Friday, April 22, 2011

தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வுத் தகவல்.


தேவைக்காக கொலைகூடச் செய்யத் தயங்காத மனிதன் சோதனையை தாங்க முடியாத காலத்தில் தானே சாவைத் தேடி தற்கொலையும் செய்து கொள்கிறான்.இந்த தற்கொலை செய்யும் செயல் மனிதனோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல என்கிறது புதிய ஆய்வு ஒன்று. தாவரங்களும் தற்கொலை செய்து கொள்வது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா நாட்டின் உயிர் வேதியியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் இதைக் கண்டுபிடித்து உள்ளனர். தாவரங்கள் தங்களின் ஆபத்தான காலங்களில் விரும்பியே தற்கொலை செய்து கொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதாவது விலங்குகள், பூச்சிகளால் தாக்கப்பட்டாலோ அல்லது நோயால் பாதிக்கப்பட்டாலோ தற்கொலை நடவடிக்கையாக அந்த பாகங்களுக்கான வளர்ச்சியை நிறுத்தி வைத்து விடுகிறது.வியன்னா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுகுறித்து தெரிவித்ததாவது: இதுவரை இதுபோன்ற செயல்களுக்கு வெப்பமே கரணம் என்று தவறாக எண்ணப்பட்டு வந்தது. ஆனால் தாவரங்கள் தங்கள் உடலின் ஒரு பாகத்தை செயல் இழக்கச் செய்துவிட்டாலும் அதன் மையப்பகுதி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த தற்கொலை நிகழ்வு அதன் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இடம் பெயர்ந்து சொல்ல முடியாத காரணத்தால் உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பாதுகாப்பு திட்டமே ஆகும். இந்த தற்கொலை சுபாவம் இலையுதிர் காலத்தில் தனது இலைகளை உதிர்த்து விட்டு சாதகமான சூழலுக்கு காத்திருக்கும் அந்த மாற்றத்தைப் போன்றது தான்.அதே வேளையில் தாவரங்கள் மற்றொரு பாதுகாப்பு யுத்தியாக திடீர் ரசாயனங்களை சுரந்தும் பூச்சி இனங்களுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்துகின்றன. இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF