
நீங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் தவறான இடங்களில் வேலை செய்கின்றோமோ என்று எண்ணியிருப்பீர்கள்? அப்படியாயின் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைப் பாருங்கள்.அதன் சூழல் எவ்வளவு அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக சறுக்கி வரும் மாடிப் படிகள்.
விரும்பிய உணவையோ அல்லது பானத்தையோ அருந்தும் நிலையிலுள்ள உணவுக் கூடங்கள்,விளையாடுவதற்கான பிரத்தியேக இடங்கள், சொந்த விவாகாரங்கள் பற்றி தொலைபேசியில் பேசுவதற்கு பிரத்தியேகமான இடங்கள்,ஓய்வு அறைகள், என்பன ஒரு அலுவலகம் என்ற எண்ணத்தையே ஊழியர்களிடம் இல்லாமல் செய்து விடுகின்றது.கூகுளின் பிரமாண்ட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.



