அயல் கிரகங்களில் உயிர்வாழக் கூடிய சூழ்நிலைகள் உள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட சூரியன்களை கொண்டுள்ள அயல் கிரகங்களில் வளரும் தாவரங்கள் கறுப்பு நிறத்தில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.நமது பூமியில் இரு நட்சத்திரங்கள் அருகாமையில் இருப்பது போன்றோ அல்லது இரு நட்சத்திரங்கள் பிரிந்து தொலைதூரத்தில் இருப்பது போன்ற அமைப்பை கொண்ட ஒத்த கிரகங்களின் கணணி வெளிப்பாடுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வினை ஜாக் ஓ மாலே ஜேம்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இவர் கூறுகையில்,"நட்சத்திரத்தின் வெப்பநிலையைப் பொறுத்தே செடியின் நிறம் அமைகிறது. அயல் கிரகங்களில் காணப்படும் ஒளியின் நிறத்தை தாவரங்கள் ஒளிச் சேர்க்கை நிகழ்வுக்கு பயன்படுத்தும் போது அதன் நிறங்கள் மாறுபடுகின்றன" என்றார்.
சிறிய சூரியனில் இருந்து வெளிச்சம் பெறும் அயல் கிரகங்களின் தாவரங்களில் இலை நிறம் மங்கி இருக்கும். நமது கண்களுக்கு அந்த இலை கறுப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நமது பூமியால் சூரிய ஒளியை போதிய அளவில் பெறுவதால் ஒளிச்சேர்க்கை நடத்தும் தாவரங்கள் பச்சை நிறத்தில் உள்ளன.