Saturday, April 9, 2011

இன்றைய செய்திகள்.


விக்கிலீக்ஸ் உரிமையாளர் இலங்கையில் இருந்திருந்தால் சாம்பலும் மிஞ்சியிருக்காதாம்! சுனில் ஹந்துநெத்தி தெரிவிக்கிறார்

\
விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் உரிமையாளர் இலங்கையில் இருந்திருந்தால் அவரது சாம்பலும் மிஞ்சியிருக்காது என ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகத்துறை மீதான தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் தணிக்கையுடனேயே உரையாற்றும் நிலைமை உருவாகியுள்ளது. இணையத்தளங்களை தணிக்கை செய்ய முடியுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? என்று நடாளுமன்றத்தில் சுனில் ஹந்தன்நெத்தி கேள்வி எழுப்பினார். 

விக்கிலீக்ஸ் இணையத்தளம் இலங்கையில் இருந்திருந்தால் சாம்பலும் மிஞ்சியிருக்காது. உலகிலேயே கொடூரமான பயங்கரவாதிகளை ஒழித்த இராணுவம், பொலிஸ், உளவுப் பிரிவினர் எம்மிடம் உள்ளனர். அப்படியெனில் ஏன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது. குற்றங்களை மறைக்க, மறைக்க அது மேலும் மேலும் வெளிவரும் என சுனில் ஹந்துநெத்தி மேலும் தெரிவித்தார்.
ஜப்பானில் மீண்டும் 7.4 ரிச்டர் அளவுடைய பாரிய பூகம்பம்.

ஜப்பானில் சற்று முன்னர் 7.4 ரிச்டர் அளவுடைய பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து ஜப்பானின் வடபகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.சுமார் ஒருமீற்றர் உயரமான சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மியாகி பிராந்தியத்தில் கடலுக்கடியில் 25 மீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூகம்பத்தினால் தலைநகர் டோக்கியோவிலுள்ள கட்டிடங்களும் அதிர்ந்தன.
கடந்த மாதம் 9.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினாலும் அதைத் தொடர்ந்த சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலேயே இன்றைய பூகம்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.இப்பூகம்பத்தையடுத்து புகுஷிமா தாய்ச்சி அணு உலையிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.



இந்தோனேசியாவில் நில நடுக்கம்.

இந்தோனேசியா நாட்டில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவில் உள்ள சிபோஸ்கா பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 5.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா? என்று தெரிய வில்லை.

இத்தாலிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற படகு கவிழ்ந்ததில் 150 பேரைக் காணவில்லை!

இத்தாலிக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்கும் நோக்கில் பயணம் செய்ததாக நம்பப்படும் ஒரு படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. இதில் பயணம் செய்த 150 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத்தாலிய தீவான லம்பெதூஸாவில் இருந்து சுமார் 39 மைல் தூரத்தில் இந்தப் படகு கவிழ்ந்துள்ளது. 

படகு கவிழ்ந்தபோது அதில் 200 பேர் இருந்துள்ளனர். சம்பவம் பற்றி கேள்வியுற்றதும் மீட்புப் பணிகளுக்காக இத்தாலிய கரையோர காவல் படை விரைந்தது. இருப்பினும் சீரற்ற காலநிலை மற்றும் இருள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டது. எவ்வாறாயினும் இங்கு முதலாவதாக விரைந்த மீட்புக் குழுவால் 48 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்கள் டூனீஷியாவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகின்றது.
ஜப்பான் நிலநடுக்கம்: 4 பேர் பலி
ஜப்பானில் நேற்று மீண்டும் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், நான்கு பேர் பலியாயினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.கடந்த மாதம் 11ம் திகதி ஜப்பானின் புகுஷிமா நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் கடல்நீர் புகுந்ததால் புகுஷிமா நகரிலுள்ள அணு மின் நிலையத்திலிருந்த அணு உலைகள் வெடித்து கதிரியக்க கசிவும் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜப்பான் மக்களை மேலும் அச்சுறுத்தும் விதமாக வியாழக்கிழமை இரவு பயங்கர நிலநடுக்கம் யமகாட்டா பகுதியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகுகளாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 4 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 140 பேர் காயமடைந்துள்ளனர். சுனாமி தாக்கி 4 வாரங்கள் கடந்துள்ள நிலையில் ஏற்பட்ட மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் இது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 6 அடி உயரமுள்ள அலைகள் கடலில் ஏற்படலாம் என்றும் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் எச்சரிக்கப்பட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் சுனாமி எச்சரிக்கையை 83 நிமிடங்களுக்குப் பிறகு ஜப்பான் புவியியல் மையம் திரும்பப் பெற்றது.
புகுஷிமா பகுதியில் இயல்புநிலை திரும்பாததால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து பீதியிலேயே உள்ளனர். மேலும் வடஜப்பான் பகுதிக்கு போதுமான மின்விநியோகம் வியாழக்கிழமை இரவு வழங்கப்படவில்லை. இதனால் சுமார் 33 லட்சம் பேர் வியாழக்கிழமை இரவு இருளில் தவித்தனர்.
கிளர்ச்சியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்: 4 பேர் மரணம்
லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது நேட்டோ படைகள் தவறுதலாக குண்டு வீசியதில் 4 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். லிபியாவில் அதிபர் கடாபியை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் மீது அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபிய ராணுவத்தை ஒடுக்கும் வகையில் அங்கு நேட்டோ படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேட்டோ படைகள் லிபிய ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் எண்ணெய் நகரான பிரெகாவில் தவறுதலாக கிளர்ச்சியாளர்கள் மீது நேட்டோ படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் 4 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் கிளர்ச்சியாளர்கள் நேட்டோ படைகள் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்துவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். இந்த தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்டது என்றும் இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் நேட்டோ படைகளின் தலைவர் ஆண்டர்ஸ் போக் ரஸ்மஸ்ஸன் தெரிவித்தார்.இதனிடையே கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மிஸ்ராடா நகரை நோக்கி கடாபியின் லிபிய ராணுவம் வேகமாக முன்னேறி வருவதாக பி.பி.சி அறிவித்தது.
காசா வன்முறை: இஸ்ரேலுடன் ஹமாஸ் போர் நிறுத்தம்
இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் மேற்கொள்வதாக இஸ்லாமிய ஹமாஸ் குழுவினர் தெரிவித்தனர். பாலஸ்தீனம் காசா திட்டுப்பகுதியில் ஹமாஸ் பிரிவினர் நிர்வாகம் செய்து வருகிறார்கள்.இந்தப் பிரிவினர் இஸ்ரேலின் தீவிரத்தை தடுப்பதற்காக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். முன்னதாக ஹமாஸ் அமைப்பின் தீவிரவாதப் பிரிவு இஸ்ரேல் பஸ் மீது தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 2 போ் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய துருப்புகள் வான் வழித்தாக்குதல் நடத்தின. பீரங்கித் தாக்குதலையும் நடத்தின. இஸ்ரேலின் அடுத்தடுத்த தாக்குதலில் 4 போ் சொல்லப்பட்டனர். 30 பேர் காயம் அடைந்தனர் என பாலஸ்தீன டாக்டர்கள் தெரிவித்தனர்.இஸ்ரேல் பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.காசா தீவிரவாதிகள் பொதுமக்களை தாக்குவதற்காக அதிநவீன பீரங்கி ஆயுதங்கள் வைத்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
 வடக்கு காசாப் பகுதியில், ஹமாஸ் பிரிவினருக்கு சொந்தமான இடத்தில் இஸ்ரேலிய விமானம் அணுகுண்டை வீசியது. காசா தாக்குதலை எதிர்கொள்ள, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யகு எச்சரித்துள்ளார்.
பிரேஸில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு 12 சிறுவர்கள் பலி.
பிரேஸில் நகரமான 'ரியோடி ஜெனிராவில்' உள்ள பள்ளியில் நுழைந்த நபர் சரமாரியாக சுட்டதில் 12 சிறுவர்கள் பலியானார்கள். சிறுவர்களை கண் முடித்தனமாக சுட்டுக் கொன்ற 23 வயது இளைஞர் பின்னர், தானும் சுட்டுக் கொண்டு இறந்தார்.பிரேஸில் நகரமான 'ரியோடி ஜெனிராவில்' உள்ள பள்ளியில் நுழைந்த நபர் சரமாரியாக சுட்டதில் 12 சிறுவர்கள் பலியானார்கள். சிறுவர்களை கண் முடித்தனமாக சுட்டுக் கொன்ற 23 வயது இளைஞர் பின்னர், தானும் சுட்டுக் கொண்டு இறந்தார்.
கொலை வெறியில் ஈடுபட்ட நபர் 'பியூப்பின் வெலிங்டன் மெனசஸின்' முன்னாள் உறுப்பினர் ஒலிவரா ஆவார். பிரேஸில் முதல்முறையாக பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு இதுவாகும்.பள்ளிச் சிறுவர்கள் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரேஸில் ஜனாதிபதி தில்மா ருசெப் கண்ணீர் விட்டு அழுதார். ஒலிவரா பள்ளிக்குள் நுழைந்து உரை நிகழ்த்த வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் சரமாரியாக சுடத் துவங்கி உள்ளார். ஒலிவரா தாக்குதலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள், கதவுகளை மூடி தடுப்பு ஏற்படுத்தினர். இதர வகுப்புச் சிறுவர்கள், மேஜைக்கு கீழே பதுங்கினர்.
தாக்குதல் நடத்திய நபரை பிடிக்க பொலிசார் போராடிய போது, அந்த நபர் தலையில் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். பள்ளியில் 400 சிறுவர்கள் இருந்நனர் அவர்களை பாதுகாப்பதற்கு ஆசிரியர்கள் கடுமையாக போராடினர். தாக்குதல் நடத்திய நபர்கள் நிறைய வெடிப் பொருட்கள் மற்றும் இரு துப்பாக்கிகளை வைத்திருந்ததால் முயற்சிகள் எவையும் பயனளிக்கவில்லை.
குடியேற்ற நபர்களின் எண்ணிக்கை குறைக்க பிரான்ஸ் முடிவு.
பிரான்ஸ் நாட்டிற்கு பணி, குடும்பத்துடன் இணைதல் மற்றும் இதர விசாக்கள் தொடர்பாக வரும் குடியேற்ற நபர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் கிளாடே குயன்ட் அரசிடம் தெரிவித்தார்.
கன்சர்வேடிவ் கட்சியின் பிகாரோ இதழில் அமைச்சர் கிளாமே குயண்ட் கூறுகையில் பணி குடியேற்ற விசா எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கூறியுள்ளேன். அதே போன்று குடும்பத்துடன் ஒன்று சேருவதற்கு விசா எண்ணிக்கையையும் குறைக்க விரும்புகிறோம் என்றார்.
ஒவ்வொரு வருடமும் பணி விசாவில் 20 ஆயிரம் பேரும் குடும்பக் காரணங்களுக்காக 15 ஆயிரம் பேரும் விசா பெற்று பிரான்ஸ் வருகிறார்கள் என உள்துறை அமைச்சகம் கூறுகிறது. பிரான்ஸில் குடியேற்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு உள்துறையே பொறுப்பு வகிக்கிறது.
உள்துறை அமைச்சர் கிளாடே குய்ண்டின் இந்த அறிக்கைக்கு சோசலிஸ்ட் கட்சியும் எஸ்.ஓ.எஸ் அமைப்பும் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளன. குடும்பத்துடன் மீண்டும் ஒன்று சேருவதற்கான விசாக்கள் எண்ணிக்கையை குறைப்பது அடிப்படை உரிமையை மீறும் நடவடிக்கை என, சோசலிஸ்ட் எம்.பி சாண்ட்ரின் மாஸே டியர் குற்றம் சாற்றினார்.
பிரான்ஸில் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதனை திசைத் திருப்புவதற்காகவே குடியேற்ற நபர்கள் எண்ணிக்கையை குறைப்பதாக அரசு நாடகமாடுகிறது என்றும் அவர் தெரிவித்தார். பிரான்ஸில் நாட்டிற்கு பணி, குடும்பத்துடன் இணைதல் மற்றும் இதர விசாக்கள் தொடர்பாக வரும் குடியேற்ற நபர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் கிளாடே குயன்ட் அரசிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதி பற்றி துப்பு தருவோருக்கு ரூ. 22 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாதி முகமது இலியாஸ் காஷ்மீரி குறித்து தகவல் தருவோருக்கு ரூ. 22.50 கோடி (50 லட்சம் டாலர்) பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
மும்பை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் இலியாஸ். அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதால் இவர் இப்போது "நியூ பின் லேடன்' என்று அழைக்கப்படுகிறார். இவரை உயிருடன் பிடிக்க தகவல் கொடுத்தாலோ அல்லது கொன்று சடலமாகக் கொடுத்தாலோ பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஹர்கத்-உல்-ஜிஹாத் அல் இஸ்லாமி (ஹியூஜி) எனப்படும் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இலியாஸ் உள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதலை இவரது தலைமையிலான பயங்கரவாத குழு நிகழ்த்தியுள்ளது. 2006-ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலை இலியாஸ் தலைமையிலான ஹியூஜி அமைப்பு மேற்கொண்டதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் அமெரிக்க தூதரக அதிகாரி டேவிட் ஃபாயும் ஒருவர். இந்தத் தாக்குதலில் 48 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் செயல்படும் அல்-காய்தா அமைப்புக்கு இலியாஸ் தலைமையேற்றுள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பின் தலைவராக இரந்த முஸ்தபா அபு அல்-யாசித், கடந்த ஆண்டு மே மாதம் ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து இந்த பிரிவுக்கு இலியாஸ் தலைமையேற்றதாகத் தெரிகிறது. அல்-காய்தா மற்றும் லஷ்கர் அல் ஜில் ஆகிய அமைப்புகளின் கமாண்டர்களுடன் இவர் கூட்டு சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பயங்கரவாத செயல்களில் இலியாஸ் ஈடுபடுவது குறித்த எச்சரிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்டது. டென்மார்க்கிலிருந்து வெளியாகும் ஜிலான்ட்-போஸ்டென் என்ற நாளிதழில் முகம்மது நபிகள் குறித்து வெளியான கேலிச்சித்திரத்தைக் கண்டித்து பயங்கர சதி வேலையில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இலியாப்ஸ் அறிவித்தது. அத்துடன் ஹியூஜி அமைப்பை வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
1964-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்த இலியாஸ், ஆறடி உயரமும் 90 கி.கி எடையுடன் பார்ப்பதற்கே பயங்கர தோற்றத்துடன் விளங்குபவர். கறுமையான முடி, பழுப்பு நிற கண்கள், மிகவும் அடர்த்தியான வெண் சாயம் பூசப்பட்ட தாடி உண்டு. இதை பல சமயங்களில் சிவப்பு, கறுப்பு என பல்வேறு நிறங்களில் மாற்றிக் கொள்வாராம். ஒரு கண் பார்வையிழந்தவர். இதை மறைப்பதற்காக பனிச்சறுக்கு சாகசம் புரிவோர் அணியும் குளிர் கண்ணாடி அணிந்திருப்பாராம். வலது கையில் சுட்டுவிரல் கிடையாது.
முகமது இலியாஸ் காஷ்மீரி, இலியாஸ் அல்-காஷ்மீரி, இலியாஸ், நயீப் அமிர் என்று பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார். இந்தப் பெயர் கொண்டவர்களைப் பற்றி அமெரிக்க கமாண்டருக்குத் தகவல் தருமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இணையதளம் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் பெயர் உள்ளிட்ட விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லிபியா முன்னாள் அமைச்சர் முசாகுசாவிடம் 270 பேர் கொலை விசாரனை.
லிபியாவில், கர்னல் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளதால் அங்கிருந்து வெளியேறிய முன்னாள் அயல்துறை அமைச்சர் முசாகுசா லண்டனுக்கு ஓடி வந்துள்ளார்.அவரிடம் 1988-ம் ஆண்டு லாக்கர்பீ வெடிகுண்டுத் தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஸ்காட்லாந்து பொலிசார் விசாரனை நடத்தினார். தீவிரவாத தாக்குதலில் லாக்கர்பீ பகுதிக்கு 'மேல் பான்' ஆம் விமானம் பறந்தபோது, வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் நடந்த போது, குசா லிபியா புலனாய்வுச் சேவையின் மூத்த நபராக இருந்தார் என கூறப்படுகிறது. இந்ந விமானத்தாக்குல் தொடர்பாக, குசா வசம் எந்ந விதத் தகவலும் இல்லை என கர்னல் மோமர் கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாம் தெரிவித்தார்.
கடாபியின் நிர்வாகம் பிடிக்காமல் வந்த முசா குசாவிடம், ஸ்காட்லாந்து பொலிசார் தொடர்ந்து விசாரணை செய்கிறார்கள் இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை. இது குறித்து கிரவுன் ஆபிஸ் மற்றும் விசாரனையாளர் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், டம்பிரைஸ் மற்றும் காலோவே பொலிஸ் படைபிரிவினர் கிரவுன் ஆபிஸ் நடவடிக்கைக்கு உதவியாக உள்ளனர் அவர்கள், லாக்பி வெடிகுண்டு தாக்குதல் குறித்து, குசாவை சந்தித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டில் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு கடாபி நஷ்ட ஈடு வழங்கினார். லாக்பி வெடிகுண்டு தாக்குதலில் லிபியாவின் அப்டெல் பாசட் அல் மெக்நாகி 2001-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 'பிராஸ்டேட் புற்று நோய்' இருந்ததால் ஸ்காட்லாந்து பொலிஸ் அவரை, 2009ம் ஆண்டு கருணை அடிப்படையில் விடுதலை செய்தது.
ஒபாமாவை மகனே! என விளித்து கடிதம் எழுதிய லிபிய ஜனாதிபதி
லிபிய ஜனாதிபதி கடாபி அந்நாட்டின் மீது நேட்டோ படைகள் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.ஒபாமாவுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை "மகனே" என விளித்து ஆரம்பித்துள்ளதுடன் இரண்டாவது முறையாக அமெரிக்கத் தேர்தலில் களமிறங்கவுள்ள ஒபாமாவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

நேட்டோ படைகளின் தாக்குதல்கள் நியாயமற்றதெனவும் அதனை நிறுத்துமாறும் அவர் தனது மூன்று பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது நாட்டு மக்கள் நேட்டோவின் தாக்குதல்களால் உடல், உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவரது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இக்கடிதத்தில் பல இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகள் காணப்பட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சகாரா பாலை வனத்தில் மரதன் ஓட்டம்.
உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா.இங்கு வெப்பமோ பயங்கர கொடூரம்.ஆனால் இப்பாலைவனத்தில் 1986 ஆம் ஆண்டு முதல் வருடாவருடம் இடம்பெற்று வருகின்றது ஒரு மரதன் ஓட்டப் போட்டி. பாலைவன மணலில் 254 கிலோ மீற்றர் தூரம் ஓட வேண்டும்.ஆறு நாட்கள் ஓட வேண்டி இருக்கும்.உலகில் மிக மிகக் கடினமான ஓட்டப் போட்டி இதுதான்.இம்முறை இப்போட்டி கடந்த மூன்றாம் திகதி ஆரம்பானது.உலகம் பூராவும் இருந்து மொத்தமாக 849 வீரர்கள் ஓடுகின்றனர்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF