Friday, April 1, 2011

விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க.


விண்டோஸ் 7 -ல் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்
( System Repair Disk ) பாதுகாப்பு வழிமுறை உருவாக்குவது
பற்றிய பதிவு.
விண்டோஸ் 7 -ல் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர்
டிஸ்க் ( System Repair Disk ) உள்ளது. சில நேரங்களில் தேவைஇல்லாமல்
தோன்றும் செய்திகளை நீக்க சிஸ்டம் ரீஸ்டோர் (System Restore)
செய்வோம் ஆனால் பிரச்சினை பெரிதானால் இந்த சிஸ்டம் ரீஸ்டோர்
வேலை செய்வதில்லை.இதற்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம்
பிரச்சினைகளை சரிசெய்யலாம்.
சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) எப்படி உருவாக்குவது
என்பதை பற்றி பார்ப்போம்.
-> Control Panel -ல் சென்று Backup and Restore என்ற ஐகான்-ஐ
Click செய்யவும்.
இப்போது தோன்றும் விண்டோவில் இடதுபக்கத்தில் இருக்கும்Create a system repair disc என்பதை தெரிவு செய்யவும்.இப்போது பதிவு செய்ய வேண்டிய புதிய டிவிடி டிஸ்கைஉங்கள் DVD Drive-ல் செலுத்தவும்.
Create disc பட்டனை Click செய்யவும்.
இப்படி முழுமையான சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk )
உருவாக்கலாம். இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி
பார்ப்போம். windows 7 -ல் தீர்க்க முடியாத சீரியஸ் Error வரும்
போது இது உதவும்.கம்யூட்டர் ஆன் செய்யும் போது ( DEL button
அல்லது F10 key ) மூலம் SETUP -ல் சென்று Boot Option -ல்
First Boot Drive-ல் CD or DVD Option -ஐ select செய்யவும்.
இப்போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) உங்கள்
DVD Drive-ல் செலுத்தவும். F10 Key அழுத்தி Save and Exit
செய்யது வெளியேவரவும்.Restart ஆனவுடன் உங்கள் திரையில்
press any key to start the computer from the system repair disc
என்று தோன்றும். எதாவது ஒரு Key -ஐ press செய்யவும். இனி
அதுவாக பிரச்சினைகளை இனம் கண்டு சரி செய்யும், எல்லாம்
முடிந்து Restart ஆகும் போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்
(System Repair Disk) உங்கள் DVD Drive-ல் இருந்து எடுத்துவிடவும்.
Windows 7 -ல் பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF