காற்று மண்டலத்திலுள்ள பசுமை மண்டல வாயுக்களான மீத்தேன், கார்பன் – டை – ஆக்ஸைடு ஆகியவை சூரியனின் வெப்பத்தை பூமியை சென்றடைவதை காற்று மண்டலத்திலேயே தடுத்துவிடுவதால் காற்று மண்டலம் வெப்பமடைந்து புவியும் வெப்பமடைவதாக சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களின் கருத்து.
அதைப் போல -
இறுதி இலக்கு நிர்ணயமில்லாத அறிவுரை பரப்பல்களால் நம் மூளை நிறைந்திருப்பதால் இயற்கையாகவே பரிணாமம் அடைந்து விடும் வாய்ப்பை நாம் இழக்கிறோம். பகுப்பாய்வு மூலம் பெறும் விளைவுகளை ஆராய்ந்து அறிவு சேகரிப்பில் உருவாவதுதானே பகுத்தறிவு. ஆனால் ஒரு சிலரின் சுய அனுபவ அறிவை பகுத்தறிவு என பொய்ப்புரை செய்ததால் நம் இயற்கை அறிவு சேகரிப்பு நின்று போனது. நம் பகுத்தறிவு நம் தொடர் அனுபவங்கள் மூலம் நமக்கு இயற்கையாகவே சேகரமாகும்.