Sunday, August 28, 2011

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு.


அத்திலாந்திக் சமுத்தித்தில் தோன்றிய 'இரேன்' எனப்பெயரிடப்பட்ட சூறாவளி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தை இன்று சனிக்கிழமை தாக்கத் தொடங்கியுள்ளது. இச்சூறாவளி சன அடர்ததி மிகுந்த அமெரிக்காவின் கிழக்கு கரையோரபிரதேசங்களுக்கூடாக நகரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.சுமார் 960 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த இரேன் சூறாவளி மணித்தியாலத்தறி;கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருகிறது.இதனால் எதிர்வரும் நாட்களில், அமெரிக்காவின் கிழக்குப் பிரதேச நகரங்களுக்கு பாரிய சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.இந்நிலையில் கிழக்கு கரையோர மாநிலங்கள் பலவற்றில் ஆபத்தான பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 370,000 பேரைவீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தகாலத்தில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க், நியூஜேர்ஸி, வேர்ஜீனியா, மேரிலண்ட், வட கரோலினா கனெக்டிகட், டெலாவர் ஆகிய 7 மாநிலங்களிலும் அவசரகால நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.நியூயோர்க்கின் 5 பிரதான விமான நிலையங்களும் இன்று பகல் முதல் மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை சுமார் 7000 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.பொதுப்போக்குவரத்துச் சேவைகள் முடங்குவதற்கு முன்னர் பாதுகாப்பான வலயங்களுக்கு செல்லுமாறு நியூயோர்க் நகர மேயர் மைக்கல் புளூம்பேர்க் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, விடுமுறையில் சென்றிருந்த ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பயணத்தை சுருக்கிக்கொண்டு இன்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.இரேன் சூறாவளி மிகத் தீவிர அபாயகரமானதாகவும் செலவு மிகுந்தாகவும் இருக்கும் என ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் 2005 ஆம் ஆண்டு நியூ ஓர்லீன்ஸ் முதலான பகுதிகளை தாக்கிய கத்ரினா சூறாவளியினால் 1,800 பேர் பலியானதுடன் 80 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF