ஆப்பிஸ் தொகுப்பின் அண்மைய வெளியிடான 2010 மிகவும் சிறப்புடையதாகும். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது.
இதில் மற்றும் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் வேர்ட் 2010 ல் இருந்தப்படியே எக்செல் சீட்டையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியின் மூலமாக வேர்ட் தொகுப்பில் இருந்தப்படியே எக்செல் தொகுப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சில நேரங்களில் வேர்ட் தொகுப்பில் ஒரு சில கணக்குளை போட வேண்டி வரும். அது போன்ற நிலை வரும் போது பெரும் சிரமப்படுவோம். சாதாரண கணக்கென்றால் பராவயில்லை. மிகப்பெரிய அளவிளான கணக்குளை செய்ய வேண்டுமெனில் என்ன செய்வது எக்செல் உதவியை தான் நாட வேண்டும். இதற்கு பதிலாக எக்செல் சீட்டையே வேர்ட் தொகுப்பில் பயன்படுத்தினால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.
வேர்ட் 2010 தொகுப்பில் எக்செல் சீட்டை இணைக்க முதலில் வேர்ட் 2010 தொகுப்பை ஒப்பன் செய்யவும். அடுத்ததாக Insert என்னும் டேப்பை தேர்வு செய்யவும். அதில் டேபிள் என்னும் தேர்வை தேர்வு செய்து, அதில் Excelspreadsheet என்பதை தேர்வு செய்யவும்.
தற்போது எக்செல் சீட்டானது வேர்ட் டாக்குமெண்டில் இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எளிமையாக எக்செல் பணிகளையும் வேர்ட் தொகுப்பிலேயே செய்ய முடியும். எக்செல் தொகுப்பை இணைத்தவுடன் எக்செல் தொகுப்பிற்கு உண்டான டூல்பாரையும் காண முடியும்.
இந்த டூல்பாரின் உதவியுடன் எக்செல் பணிகளை மிக விரைவாக செய்ய முடியும். வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இந்த வசதியானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன.
அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. பைல்கள் இடையே எளிதாக:
ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம்.
இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய வழியைத் தருகிறது. டாஸ்க்பாரில் உள்ள பைல்களின் ஐகான்களில் கிளிக் செய்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டால், ஒவ்வொருமுறை கிளிக் செய்கையிலும், அடுத்தடுத்த விண்டோ செயல்பாட்டிற்கு கிடைக்கும்.
2.விண்டோக்களைக் கையாளுதல்:
விண்டோஸ் 7, டாகுமெண்ட் மற்றும் புரோகிராம்களைக் கையாள புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோ ஒன்றினைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தலாம். இதனை ”docking” என விண்டோஸ் 7 கூறுகிறது.
செயல்படும் விண்டோவினை ஏதேனும் ஒரு பக்கமாக, பாதி திரையில் வைத்திட, அதனை இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால் போதும். விண்டோ தானாக, தன் அளவை பாதி திரைக்கு மாற்றிக் கொள்ளும். அதே போல, மேலாக இழுத்தால், விண்டோ பெரிதாகும். கீழாக இழுத்தால், சிறிய அளவில் மாறும்.
பாதி திரையில் வைத்தபடி, நெட்டு வாக்கில் இந்த விண்டோவினை அமைக்கலாம். பாதி திரை அளவில் இருந்தவாறே, நெட்டு வாக்கில் விரியும், குறையும்.இந்த செயல் பாடுகளை கீகள் மூலமும் இயக்கலாம். விண்டோஸ் கீயுடன் இடது அம்புக் குறி அல்லது வலது அம்புக் குறியைப் பயன்படுத்தினால், விண்டோ திரையின் பாதி அளவில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும்.
இதே போல, விண்டோ கீயுடன் மேல் மற்றும் கீழ் அம்புக் குறியினைப் பயன்படுத்தினால், விண்டோ சுருங்கும், விரியும். விண்டோ + ஷிப்ட்+ மேல் அம்புக் குறி கீகளை அழுத்தினால், அல்லது கீழ் அம்புக் குறி கீயை அழுத்தினால், நெட்டு வாக்கில் திரை பாதியாகும் மற்றும் விரியும்.
3. பல மானிட்டர் செயல்பாடு:
ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த, விண்டோஸ் 7 எளிதான வழியைத் தருகிறது. இவற்றை இணைத்த பின்னர், விண்டோ+ஷிப்ட்+இடது அம்புக்குறி கீ / வலது அம்புக் குறி கீ களை அழுத்த, செயல்பாடு ஒவ்வொரு மானிட்டராக மாறிச் செல்லும்.
4.உங்கள் டெஸ்க்டாப்பை உடன் அணுக:
விண்டோஸ் 7 தொகுப்பில் தரப்பட்டுள்ள, மிகத் திறன் கொண்ட ஒரு டூல்,டெஸ்க்டாப் கிடைக்க கொடுக்கப் பட்டுள்ள பட்டன் தான். டாஸ்க்பாரின் வலது மூலையில் கடிகாரத்திற்கு அருகே உள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் திரை காட்டப்படும். இதனையே விண்டோ கீ + ஸ்பேஸ் கீ அழுத்தியும் பெறலாம்.
5. சிக்கல் இல்லாத விண்டோ செயல்பாடு:
நம் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிச் சிக்கலில் சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் தொகுப்பின் செயல்பாட்டிலும், இதே போல பல புரோகிராம் விண்டோக்களைத் திறந்து வைத்து சிக்கிக் கொள்வோம்.
விண்டோஸ் 7 சிஸ்டம், நீங்கள் இயக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது. விண்டோ + ஹோம் கீகளை அழுத்த, அனைத்து செயல்படாத விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அதாவது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் உள்ள விண்டோ மட்டுமே திரையில் இருக்கும். மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை அனைத்தும் வேண்டும் என்றால், மீண்டும் விண்டோ கீ + ஹோம் கீ களை அழுத்தினால் போதும்.
6.ஹெல்ப் டெஸ்க்கிற்கு உதவி:
என்னதான் ஹெல்ப் டெஸ்க் உதவி சிஸ்டத்தில் இருந்தாலும், பிரச்னை என்னவென்று நாம் தெளிவாகத் தெரிவித்தால் தான், சிக்கலுக்கான தீர்வினை ஹெல்ப் டெஸ்க் நமக்குத் தர முடியும். சிக்கலின் பின்னணியைக் கம்ப்யூட்டரே பதிந்து தரும் வகையில், விண்டோஸ் 7 “Problem Steps Recorder” என்று ஒரு டூலைத் தந்துள்ளது.
இது ஒரு ஸ்கிரீன் கேப்சர் டூல். இதன் மூலம் பிரச்னை ஏற்பட்ட நிலைகள் ஒவ்வொரு திரைக் காட்சியாகப் பதியப்படுகிறது. இது ஒரு எச்.டி.எம்.எல். பைலாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஸிப் பைலாக பார்மட் செய்யப்பட்டு, ஹெல்ப் டெஸ்க்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்த பதிந்திடும் புரோகிராம் கண்ட்ரோல் பேனலில் கிடைக்கிறது. “Record steps to reproduce a problem” என்ற பிரிவில் இது உள்ளது. அல்லது psr.exe என்ற பைலை இயக்கினால் போதும்.
7.டாஸ்க் பாரில் போல்டர்கள்:
வழக்கமாக, நாம், ஒரு குறிப்பிட்ட போல்டரில் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களை வைத்திருப்போம். கம்ப்யூட்டரை இயக்கியவுடன், இந்த போல்டருக்குத்தான் அடிக்கடி சென்று, திறந்து அதில் உள்ள பைல்களை டபுள் கிளிக் செய்து இயக்குவோம்.
இவ்வாறு அடிக்கடி திறக்கும் போல்டர்களை, உங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 உதவுகிறது. அடிக்கடி பயன்படுத்தும் போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் போட்டு வைக்கலாம். அங்கே போல்டர் ஐகானாக அது அமர்ந்துவிடும். பின்னர், அதில் கிளிக் செய்து, மிக எளிதாக பைல்களைப் பெறலாம். குயிக் லாஞ்ச் புரோகிராம் போல, இது குயிக் லாஞ்ச் போல்டராகச் செயல்படுகிறது.Share140.
பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன் அவை மோதலாம் என்ற நிலையில் அது தொடர்பில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்புவது மட்டுமல்லாமல், உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் கூடிய உபகரணமொன்றினை கார் தயாரிப்பு நிறுவனமான வொல்வோ உருவாக்கியுள்ளது.
இதனை தனது கார்களில் அந்நிறுவனம் பொருத்தியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன. ராடார் மற்றும் கமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது.
அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும். அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும். எனினும் இவ்வுபகரணமானது இரவிலும் மோசமான காலநிலையின் போதும் இயங்காது என வொல்வோ தெரிவிக்கின்றது.
துப்பாக்கி நீட்டிய கொள்ளையனை வெளியே தூக்கி வீசிய துணிச்சலான நகைக்கடைக்காரர்! ஒரு நகைக் கடையைக் கொள்ளையிட வந்த கொள்ளையர்களை கடை முதலாளி தனது கடைக் கவுண்டரிலிருந்து தூக்கி வீசும் காட்சிகள் பாதுகாப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளன.
பொலிஸார் இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளனர். முதலில் கடைக்குள் வந்த நபர் தனது காதலிக்கு ஒரு மோதிரம் வாங்க வேண்டும் எனக் கூறி நகைகளைப் பார்வையிட ஆரம்பித்துள்ளார். அப்போது உள்ளே வந்த இரண்டாவது நபர் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்ட ஆரமபித்ததும் முதலாவது வந்த நபர் நகைகள் அனைத்தையும் சுருட்ட ஆரம்பித்துள்ளார்.
கையில் இருப்பது நிஜத் துப்பாக்கியல்ல என்பதையும், இருவரும் நண்பர்கள் என்றும் தெரிந்து கொண்ட உரிமையாளர் துணிச்சலோடு இருவரையும் அடுத்தடுத்து தாக்கி தூக்கி வெளியே வீசியுள்ளார். இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் திருடர்களை இனம் காண பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பெற்றோரின் கொடுமை தாங்காமல் புகலிடம் தேடி இலங்கை வந்திருக்கும் பாக். சிறுமிகள்!
பாகிஸ்தானிய சிறுமிகள் இருவர் பெற்றோரின் கொடுமைகளை தாங்காமல் தப்பி ஓடி வந்து இலங்கையில் புகலிடம் கோரி உள்ளார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் மூலம் இலங்கை வந்து உள்ளனர். ஆயினும் சித்திரவதைக் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றனர் சிறுமிகளின் பெற்றோர். சிறுமிகள் இருவரையும் நாட்டுக்கு உடன் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரி கொழும்பில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்து உள்ளனர்.
கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான பத்தரமுல்லையில் அமைந்து இருக்கும் சிறுவர் நீதிமன்றம் இச்சிறுமிகள் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கின்றது.
வாடகை செலுத்தாமலும் வசிக்கலாம்: பிரிட்டன் நீதிமன்றம்.
நலன்புரி கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்டு நகர சபை வீடுகளில் வசித்து வரும் ஒரு பெண் வாடகைச் செலுத்தத் தவறினார் என்பதற்காக அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அவரை வெளியேற்ற முடியாது.
அவ்வாறு செய்வது அந்தப் பெண்ணின் மனித உரிமையை மீறுவதாகும் என்று ஐரோப்பிய மனித உரிமை மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரெபேக்கா பவல் என்ற பெண் நகர சபைக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றார். ஆயிரக்கணக்காக பவுண்களை இவர் நலன்புரி கொடுப்பனவாகவும் பெற்று வருகின்றார்.
ஆனால் இவர் வசிக்கும் வீட்டுக்கு பல மாதங்களாக வாடகைச் செலுத்தாமல் நிலுவைத் தொகை 3500 பவுண்களைத் தாண்டிவிட்டது. இவரை இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற நகர சபை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி இப்போது சட்டரீதியான தடையை எதிர்நோக்கியுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் சர்ச்சைக்குரிய மனித உரிமை சாசனத்தின் பிரகாரம் வாடகை செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஒருவரை அவர் வசிக்கும் வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாது என்று உச்ச நிதிமன்றம் அறிவித்துள்ளது.
இது ஏனையவர்களும் வாடகைச் செலுத்தாமல் இருப்பதற்கான ஒரு மோசமான முன்மாதிரியை ஏற்படுத்தி விடும் என்று நகரசபை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். நேற்று இந்தத் தீர்ப்பு வெளியானது முதல் ஏற்கனவே வாடகைச் செலுத்தாத பலர் உஷார் அடைந்துள்ளனர். அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.
லிபியா மீது கனடா ஆயுதத்தடை: சொத்துக்களும் முடக்கம்.
லிபியாவில் மோமர் கடாபி ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச சமூகம் கண்டித்ததுடன் பொருளாதாரத் தடையும் விதித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் லிபியா மீது விதித்துள்ள தடையை தொடர்ந்து கனடாவும் லிபியா மீது தடைவிதித்துள்ளது. இந்த தடையால் ஆயுத ஏற்றுமதி நிறுத்தப்படுவதுடன் சொத்து முடக்கமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவின் இந்த தடை அறிவிப்பை பிரதமர் ஹார்ப்பர் வெளியிட்டார். இந்த அறிவிப்பின் போது லிபிய அதிபர் கடாபி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஹார்ப்பர் தொலைக்காட்சியில் விடுத்த அறிக்கையில்,"லிபியாவில் ரத்தம் சிந்தும் நடவடிக்கையை நிறுத்துவதுடன் கடாபி ஆட்சியை விட்டு விலக வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் லிபியா மீது பொருளாதார தடை விதித்தது. உறுப்பினர் நாடுகளும் கடாபி, அவரது 4 மகன்கள் மற்றும் மகளின் சொத்துகளை முடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
கடாபி குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ளவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. கடாபியின் முக்கிய உதவியாளர்கள் சொத்துகளை முடக்கவும் முடிவு செய்யப்பட்டது. லிபிய அரசுக்கு இடையேயான நிதித்தடை மற்றும் லிபியா சென்ட்ரல் வங்கி பரிவர்த்தனை தடை ஆகியவற்றை கனடா அறிவித்தள்ளது.
இந்த தடைகள் மூலம் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நபர்கள் ஆயுத உதவி மற்றும் நிதி உதவியை பெற முடியாது. 192 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஐ.நா சபை, லிபியாவை உலக மனித உரிமை அமைப்பில் இருந்து நீக்கவும் முடிவு எடுத்துள்ளது.தமது சொந்த நாட்டு மக்களுக்கே கடாபி துரோகம் செய்துள்ளார் என கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கூறினார்.
லிபியா மீதான தடை: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்.
லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் முமர் கடாபியை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெப்ரவரி 17 ஆம் திகதி துவங்கிய இந்த மகத்தான போராட்டத்தை ஒடுக்குவதற்கு கடாபி ராணுவத்தின் இரும்புக்கரத்தை முடுக்கிவிட்டுள்ளார். கர்னல் கடாபியின் அதிகார ஆட்சியில் ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
சர்வாதிகார ஆட்சி நடத்தும் கடாபி பதவியை விட்டு விலக வேண்டும் மற்றும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தினார். மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் கடாபி ஆட்சிக்கு எதிராக தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஏகோபித்த தீர்மானம் நிறைவேறியது.
கடாபியின் சொத்துக்களை முடக்குவதுடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் கவுன்சிலில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மனித இனத்திற்கு எதிரான குற்றவியல் நிகழ்வுகளை கடாபி மேற்கொண்டு வருவதைத் தொடர்ந்து லிபியா ஆட்சியாளர்கள் மீது சர்வதேச நாடுகள் தடைவிதித்துள்ளன.
லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டது. மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெறுவதைக் கண்டித்து லிபியா நீதித்துறை அமைச்சர் முஸ்தபா அப்டெல் ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். லிபியாவில் 3 மாதத்தில் பொதுத் தோ்தலை நடத்தும் வகையில் மக்கள் மற்றும் ராணுவத்தினரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என அவர் கூறியதாக லிபியாவில் வரும் கியூர்யனா நாளிதழில் செய்தி வெளியானது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் கூறுகையில்,"வடக்கு ஆப்பிரிக்க தேசத்தில் உணவு விநியோகம் சீர்குலைந்து போகும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்தது. இறக்குமதியையே உணவு விநியோகத் திட்டம் பெரிதும் சார்ந்துள்ளது" என்றார்.
லிபியாவின் துணை ஐ.நா தூதர் இப்ராகிம் தாபஷி கூறுகையில்,"இந்த பொருளாதாரத்தடை கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அளிக்கும் தார்மீக ஆதரவு" என்றார். கர்னல் கடாபியின் அடக்குமுறைக்கு இவர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
லிபியா மக்கள் மீது, ஆயுதத் தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லிபியகுழு ஐ.நா வுக்கு கடிதம் அனுப்பியது. லிபியா மீது அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்த தனது தூதரகத்தையும் அமெரிக்கா மூடியது.
கர்னல் கடாபியின் வட்டத்தில் உள்ள 22 தனிநபர்கள் மீது தடை விதிப்பதாக அவுஸ்திரேலியா கூறியது. அவுஸ்திரேலியாவில் நுழையவும் அது தடைவிதித்துள்ளது. அவுஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் கெவின் ரூட்,"லிபிய மக்களுக்கு உதவும் உறுதியான ஆதரவு நடவடிக்கை இதுவாகும்"என்றார்.
நாட்டை விட்டு வெளியேற அடம்பிடிக்கும் கடாபி!
பதவி விலக மறுக்கும் லிபியா தலைவர் மும்மர் கடாபி மீதான நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் விதத்தில், ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் வெளிநாடு செல்லத் தடை, சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. தொடர்ந்து, கடாபி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
நாளுக்கு நாள் மோசமாகி வரும் லிபியா நிலவரம் குறித்து, நேற்று முன்தினம் ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மீண்டும் கூடியது. அதில் லிபியா மீதான பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
அத்தீர்மானம் எதிர்ப்பு இன்றி, 15 உறுப்பு நாடுகளாலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் படி, தனது அண்டை நாடுகள் அல்லது வெளிநாடுகளுடன் லிபியா ஆயுதப் பரிமாற்றம் செய்யத் தடை கடாபி, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருக்கமான உதவியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரது சொத்துக்கள் முடக்கம்; கடாபி மற்றும் அவரைச் சார்ந்தோர் லிபியாவை விட்டு வெளியே செல்லத் தடை; மனிதப் படுகொலையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, லிபியா அரசை சர்வதேச குற்றவியல் கோர்ட் (ஐ.சி.சி.,) விசாரிக்க சிபாரிசு உள்ளிட்டவை உடனடியாக அமலுக்கு வருகின்றன.
ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி இது பற்றிக் கூறுகையில், "மக்களுக்கு எதிராக ராணுவம் பயன்படுத்தப்படுவது இந்தியாவுக்கு வருத்தம் அளிக்கிறது. அதோடு, லிபியாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களது சொத்துக்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியா கவலைப்படுகிறது. ஐ.சி.சி.,யில் இந்தியா உறுப்பினராக இல்லை என்றாலும், இந்த நடவடிக்கையால் லிபியாவில் வன்முறை கட்டுப்படும் என்ற பிற நாடுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதை இந்தியாவும் ஏற்றுக் கொண்டது' என்றார்.
"உடனே வெளியேறுங்கள்' : அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி அதிபர் மார்க்கெல் ஏஞ்சலாவுடன் தொலைபேசியில் பேசிய போது,"தனது சொந்த மக்களை வன்முறையால் கொன்று குவித்துத் தான் அவர் பதவியில் இருக்கிறார் என்றால், அப்பதவியில் இருப்பதற்கான சட்டப்பூர்வ அந்தஸ்தை அவர் இழந்து விட்டார் என்று தான் அர்த்தம். அதனால் அவர் உடனடியாக லிபியாவை விட்டு வெளியேற வேண்டும்' என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தூதரகங்கள் மூடல்: ஜெர்மனி நாட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில், லிபியா அதிகாரிகளின் அனுமதியை எதிர் பார்க்க வேண்டாம் என்று ஜெர்மனி அதிபர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, லிபியாவில் இயங்கி வந்த அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டுத் தூதரகங்கள் நேற்று இழுத்து மூடப்பட்டன.
தங்களது தூதர்கள் மற்றும் குடும்பங்களை லிபியாவில் இருந்து வெளியேற்றுவதில் அந்நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. கைவிட்டார் கடாபியின் நர்ஸ் : கடாபியின் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இப்போது அவரை கைவிட்டு விட்டனர். அந்த வரிசையில் அவருக்கு மிகவும் "நெருக்கமான' பெண் நண்பரான உக்ரேனிய நாட்டைச் சேர்ந்த நர்சும் இப்போது சேர்ந்துள்ளார்.
கலினா கலோட்னிட்ஸ்கா (38), கடந்த ஒன்பது ஆண்டுகளாக லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ளார். அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலையில் சேர்ந்த அவரைப் பார்த்த கடாபி, தனது சிறப்பு உதவியாளராக நியமித்துக் கொண்டார்.கடாபி தற்போது பெரும் பிரச்னையில் மாட்டிக் கொண்டுள்ள சூழலில், கலினாவும் விரைவில் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பி விடப் போவதாக அவரது மகள் தெரிவித்தா
பேஸ்புக்கானது நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விடயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம்.
ஒரு சில நேரங்களில் ஏதோ ஒரு தேவைக்காக நாம் பேஸ்புக்கில் உலாவரும் போது மற்ற நண்பர்களிடம் இருந்து நாம் ஓன்லைனில் இருப்பதை மறைக்க கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
1. முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்ததும் உங்களின் அரட்டை(chat) பகுதியை ஓபன் செய்யுங்கள். இந்த பகுதி உங்கள் பேஸ்புக் விண்டோவின் கீழ்பகுதியில் வலது பக்கத்தில் இருக்கும்.
2. திறந்தவுடன் ஓன்லைனில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காணப்படும்.
3. அதில் மேல்பகுதியில் உள்ள விருப்பத்தேர்வுகள்(Options) என்பதை க்ளிக் செய்யுங்கள். உடனே ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
4. அந்த விண்டோவில் உள்ள ஓப்லைனுக்கு செல்ல(Go offline) என்பதை க்ளிக் செய்து விடவும். இப்பொழுது நீங்கள் அரட்டை பகுதியில் இருந்து முழுவதும் துண்டிக்கபடுவீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் ஓன்லைனில் இருப்பது தெரியாது.
5. இந்த வசதி மீண்டும் வேண்டுமென்றால் மறுபடியும் அரட்டை பகுதியின் மீது க்ளிக் செய்தாலே போதும் இவ்வசதியை பெற்று விடலாம்.
இணையத்தை பயன்படுத்தும் அனைவருமே நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக் கொள்வோம். அந்த வகையில் தகவல்களை ஓன்லைன் மூலமாக பறிமாறிக் கொள்ள பல்வேறு தளங்கள் உள்ளன.
அவை அனைத்தும் குறைந்த அளவுடைய கோப்புகளை மட்டுமே பறிமாறிக் கொள்ள அனுமதிக்கும். ஆனால் இந்த தளத்தின் மூலம் ஒரு நாளைக்கு 20 ஜி.பி வரை தகவல்களை பறிமாறிக் கொள்ள முடியும்.
ஆனால் ஒரு கோப்புடைய அளவானது 200 எம்.பி வரை மட்டுமே இருக்க வேண்டும். அதிக அளவுடைய தவல்களை பறிமாறிக் கொள்ள வேண்டுமெனில் நாம் ஏதாவது ஒரு மெமரி டிவைஸ் துணையுடன் மட்டுமே தகவல்களை பறிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு நம் அருகாமையில் உள்ள நண்பர்களிடம் தகவல்களை எளிமையாக பறிமாறிக் கொள்ள முடியும்.
ஆனால் வெளியூர்களில் பார்க்க முடியாத தூரத்தில் உள்ள நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ தகவல்களை பறிமாற்றம் செய்ய வேண்டுமெனில் அது இணையத்தின் உதவியுடன் மட்டுமே மிக விரைவாக முடியும்.
இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை தொடங்கி கொள்ளவும். பின் File Manager என்பதை கிளிக் செய்து புதியதாக Create Folder என்னும் பட்டியை அழுத்தி ஒரு போல்டரை உருவாக்கி கொள்ளவும். வேண்டுமெனில் பாஸ்வேர்ட் உருவாக்கி கொள்ள முடியும்.
பின் Upload என்னும் பட்டியை அழுத்தி வேண்டிய பைலை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். நீங்கள் விரும்பினால் தளத்தில் இருந்தவாறே பல கோப்புகளை ஒருங்கிணைத்து Compress செய்து கொள்ள முடியும். இதற்கு கோப்புகளை தேர்வு செய்து கொண்டு More Actions என்னும் தேர்வு மெனுவை கிளிக் செய்து Compress File என்பதை கிளிக் செய்து சேமித்துக் கொள்ள முடியும்.
இந்த தளத்தில் நீங்கள் தகவல்களை சேமித்து வைப்பதுடன், நண்பர்களுக்கு இந்த கோப்புகளின் லிங்கினை அனுப்பி தகவலை பறிமாறிக் கொள்ள முடியும். இந்த தளத்தின் மற்றொரு வசதி என்னவெனில் MP3 பிளேயர் மற்றும் Flash பிளேயர் வசதி உள்ளது. இந்த வசதியின் மூலம் தளத்தில் இருந்தவாறே பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம்.
முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை(Folders) மற்றவர்கள் அழிக்க முடியாத வகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம்.
இத்தகைய கோப்புக்களை(Undeleteable Folders) DOS Command Prompt மூலமாக மட்டும் தான் உருவாக்க முடியும். அத்தகைய கோப்புக்களை சாதாரணமாக எவரும் அழிக்க முடியாது. அவ்வாறு அழிப்பதாயின் DOS Command Prompt வழியே சென்று தான் அழிக்கமுடியும்.
இதோ அதற்கான வழிமுறைகள்:
1. முதலில் DOS Command Prompt ஐ திறவுங்கள். இதற்கு Start>Run>(type) "cmd".
2. பின்னர் கோப்பு(folder) சேமிக்க வேண்டிய இடத்தினை(C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் "mdaux" என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.(கோப்புக்களை உருவாக்க நீங்கள்(aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களை மட்டுமே பாவிக்க முடியும்).
3. தற்பொழுது aux என்ற கோப்பானது உங்கள் கணனியில் நீங்கள் தெரிவு செய்த இடத்தில்(directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.
4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே
5. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rdaux என்றவாறு தட்டச்சு செய்து அழிக்கலாம்.
இரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும்.ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை? பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.
ஆனால் முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருப்பின் பழுதடைந்த சிடியிலிருந்து தகவல்களை ஒரளவாக நல்ல நிலையில் எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதைப்போல பழுதான சிடியிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுக்கும் இலவச மென்பொருள் தான் Get My videos Back . இந்த மென்பொருள் சிறப்பான முறையில் பெரும்பாலான தகவல்களை மீட்டுத்தருகிறது. (Recovering data) இதன் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை பழுதானவற்றிலிருந்து கணிணிக்கு சேமித்துக் கொள்ளலாம்.
Source என்பதில் பழுதான சிடியுள்ள இடத்தையும் Target என்பதில் எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் தேர்வு செய்து Open start என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். தகவல்களை மீட்டெடுக்கும் போது அதன் காப்பி செய்யும் செயல்பாட்டை நமக்கு காட்டுகிறது.
இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற சுதந்திர மென்பொருளாகும் (Open source). Avi, mkv, mp3 போன்ற முக்கிய வீடியோ வகைகளை இந்த மென்பொருள் ஆதரிக்கின்றது. தரவிறக்கச்சுட்டி :Download Get My Videos Back
தொடர்புடைய பதிவுகள் : 1.பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்
2.My computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி?
இதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட் கீகள்.
Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க
Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க
Ctrl + U – அடிக்கோடிட
Ctrl + L– எச்.டி.எம்.எல். இயக்கத்தில் மட்டும் பிளாக் கொட்டேஷன் அமைக்க
Ctrl + Z – இறுதியாக அமைத்ததை நீக்க
Ctrl + Y – இறுதியாக நீக்கியதைப் பெற
Ctrl + Shift + A – ஹைப்பர் லிங்க் இடைச் செருக
Ctrl + Shift + P– போஸ்ட் முன் தோற்றம் பார்க்க
Ctrl + D – ட்ராப்ட் ஆக சேவ் செய்திட
Ctrl + P– போஸ்ட் பப்ளிஷ் செய்திட
Ctrl + S – ஆட்டோ சேவ் செய்திட
பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகள்:
Alt+1 – ஹோம் பேஜ் கிடைக்க
Alt+2 – உங்களுடைய புரபைல் கிடைக்க
Alt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்
Alt+4 – இன்பாக்ஸ் (மெசேஜ்)
Alt+5 – அறிவிப்புகள் (Notifications)
Alt+6 – மை அக்கவுண்ட்
Alt+7 – பிரைவசி செட் செய்வது
Alt+8 – பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்
Alt+9 – Terms and Conditions தரும் பக்கம் Alt+0 – உதவி மையம்
யு-ட்யூப் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்-
Spacebar – வீடியோ ஒன்றை இயக்க, தற்காலிகமாக நிறுத்த
இவ்வுலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு இந்த பேனா ஒரு உதாரணம்.இதன் பெயர் கலர் பிக்கர். இதனை வடிவமைத்தவர் கொரியாவைச் சேர்ந்த ஜின்சன் பார்க். இந்த பேனாவின் சிறப்பம்சம் கலர் சென்சார் தான். அதை இயக்கும் பட்டன், தேர்ந்தெடுத்த கலரை காட்டும் பகுதி, பேனா முனை, ஆர்.ஜி.பி மையை சேமிக்கும் இடம், ஆர்.ஜி.பி சென்சார் என வியக்கத்தக்க தொழில்நுட்ப பகுதிகள் உள்ளன.
விரும்பிய கலரைப் பெற அதற்கான பொருளின் முன், கலர் சென்சாரைக் காட்டி ஸ்கேன் பட்டனை அழுத்த வேண்டும். உதரணமாக ஆப்பிள் அருகே சென்சாரை காட்டியபடி ஸ்கேன் பட்டனை அழுத்தினால் விநாடியில் ஆப்பிளின் நிறம் ஸ்கேன் ஆகி விடும்.
கலர் டிஸ்பிளே பகுதியில் அந்த கலர் தெரியும். அதன் பிறகு பேனா முனையில் எழுதினாலோ அல்லது வரைந்தாலோ ஆப்பிள் கலரில் மை வெளிவரும். ஸ்கேன் செய்யப்பட்ட கலரை ஆர்.ஜி.பி கலர் சென்சார் கிரகித்து அதே நிறத்தில் மையை மிக்ஸ் செய்து விடும்.இதனால் விரும்பும் கலரை துல்லியமாக பெற முடியும். இனி ஓவியத்தில் தேவையான கலரைப் பெற வாட்டர் கலர்களை கலந்து கொண்டிருக்க தேவையில்லை.
பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய மென்பொருளின் மூலம் மக்கள் தங்களது ஸ்மார்ட் போனில் அவர்களது மரபணு தொகுப்பு முழு நிலையை கண்டறிய முடியும்.இந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிரெஞ்சு சட்டப்படி மரபணு நிலை குறித்த ஆய்வுக்கு கட்டுப்பாடு உள்ளது. மரபணு தொகுப்பு நிலையை கண்டறியும் மென்பொருளை மேற்கு பிரான்சின் போர்டாக்சின் 4 விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த மென்பொருள் மூலம் டி.என்.ஏ சோதனை தகவல்களை பெற முடியும்.
உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாய காரணிகளை கண்டறிய புதிய மென்பொருள் முறை உதவும். குறிப்பாக பாரம்பரிய குறைபாடு காரணமாக ஏற்படும் மார்பக புற்றுநோய் நிலையை முன்கூட்டியே அறியலாம். மரபணு தொகுப்பு நிலை குறித்த மென்பொருள் உருவாக்க திட்ட நிறுவனராக பாட்ரிக் மெரேல் உள்ளார்.
இவரும், இவரது சக நிபுணர்களும் கலிபோர்னியாவில் போர்ட்டபிள் ஜீனோ மிக்ஸ் நிறுவனத்தை துவக்கியுள்ளனர். பிரான்சில் மரபணு வரிசை நிலையை மருத்துவ காரணங்களுக்காக மட்டும் ஆய்வு செய்ய மருத்துவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இது குறித்து பிரான்ஸ் தேசிய முறை கவுன்சில் உறுப்பினர் பாட்ரிக் கவுட்ரே கூறுகையில்,"குறிப்பிட்ட தொழில்நுட்பம் மக்களிடம் தேவையற்ற எச்சரிக்கையை ஏற்படுத்தும்" என்றார்.மேலும் டி.என்.ஏ வில் பெறப்பட்ட விவரங்கள் எப்போதும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் என கருத முடியாது. மருத்துவ செயல்பாடுகளை இது கட்டுப்படுத்துவதாகவும் உள்ளது என அவர் எச்சரித்தார்.
புதிதாக பிறக்கும் பாலூட்டிகளின் இதயத்தை வெட்டினால் அது மீண்டும் வளரும் தன்மை கொண்டதாக உள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.சுண்டெலி பிறந்த ஒரு நாளில் அதன் இதயத்தின் பெரும் பகுதி வெட்டப்பட்டது. இந்த வெட்டப்பட்ட இதயப்பகுதி 3 வாரத்தில் மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது. மீன் மற்றும் நீர் நிலம் என இரண்டிலும் வாழும் உயிரினங்கள் தங்களது இதயத் திசுக்களை மீண்டும் வளர்க்கும் திறன் கொண்டவை ஆகும்.
தற்போதைய ஆய்வு மூலம் பாலூட்டிகளிலும் இதயத் திசு வளரும் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டிஷ் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில்,"இந்த புதிய செயல்பாடு மனித இதய நலன் விடயத்தில் வெகுவாக உதவும்" என்றனர்.
டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் தென்மேற்கு மருத்துவமைய ஆய்வாளர்கள் சுண்டெலியின் இதயத்தின் கீழ் அறைப்பகுதியில் இதயத் தசையின் 15 சதவீதத்தை அகற்றினர். சுண்டெலி பிறந்து ஒரு நாள் ஆன நிலையில் இது வெட்டி எடுக்கப்பட்டது. இந்த பகுதி 21 நாளில் மீண்டும் முழுவளர்ச்சி அடைந்தது.பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில் சுண்டெலிக்கு இதே சோதனை செய்த போது அது பலன் அளிக்கவில்லை. தங்களது சோதனை எதிர்காலத்தில் மிகுந்த பலனை அளிக்கும் என பேராசிரியர் எரிக் ஓல்சன் கூறினார்.
ஒளிக்கதிர்கள் விழியின் முன் பகுதியான கார்னியா எனப்படும் விழி வெண்படலம், விழி ஆடி ஆகியவை மூலம் விழித்திரையில் குவிக்கப்படுகிறது.
விழித்திரை ஒளி சக்தியை மின் சக்தியாக மாற்றி உணர்வலைகளை பார்வை நரம்பின் மூலம் மூளைக்கு செலுத்துகிறது. எனவே விழித்திரையின்றி பார்வை சாத்தியமாகாது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழித்திரையினை நீரிழிவு நோய் அதிகம் பாதிக்கிறது.
நீரிழிவு நோயால் கண்களில் கண்புரை, கண்நீர் அழுத்த நோய் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. விழித்திரை பல்வேறு ரத்த குழாய்களின் மூலம் ஊட்டச் சத்தை பெறுகிறது. நீரிழிவு நோயால் ரத்த நாளங்கள் பலவீனமடைகின்றன. பலவீனமடைந்த ரத்த நாளங்களில் ரத்த கசிவு ஏற்பட்டு விழித்திரையும், அதன் மூலம் பார்வையும் வெகுவாக பாதிப்படைகிறது.
விழித்திரையின் குழிவான பகுதி மையப்பகுதி மேக்குலா எனப்படும். இந்த பகுதியில் ஏற்படும் ரத்த கசிவு முழுமையான பார்வை இழப்பை கூட ஏற்படுத்தலாம். விழித்திரையில் ஏற்படும் ரத்த கசிவினால் ஊட்டச்சத்துக்கள் விழித்திரையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையாது.
எனவே விழித்திரையானது தானே சில புதிய ரத்த நாளங்களை உருவாக்கும். இவை மிகவும் பலவீனமானதாக இருக்கும். அதோடு அதிகப்படியான ரத்த கசிவுக்கும் வழிவகுக்கும். இந்நிலை ப்ரோலிபரேட்டிவ் டயபடிக் ரெட்டினோபதி எனப்படும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களை விட பார்வையிழப்பு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 25 மடங்கு அதிகம் உள்ளது.
அறிகுறிகள்: ரத்த நாளங்களில் ரத்த கசிவு ஏற்பட தொடங்கும் போது கண்முன்னே கரும்புள்ளிகள் மிதப்பது போன்று தோன்றும். மேக்குலா பாதிப்படையும் போது பார்வைத் திறனில் மாற்றங்கள் தெரியும். எனவே நீரிழிவு நோயாளிகள் கண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது இன்றியமையாதது.
பாதிப்பை கண்டறியும் முறைகள்: பார்வை திறன் பரிசோதனை மற்றும் முழுமையான விழித்திரை பரிசோதனை(ப்ளோரசின் ஆஞ்சியோகிராபி) என்ற இருவகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று லேசர் சிகிச்சை, மற்றொன்று அறுவை சிகிச்சை முறை. இந்த இரு முறைகளும் பார்வையிழப்பை தடுக்கின்றன.
"உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மேற்கத்திய நாடுகளில், பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இலங்கையில் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது' என, ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த முடிவு கவலையளிப்பதாக உள்ளது.
காரணம், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, ரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும்.
நினைவுத் திறனும் குறைந்து, சீரான சிந்தனை தடை படும். இருபது வயதை அடைந்து விட்டாலே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால், ஆண்டுதோறும், ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் என்பது, ரத்த நாளத்தின் மீது, இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம் பாயும் வேகத்தை குறிக்கும்.
இது, இரண்டு வகையிலான அளவில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒன்று, இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (சிஸ்டோலிக்) மற்றொன்று, இதயத்தின் கீழறைகள் விரியும் போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (டயஸ்டோலிக்.) அதாவது, 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு. 139/89 என்பது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முந்தைய நிலை; 140/90 என்ற அளவோ, அதற்கு மேலோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்ட நிலையை குறிக்கிறது. வயது ஏற ஏற, ரத்தக் குழாய்கள் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை இழந்து தடித்து விடுகின்றன.
இந்த பாதிப்பு ஏற்படும் போது, சிஸ்டோலிக் அழுத்தம் மட்டும் அதிகரித்து காணப்படும். 60 வயதை தாண்டிய 70 சதவீதத்தினருக்கு, இது போன்ற ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
வயது அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு, பாரம்பரியமாக ரத்த அழுத்தம் ஏற்படும் தன்மை, சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய், சுரப்பி நோய்கள், புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கார்ட்டிகோஸ்டிராய்டு, கருத்தடை மாத்திரைகள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள் சாப்பிடுவது ஆகியவை, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். பிறப்பிலேயே ரத்தக் குழாய்கள் சுருங்கி காணப்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
எந்த காரணமும் இன்றி, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதற்கு, "எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' என்று பெயர். இதனால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, அவசியம் மருந்து உட்கொள்ள வேண்டும். "சிஸ்டோலிக்' வகை உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குக் கூட மருந்து உட்கொள்ளுதல் அவசியம்.
உணவில் சேர்க்கும் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். சிலருக்கு, சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில், 20 சதவீதத்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீரான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும், 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு, நாள் ஒன்றுக்கு, மொத்தமாக தேவைப்படும் உப்பு, 4 டீஸ்பூன் தான். உப்பு அளவை கணக்கிடும் போது, உணவில் இயற்கையாகவே உள்ள உப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா உணவிலும் - குடிநீரில் கூட, இயற்கை உப்பு உள்ளது.
எல்லா வகையான உணவு தயாரிப்பிலும், ஏதாவது ஒரு வகையான உப்பு சேர்க்கப்படுகிறது. மோனோசோடியம் க்ளூடாமேட், சோடியம் நைட்ரைட், சோடியம் சாச்சரின், சோடியம் பைகார்பொனேட் (பேக்கிங் சோடா), சோடியம் பென்சொயேட் ஆகிய ஏதாவது ஒரு உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ், ஊறுகாய் வகைகளில் சேர்க்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட ஆட்டிறைச்சி, இறைச்சியை உள்ளடக்கி செய்யப்படும் பலகாரங்கள், பர்கர், பிட்சா ஆகியவற்றில், அதிகளவு உப்பு சேர்க்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தைச் சீராக்க, நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, இவ்வகையான மருந்துகளையும் சிறியளவில் உட்கொண்டு வந்தால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இதற்கு சுய முயற்சி தேவை. பல மருத்துவர்களும், நோயாளிகளும், மாத்திரையின் அளவைக் கூட்டிக் கொள்வதோடு சிகிச்சை முடிந்ததாக கருதுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்... வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது, மாத்திரை உட்கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகளைக் கொண்டது அல்ல! உங்கள் உடல் எடை, சீராக இருக்க வேண்டியது அவசியம்.
உடல் எடை அதிகரிக்கும் போது, ரத்தக் குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே, பி.எம்.ஐ., அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து, தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும். எனவே, இதயம் சீக்கிரம் செயலிழக்கும். நடைபயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
6 வயது முதலே இதை துவங்கலாம். முதலில் 20 நிமிட ஓட்டமாக துவங்கி, 18 வயது நிரம்பியவுடன், ஒரு மணி நேர ஓட்டமாக அதிகரித்துக் கொள்ளலாம். புகை பிடிப்பது, அருகில் இருப்பவர் விடும் புகையை சுவாசிப்பது, மூக்குப்பொடி போடுவது, புகையிலை மெல்வது ஆகியவை, ரத்தக் குழாய்களை பாதிக்கும் வகையிலான ரசாயனங்களை வெளியிடுகின்றன.
இவை ரத்தக் குழாய்களை சுருக்கி விடுவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உணவில் தினமும் 5 கிராமோ அல்லது அதற்கு குறைவான அளவோ, உப்பு சேர்ப்பது நல்லது. உடலில் நீர் சத்தை தக்க வைக்க இது பயன்படும். இந்த அளவை மீறினால், அதே நீரே, உடலில் தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.
பழங்கள், காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் சேரும் உப்புச் சத்தை அதிகரிக்க விடாமல் செய்கிறது. எனவே, தினமும் 4 முதல் 6 முறை பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். உணவு மூலமாக கிடைக்கும் அல்லது சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி சத்து, சிறுநீரகத்தில் நொதிகளைச் சீராகச் செயல்பட வைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.
எனினும், அதிகளவிலோ அல்லது தாறுமாறாகவோ வெயிலில் அலைய நேர்ந்தால், ரத்த அழுத்தமும் சீரற்றதாகி விடும். மது அருந்துவது, இதயத்தை பாதிக்கிறது. ஒரே நேரத்தில் 2 அல்லது 3 கோப்பை மது அருந்தினால் கூட, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றும். அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, இதயம் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகி விடும். தொடர்ந்து அதிக பதட்டத்துடன் இருந்தாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
தியானம், யோகா ஆகியவற்றின் மூலம் பதட்டத்தை தவிர்க்கலாம். பதட்டத்தை தவிர்க்க, சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். நீரிழிவு நோய், அதிக கொழுப்புச் சத்து சேர்வது, சிறுநீரக நோய், தூக்கமின்மை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
அவை, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணிகள். இப்போதெல்லாம், 6 - 8 வயது குழந்தைகள் கூட, அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்கின்றனர். அதை ஈடு கட்டும் வகையிலான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. எனவே, அவர்களின் வாழ்க்கையை முறையை, இளம் வயதிலேயே மாற்றினால், இப்பிரச்னையை தவிர்க்கலாம்.
ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு முக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.
தேவையான உடற்பயிற்சி, அதிக அளவில் மது அருந்தாமை, அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை மிகுதியாகச் சேர்த்துக் கொள்வது மற்றும் புகைப்பழக்கம் இல்லாமை ஆகிய நான்கினையும் பின்பற்றினால், ஆயுட்காலத்தில் 14 ஆண்டுகளைக் கூட்டலாம் என்று இங்கிலாந்தின் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆகியவை இணைந்து மேற்கொண்ட மருத்துவ ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
45 வயது முதல் 79 வயது வரையிலான 20 ஆயிரம் பேர்களைக் கொண்டு, இந்த ஆய்வு 1993-ல் இருந்து 2006 வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தில் பலதரப்பட்ட மக்களையும் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த மருத்துவ ஆய்வில் நம்பகத்தன்மை மிகுந்து காணப்படுவதாக மருத்துவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்
கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுசர்களுக் கிடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
எந்த பிரவுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களிடையே பிரபலமாகும் என்று கணக்கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங்களில், ஒவ்வொரு பிரவுசரும் தங்களை எந்த பயன்பாட்டில் நிலை நிறுத்த, புதிய வசதிகளைத் தந்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்று பார்க்கலாம்.
கூகுள் குரோம் பிரவுசரின் வேகம், கூடுதல் புதிய வசதிகள், புதிய பதிப்புகளை விரைவில் கொண்டு வருதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், இப்போதைய இணைய வரையறைகளை ஒட்டி இயங்குவதற்குத் தன்னை முழுமையாகத் தயார் செய்துள்ளது.
வேகத்தைக் கூட்டுவதிலும் ஆர்வம் காட்டுவதுடன், யூசர் இன்டர்பேஸ் விஷயத்திலும் அக்கறை காட்டுகிறது. மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரில், யூசர் இன்டர்பேஸ் முழுமையாக மாற்றப்படுகிறது. புதிய பதிப்புகளை உடனுக்குடன் கொண்டு வருகிறது.
ஆப்பரா தொகுப்பு புதிய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் அடிப்படையில் வேகமாக இயங்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது. சபாரி தொகுப்பில் புதிய வசதிகளும், எக்ஸ்டன்ஷன்களும் தரப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் அடிப்படையில் மக்கள் மனதில் வெற்றி பெற இருப்பதாக உள்ள பிரவுசர் எது என்று பார்ப்போமா!
1.கூகுள் குரோம் 47.27% (1,032 வாக்குகள்)
2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.97% (174 வாக்குகள்)
3. மொஸில்லா பயர்பாக்ஸ் 36.92% (806)
4. ஆப்பரா 6.6% (144)
5.சபாரி 0.92% (20)
6. மற்றவை 0.32% (7)
இந்த அடிப்படையை மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் பிரவுசர் கணிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரவுசர்கள் மாற்றம் குறித்த செய்திகள், சோதனைத் தொகுப்புகளின் புதிய வசதிகள் எப்படி மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளன என்ற கணக்கினைக் காட்டுவதாகவே எண்ண வேண்டும். இதுவும் வாரா வாரம் மாறலாம்.
கூகுள் நிறுவனச் சரித்திரத்தில், இந்த 2011 ஆம் ஆண்டில், மிக அதிகமான எண்ணிக்கையில் திறமையானவர்களை வேலைக்கு எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, இந் நிறுவனத்தின், பொறியியல் மற்றும் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டிஸ், தன்னுடைய வலைமனைப் பக்கத்தில் (http://googleblog.blogspot.com/2011/01/helpwantedgooglehiringin2011.html) அறிவித்துள்ளார்.
இந்த ஆள் தேடல், பன்னாட்டளவில் நடைபெற இருக்கிறது. பேஸ்புக், ட்விட்டர், ஸிங்கா மற்றும் குரூப் ஆன் போன்ற நிறுவனங்கள், கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக, தங்களைத் தயார் செய்து கொண்டிருப் பதால், அவற்றிற்குச் சரியான பதிலடி தர, கூகுள் தன்னைத் தயார் செய்திடும் முயற்சியே, இந்த புதிய ஆட்களை அதிக எண்ணிக்கையில் எடுக்கும் முடிவாகும்.
சென்ற 2010 ஆம் ஆண்டு வரை, கூகுள் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் எண்ணிக்கை 24,000 ஆக இருந்தது.
கூலிப்படையை அழைத்து வந்து சொந்த மக்களை தாக்கிய கடாபி! அமெரிக்கப் பத்திரிகை அதிர்ச்சித் தகவல்.
லிபியாவில் மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க, அந்நாட்டு தலைவர் கடாபி கூலிப்படையினரை பயன்படுத்தினார்.
அந்த கூலிப்படையினர் யார் என்பது பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியை அடக்க, கடாபி வித்தியாசமான ஒரு வழியைக் கையாண்டார். அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து நூற்றுக்கணக்கான ஆப்ரிக்கர்களை வரவழைத்து, அவர்களின் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை கொடுத்து, தன்னை எதிர்க்கும் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளும்படி கூறினார். இதற்கு லிபியா ராணுவமும் உதவியது. இந்த கூலிப்படையினரில் சிலர், அல்பைடா நகரில் மக்களுடன் மோதலில் ஈடுபட்ட போது, அவர்களில் 200 பேரை மக்கள் சிறைபிடித்தனர்.
சிறை பிடிக்கப்பட்ட அவர்கள், அல்பைடாவின் ஷெகட் பகுதியில் பள்ளி ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பித்து விடாமல் இருக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "டைம்' நாளிதழ், இவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
மொத்தம் 325 பேர், அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து திரட்டப்பட்டு, லிபியாவின் தென் மேற்கில் உள்ள சபாநகருக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு, கடாபி கட்சியின் இளைஞர் அணி பிரிவு தலைவர் அலி உஸ்மான் என்பவர், டிரிபோலியில் நடக்க உள்ள கடாபி ஆதரவு பேரணிக்கு அழைத்து செல்வதாக அவர்களிடம் கூறியுள்ளார். பின் அவர்கள் அனைவரும் ஒரு விமானம் மூலம் டிரிபோலிக்கு புறப்பட்டனர்.
விமானம் சென்ற இடமோ, லபார்க் என்ற நகரம். இது அல்பைடாவுக்கும், டெர்ணாவுக்கும் இடையில் உள்ளது. கடந்த 16ம் தேதி, அல்பைடாவில் நடந்த கடாபி ஆதரவு போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். சிறிது நேரத்தில் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அப்போது ராணுவம், ஆப்ரிக்கர்களின் கைகளில் துப்பாக்கிகளை கொடுத்து, "நீங்கள் அனைவரும் கூலிப்படையினர் என்று எதிர்ப்பாளர்கள் நினைத்து உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளனர். தற்காப்புக்காக அவர்களை தாக்கி பிழைத்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டது.
இந்தச் சண்டை நடந்து இரு நாட்கள் கழித்து 18ம் தேதி ராணுவப் பிரிவு, பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டது. அப்போது, கூலிப்படையினரிடம் லிபியா ராணுவத்தினர், "உயிர் பிழைக்க வேண்டும் என்றால் இங்கிருந்து சென்றுவிட வேண்டும்.
இல்லையெனில், கொல்லப்படுவீர்கள்' என்று பீதியூட்டியது. ராணுவம் சொன்னபடி சிலர் தப்பித்தனர். 200 பேர் மாட்டிக் கொண்டனர். முதலில் பிடிப்பட்டவர்களில் 15 பேர் அல்பைடாவில், கோர்ட் வாசலில் பொதுமக்களால் தூக்கில் இடப்பட்டதாக, கடாபி அமைச்சரவையில் இருந்து வெளியேறிய முன்னாள் நீதித்துறை அமைச்சர் முகமது அப்த் அல் ஜலீல் தெரிவித்தார்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை மூலம், சாட் மற்றும் நைஜர் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் சிலர் லிபியாவில் பிறந்து, சாட் மற்றும் நைஜரில் குடியேறியுள்ளனர்.பலர் அந்த நாடுகளை சேர்ந்தவர்கள். சிலர் கடாபி மகன் கமீசின் ராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள்.இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
என்னை பின்பற்றாவிட்டால் முழு லிபியாவையும் எரித்துவிடுவேன்: கடாபி
போராட்டங்களை உடனே கைவிடாவிட்டால் லிபியா முழுவதையும் எரித்து அழித்து விடுவதாக லிபிய ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.தொலைக்காட்சியொன்றில் திடீரென தோன்றிய கடாபி எந்தவொரு வெளிநாட்டு சக்தியாலும் தன்னை பதவியிலிருந்து விலக வைக்க முடியாதெனவும், எதிர்ப்பவர்கள் அனைவரையும் அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
தன்னோடு இணைந்து ஆர்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர ஒத்துழைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதேவேளை லி�பியா�வி�ல் இடம்பெற்றும் வரு�ம் �ஆர்ப்பாட்டங்களை வ�ன்முறையா�ல் ஒடுக்க முயல்வதை அந்நாட்டு அரசு கை�விட வே��ண்டு�ம் என கடாபியை ஐ�க்�கிய நாடுக�ள் சபை வ�லியுறு�த்�தியு�ள்ளது. �
இதுபோ�ன்று சொ�ந்த ம�க்களு�க்கு எ�திரான வன்முறையை �லி�பியா அரசு கை�விட வே�ண்டு��ம் எ�ன்று அவ�ர் வ�லியுறு�த்�தியு�ள்ளா�ர். மேலும் அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், உறுதியான நடவடிக்கைகள் அவசியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண் விமானியைக் கண்டு அலறிய பயணிகள்!
பெண் விமானியை கண்டு பயணிகள் அலறியதால் புதுடில்லி விமான நிலையம் பரபரப்படைந்தது. இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 6இ 179 என்ற விமானம் புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரானது.
காலை 8.10 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமான நிலையம் கடும் பனிப்பொழிவாக காணப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்படுவது தாமதமானது.ஒருவழியாக பனி மூட்டம் குறைய துவங்கிய உடன் சுமார் 9.40 மணியளவில் மீண்டும் விமானம் புறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் தங்களது இருக்கையில்வந்தமர்ந்தனர்.
பின்னர் விமானத்தை இயக்குபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.அதில் பெண் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தியடைந்த பயணிகள் தங்களின் பயணம் குறித்து முணுமுணுக்கத் துவங்கினர்.
இதில் ஒரு பயணி தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து சென்று பெண் விமானி விமானத்தை இயக்க கூடாது. பெண் ஒருவர் விமானம் ஓட்டினால் பயணம் முழுமையாக இருக்காது என்றும் இவரை நம்பி நாங்கள் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கூறினார். இதனையடுத்து பயணிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி செய்தனர்.
இருப்பினும் பயணிகள் சமாதானம் அடையாததால் செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மாற்று ஏற்பாடாக ஆண் விமான ஒட்டி மூலம் விமானம் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 40 நிமடங்கள் விமானநிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.
தொடர்ந்து 3 நாட்கள் இன்டர்நெட்டில் விளையாடியவர் பரிதாப மரணம்!
சீனாவில் இண்டர்நெட் மீது பைத்தியமாக இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிட்டத் தட்ட 3 கோடி சீனர்கள் இந்த இண்டர்நெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர். 30 வயதான சீனர் ஒருவர் தொடர்ந்து 3 நாட்களாக இண்டர்நெட் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார். அவர் தூங்காமலும் சரியாக உண்ணாமலும், அந்த விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார்.
கடைசியில் அவர் மயங்கி விழுந்தார். அவர் கோமாவில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிறகு அவர் சுய நினைவு திரும்பாமலேயே இறந்து போனார். அவர் கடந்த ஒரு மாத காலத்தில் இண்டர்நெட் விளையாட்டில் ரூ.75 ஆயிரம் செலவிட்டார். பொலிஸார் அவர் பயன்படுத்திய கம்பியூட்டரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பெருமளவு வசிக்கின்றனர்.
இவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. 15 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பெல்லே என்ற கிராமத்துக்குள் ஒரு கும்பல் புகுந்து அங்குள்ள மக்களை சரமாரியாக வெட்டியது.
இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் மீண்டும் பெரிய அளவில் கலவரம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கு ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
கடாபியின் அடக்குமுறைக்கு விரைவில் பதிலடி! ஒபாமா.
லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள அதிபர் கடாபியின் அரசுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபியின் அடக்கு முறைக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும், ஒருமித்த வகையில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக, அதிபர் பதவியில் இருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். இதனால், லிபியா மக்கள் மீது அதிபர் கடாபியின் நிர்வாகம், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ராணுவத்தினரும், கடாபியின் ஆதரவாளர்களும் போராட்டக்காரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
விமானங்கள் மூலமும் குண்டு வீசப்படுகின்றன. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சொந்த நாட்டு மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி, ரத்த ஆறு ஓடச் செய்யும் அதிபர் கடாபிக்கும், அவரது நிர்வாகத்திற்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடாபிக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
லிபியாவில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தண்டிக்கும் நடவடிக்கையில் அதிபர் கடாபியின் அரசு இறங்கியுள்ளது. இந்தச் செயல் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. நாகரீகமற்ற செயலும் கூட. லிபியா அரசின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு,தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என, உலக நாடுகள் அனைத்தும் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும்.
லிபியா மக்களின் உரிமைகளுக்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். லிபியாபில் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும்படி எனது நிர்வாகத்தையும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். மற்ற கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைந்து நல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற உலக நாடுகளைப் போல, லிபியா அரசும் வன்முறைகளில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் மனிதாபிமான ரீதியான உதவிகளை வழங்க வேண்டும். மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்.
இதுவரை கடமைகளைச் செய்யத் தவறியமைக்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இதற்கிடையில், "போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும்' என்ற தனது வேண்டுகோளை லிபியா அதிபர் கடாபி நிராகரித்ததற்கு ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லிபியா அதிபருடன் நான் நீண்ட நேரம், விரிவான விவாதம் நடத்தினேன். மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இருந்தும், எனது வேண்டுகோளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை. அவர் செய்யும் செயல்கள் எல்லாம் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. லிபியா நிலவரம் மிக மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, நிலைமையை நாம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும், என்றார்.
கடாபி மகள் பதவி பறிப்பு:
லிபியா அதிபர் கடாபியின் மகளுக்கு வழங்கப்பட்டிருந்த நல்லெண்ண தூதர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா., தகவல் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி கூறியதாவது: ஐ.நா., மேம்பாட்டுத் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், லிபியா அதிபர் கடாபியின் மகள் ஆயிஷா அல்-கடாபி, கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி லிபியாவிற்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.
எய்ட்ஸ் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல், வறுமையை ஒழிப்பதற்கான லட்சியங்களை நிறைவேற்றுதல் போன்றவை தொடர்பான ஐ.நா., வின் பணிகளில் அதிக முக்கியத்துவம் காட்டுவதற்காக ஆயிஷா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
ஆனால், லிபியாவில் தற்போது நடந்து வரும் வன்முறைகள் மற்றும் அடக்கு முறைகள் காரணமாக ஆயிஷாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது, என்றார். இவ்வாறு மார்ட்டின் கூறினார். மீட்புப்பணியில் இந்தியக்கப்பல்: வன்முறையால் பாதித்த லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் தற்போது, பெங்காசி துறைமுகத்தை எட்டியுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: லிபியாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அங்கிருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள், பாதுகாப்பாகவும், எந்த விதமான செலவும் இல்லாமல் வெளியேற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியர்களை அழைத்து வருவதற்காக லிபியாவின் பெங்காசி துறைமுகத்திற்கு கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல் கப்பல் துறைமுகத்தை நெருங்கியுள்ளது. இந்தக் கப்பலில் 1,120 பேருக்கு மேல் பயணிக்க முடியும். இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.
முடக்கப்பட்ட கடாபியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!
சுவிட்சர்லாந்து நாட்டில் நேற்று கூடிய ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு, லிபியா தலைவர் கடாபிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்விவகாரத்தில் உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
கடாபியின் சொத்துக்களை சுவிஸ் வங்கி முடக்கியிருக்கிறது. லிபியாவில் தற்போது, தலைநகர் டிரிபோலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமே, கடாபியின் ராணுவம் வசம் உள்ளன. பெங்காசி உள்ளிட்ட முக்கிய நகரங்களை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றி விட்டனர். அங்கிருந்த ராணுவப் பிரிவுகளும் மக்களுடன் சேர்ந்து கொண்டன.இந்நிலையில் நேற்று, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு கூடி, லிபியா நிலவரம் குறித்து ஆலோசித்தது.
47 உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பில், லிபியாவும் உள்ளது.ஆலோசனைக்குப் பின், மனித உரிமைகள் அமைப்பின் கமிஷனர் நவி பிள்ளை வெளியிட்ட அறிக்கையில்,"லிபியாவில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலைமை இப்படியே நீடித்தால் உலக நாடுகள் ஒன்றிணைந்து, அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்' என்று எச்சரித்தார்."லிபியாவில் கலவரத்தால், உணவு வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இறக்குமதிக்கு வழியில்லை; இதனால் நாட்டின் உணவு வினியோகம் முற்றிலும் செயலிழந்து விடும்' என்று, ஐ.நா., உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று "நேட்டோ' அமைப்பும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலும் லிபியா நிலவரம் குறித்து அவசர ஆலோசனை நடத்தின.
பாதுகாப்பு கவுன்சிலில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்து, லிபியா மீது ராணுவ நடவடிக்கை, பொருளாதாரத் தடைகள், சர்வதேச கோர்ட்டில் லிபிய தலைவர்கள் மீதான விசாரணை இவற்றை வலியுறுத்தி, ஒரு தீர்மானம் கொண்டு வந்தன.
ஆனால், இத்தீர்மானம் அடுத்த வாரம் தான் ஓட்டெடுப்புக்கு விடப்பட உள்ளது.கடாபி மற்றும் அவரது குடும்பத்தினர் லிபியாவை விட்டு வெளியேற தடை விதிக்கும்படி, ஜெர்மனி கேட்டுக் கொண்டுள்ளது. முக்கிய நகரங்களான மிஸ்ரட்டா மற்றும் ஜுவரா இரண்டும், தற்போது எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்டன. அஜ்தாபியா நகர ராணுவம், எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டது.
சொத்து முடக்கம்: கடாபியின் சொத்துக்களை முடக்கியுள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.ஆனால், கடாபிக்கு அந்நாட்டில் சொத்துக்களே இல்லை என்று மறுத்துள்ள லிபியா அரசு, சுவிட்சர்லாந்து மீது வழக்கு தொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளது. பிரிட்டன் அரசும், கடாபியின் லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது.
ஒட்டு மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் லிபியாவின் பங்கு 2 சதவீதம். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் கச்சா எண்ணெய், "சுவீட் குரூட்' என்பதாகும். அதாவது கந்தகக்கலப்பு குறைவு. அதனால், சுத்திகரிப்பில் அதிக பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் என்பதால் விலையும் சற்று கூடுதலாகும். தற்போது, லிபியாவின் உற்பத்தி பாதிப்பை சவுதி அரேபியா பூர்த்தி செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் உற்பத்தியாகும் சதுரவடிவ தார்ப்பூசணிக்காய்கள்!
தர்ப்பூசணிகள் வழமையில் வட்ட வடிவிலேயே காணப்படும். ஆனால் ஜப்பான் நாட்டில் சதுர வடிவிலேயே தர்ப்பூசணிகளினை
உற்பத்திசெய்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்றால், சதுர வடிவிலான கண்ணாடி பெட்டிகளில் தர்ப்பூசணிகளினை வளர்ப்பதன் மூலமாகும். சதுர வடிவிலான தர்ப்பூசணிகளினை குளிர்சாதனப் பெட்டிகளில் இலகுவாக வைக்கக்கூடியதாக இருப்பதுடன், அவற்றுள் அதிக பொருட்களினையும் உள்ளடக்க முடியும். ஜப்பானில் சதுர வடிவ தர்ப்பூசணிகளின் விலையானது($82), வழமையான வட்ட வடிவிலான தர்ப்பூசணிகளின் விலையினை($15-20 ) விடவும் அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மூளையில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்ப செயற்படும் கை! அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.
மூளையில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்ப செயற்படக்கூடிய பலம் மிக்க செயற்கைக் கரங்கள் அமெரிக்காவில் நடக்கும் செயற்கை அவயவங்கள் சம்பந்தமான ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கரங்கள் அவற்றைச் செயற்படுத்துபவரின் எண்ணங்களுக்கு ஏற்ப செயற்படும். இவற்றுக்கு ஒரு வகையான சரும உணர்வும் உள்ளது.2002ம் ஆண்டில் அமெரிக்க டாக்டர் டொட் குயிக்கன் இந்த செயற்கைக் கரங்களை உருவாக்கினார். அன்று முதல் இதுவரை சுமார் 50 பேருக்கு இவை வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன.
இவர்களுள் அநேகமானவர்கள் படைவீரர்கள். ரோபோக்களில் பயன்படுத்தப்படும் மூளை சைகைகளை நரம்புகள் மூலம் பெற்று இவை செயற்படுகின்றன.விஞ்ஞான முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் வருடாந்த மாநாட்டில் ஈராக்கில் தனது கையை இழந்த ஒரு படை வீரர் இந்த செயற்கைக் கரத்தின் பண்புகளை விளக்கவுள்ளார்.
ஒரு நோயாளிக்கு இரு இதயங்கள்! : மருத்துவ உலகின் புதிய சாதனை!
மருத்துவ வரலாற்றில் மிக அரிதான சத்திரசிகிச்சை ஒன்றை அமெரிக்க வைத்தியர்கள் அண்மையில் வெற்றிகரமாக முடித்தனர்.நோயாளி ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு இதயத்தினைப் பொருத்தியே அவர்கள் இச்சாதனையைப் புரிந்தனர்.
சென் டியாகோ தோர்டன் வைத்தியசாலையிலேயே இச்சத்திரசிகிச்சை இடம்பெற்றது.டைசன் ஸ்மித் என்ற 36 வயதான நபருக்குச் சாதாரண இதயத்தின் அருகில் வலது பக்கத்தில் இன்னொரு இதயம் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.
இதயத்தின் இடது இதயவறை, புது இதயத்துடன் சத்திரசிகிச்சையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒக்சிஜன் ஏற்றம் பெற்ற குருதி, பழைய இதயத்திலிருந்து புதிய இதயத்திற்குப் பாய்ச்சப்படும்.இதன்பிறகு புதிய இடது இதயக்கீழறையிலிருந்து குருதியானது பெருநாடியின் மூலம் உடலின் பாகங்களுக்கும் பாய்ச்சப்படும். ஓர் இதயம் செய்யும் வேலையை இரு இதயங்களும் பகிர்ந்துகொள்ளும்.
குறித்த நபரின் இதயம் பலவீனமடைந்திருந்தமையினாலேயே அவருக்கு இன்னுமொரு இதயம் பொருந்தப்பட்டது. இச்சத்திர சிகிச்சையானது ‘ஹெடரோடொபிக் ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேசன்’ என அழைக்கப்படுகின்றது. மிகவும் அரியதொரு சத்திரசிகிச்சையாக இது கருதப்படுகின்றது.
இது நோயாளின் வாழ்நாளை 10 வருடங்களால் அதிகரிக்கும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இரு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள்.
வானில் வண்ணங்கள் தோன்றினால் பூமிக்கு ஆபத்தா? தப்பிக்க வழி என்ன?
சூரியவெப்பக் காற்றின் மூலம் வானில் தோன்றும் பல்வேறு வண்ணங்களால், பூமிக்கு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தப்பிக்க வழி என்ன என விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
சூரியனின் வெப்ப அளவு 1750 ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகளால் அளவிடப்பட்டு வரைபடமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருப்பதாக, கணக்கெடுப்புகள் உறுதி செய்துள்ளன. தற்போது 23வது முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சூரியன் மிக அமைதியாக இருப்பதாக படங்கள் தெரிவிக்கின்றன. 11 ஆண்டில் முதல் ஐந்தாண்டுகள் மிதமாகவும், ஆறாம் ஆண்டிலிருந்து வெப்பத்தால் ஏற்படும் சூரியகாற்றின் அளவு உச்சமாகவும் இருக்க வேண்டும். கடைசியாக 2001 ல் சூரியகாற்று அதிக உச்சத்தில் இருந்தது. தற்போது நடக்கும் 23வது சுற்றில் 2005 முதல் 2009ம் ஆண்டு வரை சூரியன் அமைதியாக இருக்கிறது. எனவே 24வது சுற்றில் சூரியன் மூலம் பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமானது பேராற்றலாக சூரியனிலிருந்து பொங்கி பரவும். இவை சிலநேரங்களில் 50ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு “பிளாஸ்மா’ எனும் எரிமலை குழம்பு போல பரவும். ஆனால், சூரியனிலிருந்து விடுபட முடியாமல் அதைச் சுற்றி வட்ட வளையமாக மாறி விடும். இதிலிருந்து வெளியேறும் வெப்பமான ஜூவாலை நிரம்பிய காற்று (சேலார் வின்ட்) பூமியை தாக்க முற்படும். பூமியின் அமைப்பே இயற்கையாக நம்மை பாதுகாக்கிறது. பூமியில் உள்ள மின்காந்த கோளம் (மாக்னடோ ஸ்பியர்) சூரியகாற்று பூமிக்குள் வராமல் தடுக்கிறது. கடந்த 150 ஆண்டுகளில் பூமியின் வலிமை 10 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் சூரியகாற்று பூமிக்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு ஊடுருவினால், அவை மின்சாரத்தை நேரடியாக பாய்ச்சக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை. அவ்வாறு ஏற்படுவதற்கு முன், வானம் மிக வெளிச்சமாகவும், இரவில், அதிகாலையில் பச்சை, நீல வண்ணங்களும் தெளிவாக தெரியும்.
கடந்த 1989ல் கனடாவின் “கியூபெக்’ பகுதியில் இவ்வகை மின்சாரம் (ஜீரோ கரண்ட்) பாய்ந்து “டிரான்ஸ்பார்மர்’ செயலிழந்தது. அப்பகுதியில் பச்சை, நீல வண்ணங்கள் (ஆரோமா) காணப்பட்ட பிறகே, இச்சம்பவம் நிகழ்ந்தது. தற்போது புவியின் மின்காந்த கோளத்தின் பலவீனமடைந்த பகுதி வழியாக சூரியகாற்று ஊடுருவியுள்ளது. வரும் 2012, டிச., 21ம் தேதி, 24வது முறையாக 11ஆண்டு சுழற்சி ஆரம்பிக்கிறது. கடந்த செப்., 2010ல் எடுக்கப்பட்ட படங்களில், சூரியனின் பேராற்றல் அதிகமாகி உள்ளதாக தெரிகிறது. எனவே பூமிக்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வானில் வெளிச்சம் அதிகமாகி, வண்ணங்கள் தோன்றினால் சூரிய சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ளது. சூரியனின் வெப்பக்காற்று நேரடியாக பூமியை தாக்கும் போது முதலில் “டிரான்ஸ்பார்மர்கள்’ தான் பாதிக்கப்படும். இவற்றை சரிசெய்ய பல மாதங்களாகலாம். இதனால் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். இரவில் இருளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முக்கியமாக மனிதநேயம் குறைந்து விடுவதால், சண்டை, சச்சரவுகளாலும் அழிவு ஏற்படும். கடலில் மீண்டும் சுனாமி உருவாகும். பூமியின் தட்டடுக்குகளில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் பூகம்பம் ஏற்படும். இவையெல்லாம் உறுதியாக வரும் என்று கூறமுடியவில்லை.
அழிவை தடுப்பதற்கு தற்போதைய ஒரே வழி, வானில் வண்ணம் தோன்றினால், அனைத்து டிரான்ஸ்பார்மர்கள், சாட்டிலைட் இணைப்புகளை நிறுத்திவிட வேண்டும். வெப்பக்காற்றின் தாக்கம் குறையும் வரை இவ்வாறு செய்தால் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். இதுகுறித்து காந்திகிராம் கிராமிய பல்கலை இயற்பியல் பேராசிரியர் சிவராமன் கருத்தரங்கில் கூறுகையில்,”" விஞ்ஞான ஆய்வுகளின் கூற்றும், புராணத்தில் கூறப்படும் கதைக்கூற்றும் ஒரே மாதிரியாக உள்ளது. இது அப்படியே நடக்கும் என்று கூறமுடியாது. சூரியனின் வெப்பக்கதிர்களை தொடர்ந்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், சூரியகாற்றின் பேராற்றலை கண்டுபிடித்துள்ளனர். 1989லிலேயே இப்பிரச்னை தோன்றியதால், அதை சமாளிக்கும் வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இதுகுறித்து பயப்படவும் வேண்டாம்,” என்றார்.