
பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது.பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம்.இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பேருந்துகளை இந்நிறுவனம் இயக்க உள்ளது.மேலும் மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பேருந்துகள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
