பொதுவாக கோழிகளுக்கு சிறிய அலகு இருக்கும். அதன் மூலம் உணவை அவை உட்கொள்கின்றன.
ஆனால் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியில் பரிணாம வளர்ச்சி விஞ்ஞானி அர்காத் அபாஷ்னேங் தலைமையிலான நிபுணர் குழுவினர் புதுவிதமாக ஆய்வு மேற்கொண்டனர்.
கோழி கருவில் உள்ள டி.என்.ஏ மூலக்கூறில் சிறிது மாற்றம் செய்து முதலையின் நீளமான தாடை போன்ற அலகை உருவாக்கியுள்ளனர்.
கோழி முட்டையில் சிறிய துவாரமிட்டு அதற்குள் சிறிய பாசிமணி அளவிலான புரோட்டீனை செலுத்தினர். அதை தொடர்ந்து முட்டை கருவின் வளர்ச்சியை கண்காணித்தனர்.
14 நாட்களுக்கு பிறகு கோழின் அலகு முதலையின் தாடை போன்று நீளமாக வளர்ந்தது. பறவைகள் மற்றும் விலங்குகளின் உடற்கூறு இயல் குறித்து அறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக விஞ்ஞானி அபாஷ்னோவ் தெரிவித்தார்.
இச்சோதனையின் மூலம் குழந்தை பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளை நீக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த சாதனை சுமார் 6 1/2 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சி வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.