
நீங்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் 'அதோ பார் காரு, காருக்குள்ள யாரு' என்று பாட்டுப்பாடிய வயதில் உங்கள் குழந்தைகள் இணையத்தில் உலகைக் காண ஆரம்பித்து விடுகிற அளவிற்கு இணையமில்லா இல்லங்கள் இல்லையென்றாகிவிட்டது. இணையமென்பது மின்சாரம் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட.பலருக்குச் சாதரணமாகத் தெரியும் செய்திகளுக்கானப் புகைப்பட பதிவுகள், சிலருக்கு மனச்சிதைவைக்கூட ஏற்படுத்தலாம்.
பெரியவர்களுக்கே சவால் விடும் சக்திமிக்க ஊடகமான இணையத்தினை இன்றையக் குழந்தைகள் கையாளும் போது, இணையம் குறித்துத் தெரிந்த பெற்றோர்களுக்கு பதட்டமாக இருக்கும். அந்த பதட்டத்தின் காரணமாக மகனோ, மகளோ கணினி முன் அமர்ந்தால் வேறு வழியின்றி இவர்களும் கன்னத்தில் கைவைத்து திரையை வெறித்தபடி அமர்ந்திருப்பார்கள். இணையம் குறித்தான விவரங்கள அறியாத பெற்றோர்கள் தன் பிள்ளை சந்திரனுக்கு ராக்கெட் குறித்தான ஆராய்ச்சியில் இருப்பது போல மாயைத் தோன்றும், அதன் காரணத்தால் தனியறை ஒன்று ஏற்பாடு செய்து கணினியும், பிள்ளையும் சூடாகி விடக்கூடாதென்பதற்காக குளிர்வசதி செய்து கொடுத்து தூரத்தில் நின்று ரசிப்பார்கள்.

விளையாட்டுப்போல கற்றுக்கொள்ள ஆரம்பித்து, விரைவில் இந்தப் பிள்ளைகள் இணையத் தளங்களைப் பார்வையிடவும் தயாராகி விடுகிறார்கள்.
தானாகவே பாட்டி – தாத்தாவுக்கு அஞ்சல் அனுப்புவது எனத் தொடங்கி, விளையாட்டுத் தளங்களில் விளையாடுவது, அதன் மூலம் நண்பர்கள் அறிமுகம், அவர்களுடன் Instant Messenger இல் அரட்டை, என்று வளர்கிறார்கள். ஒரு கட்டத்தில், பெற்றோர்களிடம் "என் அந்தரங்க மடல்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்" என்று சொல்லும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.
எவ்வளவு வேகத்தில் ஒரு பிள்ளை இத்தகைய தேர்ச்சி பெற்றுவிடுகிறது என்பது அதன் சாமர்த்தியத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், இதுவே இவர்களுக்கு இணையத்தில் இருக்கும் அபாயங்களையும் பாதுகாப்பு முறைகளையும் சொல்லிக் கொடுப்பதற்கான சரியான தருணம். வீடு விட்டு வெளியே செல்லும்போது பிள்ளைகளிடம் எப்படி நாம் "பத்திரமாக போ, சாலையில் வாகனங்கள் பல வந்துகொண்டே இருக்கும், நீ தான் கவனமாகச் செல்லவேண்டும்" என்று புத்திமதி சொல்வதுபோல தான், இணையத்தில் சஞ்சரிப்பதற்கும், கோப்புகளைத் தரவிறக்கம் செய்வது குறித்தும் நாம் அவர்களுக்கு நல்லது – கெட்டது சொல்லித்தர வேண்டும்.
பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் போல் கையில் பிரம்போடு சொன்னால், அது சரிவராது. பிள்ளைகள் பொதுவாகவே துரு-துருவென்றுதான் இருப்பார்கள். இது அவர்களின் இயல்பு நிலை. நாம் கடுமையாகச் சொல்லும் விஷயங்களை அவர்கள் விளையாட்டென நினைத்து அலட்சியப்படுத்தி விடுவார்கள். அதையே நாம் விளையாட்டாய்ச் சொன்னால், நினைவில் வைத்துக்கொண்டு செயற்படுவார்கள். நாம் சொல்லும்படி அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் கேட்கும்படி நாம்தான் மாற்றிச் சொல்ல வேண்டும்.
விதிமுறைகளும் வரைமுறைகளும்:
5-15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்துவதுக்கு முன்னே சில விதிமுறைகளையும் வரைமுறைகளையும் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கவேண்டும்.
அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கோ அரட்டைச் செய்திகளுக்கோ (Online Chat) எக்காரணம் கொண்டும் பதில் எழுதக் கூடாது. மௌனம் உத்தமம்.
நிஜப் பெயர், ஊர், நகரம், வீட்டு விலாசம், பிறந்த நாள், பெற்றொர்களின் பெயர், அலுவலகத்தின் பெயர், இதர குடும்பத்தினரின் விவரங்கள் போன்ற அந்தரங்கத் தகவல்களைக் கண்டிப்பாகச் சொல்லக்கூடாது. பிள்ளைக்குத் தெரிந்தவர்களேயானாலும், இணையத்தில் கேட்டால் சொல்லக்கூடாது. இது மட்டுமன்றி, அப்படிக் கேட்டவரின் விவரம் பெற்றோருக்கும் உடனடியாகத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் Web Cam & Microphone ஐ பயன்படுத்தக்கூடாது. பார்த்துப் பேசும்பொழுது அந்தரங்கத் தகவல்களை அறியாமலேயே பிள்ளைகள் சொல்லிவிடுவார்கள்.
உங்களது இணைய உலாவி (Browsers, like Firefox , IE, chrome) இல் ஆபாசமான சொற்கள் அடங்கிய தளங்களுக்கு தடை விதிக்கச்செய்யவும்.
உங்களது மேற்பார்வை இல்லாமல் எந்தக் கோப்பையும் தரவிறக்கம் செய்ய அனுமதிக்காதீர்கள். நச்சு நிரல் பாதுகாப்பிற்காக மட்டுமன்றி, தகவல்களைத் திருடும் Phishing தளத்தில் இருந்தும் பாதுகாக்க இது மிக அவசியம்.
எல்லோருக்கும் பொது:
கணினியை உங்கள் வரவேற்பறையில் / குடும்பத்தினர் எல்லோரும் வந்து போகும் பொது இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை கணினியைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் பக்கத்திலேயே உட்கார வேண்டும் என்பது இல்லை, உங்கள் பார்வை இருந்தாலே போதுமானது. யாருடைய மேற்பார்வையும் இல்லாமல்{தனியறை } இணையத்தில் இயங்க அனுமதிக்காதீர்கள்.
பேசுங்கள் – பழகுங்கள்:
உங்கள் பிள்ளை இணையத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அவ்வப்போது பேச்சுக் கொடுத்துகொண்டு இருங்கள். "என்ன செய்கிறாய், ஏன் செய்கிறாய்" போன்ற கேள்விகளைத் தவிர்த்து " இதை நான் படித்தேன், நீ படித்தாயா?... உனக்கு வந்திருக்கும் நகைச்சுவைக் கடிதத்தை என் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புகிறாயா?" மாதிரியான பேச்சு இலகுவாக இருக்கும்.
நில் - கவனி – செல்:
சாலையைக் கடக்க பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கும்போது நாம் பயன்படுத்தும் இந்தத் தாரக மந்திரம் இணயத்திற்கும் பொருந்தும். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது இணையத்தில் இருக்கும் அபாயங்களைக் குறித்து குடும்பத்துடன் விவாதியுங்கள். எம்மாதிரியான தளங்கள் ஆபத்தானவை, ஏன் தனி நபர் விவரங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது, பெற்றோர்கள் அறிமுகப்படுத்தாத நபர்களிடம் Instant Messenger இல் பேசுவதோ தனி மடல் பரிமாற்றம் வைத்துக்கொள்வதோ கூடாது என்பதற்கான காரணம் போன்றவற்றை ஓர் ஆசிரியராக இல்லாமல், ஒரு நண்பனாக அலசுங்கள்.
சந்தேகங்கள் கேட்கப் பயப்படவேண்டாம்:
சில விஷயங்களைப் பெற்றொருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் பயப்படுவார்கள், சங்கோஜப்படுவார்கள். நீங்கள் அவர்களைப் பற்றித் தவறாக நினைப்பீர்களோ, இம்மாதிரி சந்தேகங்கள் கேட்டால், உங்களிடமிருந்து திட்டு – தண்டனை வருமோ என்ற பயம் இப்படிப் பலகாரணங்கள். அதனால், எந்த மாதிரியான சந்தேகங்களையும் அரைகுறையாக தெரிந்துகொண்டு செயற்படுவதைவிட பெற்றொரிடத்தில் தைரியமாக கேட்கலாமென்று நீங்கள் தான் ஊக்கம் குடுக்க வேண்டும்.
குழந்தைகள் அனைவரும் நல்லவர்களே. ஆனால் இணையத்தின் கட்டுப்பாடற்ற சுதந்திரம், எவ்வித தணிக்கை முறையும் மில்லாத ஊடகத்தின் கூர்மையான பக்கங்கள் உங்கள் குழந்தைகளின் வெள்ளை மனதில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தி, தீய வழியில் செலுத்த வாய்ப்பிருக்கிறது. என் பிள்ளைகள் எந்நேரமும் ஒரே கணினிதான், இணையம் தான் என்று பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் ஒரு பெற்றோராக உங்களின் கடமை வெறும் கணினியும், அதில் தூசு படியாமல் இருக்கு ஒரு ப்ளாஸ்டிக் கவரும் வாங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. உங்கள் பிள்ளைகள் நல்ல மனப்பக்குவமடையும் வரை இணையத்தின் முள்ளில்லா பாதைகளில் கரம் பிடித்து நடை பழக்குவதும் கூட ஒவ்வொரு பெற்றோரின் கடமை தான்.
அதெல்லாம் சரி, இது குணமாகுறதுக்கு என்ன செய்யனும் என்று கேட்பவர்களுக்காகத் தான் இப்பதிவு. பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னெவென்றால் எப்பொழுது பிள்ளைகள் கணிணியில் உட்கார்ந்தாலும், அருகில் போய் உட்காருவதை சுத்தமாகத் தவிர்க்க வேண்டும். அவர்களாக சுதந்திரமாக இணையத்தினை எப்படியெல்லாம் நல்ல வழியில் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தி விட்டு ஒதுங்கி விட வேண்டும். அப்படி ஒதுங்கிப் போனால் பிள்ளைகள் இணையத்தில் என்னெவெல்லாம் செய்கிறார்கள் என்று எப்படிக் கண்காணிப்பது என்ற கவலை உள்ளவர்களுக்கு அருமருந்தாக பல மென்பொருட்கள் உள்ளன. விலைக்கு விற்கும் பல மென்பொருட்கள் இருந்தாலும் அவற்றிற்கு சிறிதும் சளைக்காத இலவச மென்பொருட்கள் என்றாலே நமக்குக் கொஞ்சம் கிக் அதிகம் என்பதால் பின்வரும் சில மென்பொருட்கள் இதெல்லாம் கணினியில் வேவு பார்க்கப் பயன்படும் மென்பொருட்கள். ஏற்கனவே பலமுறை சொன்னது போல என்னதான் தில்லுமுல்லு செய்தாலும் இணையத்தில் தப்பிக்கவே முடியாது என்பதில் மனதில் கொள்ளவும்.


K9 Web Protection:
இதனை இலவசமாக வழங்குபவர்கள் BlueCoat நிறுவனத்தார். இணையப்பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான இவர்கள் இணையத்தில் குழந்தைகளுக்கானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இம்மென்பொருளை இலவசமாக அளிக்கிறார்கள். இந்த மென்பொருளில் இணையத்தளங்களை சுமார் எழுபது வகைகளாகத் தரம்பிரித்து அதில் குறிப்ப்பிட்டத் வகை இணையத் தளங்களைப் பார்வையிடத்தடை செய்வது, உங்கள் கணினியில் குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் இணைய வசதி செயல்படுமாறு செய்வது, உங்கள் பிள்ளைகளின் அன்றாட கணினி நடவடிக்கைகள் குறித்தானத் தகவல்களைப் பெறுவது போன்ற அற்புதமான வசதிகள் நிறைந்தது.
Windows Live Family Safety 2011:

மைக்ரோசாப்ட் இயங்குதளத்திலும், உலாவியிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான வசதி இருந்தாலும், கூடுதல் வசதிக்காக பில்கேட்ஸ் தரும் அன்புப்பரிசு தான் இம்மென்பொருள். இது சகல வசதிகளும் நிறைந்த ஒரு டீலக்ஸ் மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
Chat Controller:

தரவிறக்கச்சுட்டி

இணையமெனும் அற்புதம், குழந்தைகளின் அபரிதமான அறிவு வளர்ச்சிக்கும், தெளிவான விழிப்புணர்ச்சிக்கும் மிக்க அவசியம். அதனைச் சரியான வழியில் பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை நெறிப்படுத்தவும்.குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வதுபோல நாம்தான், இணையத்தின் பயன்பாடுகுறித்து நல்லது – கெட்டது சொல்லித்தர வேண்டும்.
இன்றைய இனைய உலகின் இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது.குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.