Friday, August 19, 2011

பேசுதல் மற்றும் புரிந்து கொள்ளுதல் மூளையின் ஒரே பகுதியில் தான் நடைபெறுகிறது: ஆய்வுத் தகவல்.


மற்ற உயிரினங்களுக்கு இல்லாத சிறப்பம்சமாக மனிதர்கள் பேசும் திறனை பெற்று இருக்கிறார்கள்.
பேசுதல் மற்றும் எதிராளி பேசுதலை புரிந்து கொள்ளுதல் என்ற இரு முக்கிய நிகழ்வுகளை மனித மூளையின் ஒரே பகுதியே மேற்கொள்கிறது என்பது ஆச்சரியமான விடயமாகும்.
இந்த இரு நிகழ்வுகளும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுகிறதா என உளவியல் நிபுணர்களும் ஆய்வாளர்களும் ஆய்வினை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மூளை செயல்பாடு குறித்த புதிய ஆய்வு முடிவு ஆகஸ்ட் மாத இழலான உளவியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி மூளையின் ஒரே பகுதியில் தான் பேசுதல் மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன என தெரியவந்துள்ளது.
கிளாக்சோ பல்கலைகழகத்தின் முதுநிலை ஆய்வு இணையாளரான லாரா மெனன்டியும், ராட்போட் பல்கலைகழக ஆய்வாளர் பீட்டர் ஹக்ரூட்டும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த புதிய ஆய்வு முடிவு தெரியவந்துள்ளது.
ஆய்வாளர்கள் எம்.ஆர்.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மூளை செயல்பாடுகளை கண்டறிந்தனர். அர்த்தத்தை புரிந்துகொள்ளுதல், வார்த்தைகள் உருவாக்குதல், இலக்கண ரீதியில் வடிவமைத்தல் ஆகிய மூன்று பணிகளும் மூளையின் ஒரே பகுதியில் நடைபெறுவதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
மூளையில் ஒலி பதிவுகளில் ஆண் – பெண் இருபாலருக்கும் வேறுபாடு இருப்பதை ஆய்வு கண்டறிந்தது. இந்த ஆய்வு சோதனைகள் ஹாலந்து நாட்டில் நடைபெற்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF