ஜனாதிபதிக்கும் அமைச்சர் பசிலுக்கும் இடையிலான மோதல் தீவிரம்! பசிலிடம் அதிகாரத்தைக் கையளிக்க இந்தியா-சீனா விருப்பம்?
பதவியிலிருந்து கடாபி விலக மறுத்ததாலும், புரட்சிப்படையிடமிழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கு இராணுவ நடவடிக்கை தொடங்கியதாலும், கடந்த மூன்று வாரங்களாக நேட்டோ கூட்டுப்படை தாக்குதல் அங்கு இடம்பெற்று வருகிறது.
பொதுமக்கள் மீது கடாபி படைகள் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காகவே தாம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக நேட்டோ தெரிவித்துள்ள போதும், போதுமான ஹார்ட்வேர் வழங்கிகள் இல்லாததால், நேட்டோவால் வெற்றிகரமாக தமது இலக்குகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாதுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனால் மேலும் 10 போர் விமானங்கள் வான்படைக்கு உதவி புரிந்தால், இத்தாக்குதலை வெற்றிகரமாக செய்யலாம் என அவர்கள் கருதுகின்றனர்.நேற்று மீண்டும் திரிபொலியில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. எனினும் இதை பொருட்படுத்தாமல், கடாபி வாகனமொன்றில், மக்கள் முன் திடீரென காட்சியளித்து வாக்குச்சேகரிப்பது போல ஆரவாரப்பட்டுக்கொண்டிருந்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது தம்பி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மோதல் கடுமையாக உக்கிரமடைந்துள்ளது.இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானதன் பின் இருவருக்குமிடையிலான மோதல் இன்னும் தீவிரம் பெற்றுள்ளதாக உள்வீட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இருவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் அவர்கள் இருவரையும் அதிகாரத்தில் இருந்து தற்காலிகமாக அகற்றி, இலங்கை தொடர்பான மேற்கத்தேய நாடுகளின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவர இலங்கையுடன் மிக நெருக்கமான இரண்டு வல்லரசு நாடுகள் விருப்பம் கொண்டுள்ளன.
அவ்வாறு இருவரையும் அரசியல் அரங்கில் இருந்து தற்காலிகமாக அகற்றும் போது அவர்களின் அடுத்த தெரிவாக இருப்பது அமைச்சர் பசில் ராஜபக்ஷ என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இந்த விடயங்களில் அதிகம் பேரைக் கெடுத்துக் கொள்ளாததே அதற்கான காரணம் என்றறிய முடிகின்றது.
அதன் பிரகாரம் அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவும் அந்த நாடுகள் விருப்பம் கொண்டுள்ளன. அதற்கான இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல்களும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விடயங்கள் பற்றிய தகவல்கள் கசிந்தவுடன் ஜனாதிபதி மஹிந்த கடும் கோபம் கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது. அமைச்சர் பசில் ராஜபக்ஷவை மாத்திரமன்றி அவருக்கு நெருக்கமானவர்களையும் கடுமையாகப் பழிவாங்குவதில் அவரும் பாதுகாப்புச் செயலாளரும் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.
அதன் காரணமாகவே அண்மையில் மீன் சந்தை கப்பம் விவகாரத்தில் அமைச்சர் மோ்வின் சில்வாவின் அடியாட்கள் அனைவரும் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் பசிலை பிரதமராக்க வேண்டும் என்ற பகிரங்கமான நிலைப்பாட்டில் அமைச்சர் மோ்வின் சில்வா இருப்பதன் காரணமாக அவரையும் பழிவாங்கும் ஒரு செயற்பாடாகவே அதனை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான உள்வீட்டு மோதல்கள் காரணமாக நேற்று ஜனாதிபதியின் பாரம்பரிய மெதமுலன இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளாது புறக்கணித்துள்ளார். அத்துடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் கலந்து கொள்ளாது புறக்கணித்துள்ளனர்.
முன்னைய வருடங்களில் குடும்பத்தவர் ஒன்றாகக் கூடி குதூகலித்த புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் தனித்தனியாகக் கொண்டாடுமளவுக்கு ஜனாதிபதியின் குடும்பத்திற்குள் அதிகாரத்துக்கான போட்டி வலுத்துவிட்டதையே அண்மைக்கால நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
ஜனாதிபதி மஹிந்த பதினெட்டாம் திகதி பங்களாதேஷ் பயணம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பதினெட்டாம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேஷ் பயணமாகவுள்ளார்.பங்களாதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பையேற்றே ஜனாதிபதி பங்களாதேசத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கின்றது.ஜனாதிபதியின் விஜயத்தின் போது விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை தொடர்பில் இருநாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் ஜனாதிபதி மஹிந்த பங்களாதேசத்துக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
கிரிக்கட் சூதாட்டத்தில் நாமல் ராஜபக்ஷவுக்குத் தொடர்பு?
உலகக்கிண்ண இறுதியாட்டத்தின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் கிரிக்கட் சூதாட்டத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக்கிண்ண இறுதியாட்டம் முடிவுற்ற கையுடன் அவர் இந்திய வர்த்தகப் பிரமுகர்கள் சிலருடன் அவசர கதியில் பூட்டானுக்கான இரகசியப்பயணமொன்றை மேற்கொண்டதே மேற்கண்டவாறான சந்தேகத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.பூட்டானில் வைத்து நாமல் ராஜபக்ஷவும் இந்திய சூதாட்டத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவரது பிரதிநிதியும் சந்தித்துக் கொண்டுள்ளனர். அதன் மேலதிக விபரங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. தவிரவும் பிரஸ்தாப கலந்துரையாடலில் வெளியார் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
நாமல் ராஜபக்ஷவின் பூட்டான் பயண ஏற்பாடுகளைக் கவனிக்கவென வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியொருவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பூட்டானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் வெளிநாட்டமைச்சின் வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.
இராமேஸ்வரத்திலிருந்து கேபிள் மூலம் இலங்கைக்கு மின்சாரம்!
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்வதற்காக இராமேஸ்வரம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட ஆய்வு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பாக் ஜலசந்தி கடல் பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகின்றது.
இதற்கான இரண்டாம் கட்ட பணிகள் இராமேஸ்வரம் கடல் பகுதியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழக விஞ்ஞானி ரவீந்திரன் தலைமையில் 10 விஞ்ஞானிகள் உள்ளிட்ட குழுவினர் கடலுக்குள் நடத்திய இந்த ஆய்வுப்பணி நேற்று முடிவடைந்துள்ளது.
இந்த ஆய்வுப் பணிகளுக்காக கடலின் நிலத்தடி மட்டத்தில் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மண் மாதிரிகள், கடல் நீர் உள்ளிட்ட பொருட்களை ஆய்வுக்காக விஞ்ஞானிகள் குழு எடுத்துச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மூன்றாவது கட்டமாகவும் கடலுக்குள் ஆய்வு நடத்தப்பட்டு அதன்பின்னர் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான இரண்டாம் கட்ட பணிகள் இராமேஸ்வரம் கடல் பகுதியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழக விஞ்ஞானி ரவீந்திரன் தலைமையில் 10 விஞ்ஞானிகள் உள்ளிட்ட குழுவினர் கடலுக்குள் நடத்திய இந்த ஆய்வுப்பணி நேற்று முடிவடைந்துள்ளது.
இந்த ஆய்வுப் பணிகளுக்காக கடலின் நிலத்தடி மட்டத்தில் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மண் மாதிரிகள், கடல் நீர் உள்ளிட்ட பொருட்களை ஆய்வுக்காக விஞ்ஞானிகள் குழு எடுத்துச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மூன்றாவது கட்டமாகவும் கடலுக்குள் ஆய்வு நடத்தப்பட்டு அதன்பின்னர் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுனாமி உதவிக்கு இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ள ஜப்பான்!
அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது இலங்கையினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பாக ஜப்பான் பிரதமர் நைவ்டோ கான் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த உதவி நடவடிக்கையானது இரு நாடுகளுக்கிடையேயான சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததிற்கு உதவி வழங்கிய சகல நாடுகளுக்கும் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜப்பான் பிரதமர் நைவ்டோ கான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் தேயிலை தொடர்பாக அவர் விஷேடமாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். அனர்த்தங்களின் போது ஜப்பானை கட்டியெழுப்ப சர்வதேச நாடுகள் வழங்கிய உதவிகள் ஜப்பான் அரசாங்கத்திற்கு பாரிய தைரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் பிரதமர் நைவ்டோ கான் தெரிவித்துள்ளார்.
இந்த உதவி நடவடிக்கையானது இரு நாடுகளுக்கிடையேயான சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததிற்கு உதவி வழங்கிய சகல நாடுகளுக்கும் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜப்பான் பிரதமர் நைவ்டோ கான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் தேயிலை தொடர்பாக அவர் விஷேடமாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். அனர்த்தங்களின் போது ஜப்பானை கட்டியெழுப்ப சர்வதேச நாடுகள் வழங்கிய உதவிகள் ஜப்பான் அரசாங்கத்திற்கு பாரிய தைரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் பிரதமர் நைவ்டோ கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து வாகனங்களும் சீனாவிடமிருந்து கட்டடங்களும் இராணுவத்துக்கு கொள்வனவு!
இலங்கை இராணுவத்திற்காக இந்தியாவிடம் இருந்து கடன் அடிப்படையில் வாகனங்களும், சீனாவிடம் இருந்து தயார்நிலைக் கட்டடங்களும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய சிங்கள-தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பணம் மற்றும் வன்னிப் பகுதிகளில் உள்ள படையினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் இருந்து கடன் அடிப்படையில் இராணுவத்துக்கு வாகனங்கள் விரைவில் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இதன்பின்னர் தற்போது வாகனங்களுக்காக இராணுவம் வாடகையாகச் செலுத்தும் கணிசமான பணத்தை சேமிக்க முடியும். நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். தற்காலிக படைமுகாம்களுக்குப் பதிலாக நிரந்தர படைமுகாம்களை நிறுவும் தேசிய கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் நிரந்தரப் படைத்தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசாங்கம் 984 தயார்நிலைக் கட்டடங்களைச் சீனாவிடம் இருந்து பெற்றுத் தந்துள்ளது. மேலும் ஆயிரத்து 542 தயார்நிலைக் கட்டடங்களை சீனாவிடம் இருந்து அரசாங்கம் இராணுவத்துக்குப் பெற்றுத் தரவுள்ளது என இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் தற்போது வாகனங்களுக்காக இராணுவம் வாடகையாகச் செலுத்தும் கணிசமான பணத்தை சேமிக்க முடியும். நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். தற்காலிக படைமுகாம்களுக்குப் பதிலாக நிரந்தர படைமுகாம்களை நிறுவும் தேசிய கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் நிரந்தரப் படைத்தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசாங்கம் 984 தயார்நிலைக் கட்டடங்களைச் சீனாவிடம் இருந்து பெற்றுத் தந்துள்ளது. மேலும் ஆயிரத்து 542 தயார்நிலைக் கட்டடங்களை சீனாவிடம் இருந்து அரசாங்கம் இராணுவத்துக்குப் பெற்றுத் தரவுள்ளது என இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கடாபி பதவி விலகும் வரை ஓயப்போவதில்லை : அமெரிக்க, பிரான்ஸ், பிரிட்டன் அதிபர்கள் கூட்டாக அறிவிப்பு.
லிபிய அதிபர் பதவியிலிருந்து கடாபி விலக்கப்படும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரிடன் அதிபர் டேவிட் கெமரூன், பிரான்ஸ் அதிபர் ஆகியோர் இணைந்து, இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.கடாபி தொடர்ந்து பதவியிலிருப்பது, அவருடைய நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். லிபியாவின் முன் அனுமானிக்க முடியாத எதிர்காலத்திற்காக எமது கூட்டுப்படை தாக்குதல் தொடர்ந்து நடைபெறும். என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பதவியிலிருந்து கடாபி விலக மறுத்ததாலும், புரட்சிப்படையிடமிழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கு இராணுவ நடவடிக்கை தொடங்கியதாலும், கடந்த மூன்று வாரங்களாக நேட்டோ கூட்டுப்படை தாக்குதல் அங்கு இடம்பெற்று வருகிறது.
பொதுமக்கள் மீது கடாபி படைகள் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காகவே தாம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக நேட்டோ தெரிவித்துள்ள போதும், போதுமான ஹார்ட்வேர் வழங்கிகள் இல்லாததால், நேட்டோவால் வெற்றிகரமாக தமது இலக்குகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாதுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனால் மேலும் 10 போர் விமானங்கள் வான்படைக்கு உதவி புரிந்தால், இத்தாக்குதலை வெற்றிகரமாக செய்யலாம் என அவர்கள் கருதுகின்றனர்.நேற்று மீண்டும் திரிபொலியில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. எனினும் இதை பொருட்படுத்தாமல், கடாபி வாகனமொன்றில், மக்கள் முன் திடீரென காட்சியளித்து வாக்குச்சேகரிப்பது போல ஆரவாரப்பட்டுக்கொண்டிருந்தார்.
எகிப்து நூதனசாலையில் இருந்து மீட்க்கப்பட்ட பழம் பெரும் கலைப் படைப்புக்கள்!
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக 2011 ஜனவரியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றபோது எகிப்திய நூதனசாலையில் இருந்து திருடப்பட்ட பழம்பெரும் கலைப் பெருள்கள் மீட்கப்பட்டுள்ளன. எகிப்திய நகர ஸ்டேஷன் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பேக்கிற்குள் இவை காணப்பட்டன. எகிப்தை ஆண்ட பண்டைய மன்னன் ஒருவரின் தங்கத்தினாலான சிலை,மேலும் மூன்று பாரோ ஆட்சிகால கலைப் பொருட்கள் என்பனவே திருடப்பட்டிருந்தன.
15 வயது சிறுவனின் படுக்கை அறையில் கண்டறியப்பட்ட பயங்கர ஆயுதங்கள்.
ஒரு வீட்டில் 15 வயதான ஒரு சிறுவனின் படுக்கை அறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இவற்றுள் சில ஆயுதங்களை தனது ஒன்பது வயதான சகோதரனோடு பகிர்ந்து கொள்ளும் படுக்கை அறையில் அவர் மறைத்து வைத்துள்ளார். சப் மெஷின் துப்பாக்கிகள், தன்னியக்க கைத் துப்பாக்கிகள், ஷொட்கன்கள் மற்றும் தோட்டாக்கள் என்பன இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன. கொலைகாரக் கும்பல் ஒன்றுக்குத் தேவையான போது இவற்றை வழங்குவதற்காகவே இவர் பதுக்கி வைத்துள்ளார்.
ஹொக்ஸ்டன் போய்ஸ் மற்றும் லண்டன் பீள்ட் போய்ஸ் ஆகிய இரண்டு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் சிக்கி 16 வயதான மாணவி எக்னஸ் சினா இனகோஜு என்ற மாணவி கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிஸார் அதிர்ச்சி அடையும் வகையில் அவர்களிடம் இந்த ஆயுதங்கள் சிக்கியுள்ளன. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
114 ஆவது வயதில் காலமான உலகின் வயது கூடிய மனிதர்!
உலகின் மிகவும் வயது கூடிய மனிதர் தனது 114 வது வயதில் காலமானார். அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் வசித்து வந்த இவர் தனது வீட்டில் காலமானார். வோல்டர் புறூனிங் என்ற இந்த நபர்தான் 2009 முதல் உலகின் மிகவும் வயது கூடிய மனிதராகக் கருதப்பட்டவர்.2009 ஜூலையில் உலக சாதனை ஏடான கின்னஸ் இவருக்கு வயது கூடிய மனிதர் என்ற பட்டத்தை அளித்தது.
இவர் கடைசி வரை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 114 வது பிறந்த தினத்தன்று அமெரிக்க காங்கிரஸுக்கு வரவழைக்கப்ட்டு கௌரவிக்கப்பட்டார். உலகில் 114 வருடங்கள் வரை வாழ்ந்த ஆறாவது ஆண் இவராவார். சுமார் 70 பெண்கள் இந்த இலக்கை அடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இவர் கடைசி வரை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 114 வது பிறந்த தினத்தன்று அமெரிக்க காங்கிரஸுக்கு வரவழைக்கப்ட்டு கௌரவிக்கப்பட்டார். உலகில் 114 வருடங்கள் வரை வாழ்ந்த ஆறாவது ஆண் இவராவார். சுமார் 70 பெண்கள் இந்த இலக்கை அடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
சுற்றுலாவுக்கு சென்ற பயணியை அடித்துக் கொன்ற பொலிஸ் அதிகாரிகள்.
இங்கிலாந்தில் மேற்கு லண்டனில் உள்ள டாஜென்காம் பகுதியைச் சேர்ந்தவர் லீ பிராட்லி பிரவுன்.இவர் விடுமுறையை கழிக்க துபாய் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்குள்ள புர்ஜ் அல் அராப் ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவர் அங்கு தங்கியிருந்த மற்றொருவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கடந்த 6ந் திகதி அவர் கைது செய்யப்பட்டு துபாய் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை பொலிஸ் அதிகாரிகள் அடித்து உதைத்ததாக தெரிகிறது. குடிக்க தண்ணீரும், உணவும் தர மறுத்தனர். இதற்கிடையே பொலிசார் கடுமையாக அடித்து உதைத்தால் லீ பிராட்லி பிரவுன் பரிதாபமாக இறந்தார்.
இத்தகவலை அவருடன் சிறையில் இருந்த நபர் சகோதரிக்கு கைத்தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். எனவே அவர்களது குடும்பத்தினர் இங்கிலாந்து அரசிடம் புகார் செய்தனர். இது குறித்து துபாயில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திடம் அந்நாட்டு அரசு விசாரணை நடத்தியது.பிராட்லி இறந்ததை தூதரக அதிகாரிகள் உறுதி செய்தனர். இச்சம்பவம் துபாய் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள இங்கிலாந்து மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் நிறுத்தப்படமாட்டாது: அமெரிக்கா
பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பாதியிலேயே நிறுத்தும் திட்டமில்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்கள் நடத்துவதை அந்நாடு கடுமையாக விமர்சித்து வருகிறது.பாகிஸ்தான் உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அகமது பாஷாவுடன் வாஷிங்டனில் சி.ஐ.ஏ தலைவர் திங்கட்கிழமையன்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துமாறும், சி.ஐ.ஏ உளவாளிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறும் அப்போது அவரிடம் பாஷா கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் அமெரிக்கா மீதான தாக்குதல்களை தடுப்பது தான் தனது பணி என அவர்களிடம் சி.ஐ.ஏ தலைவர் லியான் பனீட்டா தெரிவித்தார். அமெரிக்க மக்களைக் காப்பது தான் தனது அடிப்படைப் பொறுப்பு.அதற்கு ஆதரவாக உள்ள சி.ஐ.ஏவின் செயல்பாடுகளை நிறுத்த முடியாது என பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பனீட்டா தெளிவாகத் தெரிவித்து விட்டதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சி.ஐ.ஏ தலைவரின் கருத்தைத் தொடர்ந்து புதன்கிழமையன்று பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகமும், பிரதமர் யூசுப் ரஸா கிலானியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இத்தாலி சமூக ஆர்வலர் அர்கோனி தூக்கிலிடப்பட்டார்.
பாலஸ்தீன நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 36 வயது இத்தாலி சமூக ஆர்வலர் விட்டோரியா அரிகோனி வியாழக்கிழமை கடத்தப்பட்டார்.அவர் கடத்தப்பட்ட சில மணி நேரத்தில் ஹமாஸ் நிர்வாகம் செய்யும் காசா திட்டுப்பகுதியில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். ஹமாஸ் பிரிவினருடன் மோதும் ஒரு தீவிரவாதக் கும்பல் இத்தாலி ஆர்வலர் விட்டோரியாவை கடத்தியது. தங்கள் குழுத் தலைவரை விடுவிக்கக் கோரி இத்தாலி ஆர்வலரை தீவிரவாதக் கும்பல் கடத்தியது.
இத்தாலி ஆர்வலர் கொலை செய்யப்பட்டது குறித்து இத்தாலி அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இது காட்டு மிராண்டித்தனமான விரும்பத்தகாத கொலை என தெரிவித்தது.கடந்த 2007ம் ஆண்டு பி.பி.சி பத்திரிக்கையாளர் ஆலன் ஜனர் சன் காசா திட்டுப்பகுதியில் கடத்தப்பட்டார். 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இத்தாலி சமூக ஆர்வலர் அரிகோனி காசா திட்டுப் பகுதியில் கடத்தப்பட்டு விபரீத முடிவை சந்தித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பாக நண்பர்களும், சமூக ஆர்வலர்களும் பெரும் திரளாக கூடினர். சமூக ஆர்வலர் விட்டோரியா அரிகோனியை இஸ்லாமிய அமைப்பான சலாபிஸ்ட் தீவிரவாதிகள் கடத்தினர்.
அந்தத் தீவிரவாதிகள் சிறையில் உள்ள தலைவர்கள் விடுவிக்கப்பட்டால் வெள்ளிக்கிழமை மதியத்திற்குள் அரிகோனியை கொலை செய்வோம் என எச்சரித்து இருந்தனர். அரிகோனி பல ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் மக்களுக்கு சேவை ஆற்றி வந்தார். அவர் கடத்தப்பட்ட பின்னர் கண்கள் கட்டப்பட்டு தீவிரவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் கைது.
மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முபாரக் கைது செய்யப்பட்டார். எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்(82). இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். 18 நாள் நடந்த கடும் போராட்டத்துக்கு பிறகு முபாரக் பதவி விலகினார். அதை தொடர்ந்து ஆட்சி அதிகாரம் ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கெய்ரோவில் இருந்து அவர் ஷாம் அல் ஷேக் நகரில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவர் பதவியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன. ஆகவே முபாரக்கும் அவரது 2 மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது முபாரக்குக்கு நெஞ்சுவலியும் அதை தொடர்ந்து மாரடைப்பும் ஏற்பட்டது. எனவே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்கோளாறை தொடர்ந்து முபாரக் மற்றும் அவரது மகன்களிடம் நடத்திய விசாரணை நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் நேற்று முபாரக் கைது செய்யப்பட்டார். அவர்கள் விசாரணைக்காக கெய்ரோவில் உள்ள கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.
453 ஆண்டு கால பழமையான கடனட்டை கண்டுபிடிப்பு.
பல்கலைகழக நகரமான விட்டன்பெர்க்கில் 453 ஆண்டு கால பழமை வாய்ந்த கடன் அட்டையை தொல்வியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கடன் அட்டை ஐரோப்பா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பொக்கிஷமாக உள்ளது என சாக்சோனி அன்ஹால்ட்டின் ஹாலே வரவேற்று அருங்காட்கியக தொல்வியல் நிபுணர் ஆண்ட்ரியாஸ் ஹாலே கூறினார்.மத்திய கால கட்டத்தில் கடன் அட்டைகள் நீண்ட குச்சி வடிவில் உள்ளன. ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மரகுச்சி 30 செ.மீ நீளத்துடனும், அதன் மேற்பரப்பில் கடன் வாங்கியதற்கான 23 வெட்டு குறியீடுகளும் உள்ளன.
இந்த கடன் அட்டை 1558ம் ஆண்டை சார்ந்ததாக உள்ளது. இந்த விவரம் கடன் அட்டையிலேயே குறிக்கப்பட்டுள்ளது. மத்திய காலத்தில் படிக்கவோ, எழுதவோ தெரியாத மக்கள் கடன் அட்டைகளை மரக்குச்சிகளில் உருவாக்கினர்.இந்த கடன் அட்டைக் குச்சிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு ஒரு பகுதியை கடன் கொடுத்தவரும், இன்னொருப் பகுதியை கடன் அளித்தவரும் வைத்து இருந்தார்கள். பணம் திரும்ப செலுத்தும் போது உடைக்கப்பட்ட குச்சி ஒன்றாக இணைக்கப்பட்டு கடன் விவரம் சரிபார்க்கப்பட்டுள்ளது.
பாரிசில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: 5 பேர் பலி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் மரணம் அடைந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.தீ விபத்தில் இருந்து உயிர் பிழைக்க ஜன்னலில் இருந்து குதித்த 4 பேர் இறந்தார்கள். தீயை அணைக்க அதிகாலை 3 மணி அளவில் நூற்றுக்கணக்கான தீயணைப்புத்துறை அதிகாரிகள் போராடினார்கள்.தீயை அணைக்க 2 மணிநேரம் போராட வேண்டி இருந்தது. தீ விபத்தில் 42 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து பாரிஸ் மேயர் டெர்ட்ரண்ட் டெலனோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: விபத்து ஏற்பட்ட குடியிருப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை. தீ பரவியதற்கான மூல காரணம் கண்டறிய நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.வடக்கு பாரிசில் தீ விபத்துக்கள் ஏற்படுவது என்பது பொதுவானதாக உள்ளது. அங்கு 100 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் அதிகம் உள்ளன. அந்தக் கட்டிடங்களின் பராமரிப்புப் பணியும் மோசமாகவே உள்ளது. மேலும் பழமையான கட்டிடங்களில் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.
இதனால் வடக்குப் பாரிசில் தீ விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. தற்போது தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலேயே கடந்த மாதம் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது 8 பேர் காயம் அடைந்தனர்.
லிபியாவில் ஏவுகணைத் தாக்குதல்: மேலும் 23 பேர் பலி
லிபியாவில் அரசு ஆதரவு படைகள் மிஸ்ரதா நகரின் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் 23 பேர் பலியாயினர்.லிபியாவில் அதன் தலைவர் கடாபியை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க கடாபி ராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர்.
இதையடுத்து லிபியா மீது பொருளாதார தடை மற்றும் ஆயுத தடை விதிக்கப்பட்டுள்ளது. கடாபி பதவி விலக மறுப்பதால் அவரது சொத்துக்களை ஐரோப்பிய நாடுகள் முடக்கியுள்ளன.போராட்டக்காரர்கள் மீது கடாபி ராணுவம் தாக்குதல் நடத்துவதை கண்டித்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய படைகள் அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள மிஸ்ரதா நகரில் கடாபி ராணுவத்தினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 23 பேர் பலியானதாகவும், நேட்டோ படைகள் தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்தாவிட்டால் கடாபி படைகளின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
லிபியா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிக்ஸ் நாடுகள்.
லிபியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு மாநாடு சீனாவின் சான்யா நகரில் நடந்தது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபர் ஹு ஜிண்டாவ், பிரேசில் அதிபர் தில்மா ரெளசெப், ரஷியா அதிபர் திமித்ரி மெத்வதேவ், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஸமா ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் போது லிபியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டுக்குப் பின்னர் அனைத்துத் தலைவர்களும் வியாழக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டனர். கூட்டுச் செயல் திட்டத்தையும் அறிவித்தனர்.அதில் லிபியா மீது நேட்டோ படைகள் தலைமையில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஐ.நா நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ராணுவத்தைப் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்கிற கொள்கையை நாம் கொண்டிருக்கிறோம் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எனினும் நேட்டோ படைகளின் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரப்படவில்லை.பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள 5 நாடுகளும் இப்போதைய ஐ.நா பாதுகாப்பு அவையில் உறுப்பினர்களாக உள்ளன. இதில் சீனாவும் ரஷியாவும் நிரந்தர உறுப்பினர்கள். இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகியவை தற்காலிக உறுப்பினர்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் ஐ.நாவில் ஒருங்கிணைந்து பணியாற்றுவது என பிரிக்ஸ் நாடுகள் தீர்மானித்திருக்கின்றன. வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர், உணவுக்கு உத்தரவாதம், எரிசக்தி போன்றவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது, நிதி, வேளாண்மை, விளையாட்டு போன்றவற்றில் ஒத்துழைப்பு என பல்வேறு அம்சங்கள் கூட்டுச் செயல்திட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன.பிரிக்ஸ் நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் தொடர்பான பேச்சுகளை தீவிரப்படுத்துவதற்கு 5 நாடுகளும் ஒப்புக் கொண்டிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான கடன், மானியம் தொடர்பான ஒப்பந்தங்களின் போது உள்நாட்டு நாணய மதிப்பையே பயன்படுத்திக் கொள்வது என இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் 5 நாடுகளின் மத்திய வங்கிப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டிருப்பதாக மாநாட்டின் முடிவில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.
சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்க வேண்டும்: இன்டர்போல் தீர்மானம்
சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்க உலக வங்கியும், சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலும் தீர்மானம் இயற்றியுள்ளன.வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோலிக், இன்டர்போல் தலைவர் பூன் ஹூய் கூ, சர்வதேச கிரிமினல் கோர்ட் வக்கீல் லூயிஸ் மொரினோ, பிரிட்டன் குற்றத்தடுப்பு இயக்குனர் ரிச்சர்டு அல்டர்மேன், ஐரோப்பிய குற்றத்தடுப்பு டைரக்டர் ஜெனரல் ஜியோவானி கெஸ்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் ஊழலை ஒழிக்க இந்த கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதுகுறித்து உலக வங்கி தலைவர் கூறியதாவது: ஏழைகளின் பணத்தைச் சுரண்டும் ஊழல் சட்டப்படி குற்றத்துக்குரியது. மேலும் வளரும் நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் பல்வேறு வகையான ஊழல்களை இந்த தீர்மானம் தடுக்க வழி செய்யும் எனவும் கூறினார்.சர்வதேச ஒத்துழைப்பும், தொழில்நுட்ப ஒத்துழைப்பும் தேவை என இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இன்டர்போல், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய குற்றத்தடுப்பு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் ஊழலைத் தடுக்க முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்.
நாயுடன் வாக்கிங் சென்றால் அபராதம்.
ஈரானில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களை பார்க், ஹோட்டல் போன்ற பொது இடங்களில் அழைத்து வந்தால் நாயின் உரிமையாளருக்கு 5000 டொலர் அபராதம் விதிக்கப்படும்.
ஈரான் நாட்டில் பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் செல்லப்பிராணிகளாக நாயினை வீட்டில் வளர்த்து வருகின்றனர். இவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தினை பின்பற்றி இவைகளை பொது இடங்களில் அழைத்து வருவது சில நேரங்களில் இடையூறாக உள்ளதாக புகார் எழுந்தது.மேலும் ஈரானில் மத சட்டப்படி இது அருவருக்கத்தக்க ஒன்றாக கருதப்பட்டது. இதனை தடுக்க அந்நாட்டு பார்லிமென்டில் ஏறத்தாழ 39 எம்.பிக்கள் சட்ட மசோதா ஒன்றினை தாக்கல் செய்தனர்.
இந்த மசோதாவில் செல்லப்பிராணி என்ற பெயரில் நாய்களை வளர்ப்பவர்கள் அவைகளை பொது இடங்களான பார்க், ரெஸ்டரண்ட் போன்ற இடங்களுக்கு நடைபயிற்சிக்காகவோ, வாகனங்களிலோ அழைத்து வரக்கூடாது. மீறினால் நாயின் உரிமையாளரிடமிருந்து 5 மில்லியன் ரியாத் அல்லது 5000 டொலர் அபாரதம் விதிக்கப்படும்.மேலும் உரிமையாளரிடமிருந்து நாயினை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்தனர். ஈரான் நாட்டிற்கு அவமதிப்பை தரும் இந்த செயல்களை இனி யாரும் செய்யக்கூடாது என்றும், நாயின் உரிமையாளர்கள் இந்த சட்டத்தினை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் காவல்துறையில் வளர்க்கப்படும் மோப்ப நாய்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் அயோதுல்லா நாஸர் மக்ரீம் ஷிராசி என்ற எம்.பி இச்சட்டத்தினை கொண்டு வர வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது