இலங்கையிலும் பேஸ்புக் ஊடான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம்.
கடலை மாசுபடுத்த வேண்டாம்: சீனா கோரிக்கை
கடலை மாசுபடுத்த வேண்டாம் என்று சீன அரசாங்கம் ஜப்பானிடம் உத்தியோகபூர்வமான முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
உலகின் பல நாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அரங்கேற்றப்பட்ட பாணியில் இன்று இலங்கையிலும் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.இன்று மாலை மூன்று மணியளவில் கொழும்பு -07 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள பிரஸ்தாப ஆர்ப்பாட்டமானது இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார மற்றும் உப தலைவர் மஹேல ஜயவர்த்தன ஆகியோருக்கு ஆதரவாக நடைபெறவுள்ளது.
அவர்கள் இருவரும் மீண்டும் தலைவர், உபதலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியே இன்றைய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் முதல் ஆர்ப்பாட்டம் என்ற வகையில் இன்றைய ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் அதனைப் பின்பற்றி எதிர்கால அரசியல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஜே.வி.பி மற்றும் ஐ.தே.க. என்பன இன்றைய ஆர்ப்பாட்டம் குறித்து கடும் அவதானத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கணிசமானளவில் வீழ்ச்சி.
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் இலங்கை தொடர்பான பாதகமான கருத்துக்கள் காரணமாக இலங்கைத் தேயிலையின் ஏற்றுமதியில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இலங்கையின் தேயிலையானது பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தைகளையே நம்பி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அத்துடன் தேயிலை ஏற்றுமதி இலங்கைப் பொருளாதாரத்தின் முக்கியமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வழியாகவும் விளங்குகின்றது.
ஆயினும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடன் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இலங்கையின் நற்பெயருக்கு குந்தகம் விளைந்துள்ள நிலையில் தேயிலை ஏற்றுமதி கணிசமானளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் பிரச்சினைகளும் தேயிலை ஏற்றுமதியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக கடந்த வாரம் 3.5 மில்லியன் கிலோ தேயிலை சர்வதேச சந்தையில் ஏலத்துக்கு விடப்பட்ட போதும் அது அப்படியே திரும்பி வந்துள்ளது.அதன் காரணமாக இனி வரும் காலங்களில் தேயிலை ஏல விற்பனை தொடர்பில் அரசாங்கம் கடும் தயக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகின்றது.
எகிப்தில் அதிபரை பதவி விலக கோரி மீண்டும் போராட்டம்.
எகிப்து தலைநகர் கெய்ரோ தாகிர் சதுக்கத்தில் நடந்த எதிர்ப்பு போராட்டத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயம் அடைந்தனர்.எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் புரட்சி போராட்டத்தை தொடர்ந்து பதவி விலகினார்.
அவரைத் தொடர்ந்து நாட்டின் இடைக்கால தலைவராக பீல்டு மார்ஷல் முகமது ஹீஸைன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடைக்காலத் தலைவர் பதவி இழந்த ஹோஸ்னி முபாரக்கின் தலைவராகவே உள்ளார். எனவே இடைக்கால தலைவரும் பதவி விலக கோரி கெய்ரோ தாகிர் சதுக்கத்தில் எதிர்ப்பு போராட்டம் வெடித்தது.இந்தப் போராட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். ராணவத்தினர் துப்பாக்கியால் சுட்டும், தடிகளாலும் தாக்கினர் என போராட்டக்காரர்கள் கூறினர்.
வன்முறையை தூண்டும் எந்த வித நடவடிக்கையையும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. ராணுவம் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய போதும் இடைக்காலத் தலைவரை மாற்றும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.
சுனாமி இடிபாடுகளுக்கிடையே பணம்: அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி ஏற்படுத்திய இடிபாடுகளுக்கு இடையே கண்டெடுக்கப்படும் ரொக்கப் பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
நிலநடுக்கத்தாலும், அதைத் தொடர்ந்த சுனாமியாலும் பாதிக்கப்பட்ட ஜப்பானில் துயரத்துக்குக் குறைவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அது போல அங்குள்ள மக்களின் நேர்மைக்கும் குறைவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.இயற்கையின் சீற்றத்தால் இவாத்தே, மியாகி ஆகிய இரு வடகிழக்கு மாகாணங்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள். இங்கு அதிகாரிகளும், சாதாரண மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இடிபாடுகளுக்கு இடையிலும், சுனாமி அலையினால் ஏற்பட்ட பெரும் சகதிக்குக் கீழும் ரொக்கமாக பணம் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கண்டெடுக்கப்படும் பணத்தை உடனுக்குடன் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுகிறார்கள் அங்குள்ள மக்கள். இதுவரை லட்சக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது.சிறுதொகையாக ரொக்கமாக உள்ள பணத்தைத் தவிர சிறு பணப்பெட்டிகள், பெரிய பணப் பெட்டகங்களும் கூட இடிபாடுகளுக்கு இடையே இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு கிடைக்கும் பணத்தை அவற்றின் சொந்தக்காரர்களைக் கண்டுபிடித்து அவர்களிடமே திருப்பித் தர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் தீவிரவாத தற்கொலை படையில் 350 இளைஞர்கள்.
பாகிஸ்தானில் 350க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாலிபான் தற்கொலைப்படை பிரிவில் பயிற்சி பெற்றுள்ளனர் என்று அந்த இயக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 3ம் திகதி பாகிஸ்தானின் வழிபாட்டு தளத்தில் நடந்த தற்கொலைப்படை குண்டு வெடிப்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.இச்சம்பவத்திற்கு காரணமான உமர் பிடாய் என்ற 12 வயது இளைஞரை பொலிசார் கைது செய்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட நேர்காணல் நிகழ்ச்சியில் அவன் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தானின் வடக்கு வாஷிர்ஸ்தான் பகுதியில் தீவிரவாத இயக்கங்கள் அதிகளவில் பரவி உள்ளன.
தன்னைப் போன்ற வயதுடைய இளைஞர்களுக்கு மூளைச் சலைவை செய்து தீவிரவாத செயல்கள் மூலம் முக்கியமான இடங்களை தாக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. என்னைப் போன்ற இளைஞர்கள் சுமார் 350 பேர் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.மேலும் பலர் பயிற்சி பெற்று வருகின்றனர். நடைபெற்ற சம்பவம் தனக்கு மிகுந்த மன வலியை தந்திருப்பதாகவும், அதனால் பொதுமக்கள் தனக்கு மன்னிப்பு அளிக்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளான்.
கதிர்வீச்சு பொருட்களை வடிகட்ட உருக்கு சுவர் கட்ட ஜப்பான் திட்டம்.
ஜப்பானின் புகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து கடலில் வெளியேற்றப்பட்ட கதிர்வீச்சு செறிந்த நீரில் இருந்து கதிர்வீச்சுப் பொருட்களை வடிகட்டும் விதமாக கடலில் உருக்குச் சுவர் ஒன்றைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னும் 10 ஆண்டுகளில் நான்கு அணு உலைகளையும் படிப்படியாக மூடுவதற்கான வரைவுத் திட்டம் ஒன்று ஜப்பான் அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் 2ம் உலையில் கதிர்வீச்சு கலந்த நீர் சமீபத்தில் டன் கணக்கில் கடலில் விடப்பட்டது. கடலில் நடத்தப்பட்ட ஆய்வில் கடல்நீரில் 63 ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு கலந்துள்ளது தெரிந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவு என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கதிர்வீச்சு நீர் கடலில் விடப்பட்ட இடத்தில் 12 மீ அகலத்திற்கு ஸ்டீலால் ஆன சுவர் ஒன்றைக் கட்டுவதற்கு அணுமின் நிலைய பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இச்சுவர் கடல் நீரில் கலந்துள்ள கதிர்வீச்சுப் பொருட்களை வடிகட்டும் அமைப்பாகச் செயல்படும்.அதே நேரம் நான்கு அணு உலைகளையும் கட்டிக் கொடுத்த டோஷிபா நிறுவனம் இன்னும் 10 ஆண்டுகளில் நான்கு உலைகளையும் படிப்படியாக மூடுவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றையும் ஜப்பான் அரசிடம் அளித்துள்ளது.
இந்த 10 ஆண்டு காலம் என்பது அமெரிக்காவின் மூன்று அணுமின் நிலையம் மூடப்படுவதற்கு எடுக்கப்பட்ட காலகட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் இன்று ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை 1 மற்றும் 4ம் உலைகளின் மீது பறக்கவிட்டு படங்கள் எடுக்க "டெப்கோ" நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது வானிலையைப் பொருத்து மாற்றத்திற்குள்ளாகலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையில் ஜப்பானில் உணவின்றி வாடி வரும் மக்களுக்காக ஆறு லட்சம் கேன்களில் மீன் வகை உணவுகளை அளிக்க மாலத் தீவு முன்வந்துள்ளது. மாலத் தீவில் இருந்து ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்த மீன் வகை உணவை ஏற்க ஜப்பான் சம்மதித்துள்ளது.கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் மொத்தம் 82 சிறுவர் சிறுமியர் பெற்றோரை இழந்து வாடுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நீர் மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை.
இங்கிலாந்தின் கப்பற்படையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் ஊழியர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையில் ஒருவர் உயிரிழந்தார்.மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த சவுத்தாம்ப்டன் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நீர்மூழ்கி கப்பல் அணுமின் சக்தி அடிப்படையில் இயங்க கூடியது. 7 ஆயிரத்து 500 டன் எடை கொண்டு ஒரு பில்லியன் பவுண்டு செலவில் கட்டப்பட்ட இந்த கப்பலில் 98 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த கப்பல் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது. சம்பவத்தன்று சவுத்தாம்ப்டன் நகருக்கு வந்த இந்த கப்பலில் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றது.
இச்சம்பவத்தால் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை என்றும், இது தனிப்பட்ட முறை தாக்குதல் என்றும், தீவிரவாத குழுக்களுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும், இது குறித்து பாதுகாப்புத்துறை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடலுக்குள் மூழ்கி விடும் அபாயத்தில் நிவ்யார்க் நகரம்.
உலகின் வெப்ப அதிகரிப்பின் காரணமாக கடலில் மூழ்கவுள்ள நகரங்கள் வரிசையில் நிவ்யோர்க் நகரமும் முன்னணியில் இருப்பதாக அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.தற்போதைய நிலையை போன்றே எதிர்காலத்திலும் படிப்படியான வெப்ப அதிகரிப்பு நிகழும் பட்சத்தில் எதிர்வரும் 2100 ம் ஆண்டில் நிவ்யோர்க் முற்றாக கடலில் மூழ்கி விடும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மகாநாட்டின் போதே பிரஸ்தாப விடயங்கள் வெளிவந்துள்ளன. நிவ்யோர்க் நகரம் கடலில் மூழ்கக்கூடிய அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஏனைய நகரங்களை விட இருபது வீதம் அதிகமான ஆபத்தை எதிர்கொண்டிருப்பதுடன், ஆர்க்டிக் சமுத்திரம் மட்டுமே அதன் போது குறைந்தளவான பாதிப்பை எதிர்கொள்ளும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்ததாக வான்கூவரின் டாஸ்மானியா பிரதேசம் மற்றும் மாலைதீவு என்பனவும் அவ்வாறு கடலில் மூழ்கக் கூடிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.மேலும் உலகின் வெப்ப அதிகரிப்பின் காரணமாக எதிர்வரும் காலங்களில் கடல் சூறாவளி மற்றும் குறுகிய கால புயல் அபாயங்களையும் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் கவர்னராக பதவி வகித்த 4 வயது சிறுவன் .
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை சேர்ந்தவன் ஜெஸ்சி சாக்ஷான். 4 வயது சிறுவனான இவன் தனது தாயுடன் காரில் வெளியில் சென்று இருந்தான்.திடீரென மனச்சோர்வடைந்த அவன் காரில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த அவனது தாய் ஏன் அழுகிறாய் என கேட்டார். அதற்கு அவன் நான் நியூஜெர்சி மாகாண கவர்னராக வேண்டும் என தனது ஆசையை தெரிவித்தான். உடனே அவனது தாய் நீ சிறுவனாக இருக்கிறாய். எனவே தற்போது கவர்னராக முடியாது.
வளர்ந்து பெரியவன் ஆனதும் நீயும் கவர்னர் பதவி வகிக்கலாம் என்றார். ஆனால் சிறுவன் ஜெஸ்சி சாக்சன் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதபடி அடம் பிடித்தான். பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவனது தாய் அழைத்து சென்றார்.இச்சம்பவம் அனைத்தும் "யூடியூப்" இணையதளத்தில் வீடியோ காட்சியாக ஒளிபரப்பானது. அதை நியூஜெர்சி மாகாணத்தின் தற்போதைய கவர்னர் கிரிஸ் கிறிஸ்டி பார்த்தார். இதை தொடர்ந்து அச்சிறுவனின் ஆசையை தீர்த்து வைக்க விரும்பினார்.
ஆகவே அவனை நியூஜெர்ஸி மாகாணத்தின் ஒருநாள் கவர்னர் ஆக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் சிறுவன் ஜெஸ்சி சாக்சான் ஒரு நாள் கவர்னராக பதவி வகித்தான். இதை அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்."முதல்வன்" சினிமா படத்தில் நடிகர் அர்ஜூன் ஒருநாள் முதல் அமைச்சராவது போல் நடித்து இருந்தார். ஆனால் அமெரிக்காவில் 4 வயது சிறுவன் உண்மையிலேயே ஒரு நாள் கவர்னராக பதவி வகித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறான்.
கடலை மாசுபடுத்த வேண்டாம்: சீனா கோரிக்கை
கடலை மாசுபடுத்த வேண்டாம் என்று சீன அரசாங்கம் ஜப்பானிடம் உத்தியோகபூர்வமான முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமுத்திர சூழல் பாதுகாப்பது தொடர்பாக சர்வதேச வழக்கில் உள்ள சட்டதிட்டங்களை மதித்து ஜப்பான் நடந்து கொள்ள வேண்டும் என்று சீன வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது.ஜப்பானின் புகுஷிமா அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் அணுக்கதிர் கலந்த கழிவு நீரை பசுபிக் கடலில் கொட்ட ஜப்பானிய அரசாங்கம் முடிவெடுத்துள்ளமை குறித்து சீன அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.
மேலும் சர்வதேச சமூகம் இது குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அத்துடன் அதன் பாதிப்புகள் குறித்த விபரங்களை ஜப்பான் சர்வதேச சமூகத்திடம் கையளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதற்கிடையே ஜப்பானின் செயற்பாடுகள் காரணமாக தென் கொரியர்கள் கடல் உணவைத் தவிர்க்க ஆரம்பித்துள்ளதற்கு அந்நாட்டு அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ராணுவத் தாக்குதல்: 20 பேர் பலி
சிரியாவில் 11 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இதை தொடர்ந்து அரசியல் சட்டத்தை மறு சீரமைப்பு செய்வதாக அவர் அறிவித்துள்ளார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே அவர்களின் போராட்டத்தை ஒடுக்க அதிபர் ஆசாத் ராணுவத்தையும், பொலிசையும் பயன்படுத்தி வருகிறார். இதனால் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதற்கிடையே நேற்று சிரியாவில் டாரா, டமாஸ்கஸ், ஹராஸ்தா, ஹோம்ஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தது. வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதை தொடர்ந்து போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவத்தினரும், பொலிசாரும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 20 பேர் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் டாரா நகரில் தான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். டமாஸ் கஸ்சில் 3 பேரும், ஹோம்ஸ் நகரில் ஒரு வரும் பலியாகியுள்ளனர்.
இத்தகவலை சிரியா தேசிய மனித உரிமை அமைப்பின் தலைவர் அம்மர் குராபி தெரிவித்துள்ளார். ஆனால் நேற்று நடந்த வன்முறைக்கு 2 பேர் மட்டுமே பலியானதாக அரசு தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூட்டில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 3 வாரத்தில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா சிரியா அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜவரிகோஸ்ட் போராட்டம்: காக்போ துருப்புகள் முன்னேற்றம்.
ஜவரிகோஸ்ட்டில் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி லாரண்ட் காக்போ துருப்புகள் அபிட்ஜன் நகரில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தின.
ஜவரிகோஸ்ட்டில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் அலசானே குவாட்டாரா வெற்றி பெற்றார். இருப்பினும் தற்போதைய ஜனாதிபதி லாரண்ட் காக்போ பதவி விலக மறுத்து வருகிறார்.இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் நடந்து வருகிறது. குவாட்டாராவுக்கு ஆதரவான ராணுவத் துருப்புகள் காக்போ வளாகத்தை சுற்றி இருந்த போதும் தாக்குதலை நடத்தவில்லை என ஐ.நா அமைதிப்படைத் தலைவர் அலெய்ன் லேராய் தெரிவித்தார்.
அலசானே குவாட்டாரா வியாழன் அன்று தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் கூறியதாவது: மேற்கத்திய நாடுகள் முக்கிய துறைமுகங்களில் விதித்துள்ள தடையையும், முக்கிய வர்த்தகத்திற்கு விதித்துள்ள தடையையும் நீக்க வேண்டும். ஜவரிகோஸ்ட்டில் மீட்சி பெற இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அமைதி நிலை பேச்சுவார்த்தைக்காக மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை காக்போ துருப்புகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ஆக்கிரமித்துள்ளன என்று ஐ.நா அமைதிப்படை தலைவர் அலெய்ன் லேராய் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அலசானே குவாட்டாரா கோல்ப் ஹோட்டல் பகுதியில் தங்கி உள்ளார். அந்த ஹோட்டலை காக்போ துருப்புகள் நெருங்கியுள்ளன. ஜவரிகோஸ்ட்டின் மேற்குப் பகுதியில் 3 நகரங்களில் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. 100 உடல்கள் அங்கு கிடந்தன என்று முன்னர் ஐ.நா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க பட்ஜெட்: 3800 கோடி டொலர் செலவினத்தைக் குறைக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
அமெரிக்க பட்ஜெட் தொடர்பாக குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் நாடாளுமன்றத்தில் கடைசி நேரத்தில் ஒப்புக் கொண்டனர்.
பல சேவைகளை அரசு மூடுவதற்கு விதிக்கப்பட்ட கெடு முடிவடைய ஒரு மணி நேரம் இருந்த தருணத்தில் இருகட்சியினர் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. நடப்பு ஆண்டில் வருகிற செப்டம்பர் 30ம் திகதி வரையில் இரு கட்சியினரும் செலவினத்தில் 3800 கோடி டொலரை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.செலவினம் குறைப்பு குறித்து ஜனாதிபதி ஒபாமா கூறியதாவது: இந்த செலவின ரத்து நடவடிக்கை மிகவும் சிரமமானது. ஆனால் தவிர்க்க முடியாதது. சில செலவின ரத்து நடவடிக்கைகளை நாங்கள் வேதனையுடன் தான் ஏற்றுக் கொண்டோம்.
மக்கள் தொடர்பான திட்டங்களில் செலவினம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி குறைப்பு நடவடிக்கையால் உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நல்ல சூழ்நிலைகளில் இந்த ரத்து நடவடிக்கையை மேற்கொண்டிருக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் ஜான் பேர்னர் கூறுகையில்,"அரசு தனது செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த அவை வாக்களிக்கும்" என்றார். இருகட்சிகள் இடையே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து 8 லட்சம் அரசு ஊழியர்களை தவிர்த்து இதர நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 1995ம் ஆண்டு கிளிண்டனின் வெள்ளை மாளிகை மசோதா மீது ஜனநாயக கட்சியனருக்கும், குடியரசுக் கட்சியனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜனநாயக கட்சியினர் மேற்கொள்ள விரும்பிய செலவின ரத்து நடவடிக்கையை காட்டிலும் அதிக செலவின ரத்து நடவடிக்கைக்கு குடியரசு கட்சி வலியுறுத்தியுள்ளது.