Wednesday, April 20, 2011

ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு இரைச்சலை பதிவு செய்த விஞ்ஞானிகள்.


ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந்தன.பொதுவாக நம்மால் பூகம்பத்தினை உணரமுடியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று அதன் இரைச்சலைப் பதிவு செய்துள்ளனர்.வட பசுபிக் சமுத்திரத்தினில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு 900 மைல்கள் அப்பால் வைக்கப்பட்டுள்ள கடலடி ஒலிவாங்கியின் மூலமே இவ்விரைச்சல் ஒலிப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.அச்சத்தமானது ஏதோ பொருள் ஒன்று நொருங்குவதினைப் போல உள்ளது.தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ள அவ்விரைச்சலை நீங்களும் கேளுங்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF