
யானையை விட பல மடங்கு பிரம்மாண்ட உருவம் கொண்ட டையனோசர் மிருகங்கள் பகல் நேரத்திலேயே தங்கள் உணவை தேடி வந்ததாக ஆய்வாளர்கள் கருதினர்.
"வெலொ சிரப்டார்" எனப்படும் டையனோசர்கள் குறிப்பிட்ட அளவு மாமிசத்தை சாப்பிடும் மிருகமாக இருந்து வந்தது. இந்த மிருகம் தனக்கு தேவையான உணவை பகல் நேரத்திலேயே இதர விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு வந்தது.
டையனோசர்கள், பறவைகள், பல்லி இனங்களுக்கு விசேஷமான கண் அமைப்பு உள்ளன. இந்த அமைப்பு பாலூட்டிகள் மற்றும் முதலைகளுக்கு இல்லை.டையனோசரின் கண் அமைப்பை ஆய்வு செய்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அந்த மிருகம் பகல், இரவு என அனைத்து நேரத்திலும் வேட்டையாடும் திறன் பெற்றிருப்பதை கண்டறிந்தனர். தாவரங்களை மட்டுமே சாப்பிடும் டையனோசர்கள் பகல் நேரத்தில் மட்டுமே உணவைத் தேடின.
ஆனால் வெலொ சிராப்டர்கள் மற்றும் இதர மாமிசம் சாப்பிடும் சிறு டயனோசர்கள் இரவு நேரத்திலேயே மிருகங்களை வேட்டையாடின என்பது தெரியவந்துள்ளது.