78 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இறந்த, தாய்மையடைந்த நிலையிலுள்ள ‘plesiosaur’ எனும் வகைக் கடற்பிராணியின் எச்சம் அமெரிக்காவின் கென்ரக்கியில் அகழ்ந்தெடுக்கப்பட்டது.இது விஞ்ஞானிகளின் 200 வருடப் புதிருக்கு விடையளித்துள்ளது.200 வருடங்களின் முன்னர் ‘plesiosaur’ எனும் இவ்வகைக் கடற்பிராணிகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் முதன்முதலாகக் கிடைக்கப்பெற்ற தாய்மையடைந்த நிலையிலுள்ள எச்சம் இதுவாகும்.இவ்வகை உயிரினம் கடலிலிருந்து வெளியே கரைக்கு வந்து முட்டையிடாமல் தாய்மையடைந்தே குட்டிகளை ஈனுகின்றன என மேற்கு வேஜினியாவின் மார்ஸல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கூறுகின்றார்.இதன் எச்சத்திலுள்ள கருவின் அளவைப் பார்த்தபோது அது ஒரு தடவையில் ஒரேயொரு குட்டியைத்தான் ஈனுகின்றதென்பதும் தெரியவந்துள்ளது.இது தனது குட்டியினை மனிதனைப் போலவே அதனை வளர்த்தெடுக்க அதிக காலத்தினையும் சக்தியையும் செலவழிக்கின்றது.
இந்த எச்சத்திலுள்ள தாய் 15.4 அடி நீளமுள்ளமாகவும் இதன் கரு 5 அடி நீளமாகவும் இருந்தது. இது உண்மையில் அக்கருவின் மூன்றில் இரண்டாகவே இருந்தது.அப்படியானால் அது பிறக்கும்போது 6.5 அடி நீளமாகத்தான் இருக்குமெனக் கணிப்பிடப்பட்டது.இக்கருவின் எலும்புகள் வளர்ச்சியடையாமல் தலை பெரிதாகக் காணப்பட்டதும் இது முழுதான வளர்ச்சியை அடையவில்லை என்பதற்கு ஆதாரமாக இருந்தன.இவை சில சமயங்ளில் ஒரு தனித்த குட்டியைப் பெறும் அதேவேளை பல குட்டிகளைப் பெறும் நிலையும் காணப்படுகிறது.இவை திமிங்கலங்களையும் டொல்பின்களையும் போல் கூட்டமாகவும் குட்டிகளை அரவணைத்தும் வாழ்ந்திருக்கலாமென்கின்றனர் ஆய்வாளர்கள்.