Monday, April 11, 2011

பிரபல படப்பிடிப்பாளரின் வாழ்நாள் உழைப்பில் கிடைத்த அரிய படங்கள்!

சூய்பிளட் என்பவர் ஒரு முழு நேர படப்பிடிப்பாளர். வன ஜீவராசிகளைப் படம் பிடிப்பதற்காக கடந்த 20 வருடங்களாக அர்ப்பணிப்புடன் பணிபுரிபவர். இவரின் வாழ்நாள் உழைப்பின் பலனாகக் கிடைத்த சில அரிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆர்க்டிக் மற்றும் அன்டாக்டிக் பிரதேசங்களில் எடுக்கப்பட்டவைகளே இந்தப் படங்கள். 

தனக்கு மிகவும் பிடித்தமான இடம் இதுவே என்று கூறும் இவர் ஆர்க்டிக் மற்றும் அன்டாக்டிக் பகுதிகளில் படம் எடுப்பதில் ஒரு நிபுணர். 
ஆர்க்டிக் பிரதேசத்தில் அண்மையில் எடுத்தப் படங்களைத் தான் இவர்கள் வெளியிட்டுள்ளனர்.ஒரு நூல் வடிவில் இந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உறைநிலை காலநிலையில் பல இடங்களில் மறைந்திருந்து மிகவும் சிரமத்துக்கு மத்தியில் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.



இந்தப் பிரதேசத்தில் காணப்படும் தனிமையின் இனிமையே தன்னை இந்தப் பகுதிக்கு அதிகம் இழுத்துச் சென்றதாக சூய்பிளட் கூறுகின்றார். இந்தப் பகுதி ஒரு வகை மந்திர வெளிச்சத்துடன் காணப்படுகின்றது. அது படப்பிடிப்புக்கு மிகவும் உகந்தது என்றும் அவர் தனது அனுபவத்தை விளக்குகின்றார்.
















பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF