கணணியில் ஒவ்வொரு வேலை செய்வதற்கும் தனித்தனி மென்பொருளை நாடாமல் Win Mate என்ற மென்பொருளின் மூலம் பல்வேறு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யலாம். இதனை முதலில் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின் பின்வரும் விண்டோ ஓபன் ஆகும்.
அதிலே Scan and Clean என்பதை கிளிக் செய்ததும் Pc Diagnosis, Junk Cleans, Trace Clean, Registry Clean, Duplicate File Scan ஆகிய Tabகள் காணப்படும்.உங்களுக்கு தேவையான Tab ஐ தெரிவு செய்ததும் தானாகவே செயற்பாடு தொடங்கி விடும். அது போலவே Junk Clean Tabஐ கிளிக் செய்து தேவையற்ற கோப்புகளை டிக் செய்து அழிக்கலாம். Trace Clean, Registry Clean போன்றவற்றின் செயற்பாடும் Junk Clean Tab மாதிரி தான்.
Duplicate File Scan எனும் Tabஐ தேர்ந்தெடுத்தால் நம் கணனியில் உள்ள Duplicate Fileகளை அழிக்கலாம். அதற்கு கோப்பறைகளை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் Start Scan எனும் பட்டனை அழுத்த வேண்டும்.
Program Manager பகுதியிலே கணனியில் நிறுவியுள்ள ப்ரோகிராம்களை Uninstall செய்யலாம். General Tool என்பதிலே இருக்கும் Utilities என்பதிலும் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றது.