Saturday, April 16, 2011

நேற்று தான் உலகின் மிகப்பெரும் பயணிகள் கப்பலான 'டைட்டானிக்' அட்லாண்டிக் கடலில் மூழ்கியது!



நேற்றைய ஏப்ரல் 15ம் திகதி உலகின் மறக்க முடியாத, மாபெரும் மனித அனர்த்தம் இடம்பெற்ற நாளாகும்.
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக இன்று வரை சாதனை படைத்திருக்கும் 'டைட்டானிக்' பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் கடலில் 1,513 பயணிகளுடன் நீரில் மூழ்கிய தினம் 1912ம் ஆண்டு இதே ஏப்ரல் 15ம் திகதி தான்.நியூயோர்க்கின் சௌதம்டோன் துறைமுகத்திலிருந்து, 46,000 டொன் நிறையுடன் புறப்பட்ட இப்பயணிகள் கப்பல் ஏப்ரல் 14ம் திகதி 23.40 மணியளவில் பனிப்பாறையும் மோதி விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கத்தொடங்கியது.

நள்ளிரவு கடந்து ஏப்ரல் 15ம் திகதி அதிகாலை, கப்பல் முற்றாக மூழ்கத் தொடங்க, கேப்டன் எட்வார்ட் ஸ்மித்தின் உத்தரவுக்கு அமைய, உயிர்காக்கும் அவசர படகுகளில் பெண்களும், குழந்தைகளும் முதலில் ஏற்றப்பட்டு கப்பலிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

20 உயிர்காப்பு படகுகளே இவ்வாறு செயற்பட்டிருந்தன. 1,178 பேர் இப்படகுகளில் மூலம் தப்பிக்க முனைந்தனர். எப்படியும் கரையை அடைந்துவிடலாம் எனவும் நினைத்தனர். ஆனால் விதி இறுதியில் உயிர்பிழைத்தது வெறும் 711 பேர் தான். அதில் 60% வீதத்தினர் முதற்தர வகுப்பில் பயணம் செய்த பணக்காரர வர்க்கத்தினர்.

இச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'டைட்டானிக்' திரைப்படம் வெளிவந்த போது உலக மகா வரவேற்பை பெற்றதுடன் ஆஸ்கார் விருதுகளையும் அள்ளிக்குவித்திருந்தது நினைவிருக்கலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF