
பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளத்தின் அந்திமத்துக்கு நாள் குறித்து உள்ளது எதிர்ப்பு இயக்கம் ஒன்று. எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி பேஸ் புக்கை அழித்து விடுவார்கள் என்று இக்குழு சபதம் செய்து உள்ளது.
இவர்களால் யூ ரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்ற வீடியோ இணைய உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயினும் யார்? என்பதை இக்குழுவினர் வெளிப்படுத்தி இருக்கவில்லை. அரச முகவர்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியோருக்கு உளவாளியாக பேஸ் புக் தளம் செயல்படுகின்றது என குற்றம் சாட்டி உள்ளார்கள்.