சம்மாந்துறையில் மர்மமனிதன் பீதி! ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி.
சம்மாந்துறையில் நேற்று இரவு ஏற்பட்ட மர்ம மனிதன் பீதியின் போது ஏற்பட்ட அல்லோல கல்லோல நிலையில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை பிரதேசத்தில் மர்ம மனிதர் இருவரை பொலிஸார் காப்பாற்ற முற்பட்டார்கள் என பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேற்றிரவு 8 மணியளவில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தும் பொதுமக்கள் மீது நடவடிக்கை - கோத்தபாய எச்சரிக்கை.
பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்துதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைளில் பொதுமக்கள் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று எச்சரித்துள்ளார்.
வாழைச்சேனை பிரந்துருச்சேனை கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு புகையிரத நிலையத்தில் நடமாடிய ஒருவரை 'மர்ம மனிதன்' என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் அடையாளம் காட்டியதனை அடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிரிஸ் பூதம் தொடர்பில் நாடு முழுவதிலும் பரவி வரும் வதந்திகள் போலியானவை என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து இன்று காலை முதல் தற்போது வரை பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். வீதிகளில் டயர் போட்டு எரியூட்டப்பட்டுள்ளன.
ஈராக்கில் 109,000 பொதுமக்களை கொன்றொழித்த அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் யுத்தக் குற்றம் தொடர்பாகவோ, மனித உரிமைகள் தொடர்பாகவோ குரல் கொடுக்க அருகதையில்லை என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான நெருக்குதல் போன்ற தருணங்களில் இலங்கைக்கு உரிய உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை சந்தித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இந்த சம்பவத்தில் சம்மாந்துறை கோரக்கோயிலை சேர்ந்த வெள்ளையன் மோகன் (40வயது) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இவர் மர்ம மனிதனை துரத்திச்சென்ற போது மதுபோதையில் வந்த ஒருவர் இவர் மீது சரமாரியான கத்திக்குத்தை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கும் நபர் சரணடைந்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி. ஊரடங்கு சட்டம் அமுல்.
கொல்லப்பட்டவர் மொஹமட் மஹ்ஜூன் என்று அடையாளம் காணப்பட்டார்.
சம்மாந்துறையில் பொலிஸார் - பொதுமக்கள் இடையில் கைகலப்பு! கண்ணீர்புகை பிரயோகம்.
மர்ம மனிதர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற முறுகலை அடுத்து கைதுசெய்யப்பட்ட நால்வரை விடுதலை செய்யுமாறு கோரியே பொத்துவிலில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சை நடத்தினர். இதனையடுத்தே கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை நடத்திய பொலிஸார் பின்னர், துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தினர்.
இந்தநிலையில் தற்போது பொத்துவில் பொலிஸ் பிரதேசத்தில் நாளை காலை வரை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து இராணுவத்தினரை விலக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சீனாவில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளார். அதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் திருக்கோவிலில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற முறுகல் காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் காயமடைந்துமுள்ளனர்.
இதனையடுத்து கைகலப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர்.
மர்ம மனிதன் விவகாரம் தொடர்பாக சம்மாந்துறைப் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடம்பெற்ற மோதலின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை வீதிகளை பிரதேசசபையினர் துப்பரவு செய்வதையும் டயர் எரிக்கப்பட்டுக்கிடப்பதையும் மக்கள் கூடிநிற்பதையும் படங்களில் காணலாம்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள கோரக்கோயில் பிரதேசத்தில் சம்பவதினம் இரவு 8 மணியளவில் பெண்ணொருவர் குளித்துக் கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு வந்த மர்மமான இருவர் அப்பெண் மீது சேட்டையில் ஈடுபட முற்பட்ட போது அப்பெண் கூச்சலிட்டு கத்தியதையடுத்து அவ்விருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடி ஒழிந்துள்ளனர்.
இதனை அவதானித்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோசமிட்டனர். இவர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டவேளையில் பொலிஸார் மீது கல்லெறிகள் வீழ்ந்தன. இதனால் ஆத்திரமடைந்த பொலிஸார் இவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலகத்தை அடக்க முற்பட்டனர்.
இச்சம்பவத்தையடுத்து பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
அதன்பின்னர் நிலைமை சுமுகநிலைக்கு திரும்பியுள்ளதுடன் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைய நாட்களில் கிறீஸ் பூதங்கள் என்று கூறப்படுபவர்கள் தொடர்பாக அப்பாவிகளும் பொலிஸாரும் பொதுமக்களால் தாக்கப்படும் சம்பவங்களை இடம்பெற்றுள்ளன.
வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் மர்ம மனிதன் கைது.
இத்தகைய நடவடிக்கையை மக்கள் எதிர்காலத்தில் மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நாம் கடும் நடவடிக்கை மேற்கொள்வோம் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறினார்.
பொலிஸ் அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பொலிஸாரின் செயற்பாடின்மை காரணமாகவே, அப்புத்தளையில் இரு அப்பாவிகள் கிறீஸ் பூதங்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கிராமவாசிகளால் கொல்லப்பட்டனர்.
பொலிஸார் யுத்தத்தின்போது ஆற்றிய சேவையை இப்போது யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் மக்களுக்கேற்ற முறையில் மாற்றவேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு வாழைச்சேனை பிரந்துருச்சேனையில் மர்ம மனிதனின் நடமாட்டம் இருந்ததாக செய்தி பரவியதைத் தொடர்ந்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.
கிரிஸ் பூதங்கள் பற்றிய வதந்திகள் போலியானவை – பொலிஸ் மா அதிபர்.
இதன்போது அங்கு நடமாடிய மர்ம மனிதர்கள் எனக் கருதப்பட்ட இனந்தெரியாத நபர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து நடமாடிய மர்ம மனிதன் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் - இராணுவத்திற்கு அடையாளம் காட்டியுள்ளனர்.
இராணுவத்தினர் அவரை அனுப்ப முற்பட்டபோது மக்கள் ஆத்திரமடைந்ததுடன் பெருந்திரளான மக்கள் அவ்விடத்தில் கூடி புகையிரதத்தை மறித்துள்ளனர்.
நீர்கொழும்பைச் சேர்ந்தவரென தன்னை அடையாளப்படுத்திய குறித்த சந்தேகநபர் - தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும் அவர் வெலிக்கந்தைக்குச் செல்வதற்கு பயணச் சீட்டு எடுத்ததை அடுத்து மேலும் குழப்பமடைந்த பொதுமக்கள் - சித்தாண்டி இராணுவ படை பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு சென்ற பொலிஸார் சந்தேகநபர் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர் என்பதால் பொதுமக்களிடமிருந்து குறித்த சந்தேகநபரை பாதுகாக்கவும் மேலதிக விசாரணை மேற்கொள்ளவென கூறி வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து வாழைச்சேனை பிரதேசத்தில் சிறு பதற்றநிலை ஏற்பட்டது;
இவ்வறாhன போலியான பிரச்சாரங்களுக்கு மக்கள் துணை போகக் கூடாது.
கணவரையோ, என்னையோ குறுகிய அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் - அனோமா.
நாட்டின் 21 பிரதேசங்களில் இவ்வாறான கிரிஸ் பூதங்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சம்பவங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் அவ்வாறான பூதங்கள் எதுவும் கிடையாது என்பது தெளிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர், போதை பொருள் பாவனையாளர்கள், மனநோயாளிகள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு பூதங்களாக மாறி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுளளார்.
தமது கணவரையோ அல்லது தம்மையோ குறுகிய அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி, அனோமா பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
நடைபெறவுள்ள கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது.
பொத்துவில் பிரதேசத்தில் இன்றும் பதற்றம் தொடர்கிறது.
போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து கட்சித் தலைவர்களுக்கு தகவல் அனுப்பியதாக குறிப்பிடப்படும் தகவல்களிலும் உண்மையில்லை.
இந்த விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாகவோ அல்லது உத்தியோகப் பற்றற்ற ரீதியிலோ பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கணவர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதே தமது பிரதான இலக்கு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைனயடுத:;து பொலிஸாரும் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி வீசாவுடன் இத்தாலி செல்ல முயன்ற ஐந்து இளைஞர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது.
பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் நேற்று மர்ம மனிதர்களின் நடமாட்டத்தால் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாக்கியவத்தை பகுதியில் உள்ள சில வீடுகளை நேற்று இரவு 11 மணியளவில் மர்மனிதர்கள் தட்டியுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்கள் இரண்டு மர்ம மனிதர்களையும் துரத்தி சென்ற போது இடைநடுவே இருந்து மேலும் இரண்டு மர்ம மனிதர்கள் இவர்களுடன் இணைந்து ஓடியுள்ளனர்.
இதனையடுத்து நான்கு மர்ம மனிதர்களும் குறித்த பிரதேசத்தில் இருந்த பாழடைந்த வீடொன்றினுள் புகுந்துள்ளனர். எனினும் மர்ம மனிதர்கள் வசம் துப்பாக்கி காணப்பட்டதால் பிரதேச மக்கள் அவர்களை நெருங்க வில்லை.
இதனையடுத்து அங்கு ஒளிந்திருந்த மர்மமனிதர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் குறித்த பாழடைந்த வீட்டினுள் சென்ற பிரதேச மக்கள் அங்கு பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள், அடையாள அட்டையின் பிரதிகள் மற்றும் பாஸ்போர்ட் பிரதிகள், ஆடைகள், தேர்தல் இடாப்பு கோப்பு, கத்தி முதலான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தையடுத்து அரை மணிநேரத்தின் பின் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு பொலிஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து பொத்துவில் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரதேசத்தில் தற்போது சுமூகநிலை ஏற்பட்டுள்ளதாக கூறி தொடர்பினை துண்டித்து விட்டனர்.
இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள கோரக்கோயில் பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பெண்ணொருவர் குளித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மமனிதர் என்று கூறப்படும் இருவர்; அந்தப்பெண் மீது வன்முறையை பிரயோகிக்க முயன்றுள்ளனர்.
இதனையடுத்து பெண் கூச்சலிடவே இராணுவத்தை சேர்ந்த இருவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஒளிந்துகொண்டனர். இதனையடுத்து அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதேவேளை இன்று ஊரணி கிராம தமிழ் மக்கள், ஏற்றம் கிராம முஸ்லிம் மக்கள் மற்றும் பொத்துவில் நகர மக்கள் அனைவரும் இணைந்து பொத்துவில் பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசா என்பவற்றுடன் இத்தாலி செல்ல முயற்சித்த ஐந்து இளைஞர்கள் கொழும்பு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சட்டவிரோத போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கியதாகக் கருதப்படும் இருவரும் கைதானவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானநிலையக் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவர்களது கடவுச்சீட்டைப் பரிசோதனை செய்தபோது போலியானவை என்பதைக் கண்டறிந்தவுடன் இவர்கள் ஐந்துபேரையும் கைது செய்தனர்.
ஈராக்கில் மக்களை கொன்ற அமெரிக்காவும் பிரிட்டனும் போர்க்குற்றம் குறித்து பேசக்கூடாது!- சம்பிக்க.கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானநிலையக் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவர்களது கடவுச்சீட்டைப் பரிசோதனை செய்தபோது போலியானவை என்பதைக் கண்டறிந்தவுடன் இவர்கள் ஐந்துபேரையும் கைது செய்தனர்.
அத்துடன், இந்தியாவின் தேவைக்காக அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியாது. எமது தேவைக்கேற்றவாறே படிப்படியாக அவசர காலச் சட்டத்தை நீக்குவோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அளவில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உதவுவோம் - மஹிந்தவுக்கு உறுதியளித்த சீனா.
கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையில் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாகவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இராணுவத்தினருக்கு அதிகாரங்களை வழங்கி வீடுகளிலும், முக்கிய இடங்களில் சோதனைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அன்று அவசரகாலச் சட்டம் அவசியமாக தேவைப்பட்டது. இன்று யுத்தம் முடிந்து விட்ட சூழ்நிலையில் இந்தியா சொல்வதால் அவர்களின் தேவைக்காக அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியாது. படிப்படியாக அவசரகால சட்டத்தை எமது தேவைக்கேற்ப நீக்கி சாதாரண சட்டத்தை அமுல்படுத்த முடியும்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், நாகலாந்து மாநிலங்களில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளது. இதனை நீக்க வேண்டுமென நாம் இந்தியாவிடம் கூறவில்லை.
வடக்கின் தமிழ் சகோதரர்கள் என கண்ணீர் வடிக்கும் ஜெயலலிதா, மீனவர்கள் பிரச்சினையென வரும்போது தமிழ் மீனவர்கள் எனக் கூறுவதில்லை. இலங்கை மீனவர்கள் என்றே கூறுகின்றார். இதுதான் தமிழ்நாட்டுக்காரர்கள் வடபகுதி தமிழ் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பாகும். இது உண்மையானதல்ல. வெறும் வேஷம்.
செப்டெம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தின்போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை பதிலளிக்க வேண்டுமென அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அறிவித்துள்ளது.
ஐ.நா.வின் போர் விதிகளை நாம் மீறியதில்லை. இதனை இறுதிக்கட்ட யுத்தத்தில் காப்பாற்றப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களிடமிருந்தும் யுத்தத்தில் பங்குபற்றி தற்போது உயிருடன் உள்ள 36000 படையினரிடம் கேட்டு இதனை தெரிந்து கொள்ளலாம். இறுதி கட்ட யுத்தத்தின்போது பொது மக்களை புலிகளே மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினர்.
ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கப் படையினரும் பிரிட்டிஷ் படையினரும் ஒரு இலட்சத்து 9000 பொதுமக்களை கொன்று குவித்தனர். இது தொடர்பில் ஈராக்கில் இருந்த அமெரிக்க படையதிகாரி உத்தியோகபூர்வமாக அறிக்கை கையளித்தள்ளார். த கார்டியன் பத்திரிகையில் இது பிரசுக்கப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவும் பிரிட்டனும் மக்களை கொலை செய்தது நிரூபணமாகியுள்ளது.
அத்தோடு இக் குற்றச்சாட்டை இரு நாடுகளும் நிராகரிக்கவில்லை. இவ்வாறு உத்தியோகபூர்வமாக குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட இவர்கள் எம்மை பதிலளிக்க வேண்டுமென கோர முடியாது. அதற்கான அருகதையும் கிடையாது.
ஈராக்கை ஆக்கிரமித்த இவர்கள் அந்நாட்டின் வரலாற்றுச் சின்னங்களை நகரங்களை அழித்தனர். போர் வழிமுறைகளுக்கு அப்பாற் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர்..
நோர்வே சமாதானத்தின் தேவ தூதரின் நாடாக வர்ணிக்கப்படுகின்றது. இன்று அங்கு கிறிஸ்தவ அடிப்படை வாதம் தலைதூக்கியுள்ளது. இதனை இலங்கையில் பரப்ப முயற்சிக்க வேண்டாம். சமாதானத் தூதுவர்கள் இன்று லிபியாவில் மக்களை கொலை செய்வதற்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அமெரிக்கா, பொருளாதாரத் தடை விதித்தால் எமது நாட்டின் சந்தை வர்த்தகம் பாதிக்கப்படும். இது எமது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா மேற்கொள்ளும் அநீதியான செயலாகும். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு அன்று புலிகள் உதவினர். அதன் மூலம் அமெரிக்காவில் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இன்று புலிகளை நாம் அழித்துள்ளோம்.
இதனை விட்டு அமெரிக்கா அநீதியான தீர்மானங்களை எடுப்பது எவ்வாறு நியாயமாகும். அதேவேளை டொலரின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவின் கடன் சுமை அதிகரித்து ஐரோப்பாவிலேயே பொருளாதார நெருக்கடி தோன்றியுள்ளது.
எனவே, நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. இருபது வருடங்களுக்கு ன்பாக இப்படிக் கூறியிருந்தால் பயப்படத்தான் வேண்டும். ஆனால் இன்று தெற்காசியாவில் ஸ்திரமான பொருளாதார ஜாம்பவான்கள் தோன்றியுள்ளனர்.
எனவே, புதிய வியூகங்களை ஏற்படுத்தி முன் செல்ல வேண்டும். எந்த அழுத்தம் வந்தாலும் எமது மக்கள் பலத்தால் வெற்றி பெறுவோம் என்றார்.
சீனா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாபதி மகிந்த ராஜபக்ச, சீனப் பிரதமர் வென் ஜியாபோவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தரப்பு உறவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, சர்வதேச பிரச்சினைகளின்போது, இலங்கைக்கு சீனா உரிய உதவிகளை அளிக்கும் என ராஜபக்சவிடம் ஜியாபோ உறுதியளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.
ரணில் விக்ரமசிங்க சரத் பொன்சேகாவை சந்தித்துள்ளார்.இரு தரப்பு உறவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, சர்வதேச பிரச்சினைகளின்போது, இலங்கைக்கு சீனா உரிய உதவிகளை அளிக்கும் என ராஜபக்சவிடம் ஜியாபோ உறுதியளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் ரணில் விக்ரமசிங்கவுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3143 தீவிரவாதிகள் கைது.
சரத் பொன்சேகாவை நலன் விசாரித்து பார்வையிடுவதற்காகவே சிறைச்சாலைக்கு சென்றதாகவும், அங்கு எவ்வித அரசியல் செயற்பாடுகள் தொடரபாக பேசப்படவில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவு 17ம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும், சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவை தேர்தலில் போட்டியிடச் செய்வது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3,143 தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்கா உட்பட உலக நாடுகள் சர்வதேச தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தாலும், தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் 3,143 தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அதிகப்பட்சமாக தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 3,143 தீவிரவாதிகளிடம் இருந்து 4,240 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஏவுகணைகள், தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஜாக்கெட்டுகள், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் அடங்கும்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மனித குரங்கு தாக்கி முகம் சிதைந்த பெண்ணுக்கு மாற்று அறுவை சிகிச்சை.
அமெரிக்காவில் கனெக்டிகட் நகரை சேர்ந்தவர் சார்லா நாஷ்(57). கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கத்து வீட்டுகாரர் வளர்த்து வந்த டிராவிஸ் என்ற மனித குரங்கு இவரை கடித்து குதறியது.
அதில் அவரது மூக்கு, உதடுகள், கண் இமைகள், ஆகிய முகத்தின் அனைத்து பாகங்களும் சேதம் அடைந்தன. முகம் முழுவதும் சிதைந்து கோரமானது.
அதை தொடர்ந்து அந்த மனித குரங்கு பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது. எனவே அவரை பாஸ்டனில் உள்ள பிரிகாம் பெண்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை நடந்தது.
இதை தொடர்ந்து அவரது முகம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு ஒரு புதிய முகம் கிடைத்தது குறித்து நாஷ் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தாதிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
தான் நடத்திய தாக்குதலை தானே படம்பிடித்த நபர்.
நோர்வேயில் 77 பேரை கொன்று குவித்த ஆண்டர்ஸ் அந்த காட்சியை படம் பிடித்துள்ளார்.
நோர்வேயில் கடந்த ஜுலை 22ம் திகதி அந்த நாட்டின் 32 வயது ஆண்டர்ஸ் ப்ரிவீக் துப்பாக்கியால் கொடூர தாக்குதல் நடத்தினார். அவர் உடோயா தீவில் ஆளும் தொழிலாளர் கட்சி நடத்திய இளைஞர் முகாமில் தனது வெறிசெயலை காட்டினார்.
72 மணிநேரம் நடத்திய தாக்குதலில் 69 இளைஞர்களை ஆண்டர்ஸ் சுட்டுக் குவித்தார். இந்த தாக்குதல் வெறி அடங்காத அவர் ஓஸ்லோவில் அரசு கட்டிடத்திற்கு வெளியே வெடிகுண்டு வைத்தார். இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
ரத்த வெள்ளத்தில் இறந்தவர்கள் பரிதாபத்தை ஆண்டர்ஸ் கமெராவில் படம்பிடித்து உள்ளார். ஓஸ்லோ பொலிஸ் வழக்கறிஞர் கிறிஸ்டியன் ஹடோ கூறுகையில்,"ஆண்டர்ஸ் ப்ரிவீக் குறிப்புகள், அவர் கொலை காட்சிகளை படம்பிடித்து உள்ளார்" என்றார்.
இதனை தொடர்ந்து ஆண்டர்ஸ் ப்ரிவீக் கமெராவை தேடுப்பணியில் நோர்வே பொலிசார் ஈடுபட்டுள்ளனர். அந்த கமெரா உடோயா தீவிலேயே இருக்கும் என்றும், மேலும் ஆதாரங்களை திரட்டவும் பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்: பிரிட்டன் அரசு உத்தரவு.
பிரிட்டனில் உள்ள லிபிய அதிபர் கடாபியின் தூதர்கள் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனால் அவர்கள் தங்களது கார் போன்ற சொத்துக்களை உடனடியாக விற்பதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். லிபியாவில் கர்னல் கடாபி ராணுவத்தினர் பொதுமக்களுக்கு எதிரான
தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தொடர்ந்து லண்டனில் உள்ள கடாபி தூதர்கள் நாட்டைவிட்டு வெளியேற பிரிட்டன் அரசு உத்தரவிட்டது. நாட்டைவிட்டு துரத்தப்படுவதற்கு முன்னர் அந்தத் தூதர்கள் சொத்துக்களை விரைவாக விற்று வருகிறார்கள்.
லிபியாவில் பணத்தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என கடாபி தூதர்கள் தங்கள் சொத்துக்களை வந்த விலைக்கு விற்று வருகிறார்கள். இதனை பிரிட்டனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லிபியாவில் தனது ராணுவத்திற்கு தேவையான எரிபொருள் பெறுவதிலும் கடாபிக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார். கடாபிக்கு எதிரான போராட்டக்காரர்களின் தேசிய மாற்ற கவுன்சிலை பிரிட்டன் கடந்த மாதம் அங்கீகரித்தது.
இந்தக் கவுன்சிலில் லிபிய அரசு உரிமை உள்ளது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. லிபியாவில் கடாபி ராணுவத்தை ஒடுக்க மார்ச் மாதம் முதல் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன.
உலகின் அதிவேக விமானம் பசுபிக் கடலில் விழுந்து நொறுங்கி விபத்து.
உலகின் அதிவேக விமானம் பரிசோதனை செய்யப்பட்ட போது பசுபிக் கடலில் விழுந்து நொறுங்கியது.
அமெரிக்க ராணுவத்தின் பால்கன் எச்டிவி - 2 சூப்பர் பாஸ்ட் விமானம் சாதாரண வர்த்தக விமானத்தைக் காட்டிலும் 22 மடங்கு அதிவேகமாக சீறி செல்லக்கூடியதாகும்.
கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் ராக்கெட் பின்புறத்தில் இணைக்கப்பட்ட இந்த விமானம் சீறிப் பாய்ந்தது. இந்த அதிவேக விமானம் புறப்பட்ட 9 நிமிடத்தில் சமிஞ்ஞை தருவதை நிறுத்தியது. இந்த விமானம் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் 2000 சென்டிகிரேடு வெப்பநிலையை தாங்கக் கூடியதாகும். அதிவேக விமானம் ஏற்கனவே ஏவும் திட்டம் கைவிடப்பட்டு ஏப்ரல் மாதம் விமான வடிவமைப்பு மாற்றப்பட்டது.
விமானத்தில் குறைபாடு இருந்ததைத் தொடர்ந்து அப்போது வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. சூப்பர் சானிக் விமானம் 139 வினாடிகளில் மணிக்கு 16700 மைல் வேகத்தில் சென்று உள்ளது.
அதிவேக விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கடலில் விழ உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் புல்லட் ரயில்களின் வேகம் திடீர் குறைப்பு.
சீனாவில் கடந்த மாதம் நடந்த ரயில் விபத்தின் எதிரொலியாக புல்லட் ரயில்களின் வேகத்தை குறைக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் 13 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவுக்கு புல்லட் ரயில்களுக்கான தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே பீஜிங் - ஷாங்காய் இடையிலான 1,600 கிலோமீற்றர் தூரத்துக்கு தற்போது புல்லட் ரயில்கள் 350 கிலோமீற்றர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.
இந்த தூரத்தை இந்த ரயில்கள் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன. கடந்த மாதம் 23ம் திகதி ஷிஜியாங் மாகாணத்தில் இரண்டு புல்லட் ரயில்கள் மோதிக்கொண்டதில் 40 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்துக்கு இன்டர்நெட் பிளாக் மூலம் 48 கோடி பேர் அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து புல்லட் ரயில்களின் வேகத்தை குறைக்க பிரதமர் வென் ஜியாபோ தலைமையிலான அமைச்சரவை நேற்று முடிவு செய்தது.
தற்போது 350 கிலோமீற்றர் வேகத்தில் இயங்கும் ரயில்கள் இனி 300 கிலோமீற்றர் வேகத்திலும், 300 கிலோமீற்றர் வேகத்தில் இயக்கப்படும் ரயில்கள் இனி 250 கிலோமீற்றர் வேகத்திலும், 250 கிலோமீற்றர் வேகத்தில் இயக்கப்படும் ரயில்கள் இனி 200 கிலோமீற்றர் வேகத்திலும், 200 கிலோமீற்றர் வேகத்தில் இயங்கும் ரயில்கள் இனி 160 கிலோமீற்றர் வேகத்திலும் இயக்கப்பட வேண்டும் என ரயில்வே துறைக்கு பிரதமர் வென் ஜியாபோ உத்தரவிட்டுள்ளார்.
அதிவேக ரயில்களின் மூலம், இந்த ஆண்டு ரயில்வே அமைச்சகத்துக்கு 85 சதவீத லாபம் கிடைத்ததாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: கடல் அலைகள் சீறி பாய்ந்ததால் மக்கள் பீதி.
ஜப்பானில் கடந்த மார்ச் 11ந் திகதி நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டது. இதனால் புகுஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். அதை தொடர்ந்து புகுஷிமாவிலும், ஜப்பானின் பிற நகரங்களிலும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.22 மணிக்கு ஜப்பானில் ஏற்கனவே பூகம்பத்தால் பாதித்த புகுஷிமாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு கட்டிடங்கள் குலுங்கின. அப்போது மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதி அடைந்தனர். அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். விடிய விடிய அங்கேயே தங்கியிருந்தனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கடல் அலைகள் வழக்கத்தை விட சீறி பாய்ந்தன. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இதற்கிடையே ரிக்டர் அளவில் 6 ஸ்கேல் ஆக நிலநடுக்கம் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புகுஷிமா கடற்கரையில் 50 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் போது புகுஷிமா பகுதியில் உள்ள கொரியாமா என்ற இடத்தில் படுக்கையில் இருந்து 45 வயது நபர் ஒருவர் கீழே தவறி விழுந்தார். அதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் புகுஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இதற்கிடையே ஜோர்டன், பனேட் சூ ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புகுஷிமாவை தொடர்ந்து ஜப்பானின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மியாகி, இபாராகி மற்றும் தொசிகி ஆகிய மாகாணங்களிலும் பூமி குலுங்கியது.
எதிரிகளை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை தயாராகிறது.
உலகின் எந்த மூலையானாலும் ஏவுகணைகளை விட வேகமாகச் சென்றடையக் கூடிய வானூர்தி தொழில்நுட்பத்தை அமெரிக்கா தயாரித்திருக்கிறது.
இந்த முன்னணி திறன் கொண்ட வாகனத்திற்கு "பால்கன் எச்டிவி-2" என பெயரிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பால்கன் எச்டிவி-2 என்ற ஆளில்லாமல் பறக்கக்கூடிய ஏவுகணை போர் விமானம் 21 ஆயிரத்து 580 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.
ஆயிரத்து 386 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போர் விமானம் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை ரீதியாக இயக்கப்பட்டு தோல்வியடைந்தது. பொதுவாக சூப்பர் சானிக் என்பது ஒலியை விட வேகமாகச் செல்லும் வானூர்தி ஆகும்.
ஆனால் இது ஹைபர் சானிக் என்றழைக்கப்படுகிறது. ஒலியை விட வேகம் கொண்டது. பொதுவாக நியூயோர்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை ஜெட் விமானத்தில் பயணம் செய்ய ஆகும் அந்த நேரத்தை இந்த ஏவுகணை ஊர்தி 12 நிமிடத்தில் கடக்கும் திறன் கொண்டது.
அமெரிக்காவின் இந்த ஹைபர் சானிக் தொழில்நுட்பம் முழு வெற்றி பெற்றால் விண்வெளியில் பயணம் என்பது மேலும் எளிதாகும். அத்துடன் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பமும் மேலும் வலுப் பெறும்.
முரண்டு பிடிக்கும் எதிரி நாடுகளை தன் ஏவுகணைகளால் சில நிமிடங்களில் பணிய வைத்து விடும். கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படை தளத்திலிருந்து மினோடார் என்ற ராணுவ ராக்கெட் மூலம் பால்கன் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படுகிறது.
ஒரு டன் எடை கொண்ட அணுகுண்டை ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த இச்சோதனை முழு வெற்றி பெற்றால் வரும் 2025ம் ஆண்டு இந்த பால்கன் வாகனம் பயன்பாட்டிற்கு வரும்.
விஷவாயு படுகொலைக்கு ஆதரவாக ஜேர்மனியில் பிரசாரம்.
ஜேர்மனியில் புதிய நாஜி தேசிய ஜனநாயக கட்சியினர் பெர்லினில் விஷவாயு படுகொலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். இது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர் உடோ வோய்க்ட் மோட்டார் சைக்கிளில் "கேஸ் கெபன்" என்ற வார்த்தையோடு பிரசாரம் செய்யும் போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளது.
கேஸ் கெபன் என்பதற்கு விஷவாயுவை கொடுங்கள் என்ற அர்த்தமாகும். ஹிட்லரின் நாஜிப் படையினர் தங்களுக்கு விரோதிகள் எனக் கருதிய யூதர்களை விஷவாயுக் கூடத்தில் பூட்டி பல ஆயிரம் பேரை ஒரே நேரத்தில் கொன்றனர்.
அதே போன்ற இனப்படுகொலையை தூண்டும் வகையில் புதிய நாஜி தேசிய ஜனநாயக கட்சியினர் போஸ்டர் பிரசாரம் செய்கிறார்கள். ஜேர்மனி தலைநகர் பெர்லினில் 22 ஆயிரம் போஸ்டர்கள் விநியோகிகப்பட்டு தவறான நடவடிக்கைக்கு பிரசாரம் செய்யப்படுகின்றன.
பெர்லினில் மாநில தேர்தல் செப்டம்பர் 18ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரசாரத்தில் எதிரணியினரின் வாக்குகளை பெறுவதற்காக இப்படி ஒரு பிரசாரத்தை நாஜி தேசிய ஜனநாயக கட்சி மேற்கொண்டு உள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
கிறிஸ்டியம் ஜனநாயக யூனியனின் பெர்லின் சபை பிரதிநிதி ஆண்ட்ரியாஸ் கிராம் இந்த போஸ்டர் பிரசாரம் மனித தன்மையற்ற நிலையைக் காட்டுகிறது எனக் குற்றம் சாட்டினார்.
சுற்றுலா பயணத்தை ரத்து செய்து விட்டு அவசரமாக நாடு திரும்பிய சர்கோசி.
ஐரோப்பிய நாடுகள் நிதிப் பிரச்சனையில் தள்ளாடுகின்றன. சிறிய கிறீஸ் முதல் பிரிட்டன் வரை நிதி தட்டுப்பாட்டில் தவிக்கின்றது.
பிரான்சின் நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை நிதி தடுமாற்றம் குறித்த பிரச்சனை பாரிசில் எட்டி பார்த்தது.
பிரிட்டனில் தற்போது வன்முறை பரவி வருகிறது. அங்கு இயல்பு நிலை ஏற்பட இத்தாலிக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் அவசரமாக நாடு திரும்பினார்.
அதே போன்று பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி தனது சுற்றுலா பயணத்தைப் பாதியில் கைவிட்டு அவசரமாக திரும்பி அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ரிவேராவில் தனது மனைவி கர்லா ப்ரூனியை அவரது குடும்ப இல்லத்தில் விட்டு அவசரமாக சர்கோசி திரும்பி உள்ளார். அவரது பாரிஸ் வருகை மிக ரகசியமாகவே அமைந்தது.
பிரான்ஸ் நிதிப்பிரச்சனை குறித்து கவலைப்பட வேண்டாம் என சர்கோசி தனது கேபினட்டில் உறுதியளித்தார். சுற்றுலா விடுமுறையில் பொழுதை கழித்து அபாயத்தை எதிர்கொள்ள வேண்டாம் எனக் கருதிய சர்கோசி தனது விடுமுறை பயணத்தை ரத்து செய்து பாரிஸ் வந்துள்ளார்.
பிரான்ஸ் கடன் தர நிர்ணய நிலை குறைக்கப்படும் என்ற வதந்திகள் வந்த நிலையில் ஆகஸ்ட் 17ம் திகதி பிரதமர் பிரான்கய்ஸ் பிலனுடன் சர்கோசி ஆலோசனை நடத்துகிறார்.
ஒண்டோரியோ நீதிமன்றத்தில் முதல் தேச நபர்கள் புறக்கணிப்பு பிரச்சனை.
ஒண்டோரியோவில் பல ஆண்டுகளாக முதல் தேசத்தை சார்ந்த நபர்கள் நீதித்துறையில் பணியாற்ற முடியாத நிலை உள்ளது என்ற குற்றச்சாட்டு உண்டு.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என மாகாண அரசு நேற்று தெரிவித்தது.
அட்டர்னி ஜெனரல் கிறிஸ் பென்ட்லி நேற்று அறிவிப்பு வெளியிடுகையில்,"கனடா நீதிபதி பிராங்க்லோசோ பக்சி இப்பிரச்சனை குறித்து தனி ஆய்வு மேற்கொண்டார்" என தெரிவித்தார்.
நீதிமன்ற மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில்,"மாவட்டத்தில் 44 பூர்விக பகுதி மக்கள் நீதித்துறையில தேர்வு செய்ய பரிசீலனை செய்யப்படுகிறது" என்றார்.
கடந்த மார்ச் மாதம் ஒண்டோரியோவின் உயர் நீதிமன்றம் முதல் தேச நபர்கள் நீதித்துறையில் இடம் பெறுவது குறித்து அங்கீகரித்தது. மாகாணத்தின் இதரப் பகுதிகளிலும் நீதித்துறையில் முதல் தேச நபர்கள் புறக்கணிக்கப்படும் பிரச்சனை உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
ஒண்டோரியா நீதித்துறை பிரச்சனை குறித்து லாகோ பக்சி முழுமையான ஆய்வு மேற்கொண்டு ஒரு ஆண்டிற்கு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.
முஷாரப் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலுசிஸ்தான் மாகாண உயர்நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
பலுசிஸ்தான் பிராந்திய தலைவர் அக்பர் பக்டி கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை வியாழக்கிழமை பலுசிஸ்தான் மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி காஸி பயீஸி, பொலிசாரின் செயல்பாடு மிகவும் மெத்தனமாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் முஷாரப் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து வெளியேறி பிரிட்டனில் வசித்து வருகிறார் முஷாரப். சில சமயங்களில் அவர் துபாய்க்கு செல்வதுண்டு. புதிதாக கட்சியைத் தொடங்கி அதை பிரிட்டனிலிருந்து செயல்படுத்தி வருகிறார் முஷாரப்.
பர்வேஸ் முஷாரப்பை பிரிட்டனிலிருந்து பாகிஸ்தானுக்குக் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண அரசு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்குரைஞர் நஸருல்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக சர்வதேச பொலிஸ்(இன்டர்போல்) உதவியை நாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான கடிதம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் அவர் தெரிவித்தார். அக்பர் பக்டி கொலை வழக்கு தொடர்பான அனைத்து முடிவுகளையும் மத்திய அரசுதான் எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கு விசாரணை மிகவும் மெத்தனமாக நடைபெறுவதாக குறிப்பிட்ட இருநபர் நீதிபதி பெஞ்ச், அதிகபட்ச காலம் இதுவரை விரயம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் இதுவரை எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. ஆனால் சம்பந்தப்படாதவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
2006ம் ஆண்டு பலுசிஸ்தான் மாகாணத்தில் அம்மாநில தலைவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் அக்பர் பக்டி கொல்லப்பட்டார். ராணுவ நடவடிக்கைக்கு அப்போது அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப்தான் உத்தரவிட்டார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும்: சிரிய அதிபர் உறுதி.
இந்த ஆண்டு இறுதிக்குள் சிரியா நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் பஷாத் அல் அசாத் கூறினார்.
இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுக்குழுவினர் சிரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து இக்குழுவினர் ஆராய்ந்து கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களிடம் பேசுகையில் அதிபர் பஷாத் அல் அசாத் இத்தகவலைத் தெரிவித்தார்.
முன்னதாக தூதுக் குழுவினரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதனால் கடும் சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்துக்கு தான் வருந்துவதாகக் கூறிய அதிபர் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்தியக் குழுவில் கூடுதல் செயலர் திலீப் சின்ஹா, தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சர் இப்ரஹிம், மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரேஸில் துணைச் செயலர் பாலோ கோர்டிரோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
சிரியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாலித் அல்-மெளலாம் தூதுக்குழுவிடம் உறுதியளித்தார்.
நாட்டின் பன்முக கட்சி ஜனநாயக ஆட்சிக்கு வழியேற்படுத்தப்படும் என்று உறுதியளித்த அதிபர் அசாத் மக்கள் ஒத்துழைப்புடன் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
அரசியல் சீர்திருத்தம் அனைத்தும் மக்களிடம் கலந்து பேசி மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அதிபர் இப்பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்றார். கடந்த மார்ச் மாதம் சிரியாவில் நடைபெற்ற மோதலில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.
முஸ்லிம்களுக்கான கண்ணியத்தை காப்பாற்றுங்கள்: தலிபான்களுக்கு ஹமீத் கர்சாய் வேண்டுகோள்.
ஆப்கனைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெருமையோடு அணியும் டர்பன் எனப்படும் தலைக் குல்லாய்களுக்கு உரிய கண்ணியத்தைக் குலைத்துவிடாதீர்கள் என தலிபான்களுக்கு அதிபர் ஹமீத் கர்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆள்களை சோதனையிடும் பாதுகாப்புப் படையினர் இதுவரை ஆடவர்களின் தலைக் குல்லாய்களையும் மகளிரின் பர்கா என்று அழைக்கப்படும் பர்தாவையும் அகற்றுமாறு கோருவதில்லை.
ஆனால் கடந்த மாதத்தில் நடந்த இரண்டு பெரிய தாக்குதல்களை நடத்திய மனித வெடிகுண்டுகள் "டர்பன்" என்று அழைக்கப்படும் தலைக் குல்லாய்க்குள் தான் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை மறைத்துக் கொண்டுவந்து வெடிக்க வைத்து பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சமீபகாலமாக ஏராளமான பெண்களைப் பெண் காவலர்களை விட்டு சோதனை செய்த போது தான் அவர்கள் பெண்கள் அல்ல என்பதும் பர்தாவுக்குள் மறைந்துவந்த தலிபான்கள் என்பதும் அவர்கள் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டியிருந்ததும் தெரியவந்தது.
தலிபான்களின் கட்டளைகளுக்கு மதப் பூச்சு பூசப்படுவதால் ஆப்கானிஸ்தான் ராணுவம், பொலிஸ் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள்கூட அவற்றுக்குக் கட்டுப்படுகின்றனர்.
பொது இடங்களில் முஸ்லிம் மகளிர் பர்தா அணியாமல் வரக்கூடாது, அவர்களுடைய முகத்திரையை மற்றொரு ஆண் விலக்கிப் பார்க்கக்கூடாது என்பதால் முஸ்லிம் பெண்களைப் போல பர்தா அணியும் தலிபான்களைப் பிடிப்பதும் பிறகு சோதிப்பதும் இடராக இருக்கிறது.
அதற்காக போகிற எல்லா பெண்களையும் சோதனை போடுவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திவிடும் என்று கர்சாய் உணர்ந்திருக்கிறார். தலிபான் தீவிரவாதிகள் புனிதமான இந்த முஸ்லிம் மாதத்தில்கூட ஆப்கானிஸ்தானத்து ராணுவத்தையும் நேட்டோ படைகளையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
எனவே ஹமீத் கர்சாய் தன்னுடைய உதவியாளர் ஹமீத் எல்மி மூலம் உலேமா ஷூரா என்கிற உலேமாக்களின் பேரவைக்கு இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
ஹமீத் கர்சாயின் சகோதரர் அகமது வாலி கர்சாய் அவருடைய உதவியாளராலேயே படுகொலை செய்யப்பட்டார். இதற்காக துக்கம் விசாரிக்க வந்தவர்களுடன் தலிபான் தீவிரவாதி ஒருவரும் வந்துவிட்டார். அவர் குல்லாயில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்தார். அதில் ஏராளமானோர் இறந்தனர், படுகாயம் அடைந்தனர்.
அதே போன்ற சம்பவம் காந்தஹார் நகர மேயர் இறந்தபோதும் நடந்தது. அப்போதும் துக்கம் கேட்க வந்தவர்கள் தலையிலிருந்த குல்லாயில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துதான் கொன்றுள்ளனர்.
பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது, பொது இடங்களில் புர்கா அணியாமல் வரக்கூடாது, ஆடவர்களுடன் பேசக்கூடாது, ஆடவர்கள் சொல்லை மீறக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கும் தலிபான்கள் அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தத் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் கலவரம்: 1300 பேர் கைது.
லண்டனில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்த கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன் லண்டனில் உள்ள டோட்டன்ஹேம் பகுதியைச் சேர்ந்த பிரபல தாதா மார்க் டக்கன் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொலிசாருக்கும், டக்கன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. டோட்டன்ஹேம் நகரின் பல இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த கலவரம் மேலும் சில நகரங்களுக்கும் பரவியது. பிரதமர் டேவிட் கமரூன் இத்தாலி பயணத்தை பாதியில் முடித்து லண்டன் திரும்பினார்.
"எந்த விலை கொடுத்தாலும் கலவரத்தை ஒடுக்குவோம்" என அவர் உறுதியளித்தார். கலவரம் தொடர்பாக விவாதிக்க பார்லிமென்டின் அவசர கூட்டம் நேற்று நடந்தது.
கலவரம் தொடர்பாக நடந்த விஷயங்களை அமைச்சர்கள் பார்லிமென்டில் எடுத்துரைத்தனர். கலவர பகுதிகளில் பணியில் ஈடுபட்ட பொலிசாருக்கு உதவ ஸ்காட்லாந்து பொலிசார் 250 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 300 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரக்காரர்களை உடனடியாக சிறையில் அடைக்கும் பொருட்டு லண்டன் கோர்ட் நேற்று முன்தினம் நள்ளிரவு முழுவதும் இயங்கியது.
கடந்த நான்கு நாள் கலவரத்தில் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான இழப்பீடு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.