Friday, April 22, 2011

உங்கள் பேஸ்புக் நண்பர்களின் விவரங்களை ஒரே இடத்தில் அறிய.


பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றிருக்கும் ஒரு சமூக இணையதளமாகும்.இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விடயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம்.
உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வருகிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் பட்டியலில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும்.இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே இதுபோன்ற விவரங்களை ஒரே இடத்தில் அறிய ஒரு சூப்பர் வழி உள்ளது. இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் மேலதிகமான தகவல்களை ஒரே இடத்தில் அறியலாம்.
இந்த தளத்தின் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் பட்டியல், உங்கள் நண்பர்கள் போஸ்ட் செய்த தகவல்கள் படத்துடன், உங்கள் பேஸ்புக் பட்டியலில் உள்ள அனைத்து நண்பர்களின் பிறந்த நாள் திகதிகள் ஒவ்வொரு மாதமாக, உங்கள் பேஸ்புக் நண்பர்களின் இடம் கூகுள் மேப் மூலமாக அறியலாம்.
மேலும் உங்கள் பேஸ்புக் நண்பர்களில் அதிக அல்பம் வைத்துள்ளவர்களின் முதல் பத்து நபர்கள், உங்களின் பேஸ்புக் நண்பர்களில் ஆண்கள் எவ்வளவு பெண்கள் எவ்வளவு என்ற பட்டியல்(சதவீத கணக்கில்), பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களின் activity இது போன்ற இன்னும் சில தகவல்களை தருகிறது இந்த இணையம்.
இதனை செயல்படுத்துவதற்கு முதலில் இந்த லிங்கில் Facebook Spectrumகிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Login பட்டனை அழுத்தவும்.
அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Allow என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்து உங்கள் விவரங்கள் லோடிங் ஆகும். அதுவரை காத்திருக்கவும் சரியாக லோட் ஆகவில்லை என்றால் refresh செய்யவும்.
சரியாக லோட் ஆகி முடிந்தவுடன் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அந்த விண்டோ வந்தவுடன், ஒவ்வொரு லிங்காக கிளிக் செய்து அந்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Friends: இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள அனைத்து நண்பர்களின் பட்டியல் வரும்.
Timeline: இந்த லிங்கை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பகிர்ந்த தகவல்கள் மற்றும் எப்பொழுது அதை பகிர்ந்தார்கள் என்ற விவரங்கள் வரும். இதில் ஒவ்வொரு நண்பர்களாக தேர்வு செய்து அந்த விவரங்களை காண வேண்டும்.
Birthday: இதை கிளிக் செய்தால் நம் நண்பர்களின் பிறந்த நாள் திகதிகள் மாதவாரியாக வரும்.
Location: இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் இருப்பிடம் பற்றிய விவரங்கள் வரும்.
அடுத்து Albums, Other, Mutuals, Activity, Search, More போன்ற லிங்குகளையும் அழுத்தி அதில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF