மனித அறிவாற்றலுக்கும் மனித மரபணு பாரம்பரியத்திற்கும் தொடர்பு உள்ளதை ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வை மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், எடின்பர்க் மற்றும் அவுஸ்திரேலியாவின் விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொண்டனர்.
இந்த அறிவாற்றல் தொடர்பு குறித்த முதல் உயிரியல் ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். இந்த புதிய ஆய்வு கட்டுரை மூலக்கூறு உளவியல் இதழில் வெளியாகி உள்ளது.
பல்வேறு நபர்களின் டி.என்.ஏ மரபணு வேறுபாடு உள்ள நபர்களை ஆய்வு செய்து இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இரண்டு வகையில் அறிவாற்றல் குறித்து ஆய்வுக்குழு ஆய்வு செய்தது.
இதற்காக எடின்பர்க் அபர்டின், நியூகேசில், மான்செஸ்டர் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 3500 மக்கள் ஆய்வு செய்யப்பட்டனர். டி.என்.ஏ மரபணு மாறுபாடு உள்ள 40 – 50 சதவீத மக்களின் அறிவுத்திறனில் வேறுபாடு காணப்பட்டது. இதனை மருத்துவர் நீல் பென்டல்டன் மற்றும் அவரது குழுவினர் கண்டுபிடித்தனர்.
மரபணுக்கள் எவ்விதம் ஒன்றையொன்று தொடர்பு கொள்கின்றன என்றும், அதன் சுற்றுச்சூழலை அறியவும் இந்த புதிய ஆய்வுக் கண்டுபிடிப்பு உதவும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.