தாக்குதலுக்குள்ளான சிங்கள யாத்திரிகர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்றிருந்த சிங்கள யாத்திரிகர்கள் மீது நேற்று சென்னையில் வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து சென்றிருந்த 84 உறுப்பினர்களைக் கொண்ட சிங்கள யாத்திரிகர்கள் கொண்ட குழு மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது மூன்று பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து சென்னையிலுள்ள இலங்கைக்கான உதவித் தூதுவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகவே தலையிட்ட உதவித் தூதுவர் அவர்களை பாதுகாப்பான மற்றொரு ஹொட்டலுக்கு இடம்மாற்றியதாகவும் தெரியவருகின்றது. இலங்கை யாத்திரிகர்கள் முன்னர் தங்கியிருந்த ஹொட்டலுக்குச் சென்ற தாக்குதலை நடத்தயவர்கள்,
சிங்கள யாத்திரிகர்களை இன்று காலை 8.00 மணிக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேற்றிவிடவேண்டும் என எச்சரித்துச் சென்றிருந்தார்கள். இதனையடுத்தே மற்றொரு பாதுகாப்பான ஹொட்டலுக்கு அவர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டனர். சிங்கள யாத்திரிகர்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே அவர்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக இச்சம்பவத்தில் காயமடைந்த ஒருவரின் மனைவி தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தவர்கள் தம்மை இலங்கையர்கள் என அடையாளம் கண்டுகொண்ட பின்னரே தாக்குதலை நடத்தியதாக மற்றொரு சிங்கள யாத்திரிகர் தெரிவித்தார். தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், தம்மிடமிருந்த பொருட்களைப் பறித்து அவர்கள் எரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தையடுத்து அச்சமடைந்த நிலையிலுள்ள சிங்கள யாத்திரிகர்களைச் சந்தித்த இலங்கையின் உதவித் தூதுவர், நாளை வெள்ளிக்கிழமை அவர்கள் பாதுகாப்பான முறையில் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்தார். எல்பிட்டிய பகுதியிலிருந்து கடந்த 17 ஆம் திகதி புத்தகாயாவுக்கு யாத்திரை சென்ற இவர்கள் நாளைய தினமே கொழும்பு திரும்புவதாக இருந்தது.
இலங்கை ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்.
ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைககளை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலையில் தாதிமார்கள் ஆர்ப்பாட்டம்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் கலைப்பிரிவு மற்றும் வர்த்தக பிரிவில் சித்தியெய்தவர்களை தாதிமார் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ளும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்முனை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலதா மாளிகையில் கடமையாற்றும் பொலிஸாருக்கு விசேட வெள்ளைச் சீருடை.
தலதா மாளிகையில் கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட வெள்ளைச் சீருடைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு.
தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் போது ஆண்கள் தொப்பி அணியக் கூடாது எனவும், பெண்கள் பர்தா அணியக் கூடாது எனவும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்செயலானது முஸ்லிம் மக்களின் உரிமைகளை சிதைக்கும் முயற்சி என ஐ.தே.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை ஏற்படுத்த முடியாது - இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.
கோத்தபாயவின் அறிக்கைக்குப் பின்னர் என்ன? - ஆய்வாளர்கள் கேள்வி.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமையை இலங்கை அரசாங்கம் முதல்தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை அனுபவித்து வந்த 15 பேரின் தண்டனை விசித்திரமான முறையில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கை பகுப்பாய்வு அறிக்கை குறித்து கருத்து வெளியிட முடியாது – ஐ.நா
இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள மனிதாபிமான நடவடிக்கையின் பகுப்பாய்வு அறிக்கை குறித்து கருத்து வெளியிட முடியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
மஹிந்தவுக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்ப ஆலோசனை! புரூஸ் பெயின்.
அமெரிக்காவில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போடப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வழக்கில் மஹிந்த ராஜபக்சவிற்கு சமன் அனுப்பப்பட்டது. ஆனால் மஹிந்த அரசாங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய கரு ஜயசூரிய ரணிலுடன் ஆலோசனை! நெருக்கடிக்கு தீர்வு காண முயற்சி.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மீண்டும் உருவாகியுள்ள நெருக்கடிக்கு இணக்கமான முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நேற்று முதல் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சரணடைவது குறித்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றால், பொன்சேகா மீது வழக்கு எதற்கு? தயாசிறி எம்.பி.
போரின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பில் யாரும் தன்னிடம் தொடர்புகொள்ளவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கூறுகின்ற நிலையில், ஏன் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வெள்ளைக்கொடி வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்? என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பினார்.
பட்டாணிராசிக்கின்ஜனாஸா நல்லடக்கம்! கொலையைக் கண்டித்து புத்தளத்தில் ஹர்த்தால்,ஆர்ப்பாட்டம்!
சமூக சேவகர் பட்டாணி ராசிக்கின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று நடைபெற்றது. பல பிரதேசங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த கொலையைக் கண்டித்து புத்தளத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்துடன் ஹர்த்தாலும் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் தற்போதைய நிலை நீடித்தால் 194வது நாடு உருவாவதை தடுக்க முடியாது!– விஜயதாச ராஜபக்ஷ.
முபாரக்கிடம் இன்று விசாரணை ஆரம்பம்: 3 ஆயிரம் பொலிஸ் குவிப்பு.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற உதயன் தமிழ் தினசரிப் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது அண்மையில் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்காவின் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைப் பிரயோகம், குரல்களை மௌனிக்கச் செய்வதுடன் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது.
அத்துடன் நல்லிணக்கத்திற்கும் பங்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பூர்வாங்க அறிக்கையை இலங்கையின் பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியிடம் சமர்பித்துள்ளார்.
இந்தநிலையில் ஊடகத் தகவல்களைக் கவனத்தில் கொண்டு முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும என்று அமெரிக்கா தூதரகம் கோரியுள்ளது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தாதி உத்தியோகத்தர்கள் வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று புதன்கிழமை கவனஈர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.
க.பொ.த உயர் தரத்தில் கலை பிரிவு சார்பில் தகைமைகளைக் கொண்டுள்ளவர்களை - தாதிப் பயிற்சி நெறிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த கவன ஈர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி ஆர்ப்பாட்டத்தினை இலங்கை தாதி உத்தியோகத்தர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் தாதிப் பயிற்சி நெறிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் வகையில் அண்மையில் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நேர்முகப் பரீட்சைகளில் தோற்றியிருந்த விண்ணப்பதாரிகள் க.பொ.த உயர்தரத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்றவர்கள் எனக் கூறப்படுகிறது.
க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் தகைமைகளைக் கொண்டவர்களையே தாதியர்களாக ஆட்சேர்க்க முடியுமென தாதியர் யாப்பு விதியில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கலைப் பிரிவில் தகைமைகளைக் கொண்டோரை தாதியர் சேவைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையானது கண்டிக்கத் தக்கதென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கருத்துத் தெரிவித்தனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் - கலைப்பிரிவிலிருந்து தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்கம் தற்போது நேர்முகப் பரீட்சைகளை நடத்தியுள்ளது. இது தாதிய யாப்பு விதிக்கு முரணானதொரு நடவடிக்கையாகும்.
1999 ஆம் ஆண்டிலிருந்து தாதிச் சேவைக்கு உயர்தர விஞ்ஞானப் பிரிவிலிருந்து மட்டுமே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
கலைப் பிரிவில் கற்றவர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு சில காலங்களுக்கு முன்னர் எடுத்த தீர்மானத்துக்கு அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தது. அதனால், அந்நடவடிக்கை பிற்போடப்பட்டது.
ஆயினும், தற்போது மீண்டும் கலைப் பிரிவிலிருந்து விண்ணதாரர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக தாதிமார்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் சில மணிநேரம் பாதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாதிமார்சேவையில்கலைத்துறைமற்றும்வர்த்தகத்துறையில் சேர்ந்தவர்களையும் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தாதிமார் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 ஆண், பெண் தாதிமார்கள் பங்குபற்றினர்.
விசேட இலச்சினை ஒன்றுடன் இந்த வெள்ளைச் சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலதா மாளிகையின் புனிதத் தன்மையை பேணிப் பாதுகாக்கும் வகையில் பொலிஸாருக்கு இவ்வாறான விசேட சீருடை வழங்கப்படவுள்ளது.
ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெள்ளை காற்சட்டையும், வெள்ளை சேர்ட்டும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெள்ளை நிறத்திலான ஒசரி சேலையும் வழங்கப்பட உள்ளது.
மதத் தலைவர்களைத் தவிர்ந்தவர்கள் முஸ்லிம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தேசிய அடையாள அட்டைப் புகைப்படத்தில் தோன்ற முடியாது என பாதுகாப்புச் செயலரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் சகல பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் கலாச்சார விழுமியங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் அமையப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சளவில் அரசியல் ரீதியான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தொப்பி மற்றும் பர்தா ஆகியன முஸ்லிம் மக்களின் மத மற்றும் கலாச்சார சின்னங்கள் எனவும் அந்த உரிமையை முடக்குவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளிக்க முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு சகல இன மக்களும் அணி திரள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அயல்நாடான இலங்கை மீது ஒருபோதும் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முடியாது என ம.தி.மு.க. தலைவர் வைகோவிடம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்கு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வர்த்தக தொடர்புகளில் இருந்து இந்தியா விட்டு விலகும்போது அந்த இடத்தை சீனா பிடித்துவிடும் என்றும் பிரதமர் கூறினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற இல்லத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்தியப் பிரதமர் இவ்வாறு கூறினார்.
இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதற்காக சீனா ஏற்கனவே இலங்கைக்கு கடற்படை உதவிகளை வழங்கியுள்ளது.
அத்துடன்இ சீனா இந்தியாவை விட பாகிஸ்தானை கூடிய நட்பு நாடாக கருதுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அப்படியிருக்கையில், நாம் இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை முறித்துக்கொண்டால் அது இந்தியாவிற்கு பாதகமாகவும், அச்சுறுத்தலாகவும் அமையும் எனவும் இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இது, முன்நகர்வுக்கு ஒருபடியாக கொள்ளலாம். ஆனால், அரசாங்கத்தின் அடுத்த நகர்வுகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இக்கருத்தை தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா வெளியிட்டுள்ளார்.
இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது. இந்தநிலையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி வெளியிட்ட 161 பக்கங்களை கொண்ட அறிக்கையில் தீவிரமான ஒரு குழுவுடன் சண்டையிடும்போது பொதுமக்களின் இழப்புகளை தவிர்க்கமுடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
இக்கருத்தை தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா வெளியிட்டுள்ளார்.
இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது. இந்தநிலையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி வெளியிட்ட 161 பக்கங்களை கொண்ட அறிக்கையில் தீவிரமான ஒரு குழுவுடன் சண்டையிடும்போது பொதுமக்களின் இழப்புகளை தவிர்க்கமுடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் சர்வதேசத்துக்கு இலங்கையின் மனிதாபிதான இராணுவ நடவடிக்கை தொடர்பில் ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிக்கை வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த அறிக்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு குறைந்தது பொறுப்புக்கூறும் வகையில் அமைந்திருப்பதாக ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் அறிக்கையில் அரசாங்கம் எதிர்காலத்தில் இது விடயத்தில் என்ன செய்யப்போகிறது என்பது காட்டப்படவில்லை என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கோத்தபாயவின் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், இலங்கை அரசாங்கம் மீண்டும் கடும்போக்கை கையாளக்கூடும் என்று ஏனைய சில அரசியல் தரப்புகள் எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே இந்த அறிக்கையை வெள்ளைப்பூச்சு என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.கொழும்பை தளமாகக்கொண்ட சட்டம் மற்றும் சமூக நிதியத்தின் தலைவரான ருக்கி பெர்ணான்டோ, கோத்தபாயயவின் அறிக்கையில் போருக்கான அடிப்படைகள் காட்டப்படவில்லை எனவும் தாம் தெரிவுசெய்த சில ஆய்வாளர்களின் கருத்துக்களையே குறித்த அறிக்கை கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் அறிக்கையில் அரசாங்கம் எதிர்காலத்தில் இது விடயத்தில் என்ன செய்யப்போகிறது என்பது காட்டப்படவில்லை என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கோத்தபாயவின் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், இலங்கை அரசாங்கம் மீண்டும் கடும்போக்கை கையாளக்கூடும் என்று ஏனைய சில அரசியல் தரப்புகள் எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே இந்த அறிக்கையை வெள்ளைப்பூச்சு என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.கொழும்பை தளமாகக்கொண்ட சட்டம் மற்றும் சமூக நிதியத்தின் தலைவரான ருக்கி பெர்ணான்டோ, கோத்தபாயயவின் அறிக்கையில் போருக்கான அடிப்படைகள் காட்டப்படவில்லை எனவும் தாம் தெரிவுசெய்த சில ஆய்வாளர்களின் கருத்துக்களையே குறித்த அறிக்கை கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 15 பேருக்கு விசித்திரமான முறையில் ஆயுள் தண்டனை?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சி செய்த 2002ம் ஆண்டு காலப்பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பைப் பயன்படுத்தி, 2007ம் ஆண்டு குறித்த 15 மரண தண்டனை கைதிகளுக்கும் தண்டனை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலியான முறையில் குறித்த கைதிகளுக்கான தண்டனை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
N 11152, A 4276, C 18429, D 18546, D 18547, D 18548, D 18549, C 8755, E 11038, E 27109, E 27110, E 27111, E 30625, D 11605 மற்றும் G 17733 ஆகிய இலக்கங்களில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கே இவ்வாறு விசேட சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதே கைதிகளுடன் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்த மற்றும் இரண்டு கைதிகளுக்கு மீண்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றினால் இழைக்கப்பட்ட தவறு ஒன்றை திருத்திக் கொள்ளும் வகையில் மீள மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.ஆர். டி சில்வா சிங்கள ஊடகமொன்றுக்கு அப்போது தெரிவித்திருந்தார்.
சிறைச்சாலை ஆணையாளர் வெளியிட்ட எழுத்து மூல அறிக்கையையும் குறித்த ஊடகம் பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2007ம் ஆண்டில் ஒரு தொகுதி மரண தண்டனை கைதிகளுக்கு விசித்திரமான முறையில் மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும் அவர்களுடன் தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கானவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்படவில்லை.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததனைத் தொடர்ந்தே அண்மையில் நூற்றுக் கணக்கான கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றச் செயல்களுக:கு தண்டனை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தேசிய ரீதியான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள மனிதாபிமான நடவடிக்கையின் பகுப்பாய்வு அறிக்கை இன்னமும் உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ள பேச்சாளர், இந்த அறிக்கை தொடர்பில் தற்போதைக்கு எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகம் அந்த மனுவை திருப்பி அனுப்பி இருந்தார்கள். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமனும் மஹிந்த அரசினால் திருப்பி அனுப்பப்பட்டது.
ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கையாக மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்ப நீதிபதியுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக முன் நாள் சட்ட மா அதிபர் புரூஸ் பெயின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அச்சு ஊடகங்களில் அந்த ஆட்கொணர்வு மனுவை பிரசுரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக புரூஸ் பெயின் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த வழக்கில் கோத்தபாய ராஜபக்ஷவையும் குற்றவாளியாக சேர்க்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை நாடு திரும்பிய ரணில் விக்ரமசிங்க அன்றிரவே கட்சியின் முக்கியஸ்தர்களுடனும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் தமது தமது அலுவலகத்துக்கு வரவழைத்து சுமார் நான்கு மணிநேரம் பேச்சுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.
கடந்த காலத்தை விடவும் மோசமானதொரு நெருக்கடி நிலை இம்முறை உருவாகியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இச்சந்திப்பின் போது கட்சித் தலைவரிடம் சுட்டிக்காட்டியதாகவும் கட்சியின் விசேட மாநாட்டுக்குப் பின்னர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் மீது பழிவாங்கும் முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்கள், இவ்வாறான மனப்போக்கு நீடிக்குமானால் கட்சி பிளவுபடும் ஆபத்துக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தலைமைத்துவம் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் அங்கு சுட்டிக்காட்டியுள்ளனர். இரு தரப்பும் பிடிவாதப் போக்கை கைவிட்டு விட்டுக் கொடுப்புடன் செயற்பட முன்வரவேண்டுமெனவும் செயற்குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் உள்வாங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த முரண்பாட்டுக்கு இணக்கமான முறையில் தீர்வு காணத் தயாராக இருப்பதாகவும் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்திருக்கிறார். பிரச்சினை சுமுகமாகத் தீர்வு காணப்படுமானால் அதற்கு ஒத்துழைக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்திருப்பதாகத் தெரியவருகின்றது.
இதனிடையே புதுடில்லி சென்றிருந்த கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய நேற்றுக் காலை நாடு திரும்பினார். அவர் விமான நிலையத்திலிருந்து நேரடியாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு வருகை தந்து முற்பகல் 11.15 முதல் சுமார் ஒரு மணிநேரம் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார்.
இதன்போது கடந்த இரு வாரங்களுக்கிடையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக கரு ஜயசூரிய கட்சித் தலைவருக்கு விளக்கமாக எடுத்து விளக்கியதாகவும் உருவாகியுள்ள நெருக்கடி நிலைக்குத் தீர்வுகாண துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென சஜித் பிரேமதாஸ அணியினர் தம்மிடம் கோரிய போதிலும் கட்சியின் செயற்குழு மற்றும் மத்திய குழு உட்பட உயர்மட்டம் கூடி இப்பிரச்சினை குறித்து ஆராய வேண்டியதன் அவசியத்தை அவர்களிடம் எடுத்துக் கூறியதோடு கட்சிக்குள் உருவாகியுள்ள நெருக்கடியை நிவர்த்திப்பதற்காக கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் அவர்களுக்குத் தெரிவித்ததாகவும் கரு ஜயசூரிய கூறினார்.
ஒரு குழுவினரின் கோரிக்கைக்காக கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வதாக தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை எனவும் ஊடகங்களில் வெளியான செய்திக்குத் தான் பொறுப்பாளியல்லவெனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் அங்கு வந்து பேச்சுகளில் இணைந்து கொண்டுள்ளார்.
பிரச்சினையை இணக்கப்பாட்டு ரீதியில் தீர்வு காண்பதற்காக அடுத்துவரும் நாட்களில் பல சந்திப்புகள் இடம்பெறவிருப்பதாகவும் பாராளுமன்றக் குழு, செயற்குழு என்பன கூடுவதற்கு முன்னர் தனித்தனியாகவும் கூட்டாகவும் பல சந்திப்புகள் இடம்பெறவிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சஜித் பிரேமதாஸ அணியினருடனான சந்திப்பொன்றை இன்று வியாழன் அல்லது நாளை வெள்ளிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதற்கான பொறுப்பு கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது சரணடைய வருகின்ற புலிகளின் தலைவர்கள் தொடர்பில் யாரும் தன்னிடம் தொடர்புகொள்ளவில்லை என்றும், இராணுவத்தினர் சரணடைய வந்தவர்கள் மீது ஒருபோதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும் பாதுகாப்பு செயலாளர் தெவித்துள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம். அவன் கூற்றை மதிக்கின்றோம்.
ஆனால் பாதுகாப்பு செயலாளர் அவ்வாறு கூறுகின்ற நிலையில் ஏன் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வெள்ளைக்கொடி வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?
சரணடைய வந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா கூறியதாக நிரூபிப்பதற்கு ஏன் சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கவேண்டும்? அவ்வாறு யாரும் சுட்டுக்கொல்லப்படவில்லை என்று நீதிமன்றத்தில் கூறி வெள்ளைக் கொடி வழக்கை முடிக்கலாமே என்றும் அவர் வினவினார்.
இதே கூற்றை நீதிமன்றில் கூறினால் சரணடைய வந்தவர்கள் சுட் டுக்கொல்லப்பட்டார்கள் என்று சரத் பொன்சேகா கூறவில்லை என்பது நிரூபிக்கப்படும்.
அவ்வாறு இடம்பெறும்போது அனைத்து தரப்பினரும் சிக்கல்களிலிருந்து விடுபடுவர். மாறாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாகளைக் கொண்டு வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகா அவ்வாறு கூறியதாக நிரூபித்து அவருக்கு சிறைத்தண்டனை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எதனை அடைய முயற்சிக்கின்றனர் என்று தெரியவில்லை.
சரத் பொன்சேகா மீதான தனிப்பட்ட குரோதம் காரணமாக இவ்வாறு நடந்துகொள்கின்றனரா? என்றும் புரியவில்லை.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பட்டானி ராசிக்கின் உடல் எச்சங்கள் கடந்த வியாழக்கிழமை காவத்தைமுனையில் வீடு ஒன்றிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் பிரேத மற்றும் மரபணு பசோதனைக்காக வைக்கப்பட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் அவரது ஜனாஸா அன்றிரவு 12 மணியளவில் சமீரகமையிலுள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு நேற்று பகல் ஒரு மணிவரையிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் அவரது ஜனாஸா நல்லடக்கத்திற்காக சமீரகமை பாடசாலை மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பெருக்குவட்டான் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், முன்னாள் பிரதி அமைச்சரும் புத்தளம் நகரசபைத் தலைவருமான கே. ஏ. பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.ஏ.எஹியா, ஏ.எச்.எம். றியாஸ், என்.டி.எம். தாஹிர் உட்பட மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட ஜம்மி யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், சக ஆர்வலர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
ஜனாஸா நல்லடக்கத்தினையடுத்து கலந்து கொண்ட பொதுமக்கள் ஆக்ரோசமான முறையில் கோசங்களை எழுப்பினார்கள்.
கடத்தலுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு துணையாய் நின்றவர்கள், ஒத்துழைப்பு வழங்கியோர், அடைக்கலம் வழங்கியோர் போன்றோரைக் கைது செய்யுமாறும் கோசங்கள் எழுப்பப்பட்டது. இதன் பின்னர் பெருக்குவட்டான் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.
ஜனாஸா நல்லடக்கத்தையொட்டி, நேற்று புத்தளம், பாலாவி, மதுரங்குளி உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வர்த்தக நிலையங்கள், கடைகள் யாவும் பூட்டப்பட்டிருந்ததுடன், வாகனங்களிலும் வீடுகள்,கடைகளிலும் வெள்ளை மற்றும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் படுகொலையைக் கண்டித்தும் மறைவுக்கு அனுதாபம் தெவித்தும் பல் வேறு பதாகைகளும் பல பிரதேசங்களிலும் கட்டப்பட்டிருந்தன.
அமைச்சர் மட்டத்தில் செல்வாக்கு மிக்க ஒருவர் பட்டாணி ராசிக்கின் கொலைக்கு காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், அங்கு கூடியிருந்தவர்கள் அமைச்சர் ரிசாத் பத்யூதினுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று அமைச்சர் ரிஷாத் பத்யூதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை நீடித்தால் 194 வது நாடு உருவாவதனை தடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளது.
அரசியல்வாதிகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேராசிரியர் நந்ததாச கோதகொடவின் நினைவுப் பேருரையில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கால சமூக ஒன்றுமை நோக்கிய எதிர்கால பயணம் என்ற தொனிப்பொருளில் அவர் உரையாற்றியுள்ளார்.
சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் நீடிக்குமாயின் நாடு பிளவுபட்டு 194வது நாடொன்று உதயமாவதனை எவாரும் தடுக்க முடியாது.
அல்லது சீனாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாற்றமடையும் எனவு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மக்கள் போராட்டம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் பதவி இழந்தார்.
அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழல் முறைகேடு மற்றும் போராட்டக்காரர்களை படுகொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டு உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முபாரக், அவரது 2 மகன்கள் அலா மற்றும் கமால், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபிப் அல் - அட்லி மற்றும் முன்னாள் 6 அதிகாரிகள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த நீதிமன்ற விசாரணையின் போது சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க தலைநகர் கெய்ரோவில் உள்ள பொலிஸ் அகாடமியில் 3 ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோ தாகிர் சதுக்கத்தில் 18 நாள் எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஹோஸ்னி முபாரக் பிப்ரவரி 11ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார்.
இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக முபாரக் அரசு ராணுவம் நடத்தியத் தாக்குதலில் 850 போராட்டக்காரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று நடைபெறும் விசாரணையில் முபாரக்குடன், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் இன்று நீதிமன்ற விசாரணைக்கு வருகிறார். அவருக்கு கறுப்புபடை விவகாரம், ஆதாயம் தேடுதல் குற்றச்சாட்டில் அவருக்கு மே மாதம் 12ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
83 வயது முபாரக் ஏப்ரல் மாதம் முதல் ஷரம் எல் - ஷேக் கடற்கரை சுற்றுலா தலத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ளார். அவர் விசாரணைக்காக இன்று கெய்ரோவுக்கு விமானத்தில் வந்தார்.
அணுமின் நிலைய அதிகாரிகள் ஜப்பான் மீது அதிரடி நடவடிக்கை.
அணுமின் நிலையம் பாதுகாப்பு மற்றும் கொள்கை துறையில் பொறுப்பு வகிக்கும் 3 உயர் அதிகாரிகளை ஜப்பான் அரசு திடீர் பணி நீக்கம் செய்ததுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா நாய்ச்சி அணு மின் நிலைய கதிர் வீச்சு கசிவு நிற்காத நிலையில இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஜப்பான் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பான்ரி காய்டா கூறுகையில் புகுஷிமா அணுமின் நிலையத்தை தவறுதலாக கையாண்டு, பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்த 3 உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்றார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள் அணு பாதுகாப்பு முகமையின் தலைவர்கள் ஆவார்கள். புகுஷிமா அணுமின் நிலைய பிரச்சனையில் முக்கிய பணியாற்றியவர் அமைச்சர் பான்ரி காய்ட என்பவர்.
இந்த அமைச்சரும், அணு விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக உள்ளார். புகுஷிமா அணுமின் நிலைய விபத்தைத் தொடர்ந்து புதிய மற்றும் தனி அணு பாதுகாப்பு முறைமை அமைப்பை தீர்மாணிக்கவும் ஜப்பான் அரசு திட்டமிட்டு வருகிறது.
மார்ச் 11 ஆம் திகதி புகுஷிமா அணுமின் நிலைய விபத்தால், அதனை சுற்றி 20 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள 80 ஆயிரம் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். விவசாயிகளும், வணிகர்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
சர்வதேச நிதிய தலைவர் மீது முறைகேடு விசாரணை.
பிரான்சின் முன்னாள் நிதியமைச்சரும், சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்) முதல் பெண் தலைவருமான கிறிஸ்டியானே லாகர்டே தற்போது புதிய பிரச்சனைக்கு ஆளாகி உள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பதவி இழந்த டொமினிசக் ஸ்டிராஸ்கானை தொடர்ந்து ஐ.எம்.எப் பின் தலைவராக ஜூலை மாதம் கிறிஸ்டியானே லாகர்டே, தலைவர் பதவிக்கு வந்துள்ளார்.
அவர், பிரான்ஸ் அமைச்சராக பதவியில் இருந்தபோது முறைகேடு செய்ததாக உள்ள குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆளாக வேண்டிய சூழல் உள்ளது. கிறிஸ்டியானே தனது அமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலதிபர் பெர்னார்டு தர்பேஷக்கு 28 கோஎயே 50 லட்சம் யூரோ அளிக்க ஒப்புதல் அளித்தார் என்று விசாரணையாளர்கள் குற்றம் சாட்டினர்.
பெர்னார்டு, முன்னாள் இடது சாரி அமைச்சர் 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, நிகோலஸ் சர்கோசிக்கு ஆதரவாக மாறியவர் ஆவார். பெர்னார்டு தாய்பேஷக்கும் முன்னாள் அரசு வங்கியான கிரடிட் லயோனய்சுக்கும் இருந்த பிரச்சனையின் போது கிறிஸ்டியானே குறுக்கிட்டு, தொழிலதிபருக்கு பெரும் தொகை அளிக்க ஒப்புதல் அளித்தார் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை கிறிஸ்டியானே நிராகரித்தார் தாம் தவறாக நடக்கவில்லை என அவர் தெரிவித்தார். இருப்பினும் அவர் மீது விசாரணை நடத்துவது தொடர்பாக பிரெஞ்சு நீதிபதிகள் முடிவு எடுக்கின்றனர்.
அமெரிக்க சுகாதார காப்பீடு திட்டத்தில் மோசடி: 19 இந்தியர்கள் உட்பட 26 பேர் மீது குற்றச்சாட்டு.
அமெரிக்காவின் "மெடிகெய்டு' சுகாதாரக் காப்பீடு திட்டத்தில் மோசடி செய்ததாக 19 இந்தியர்கள் உட்பட 26 பேர் மீது அந்நாட்டு கோர்ட் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் 65 வயதுக்கு குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான "மெடிகேர்' குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான "மெடிகெய்டு' ஆகிய சுகாதாரக் காப்பீடு திட்டங்களும் தனியார் சுகாதாரக் காப்பீடு திட்டங்களும் உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளைத் திட்டமிட்டு தங்களிடம் மட்டுமே மருத்துவப் பரிசோதனை செய்ய வைத்து தங்களுக்குச் சொந்தமான மருந்துக் கடைகளில் மருந்து வாங்க வைத்ததன் மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் டாக்டர்கள் மருந்து தயாரிப்போர் சிலர் ஈடுபட்டதாக அமெரிக்க அரசு கண்டறிந்தது. மேலும் இவர்கள் சட்ட விரோதமாக சில வலி நிவாரணி மருந்துகளை பயனாளிகளுக்கு அளித்ததும் தெரிய வந்தது.
இந்த மோசடியில் தற்போது 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் இந்தியர். இந்தியர்களில் பாபுபாய் படேல் என்பவர் மீது மட்டும் 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவருக்குச் சொந்தமாக 26 மருந்துக் கடைகள் உள்ளன. இவர் பிற டாக்டர்களுக்கு பரிசுப் பொருட்கள் லஞ்சம் கொடுத்து அவர்களிடம் சுகாதாரக் காப்பீடு திட்டங்களின் கீழ் மருத்துவப் பரிசோதனைக்கு வரும் பயனாளிகளை தன் மருந்துக் கடைகளில் மருந்து வாங்க வைத்தார் எனவும் பல பயனாளிகள் சுகாதாரக் காப்பீடு திட்டங்களின் கீழ் தனது கடைகளில் மருந்து வாங்கியதாக இவர் போலி ரசீதுகளை உருவாக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
படேல் 2006 ஜனவரி முதல் "மெடிகேர்' திட்டத்தின் கீழ் 37.7 மில்லியன் டாலர் அளவிற்கும் "மெடிகெய்டு' திட்டத்தின் கீழ் 20.8 மில்லியன் டாலர் அளவிற்கும் மோசடி செய்துள்ளார். பாபு படேல் தவிர பவுல், பீட்டர் தினேஷ்குமார் படேல், அனீஷ் பவ்சார், அஸ்வினி சர்மா, பினாகின் படேல், கார்த்திக் ஷா, வைரல் தாக்கூர், ஹிரண் படேல், மிதேஷ்குமார் படேல், லோகே தயாள், நரேந்திர செரகு மற்றும் சேத்தன் குஜராத்தி ஆகிய மருந்து தயாரிப்போர் மீதும் அமெரிக்க அரசு மோசடி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தோனேசியவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது: 10 பேர் பலி.
ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் மலை ஒன்றின்மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். சுலாவேசி தீவில் இருந்து அந்த ஹெலிகாப்டர் நேற்று மாலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் மீட்புக் குழுவினர் இன்று அதிகாலை 2 மணியளவில் அந்த ஹெலிகாப்டரின் உடைந்த பகுதிகளை கண்டுபிடித்தனர். ஹெலிகாப்டரில் இருந்தவர்களில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்திருந்ததாகவும், அவரும் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்தியர்களுக்கு சலுகை வழங்கும் விசா ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அனுமதி.
இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டவர்கள் தொழில் மற்றும் சுற்றுலா விசாக்களை மிக எளிதில் பெறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ரஷ்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே தொழில் துறையினர் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பிரிவினர் தங்குத் தடையின்றி எளிதில் சென்று வருவதற்கு வழி செய்யும் ஒப்பந்தம் 2010 டிசம்பர் 21ம் திகதி டில்லியில் கையெழுத்தானது.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் ரஷ்ய நாட்டவர் தொழில் மற்றும் சுற்றுலா அடிப்படையில் இந்தியாவிற்கு எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக விசா விதிகளில் சிலவற்றை இந்தியா தளர்த்தியது. இந்தியாவைப் பொருத்தவரை கோவா, டில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் குலுமணாலி போன்ற இடங்களுக்கு ரஷ்ய நாட்டவர் அதிகளவில் வந்து செல்கின்றனர். அதேபோல் ரஷ்யாவின் மாஸ்கோ செஞ்சதுக்கம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அரண்மனை சதுக்கம் போன்ற இடங்களுக்கு இந்தியர்கள் அதிகளவில் சுற்றுலா செல்கின்றனர்.
இந்நிலையில் இரு நாட்டவரும் எளிதில் போக்குவரத்து செய்வதற்கு வகை செய்யும் அந்த ஒப்பந்தத்திற்கு நேற்று முன்தினம் பிரதமர் விளாடிமிர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அதை பார்லிமென்டில் ஒப்புதல் பெறுவதற்காக கீழவையான "ஸ்டேட் டுமா'வுக்கு அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளது.
இந்த ஒப்பந்தப்படி அங்கீகாரம் பெற்ற விசா வைத்திருக்கும் இரு நாட்டவரும் மற்ற நாட்டில் 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை தங்க முடியும். இப்போதைய நிலையில் ரஷ்யா அல்லது இந்தியாவைச் சேர்ந்த தனிநபர் அல்லது அமைப்புகள் அந்தந்த நாடுகளில் தங்க வேண்டுமானால் சுற்றுலா சான்றுச் சீட்டு ஒன்றைப் பெற வேண்டும்.
இந்த ஒப்பந்தம் சட்டமாக்கப்படும் பட்சத்தில் தேவையுள்ளவர்கள் விசாவுக்கு விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ள முடியும். அதோடு சோவியத் ரஷ்யா பிரிந்த பின் முதன் முறையாக ஐந்தாண்டுகளுக்கான பன்முக புது விசா (மல்டிபிள் என்ட்ரி விசா) அளிப்பது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.
உலகிலேயே மிக உயரமான கட்டிடம்: 1000 மீற்றர் உயரத்தில் சவுதியில் கட்டப்பட உள்ளது.
எண்ணைய் வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவில் மிக உயரமான கட்டிடம் கட்டப்பட உள்ளது.
செங்கடல் நகரம் என்றழைக்கப்படும் ஜித்தா நகரில் 1000 மீற்றர் உயரத்தில் இக்கட்டிடம் உருவாக உள்ளது. இக்கட்டிடம் சுமார் 2 சதுர மைல் பரப்பளவில் கட்டப்படுகிறது. இதற்கு ”கிங்டம் டவர்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில் ஹொட்டல்கள், அடுக்குமாடி ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து வசதிகளும் இடம் பெறும். இந்த கட்டிடம் கட்டுவது குறித்து கடந்த 2008 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2009 ம் ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து அதில் மந்த நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு துபாயில் புர்ஜ்காலிபர் என்ற கட்டிடம் திறக்கப்பட்டது. 160 மாடிகளை கொண்ட 822 மீற்றர் உயர கட்டிடமான இது உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமை பெற்றது. தற்போது இதை பின்னுக்கு தள்ளிவிட்டு சவுதி அரேபியா ஜித்தாவில் 1000 மீற்றர் உயரத்தில் கட்டப்பட உள்ள இந்த கிங்டம் டவர் உலகின் மிகப்பெரிய கட்டிடம் என்ற அந்தஸ்தை பெற உள்ளது.
இந்த தகவலை சவுதி அரேபியாவின் கோடீஸ்வரரும், இளவரசருமான அல்வலீட்பின் தலால் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் இணையதளம் விதிமுறை மீறல்: ஜேர்மனி எச்சரிக்கை.
பேஸ்புக் சமூக இணையத்தளம் உலகம் முழுவதும் உள்ள இணையத்தள பயன்பாட்டாளர்களால் வரவேற்கப்பட்ட இணையத்தளமாகும்.
இந்த இணையத்தளத்தின் முகம் அங்கீகாரம் சார்ந்த மென்பொருள் தனி மனித உரிமையை மீறுவதாக உள்ளது. புள்ளி விவர சட்டத்தையும் மீறுவதாக உள்ளது.
இந்த இணையத்தளத்திற்கு ஹம்பர்க் விவர பாதுகாப்பு அதிகாரி ஜோகனஸ் காஸ்மர் கடிதம் எழுதி உள்ளார். அதில் முழு அங்கீகார திட்டத்தில் ஜேர்மன் ஈடுபடுத்தக் கூடாது. இதுவரை உள்ள புள்ளி விவரங்களையும், அழிக்க வேண்டும்.
பேஸ்புக் இணையத்தளம், ஜேர்மனி அரசு உத்தரவை நிறைவேற்றாத பட்சத்தில் 3 லட்சம் யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த அபராத மதிப்பு 2 லட்சத்து 62 ஆயிரம் பவுண்ட் ஆகும்.
பேஸ்புக் இணையதளத்தின் முக அங்கீகார மென்பொருள் ஜூன் மாதம், உலகம் முழுவதும் உள்ள 50 கோடி இணையத்தள உறுப்பினர்களுக்கு சென்றது. புள்ளிவிவர பாதுகாப்பு அதிகாரி காஸ்பரின் கருத்துக்கு ஜேர்மனி பெடரல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
ஐரோப்பிய மற்றும் ஜேர்மனி புற்றி விவர, தரநிலையை பேஸ்புக் இணையத்தளம் கடைபிடிக்க வேண்டும் என அந்த அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஓன்லைன் டைரக்டரியை ஹார்வர்டு பல்கலை மாணவர்களுக்காக 2004 ம் ஆண்டில் மார்ச் சுகர் பெர்க் அமைத்தார்.
தற்போது இந்த டைரக்டரியில் பேஸ்புக் மூலமாக 750 கோடி பொட்டோக்கள் இடம் பெற்று உள்ளன.
எகிப்து அதிபர் மீது விசாரணை துவங்கியது: குற்றச்சாட்டுகளை மறுத்தார் முபாரக்.
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் அவரது இரு மகன்கள் மீதான விசாரணை, நேற்று அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவில் துவங்கியது. தன் மீதான குற்றங்களை முபாரக் மறுத்தார்.
இதையடுத்து, விசாரணை இம்மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எகிப்தில், கடந்த ஜனவரி மாதம் அப்போதைய அதிபர் முபாரக்கிற்கு எதிரான போராட்டம் துவங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் நடந்த போராட்டத்தின் இறுதியில் பிப்ரவரி 11ம் திகதி முபாரக் பதவி விலகினார். மக்கள் போராட்டத்தில் பொலிசார் நடத்திய தாக்குதலில் 850 பேர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து, அவர் எகிப்தின் ஷரம் எல் ஷேக் தீபகற்பத்தில் உள்ள தன் மாளிகைக்கு தனது இரு மகன்கள் மற்றும் மனைவியுடன் சென்றார். 12ம் திகதியே அவர் கோமாவில் விழுந்தார். இதையடுத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் அவரது ஆட்சியில் மக்களைச் சுரண்டிய அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேநேரத்தில் மக்கள் போராட்டத்தின் போது பொலிசாரை ஏவி அவர்களை கொன்றதாகவும் அதிகார துஷ்பிரயோகத்தால் சொத்து சேர்த்ததாகவும் முபாரக் மற்றும் அவரது இரு மகன்கள் அலா மற்றும் கமால் மீதும் வழக்குகள் போடப்பட்டன.
கைது: மூவரும் ஷரம் எல் ஷேக்கில் கைது செய்யப்பட்டனர். மகன்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். முபாரக் மருத்துவமனையில் காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீதான விசாரணை நேற்று துவங்கும் என, சமீபத்தில் அந்நாட்டு நீதியமைச்சகம் அறிவித்தது. அதேநேரம், முபாரக் உண்ண மறுக்கிறார், பலவீனமாக உள்ளார் என தகவல்கள் வெளியாயின. எனினும், அரசு தனது முடிவில் உறுதியாக இருந்தது.
கெய்ரோ வந்தார்: இதையடுத்து நேற்று ஷரம் எல் ஷேக்கில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் முபாரக் மற்றும் அவரது மகன்கள் கெய்ரோவுக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு பொலிஸ் அகடமியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கோர்ட்டில் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆயிரம் பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோர்ட் வளாகத்திற்கு வெளியே முபாரக்கின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். "முபாரக்கிற்குத் தண்டனை விதித்தால் கோர்ட்டையும் சிறைச்சாலையையும் கொளுத்துவோம்' என ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்தது. விசாரணையை தேசிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இந்த விசாரணையை ஆர்வத்துடனும், நம்ப முடியாமலும் பார்த்தனர். கோர்ட்டின் உள்ளேயும் வெளியேயும் சேர்த்து 600 பேர் விசாரணையை பார்த்தனர்.
மறுப்பு: "ஸ்ட்ரெச்சரில்' வெள்ளை உடையில் படுக்க வைக்கப்பட்டிருந்த முபாரக் கோர்ட்டின் கூண்டுக்குள் வைக்கப்பட்டார். அருகில் இருந்த மற்றொரு கூண்டில் அலா மற்றும் கமால் நிறுத்தப்பட்டனர். நீதிபதி அகமது ரிபாத் பொலிசாரை ஏவி மக்களைக் கொன்றதாக முபாரக் மீதான குற்றச்சாட்டை வாசித்தார். அப்போது,"என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன்' என்று முபாரக் தெரிவித்தார். தொடர்ந்து அவரது மகன்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதையடுத்து நீதிபதி இம்மாதம் 15ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். பொலிஸ் அகடமியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முபாரக் காவலில் வைக்கப்பட்டார். முபாரக் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால் அவருக்கு 30 ஆண்டுகள் அல்லது மரண தண்டனை கிடைக்கும்.
பனாமா சர்வாதிகாரி மானுவலை வெளியேற்ற பிரான்ஸ் உத்தரவு.
பனாமா நாட்டின் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி மானுவல் நோரிகா தற்போது பிரான்சில் உள்ளார். மானுவலை அவரது நாட்டிற்கு வெளியேற்ற பிரான்ஸ் அரசு உத்தரவிட்டு உள்ளது.
பனாமா நாட்டில் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்காக மானுவலுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் சூழல் உள்ளது. இந்த கோடை காலத்தில் பிரான்ஸ் சிறையில் உள்ள மானுவலை பனாமா அனுப்ப வேண்டும் என அமெரிக்கா கூறியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
1989 ஆம் ஆண்டு பனாமா நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது முன்னாள் சர்வாதிகால மானுவல் அமெரிக்க சிறையில் 20 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். போதை மருந்து கடத்தல், மற்றும் கறுப்பு பணண விவகாரம் தொடர்பாக மானுவல் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு மானுவல் பிரான்ஸ் அனுப்பப்பட்டார். பிரான்சில் 1980 ம் ஆண்டுகளில் பல லட்சம் யூரோக்களை பிரெஞ்சு வங்கி கணக்குகளில் பதுக்கினார். இந்த கறுப்புப் பணம் பதுக்கலுக்காக மானுவல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
77 வயது மானுவல் சொந்த நாடு செல்வதை எதிர்க்காத பட்சத்தில் பனாமா அரசு நிர்வாகம் தனது காவலில் இவரை விரைவாக கொண்டு செல்லும்.
மானுவல் நோரிகா ரழ்டை குடும்பத்தில் பிறந்தவர். 1983 ம் ஆண்டு பனாமா நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். பல ஆண்டுகள் அமெரிக்க உணவு நிறுவனம் சி.ஐ.ஏ விடம் மானுவல் சம்பளம் பெற்றுள்ளார்.
சிரியா அரசுத் தாக்குதல்: ஐ.நா. கண்டனம்.
சிரியாவில். ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிரியா ராணுவத்தினர் பீரங்கிகளில் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாவில், சிரியா ராணுவம் நடத்தியத் தாக்குதலில் டஜன் கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை 140 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குறிப்பாக ஷமா நகரில் வீதியில் நடந்து செல்பவர்களை சிரியா ராணுவம் கடுமையாக தாக்கி, கொன்று வருகிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் சிரியா ஜனாதிபதிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் 1600 மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிரியா ராணுவம், அப்பாவி பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தும் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நேற்று கண்டனம் தெரிவித்தது.
சிரியா அரசுக்கு எதிராக முதன் முறையாக ஐ.நா. கவுன்சில் இந்தக் கண்டனத்தை வெளியிட்டு உள்ளது. லிபியாவில் நேட்டோப் படைகள் முகாமிட்டு உள்ளன. அதே போன்று சிரியாவிலும், ஐ.நா. குறுக்கீடு வரலாம் என்ற அச்சம் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது.
நேற்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் 15 உறுப்பினர்களில் ஐரோப்பாவை சேர்ந்த உறுப்பினர்கள் சிரியா அரசு கண்டனத்திற்கு கடும் தீர்மானம் கொண்டு வந்தனர். மனித உரிமை விசாரணையும் நடைபெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
போர் குற்ற விசாரணை கனடாவை சார்ந்தது இல்லை: டோவிஸ்.
மனித நேயத்திற்கு எதிராக போர் குற்ற நிகழ்வுகளை செய்யும் நபர்களை, விசாரணை செய்ய கனடா வசம் இல்லை என கனடா போர் பாதுகாப்புத்துறை அமைச்சர் விக்டோவிஸ் நேற்று தெரிவித்தார்.
போர் குற்ற நிகழ்வு தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 வது நபர் காவலில் உள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். போர் குற்ற நிகழ்வுகளை விசாரணை செய்வது என்பது கனடாவிற்கு யதார்த்தமான விடயமாக இருக்காது.
இதர நாடுகளில் போர் குற்ற நிகழ்வுகளை செய்த நபர்களை விசாரணை செய்வதும், அவர்களை சிறையில் அடைப்பதும் கனடாவின் கையில் இல்லை. கனடா ஐக்கிய நாடுகள் சபை அல்ல. மனித போர் குற்ற நிகழ்வுகள் மேற்கொண்டவர்களுக்கு, அவர்களது சொந்த நாடுகளில் உரிய நீதித் தண்டனை அளிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் விக்டோவிஸ் தெரிவித்தார்.
நமது எல்லையில் கனடா சட்டம், ஒழுங்காக நடைபெறுவதை கனடா எல்லை முகமை சேவை செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அயல்நாடுகளில் போர் குற்ற நிழ்வுகளில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கிறதா என்பதை கவனிப்பது நமது பணி அல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முதன் முறையாக பிளாஸ்டிக் இருதயம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை.
40 வயது மாத்யூ கிறீன் இருதயப் பிரச்சனையால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு கேம்ப்ரிட்ஜ் ஷயரில் உள்ள பாப் வொர்த் மருத்துவமனையில் ஓபரேஷன் செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையில் அவருக்கு பிளாஸ்டிக் இருதயம் பொருத்தப்பட்டது. பிரிட்டனில் முதன் முறையாக முழு செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட நபராக மாத்யூ கிறீன் உள்ளார்.
உலகம் முழுவதும் இது போன்று 900 செயற்கை இருதய ஓபரேஷன் நடந்துள்ளன. பிளாஸ்டிக் இருதயம் எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என மாத்யூ கிறீன் பெருமிதத்துடன் கூறுகிறார்.
பிரச்சனை இருந்த போது எங்கேயும் நடந்து செல்ல முடியாமல் அவர் அவதிப்பட்டார். பிளாஸ்டிக் இருதயம் பொருத்தப்பட்ட பின்னர் அவரால் நடக்கமட்டுமல்ல, ஏறி இறங்கவும் முடிகிறது.
இந்த பிளாஸ்டிக் இருதயம் உரிய நேரத்தில் பொருத்தப்படாவிட்டால் நீண்ட காலம் வாழமுடியாத நிலை இருந்தது என மருத்துவ ஆலோசகர் ஸ்டீவன் கய் கூறினார்.
மாத்யூ உடல் நிலை மிக மோசமாக சென்ற நிலையில் இந்த செயற்கை இருதயத்தை பொருத்துவது குறித்து மருத்துவர்கள் ஆவசர ஆலோசனை செய்தனர். இந்த ஓபரேஷன் மாத்யூ கிறீனுக்கு புதிய வாழ்க்கை தந்துள்ளது.
பிரான்சை தொடர்ந்து இத்தாலியிலும் பர்தா அணிவதற்கு தடை.
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடைக்கு பெல்ஜியம், பிரான்ஸ் தடை விதித்து உள்ளது. அந்த வரிசையில் இத்தாலியும் தற்போது இடம்பெறுகிறது.
முகத்தை மூடும் பர்தா ஆடைகளால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படுகிறது என தடைவிதிக்கும் நாடுகள் கூறுகின்றன.
கோடைகால விடுமுறைக்கு பின்னர் பர்தாவுக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என நாடாளுமன்றம் இன்று தெரிவித்தது. இத்தாலியின் மத்திய வலது கூட்டணியான பிரதமர் பெர்லுஸ்கோனி அரசு இந்த பர்தா தடைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி அரசியலமைப்பு விவகார கொமிட்டி கூறுகையில்,"இந்த பர்தா தடை மசோதா கருத்தை முதலில் குடியேற்றத்திற்கு எதிரான வடக்கு லீக் அமைப்பு தெரிவித்து இருந்தது.
இந்த தடைச்சட்டம் குறித்து செப்டம்பர் மாதம் விவாதிக்கப்படும்" என தெரிவித்தது.
இந்த தடைச்சட்டம் குறித்து செப்டம்பர் மாதம் விவாதிக்கப்படும்" என தெரிவித்தது.
பெர்லுஸ்கோனிக்கு இத்தாலி நாடாளுமன்றத்தின் மேல் மற்றும் கீழ் சபைகளில் பெரும்பான்மை உள்ளது. எனவே முஸ்லிம் பெண்கள் இத்தாலியில் பர்தா அணிய தடைவிதிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
பிரான்சில் இந்த ஆண்டு துவக்கத்தில் பர்தா ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தாலியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு 50வது பிறந்தநாள்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது 50வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார்.
இதனையொட்டி சிகாகோவில் இரவு விருந்து நிகழ்ச்சியும், நிதி திரட்டல் பணியும் நடைபெறுகிறது.
அவரது விருந்து நிகழ்ச்சியில் ஜாஸ் இசைக் கலைஞர் ஹெர்பி ஹான் காக், ஆர்.என்.பி பாடகர் ஜெனிபர் ஹட்சன், சிகாகோ ராக் இசைக்கலைஞர்கள் பங்கேற்று ஒபாமாவை உற்சாகப்படுத்துகிறார்கள்.
ஜனநாயக கட்சித் தலைவரான ஒபாமா தனது பிறந்தநாளில் பல லட்சம் டொலர் நிதி திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக கட்சியின் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் தனது 50வது பிறந்தநாளின் போது ஒரு கோடி டொலர் நிதி திரட்டினார்.
அந்த அளவிற்கு ஒபாமா தனது பிறந்த நாளில் நிதி திரட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1934ம் ஆண்டு பிராங்ளின் ரூஸ்வெல்ட் பிறந்தநாளின் போது 6 ஆயிரம் விருந்துகள் நடத்தப்பட்டது.
அதே போன்று ஒபாமாவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் அதே அளவுக்கு விருந்து நிகழ்ச்சிகளை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய பெண்ணின் வயிற்றில் ஸ்பாஞ்ச்: அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஹெலன் கரோலின் ஆன்னி ஓ ஹகன். கடந்த 1992ம் ஆண்டு இவருக்கு வயிற்றில் ஓபரேசன் நடந்தது.
அப்போது ஒரு திராட்சைப்பழ அளவலான ஸ்பாஞ்ச்யை அவரது வயிற்றுக்குள் வைத்து மருத்துவர்கள் தைத்து விட்டனர்.
அதனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டதில் வயிற்று பகுதியில் ஸ்பாஞ்ச் இருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து மீண்டும் ஓபரேசன் செய்து அது அகற்றப்பட்டது. இதனால் ஏற்கனவே ஓபரேசன் செய்த மருத்துவர் மீது ஹெலன் கரோலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உலக அளவில் மன அழுத்த பிரச்சனை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: பிரான்ஸ் முதலிடம்.
உலக நாடுகளில் அதிகமான மன அழுத்தம் மிக்க நாடாக பிரான்ஸ் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை கூறுகிறது.
ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஸ்டோனி ப்ரூக்கில் உள்ள நியூயோர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த அதிர்ச்சி முடிவை வெளியிட்டு உள்ளனர்.
அவர்களது ஆய்வு அறிக்கை ஜூலை 26ஆம் திகதி அமெரிக்காவின் பி.எம்.சி மெடிசன் இதழில் வெளியாகி உள்ளது. வருமானம் அதிகம் உள்ள நாடுகளில் 18 வயதுக்கு குறைந்த மற்றும் அதற்கு மேலும் உள்ள 90 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில் நடந்த இந்த ஆய்வில் பிரான்ஸ் மக்கள் அதிக மன அழுத்தம் பிரச்சனையில் தவிப்பது தெரியவந்தது. இதனால் பிரான்சில் எதிர்மறை சிந்தனையாளர்கள் அரசின் நடவடிக்கையை விமர்சிக்க துவங்கி உள்ளனர்.
இந்த ஆய்வு வெளியான நிலையில் பிரான்ஸ் பத்திரிக்கைகளும் தங்களது நாட்டை செலவு செய்யாத கருமி நாடு எனக் குறை கூறத் துவங்கி உள்ளன.
உலக மன அழுத்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள பிரான்சில் 21 சதவீத மக்கள் மன அழுத்தம் பிரச்சனையில் தவிக்கிறார்கள். அதையடுத்து நாடுகள் விவரம் யு.எஸ்.ஏ(19.2 சதவீதம்), பிரேசில்(18.4) நெதர்லாந்து(17.9), நியூசிலாந்து(17.8), உக்ரேன்(14.8), பெல்ஜியம்(14.1), கொலம்பியா(13.3), லெபனான்(10.9), ஸ்பெயின்(10.6), இஸ்ரேல்(10.2), இத்தாலி(9.9), ஜேர்மனி(9.9), தென் ஆப்பிரிக்கா(9.8), இந்தியா(9), மெக்சிகோ(6.6), சீனா(6.5) ஆகும்.
ஆப்கனில் ஜேர்மனி பாதுகாப்பு அமைப்பு மீது தலிபான்கள் தாக்குதல்: 6 பேர் பலி.
ஆப்கானிஸ்தான் குண்டூஸ் நகரில் நிவாரண உதவி பணியாளர்களை பாதுகாக்கும் ஜேர்மனி பாதுகாப்பு நிறுவனம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
ஒரு தற்கொலை படை நபரும், 2 துப்பாக்கி ஏந்திய நபர்களும் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஜேர்மானியர்கள் யரும் உயிரிழந்ததாக தெரியவில்லை. இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.
தலிபான்கள் ஜேர்மனி உளவு மையம் மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தை தாக்க முயற்சித்தனர். குண்டூஸ் மாகாணப் பகுதியில் பாதுகாப்பு சீர் குலைந்துள்ளதை காட்டும் வகையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குண்டூஸ் மாகாணத்தில் ஜேர்மானிய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜேர்மன் ஜி.ஐ.எஸ் மேம்பாட்டு முகமை நிவாரண பணியாளர்கள் இருந்த இடத்திற்கு அருகே தற்கொலை படை நபர் கார் குண்டை வெடிக்கச் செய்தார் என ஜி.ஐ.எஸ் முகமை தெரிவித்தார்.
இதையடுத்து 2 துப்பாக்கி நபர்கள் தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேரும், 3 பொலிசாரும் உயிரிழந்தனர். பொது மக்களில் 10 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஜேர்மனி அரசு கண்டனம் தெரிவித்தது.
ஆட்கடத்தல் நபர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள இளவரசிக்கு சிறப்பு பயிற்சி.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்மை திருமணம் செய்த பின்னர் கேத் மிடில்டனுக்கு அரசக் குடும்ப அந்தஸ்து கிடைத்து உள்ளது. பல ஆயிரம் ரசிகர்களும் உருவாகி உள்ளனர்.
அதே நேரத்தில் அவருக்கு தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள் அச்சுறுத்தலும் உள்ளது. ஆட்கடத்தல் நபர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள 29 வயது கேத்க்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
எஸ்.ஏ.எஸ் எனப்படும் சிறப்பு பயிற்சி கேத் மிடில்டனுக்கு அளிக்கப்படுகிறது. கேம்பரிட்ஜ் இளவரசியான கேத் மிடில்டனுக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியான ஆள் கடத்தலிலிருந்து தப்பிக்க கடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிரிட்டன் றொயல் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், அபாயகரமான நாடுகளில் பணியாற்றும் பிரிட்டன் நபர்களுக்கு இந்த சிறப்பு எஸ்.ஏ.எஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
எதிர்பாராத நிகழ்வுகளை எதிர் கொள்வதற்கு தனி நபர் பாதுகாப்பு பயிற்சியை எஸ்.ஏ.எஸ் அல்லது எம் 15 உறுப்பினர்கள் அளிக்கிறார்கள். இந்தப் பயிற்சி பல மாதங்கள் நீடிக்கும்.
கேத் மிடில்டனுக்கு நீண்ட கால பயிற்சி அளிக்கப்படுகிறதா? அல்லது குறுகிய கால பயிற்சியா என்பது தெரியவில்லை. அரசக் குடும்பத்தை சேர்ந்த ராணி, இளவரசி டயானா இளவரசர் வில்லியம், இளவரசர் சார்லஸ் ஆகியோரும் இந்த விசேட பயிற்சி எடுத்துள்ளனர்.
அமெரிக்கா - பாகிஸ்தான் தூதர்கள் பேச்சுவார்த்தை.
பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வருவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத் வந்திறங்கிய அமெரிக்காவின் தூதர் கேமரன் முன்டெரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர்.
இஸ்லாமாபாத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என்று அவரைக் கேட்டுக்கொண்டனர். அப்படி செல்ல வேண்டுமானால் தடையில்லா சான்றிதழ் அவசியம் என்றும் கூறினர். இதனால் கேமரனால் இஸ்லாமாபாத்தைவிட்டு வேறு எங்கும் செல்ல முடியவில்லை.
பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்கா அதிருப்தி அடைந்தது. தங்களது எதிர்ப்பை அந்நாட்டிடம் பதிவு செய்தது.
இந்நிலையில் தங்களது நாட்டு தூதர்கள் பாகிஸ்தானில் எங்கு வேண்டுமானாலும் சென்று வருவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இஸ்லாமாபாத், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறினார்.
பாகிஸ்தானின் புதிய முறையால் எங்களது தூதர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து அந்நாட்டு அரசிடம் தெரிவித்து விட்டோம். இப்போது எங்களது தூதர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து பெஷாவருக்கு எவ்விதச் சிக்கலும் இல்லாமல் செல்ல முடிவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறோம். அந்நாட்டில் எங்களது தூதர்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும். இதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் சுட்டுக் கொலை: சீன பத்திரிக்கைகள் வரவேற்பு.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட இருவரை அப்பகுதி பொலிசார் நேற்று சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் மீதான சீனாவின் குற்றச்சாட்டை சீனப் பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்ட இருவரை தேடும் பணியில் ஈடுபட்ட பொலிசார் அவர்களின் தலைக்கு தலா ஏழு லட்ச ரூபாய் பரிசு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கஷ்கர் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் வயலில் ஒளிந்திருந்த இந்த இருவரையும் நேற்று பொலிசார் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். சீன அரசு "ஹான்" இனத்தவரை அங்கு தொடர்ந்து குடியேற்றி முஸ்லிம் பெரும்பான்மையைக் குறைத்தது.
ஷின்ஜியாங் மாகாணம் சுயாட்சி பெறுவதற்காக "கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்" என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த தாக்குதலில் அவர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பயிற்சி அளித்துள்ளன எனச் சீனா குற்றம்சாட்டியிருந்தது.
சீனாவின் இந்தக் குற்றச்சாட்டை வரவேற்றுள்ள சீனப் பத்திரிகைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் என சீன அரசுக்கு அறிவுரை கூறியுள்ளன.
அணு சக்தி தொடர்பான பேச்சு வார்த்தையை துவக்க வட கொரியா விருப்பம்.
அணு சக்தி தொடர்பான ஆறு நாடுகளின் பேச்சு விரைவில் தொடங்குவதற்கு வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது.
வடகொரியா, தென்கொரியா, சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளிடையே அணுசக்தி தொடர்பான பேச்சு கடந்த 2009ல் நடந்த போது அதிலிருந்து வடகொரியா வெளியேறியது.
இதையடுத்து பல்வேறு பொருளாதாரத் தடைகளை வடகொரியா மீது அமெரிக்கா விதித்தது. இந்நிலையில் கடந்த மாதம் இந்தோனேசியாவின் பாலி தீவில் இரு கொரிய நாடுகளிடையே அணுசக்தி பேச்சு நடந்தது.
தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நியூயார்க்கில் பேச்சு நடந்தது. இதையடுத்து நேற்று வடகொரிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விடுத்த அறிக்கையில்,"2005ல் போடப்பட்ட கொரிய மண்டலத்தில் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தையை விரைவில் துவக்க வடகொரியா விரும்புகிறது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க கடன் நெருக்கடி தீர்வுக்கான மசோதா நிறைவேற்றம்.
அமெரிக்க கடன் நெருக்கடி தீர்வுக்கான மசோதா பிரதிநிதிகள் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மசோதாவின் பரிந்துரைகள்படி அமெரிக்க கடன் உச்சவரம்பு தொகை 14.3 டிரில்லியன் டொலரில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேலும் 2.4 டிரில்லியன் டொலர் அதிகரிக்கப்படும்.
நாட்டின் செலவுகளில் அடுத்து 10 ஆண்டுகளில் 2.1 டிரில்லியன் டொலர் குறைக்கப்படும். இதன் மூலம் நாடு மேலும் கடன் நெருக்கடியில் சிக்காமல் தவிர்க்க வழிவகுக்கப்படும்.
கடன் நெருக்கடிக்கான தீர்வு கடந்த 31ம் திகதி இரவு எட்டப்பட்டதாக அதிபர் ஒபாமா அறிவித்தார். அதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் இணைந்து தாங்கள் முன்வைத்த பரிந்துரைகளை மசோதாவாக உருவாக்கின.
மசோதா நிறைவேற்றம்: இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் ஜனநாயகக் கட்சியினரில் 95 பேர் மசோதாவை ஆதரித்தும், 95 பேர் எதிர்த்தும் ஓட்டளித்தனர்.
எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரில் 174 பேர் ஆதரித்தும், 66 பேர் எதிர்த்தும் ஓட்டளித்தனர். மொத்தத்தில் மசோதாவுக்கு ஆதரவாக 269 ஓட்டுகளும், எதிராக 161 ஓட்டுகளும் விழுந்தன.
"மசோதாவில் சில பரிந்துரைகள் மீதான கருத்து வேறுபாடுகளால், குடியரசுக் கட்சியினர் நிச்சயம் எதிர்ப்பர், அதனால் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேறாது, கடன் நெருக்கடிக்கான தீர்வு அவ்வளவு விரைவில் காணப்படாது" என பல தகவல்கள் கடந்த 31ம் திகதி முதல் உலவின. ஆனால் பிரதிநிதிகள் சபை அத்தகவல்களை பொய்யாக்கி மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளது.
புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்: அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு அடுத்த 10 ஆண்டுகளுக்கு 2.1 டிரில்லியன் டொலர் அளவிற்கு உயர்த்தப்படும். அரசின் அன்றாடச் செலவுகள், ராணுவ சம்பளம், வாங்கிய கடனுக்கு வட்டி, மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு போன்றவற்றுக்காக முதற்கட்டமாக 400 பில்லியன் டொலர் தொகை கடன் உச்சவரம்பில் உயர்த்தப்படும்.
இரண்டாவதாக பிப்ரவரிக்குள் மேலும் 500 பில்லியன் டொலர் அதிகரிக்கப்படும். சட்டப்படி எதிர்க்கட்சியினர் இந்த இரண்டாவது அதிகரிப்பை எதிர்த்து காங்கிரசில் ஓட்டளிப்பர்.
ஆனால் அதை அதிபர் தனது மறுப்பாணை(வீட்டோ) மூலம் நிராகரிப்பார். இந்த நடவடிக்கை ஒரு கண்துடைப்புக்காக மேற்கொள்ளப்படும். இதையடுத்து இந்தாண்டு அக்டோபர் மாதம் அடுத்த 10 ஆண்டுகளுக்கான முதற்கட்ட 917 பில்லியன் டொலர் செலவுக் குறைப்புத் திட்டம் அமலுக்கு வரும். இதில் ராணுவச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் 350 பில்லியன் டொலர் சேமிக்கப்படும்.
இதற்கிடையில் நவம்பரில் இரு கட்சியினரும் அடங்கிய 12 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு 2013ல் இருந்து மேலும் 1.5 டிரில்லியன் டொலர் செலவுகளைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும்.
அதேநேரம் அந்தப் பரிந்துரைகளில் வரி உயர்வு இருக்காது. வரி சீர்திருத்தம் இருக்கலாம். டிசம்பர் 23ம் திகதி பரிந்துரைகள் மீது எவ்வித தாமதமும், திருத்தமும் இன்றி காங்கிரஸ் ஓட்டளிக்க வேண்டும்.
பரிந்துரைகளை காங்கிரஸ் நிராகரித்தால் 2012 ஜனவரி 15ம் திகதி முதல் முதியோருக்கான நலவாழ்வு காப்பீட்டு திட்டம், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்றவற்றில் தன்னிச்சையாக செலவுகள் குறைக்கப்படும். இறுதியாக செலவுகள் வருமானத்தை விட அதிகரிக்காமல் இருக்க வழி செய்யும் சீரான பட்ஜெட்டுக்கான அரசியல் சாசன திருத்தம், காங்கிரசில் ஓட்டளிப்பு மூலம் இந்தாண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதிபர் ஒபாமா மேலும் 1.5 டிரில்லியன் டொலர் கடன் உச்சவரம்பை அதிகரிக்க காங்கிரசிடம் கோருவார். நிறைவேற்றப்படாத பட்சத்தில் உச்சவரம்பை 1.2 டிரில்லியன் டொலராக குறைத்துக் கேட்பார்.
பென்டகனுக்கு பாதிப்பு: தற்போதைய ஒப்பந்தத்தால் அமெரிக்க ராணுவ மையமான பென்டகன் பெரிதும் பாதிக்கப்படும். அடுத்த பத்தாண்டுகளில் அதற்கான நிதி ஒதுக்கீட்டில் 550 பில்லியன் டொலர் குறைக்கப்படும். இந்தாண்டில் மட்டும் பென்டகனுக்கு 689 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2012ல் 684 பில்லியன் டொலராக குறைக்கப்படும்.