இன்னும் 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பூமியில் இருந்து பயணம் செய்ய முடியும். அதற்கான முயற்சியை அமெரிக்க ராணுவ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
விண்வெளி மனிதர்கள் போன்ற வாயேஜர் ஆய்வு கலத்தை அனுப்பினால் வேற்று கிரகத்தை சென்றடைய 70 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். வாயேஜர் மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் செல்லக் கூடியது ஆகும்.
சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர இதர நட்சத்திரங்கள், கிரகங்கள் மனிதர்கள் வாழக்கூயதாக இல்லை. எனவே அயல் கிரகத்தை சென்றடைய விரும்பினால் அல்பா சென்டவுரி என்ற நட்சத்திரமே நமக்கு அருகாமையில் உள்ளது. எனவே நாம் செல்ல விரும்பக் கூடிய கிரகமாகவும் உள்ளது.
அயல் கிரகத்திற்கு செல்லும் திட்டம் 100 வருட நட்சத்திரக் கப்பல் என அழைக்கப்டுகிறது. இந்த திட்டம் குறித்து இன்னும் 12 வாரங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.