வழக்கம். இந்த சூறாவளிகள் உருவாகும் காலகட்டம் "அட்லாண்டிக் பருவம்" என அழைக்கப்படுகிறது. இந்தாண்டில் இப்பருவம் கடந்த ஜூன் 1ம் திகதி துவங்கி நவம்பர் 30ம் திகதியோடு முடிவடைகிறது.
பாதிப்படைந்த பஹாமாஸ் தீவுகள்: இப்பருவத்தில் உருவான ஐரீன் சூறாவளி சமீபத்தில் அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பஹாமாஸ் தீவுகளைத் தாக்கியது. பின் அது புளோரிடா மாகாணத்தின் வடபகுதி கடலில் நிலை கொண்டது. அப்போது அது 3ம் எண் நிலையில் இருந்ததாக அமெரிக்க வானியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மணிக்கு 150 கி.மீ தூரம்: சூறாவளியில் 3ம் எண் நிலை என்பது மிகப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது. இதற்கிடையில் கடந்த இரு நாட்களில் ஐரீன் வீரியம் குறைந்து 1ம் எண் நிலையை எட்டியது.
எனினும் அதன் வேகம் மணிக்கு 150 கி.மீ தூரம் இருக்கும். அதன் விளைவு 150 கி.மீ சுற்றளவில் எதிரொலிக்கும். சூறாவளி வீசும் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை அதனால் கடும் வெள்ளப் பெருக்கு போன்றவை ஏற்படும் எனவும் வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
2 லட்சம் மக்கள் வெளியேற்றம்: இதையடுத்து வடக்கு கரோலினா மாகாணத்தில் கடற்கரையோரம் வசிக்கும் இரண்டு லட்சம் மக்கள் பாதுகாப்புக் கருதி நேற்று தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
7 மாகாணங்களில் அவசர நிலை: தொடர்ந்து இன்று ஐரீன் சூறாவளி அமெரிக்கக் கிழக்கு கடற்கரையோரமாக பயணித்து நியூயார்க் அருகில் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடக்கு கரோலினா, விர்ஜினியா, மேரிலேண்ட், டெலாவேர், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் கனடிக்கட் ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் அதிகளவில் மக்கள் வசிப்பதால் சூறாவளியால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக உள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் கட்டாயமாக தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி மாகாண அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விடுத்துள்ள அறிக்கையில்,"இது வரலாறு காணாத சூறாவளி. அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நியூயார்க்கில் பதட்டம்: சூறாவளியின் பயணப் பாதையின் இறுதியில் உள்ள நியூயார்க் பெருமளவு பாதிக்கப்படக் கூடும் என்பதால் அந்நகரின் ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்துகள் நேற்று நண்பகல் முதல் நிறுத்தப்பட்டன. நியூயார்க்கின் கடற்கரைப் பகுதிகளில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அந்நகர மேயர் மிக்கேல் ப்ளூம்பெர்க் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
"கடைசி நிமிடம் வரை பார்க்கலாம் என யாரும் நினைத்து கடற்கரையோரம் தங்கி விட வேண்டாம்" எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF