Wednesday, August 3, 2011

என் பாத்திரம் ஏன் நிரம்பவில்லை.................



பாத்திரம் நிரப்பி வரும் பணி இட்டு என்னை படைத்தவன் அனுப்பியதாக ஞாபகம்…
பெற்றோரிடம் தொடங்கி,  பள்ளியில் தொடர்ந்தது , பாத்திரம் நிரப்பும் பணி….
மொழியை மூளக்குள் செலுத்தி, கதைகளை பதிந்தனர்; பாத்திரம் நிரம்பியது போல் இருந்தாலும்.............
பருவம் கடக்கும்போது பாத்திரம் தன் தேவையை மாற்றியது; பள்ளியில் நிரம்பியது பயனின்று மறைந்தது;...............
சதையும் – இரத்தமும் சேர்ந்து உயிர் விருத்தி தேவையை உணர்த்தி, மோக ரசங்களால் பாத்திரம் நிரம்பி.
விவாகம் – வேலை – பதவி – ஊதியம் என நிறம் மாற்றி வித்தை காட்டும் பொருளானது பாத்திரம்,...............
படைத்தவனின் முகவரியும் – படைப்பின் நோக்கமும் மறந்து போனதால் பாத்திரம் திசை மாறி பயணமானது,................
காலம் விரைந்து பயணிப்பதாக பூகோள கடிகாரத்தை புரிந்து வைத்த மூளை உணர்ந்தது????????
தூரத்தே ஒரு குழந்தை சோப்பு நீர் குமிழிகளை ஊதுவதும் – நிறம் காட்டி குமிழிகள் உடைவதும் கண்டு குதூகலத்தில் குதித்தாடியது;;;;;;;;;;;;
சட்டென்று புரிந்தது; குழந்தையாயிருக்கும் வரை என் பாத்திரம் நிரம்பித்தான் இருந்தது; பெற்றோரும் – கல்வி கற்றோரும் – என்னை????????????????
உற்றோரும் சேர்ந்து பாத்திரத்தை காலியாக்கி – மாய ரசம் ஊற்றி – நிற வித்தை காட்டி, பாத்திரத்தின் பணி அறியாமல் போனது,!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF