திபெத்தில் 1998ம் ஆண்டு ஒரு வித்தியாசமான மண்டை ஓடு கிடைத்துள்ளதாகவும், அதை சோதனை செய்ததில் அந்த மண்டை ஓட்டை பிளந்து ஓபரேஷன் செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.மண்டை ஓட்டை பிளந்து ஓபரேஷன் செய்வது என்பது சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாக கருதப்படுகிறது.
ஆனால் அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த போது அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்தது. அதாவது அந்த காலத்திலேயே ஓபரேஷன் நடந்துள்ளது.இப்போது திபெத்தில் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை ஓபரேஷன் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. பழங்கால புத்தகம் ஒன்றை ஆய்வு செய்த போது இந்த தகவல் கிடைத்து உள்ளது.
திபெத்தில் உள்ள லசா பல்கலைக்கழக பேராசிரியர் கர்மா டிரின்லி இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். அப்போது மூளை ஓபரேஷன் நடந்ததை இந்தியாவில் இருந்து தசோக்யெல் என்ற டொக்டர் பார்வையிட வந்திருந்ததாகவும் அதில் குறிப்புகள் உள்ளன.