புலிகளை ஒழித்துவிட்டோம்! இனித் தீர்வு தேவையில்லை! கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவிப்பு.
இலங்கையில் விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்துவிட்டதால் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என்று பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இவ்வாறு பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
ஐ.தே.கட்சியின் தலைமைத்துவத்திற்கு வெற்றிடம் இல்லை – மங்கள சமரவீர.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எவ்விதமான தேவைகளும் இல்லை. தலைவருக்கான வெற்றிடமும் இல்லை. என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் மங்கள சமரவீர கட்சியின் மீளமைப்பு தரப்பினர் மீது கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. தலைமைப் பதவியை 3 மாதங்கள் கரு ஜெயசூரியவிடம் ஒப்படைக்குமாறு சஜித் தரப்பு கோரிக்கை.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அக்கட்சி யின் தலைமைத்துவத்தை மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக கருஜயசூரியவிடம் ஒப்படைக்குமாறு சஜித் பிரேமதாஸ தரப்பினர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கையின்படி அரசு எழுத்து மூலம் ஆவணங்களை வழங்கும் - வாசுதேவ.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையின்படி அரசு எழுத்து மூலம் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும். எனவே, அரசு கூட்டமைப்பு பேச்சுகள் முறிந்து விட்டது எனக் கூறமுடியாது. இவ்வாறு தேசிய மொழிகள் இன, நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கட்டைக்காற்சட்டையுடன் பொன்சேகா சிறையில்! சிவப்பு சேர்ட்டுடன் கே.பி. சுதந்திர சுற்றுலா!- ரணில்.
சால்வையின் சாபத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்சியின் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் இலங்கைக்கு ஆதரவு பலமாக உள்ளது!- இலங்கைத் தூதுவர்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் இலங்கைக்கு ஆதரவு பலமாகவுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
சூறாவளி எச்சரிக்கையால் சீனாவில் 2 லட்சம் பேர் வெளியேற்றம்.
சீனாவின் கிழக்குப் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்ற எச்சரிக்கை காரணமாக சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேட்டோவின் விமான படைகள் நடத்திய குண்டுவீச்சில் கடாபி மகன் சாகவில்லை என்று லிபியா அரசு மறுத்துள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நோட்டோ படையினரின் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில், குறைந்தது 38 பேர் பலியாகியிருக்கலாம் என்று ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெனிசுலா நாட்டில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதன் பேரி்ல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை உடனடியாக விடுவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய்க் கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
எம்மிடம் அரசமைப்பு ஒன்று இருக்கிறது. அதில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அரசால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச முடியும். ஏனெனில் வடக்கு கிழக்கில் இப்போது நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் தொலைக்காட்சியே இந்தியாவில் சிறிலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. இதனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் மட்டுமன்றி மற்றைய மாநிலங்களிலும் கவனத்தை ஈர்த்தது.
சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப் படத்தை இரு தடவைகள் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து ஹெட்லைன்ஸ் ருடே கோத்தபாயவின் பேட்டியையும் இப்போது ஒளிபரப்பியுள்ளது.
அந்தப் பேட்டியில் தமிழர்களுடனான நல்லிணக்க முயற்சியில், புலம்பெயர் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளலாமே என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே கோத்தபாய, தீர்வு என்று இனியும் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த சில முக்கிய விவரங்கள் வருமாறு:
அனைத்துலக விசாரணை
அனைத்துலக விசாரணை
இறுதிப் போரின் போது நடந்தவைகள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்று வேண்டும் என்று கேட்பது எமது ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது.
இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. பிரிட்டிஷார் விட்டுச் சென்ற சிறந்த நீதித்துறை எம்மிடம் இருக்கிறது. மிகப் பெரிய பயங்கரவாதிகளை நாம் தோற்கடித்திருக்கிறோம். ஆனால் இதனைச் செய்ய முடியாமல் பல நாடுகள் திண்டாடி வருகின்றன. அப்படியிருக்கையில் அனைத்துலக விசாரணையைக் கோருபவர்கள் எம்மை நம்ப வேண்டும்.
ஒரு இறைமையுள்ள நாட்டுக்குள் எப்படி அனைத்துலக விசாரணை ஒன்றை முன்னெடுக்க முடியும்? அது நியாயமற்றது. அப்படி விசாரணை கோருபவர்களை சர்வதேச சமூகம் என்று குறிப்பிடுவது தவறான விபரிப்பு. சர்வதேச சமூகத்தில் உள்ள ஒரு சில நாடுகள் இதனைச் செய்யக் கூடும்.
ஆனால் மீதி மொத்த உலகமும் எங்களை ஆதரிக்கிறது. ரஷ்யாவில் ஆரம்பித்து சீனா வரைக்கும், நிச்சயமாக இந்தியாவும் எங்களை ஆதரிக்கிறது, பாகிஸ்தான், அரபு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் என்று அனைத்தும் எங்களை ஆதரிக்கின்றன. இவைதான் சர்வதேச சமூகம். ஒரு சிலர் மட்டும் தங்களை சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்ள முடியாது. அத்தகைய ஒரு அனைத்துலக விசாரணையை இந்தியா தனது நாட்டுக்குள் அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எந்த ஒரு இறைமையுள்ள நாடும் அப்படி அனுமதிக்காது.
போரில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அந்த எண்ணிக்கை மிகச் சிறியது என்று என்னால் சொல்ல முடியும். பெரும் படுகொலை என்று அதனை வகைப்படுத்த முடியாது. என்னுடைய வாதம் எல்லாம், ஏன் எந்த ஒரு அனைத்துலக நிறுவனமும் ஏன் ஒரு இறைமையுள்ள அரசைச் சந்தேகிக்க வேண்டும் என்பதுதான்.
தமிழகத் தீர்மானம்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியது அவரது அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக.
உண்மையில் ஈழத் தமிழர்கள் மீது அவருக்கு அக்கறை இருந்தால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் வந்து மீன்பிடிப்பதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அதனால் பாதிக்கப்படுபவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்களே.
அப்படிப்பட்ட விடயங்கள் வரும்போது அவர்கள் மௌனமாகிவிடுவார்கள். அப்போது இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு உண்மையான நிலைவரத்தைப் புரிய வைக்க முயன்றிருக்கிறோம். அதற்காகவே அவருடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.
மீண்டும் போராட்டம்
அரசியல் தீர்வு தாமதிக்கப்படுவதால் மீண்டும் ஒரு ஆயுத வன்முறை தோன்றக்கூடுமா?
அரசியல் தீர்வு தாமதிக்கப்படுவதால் மீண்டும் ஒரு ஆயுத வன்முறை தோன்றக்கூடுமா?
அரசியல் தீர்வு பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. ஏனெனில் இந்தியாவின் போதனையுடன் 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது அது பற்றிப் புலிகளுடன் பேசப்பட்டது. அந்தத் திருத்தச் சட்ட மூலம் வரையப்பட்ட போது இலங்கை அரசுக்கு அதில் எந்தப் பங்கும் இருக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு என்று வந்தபோது நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்கத் தயாராக இருக்கவில்லை.
இப்போதும் அதுதான் எனது பொறுப்பு. நானும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்கப் போவதில்லை. பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு தளர்வையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஏனெனில் அதனை நாம் செய்ய முடியாது. நாங்கள் தொடர்ந்தும் எமது பாதுகாப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்திக் கொண்டே செல்வோம்.
அங்கே சண்டையிடுவதற்கு ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் இல்லை என்ற போதும், புலனாய்வுப் பணிகள் கண்காணிப்பு நடவடிக்கைகள், ஆயுதங்கள் இலங்கைக்குள் எடுத்து வரப்படுவதைத் தடுப்பதற்கான பணிகள், கரையோரப் பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் இருப்பதால் பாதுகாப்பை நாம் ஒருபோதும் தளர்த்த மாட்டோம்.
அரசியல் தீர்வு
இரு இனங்களும் இணைந்து வாழ்வதற்கு தற்போது இருக்கும் அரசமைப்பே போதுமானது. அதில் எந்தப் பிரச்சினைகளும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கலந்துரையாடல்கள் மூலம் இதைத்தான் தீர்வாக மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
அதாவது இப்போது புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டாயிற்று. அதனால் இப்போதிருப்பதைவிட மேலான ஒன்றைச் செய்வதற்கான தேவை இருப்பதாக நான் கருதவில்லை. இந்த அரசமைப்பு அதிகாரங்களை அடிமட்டம் வரைக்கும் வழங்குகிறது.
இப்போதுகூட உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி இருக்கிறோம். விரைவில் மாகாண சபைத் தேர்தலையும் ஜனாதிபதி நடத்த இருக்கிறார்.
எனவே அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் நாங்கள் போதியளவுக்கு ஏற்கனவே வழங்கி விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். அதைவிட மேலதிகமாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
உதயன் மீதான தாக்குதல்
உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டமை ஒரு சின்ன விடயம். இலங்கையில் நாளாந்தம் நடக்கும் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. இது சாதாரணமானது. மற்றைய நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன.
ஆனால் இராணுவச் வாடிக்கு மிக அருகில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதே?
இப்படி இலகுவாகச் சொல்லிவிட முடியும். அப்படியானால் நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கிளிநொச்சியில் ஒரு பொலிஸ்காரர் கொல்லப்பட்டார். அவரது உடல் சோதனைச் சாவடியில் இருந்து 25 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. மக்கள் என்ன நினைத்தார்கள் யாரோ அவரை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று. ஆனால், உண்மை என்னவென்றால் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் ஒன்று அவரை மோதித் தள்ளிவிட்டுப் போய்விட்டது என்பதுதான்.
ஆனால் காயங்களைப் பார்க்கும் போது அவர் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றனவே?
அப்படி நடந்திருக்கலாம். அதுபற்றி நிச்சயம் பொலிஸ் விசாரிக்கும். அதற்காக ஏன் அரசையும் பாதுகாப்புப் படையினரையும் எல்லோரும் கண்டிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் இப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால் அதில் என்னவாவது அர்த்தம் இருந்திருக்கக்கூடும். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் இப்படிப்பட்ட சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கக்கூடும்.
கேணல் ரமேஷ்
விடுதலைப்புலிகளின் தளபதி கேணல் ரமேஷ் ஒருபோதும் இராணுவத்தின் காவலில் இருக்கவில்லை. அவர் ஒரு பயங்கரவாதி. அது சனல்4 தயாரித்த ஆவணப்படத்தில் காட்டப்படவில்லை. நான் அவரைப் பற்றிப் பேச விருப்பப்படவில்லை. அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.
ஆனாலும் அவர்... எதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. அவர் ஒரு கொலைகாரர் மட்டுமே.
ஆனால் உங்களுடைய அரசமைப்புப்படியே நீதியை நாடும் உரிமை அவருக்கு இருந்திருக்கிறதே?
அப்படி அவர் அங்கே இருந்திருந்தால் சரணடைந்த எல்லோருக்கும் வழங்கிய சந்தர்ப்பத்தை அவருக்கும் வழங்கி இருப்போம்.
அவர் இராணுவக் காவலில் இருந்தாரா?
அவர் ஒருபோதும் இராணுவத்தினரின் காவலில் இருக்கவில்லை.
தமது கருத்து தொடர்பில் எவராவது பிழை காண்பாராக இருந்தால் அவர்கள். தமது சொந்த அரசியலை கட்சிக்குள் புகுத்த முனைபவர்களாகவே இருப்பர் என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மீளமைப்பை எதிர்ப்பார்க்கின்றவர்கள், கட்சியின் தலைமையை எதிரியாக பார்க்கின்றனர். எனினும் குறித்த மீளமைப்பாளர்களுக்கு கட்சியின் தலைமை எதிரியல்ல என்ற விடயம் புரியவேண்டும்.
இலங்கை இன்று உலகத்தில் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த எதிராக இருக்கும் அரசாங்கமே ஐக்கிய தேசியக் கட்சி மீளமைப்பாளர்களின் எதிரியாக இருக்கவேண்டும் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளுராட்சி தேர்தலில் தோல்வி கண்டமைக்கு அரசாங்கத்தின் எதிர் செயற்பாடுகளும், கட்சியின் தேர்தல் தொகுதிகளில் காணப்படும் பிரச்சினைகளுமே காரணமே அன்றி கட்சியின் தலைமைத்துவம் அல்ல, என்று மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு ஒப்படைக்கும் பட்சத்தில் கட்சியை மூன்று மாதங்களுக்குள் பலப்படுத்தி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் அனைத்துச் சபைகளையும் ஐ.தே.க. கைப்பற்ற முடியும் என்று சஜித் தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.
சஜித் பிரேமதாஸ தரப்பினர் நேற்றுக்காலை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தத் தரப்பின் முக்கியஸ்தரும் தென்மாகாண சபை உறுப்பினருமான மைத்திரி குணரட்ன இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
எமது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டு வருகிறது. கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றுவதன் மூலமே கட்சியைக் கட்டியெழுப்பமுடியும். அந்த அடிப்படையில் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவைத் தலைவராகக் கொண்டு கட்சியைக் கட்டியெழுப்ப சஜித் பிரேமதாஸ தரப்பினரான நாம் முடிவெடுத்தோம். எமது முடிவை நாம் கரு ஜயசூரியவிடம் கூறியபோது கட்சியின் நலன்கருதி அவர் எமது முடிவை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான கட்சி உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர். கரு ஜயசூரிய ரணிலின் பக்கமோ சஜித்தின் பக்கமோ சாயாது நடுவில் நின்றவர். இவரைத் தலைவராக நியமித்தால் ரணில் தரப்பையும் சஜித் தரப்பையும் ஒற்றுமைப்படுத்தி கட்சியை எம்மால் வெற்றிப்பாதையை நோக்கிக் கொண்டு செல்ல முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சி யுத்தத்துக்கு ஆதரவு வழங்காமையும் அக்கட்சி தேர்தலில் தோல்வியடைய மற்றுமொரு காரணமாகும். ஆனால், கரு ஜயசூரிய அரசின் பக்கம் இணைந்து யுத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்.
அப்படிப்பட்ட ஒருவரை கட்சியின் தலைவராக நியமித்தால் மக்கள் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் அணிதிரள்வர். ரணில் விக்கிரமசிங்க ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு கட்சியின் தலைமைத்துவப் பதவியை கரு ஜயசூரியவிடம் வழங்கவேண்டும். அந்தக் காலப்பகுதிக்குள் நாம் நிச்சயம் கட்சியை வெற்றிக்கட்சியாக மாற்றுவோம். எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளில் அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம்.
தலைவரை மாற்றுவதற்காக கட்சியின் செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம். ரணிலின் ஆதரவாளர்களும் கரு ஜயசூரியவைத் தலைவராக்க விரும்புவதே நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாகக் கூறக் காரணம் என்றார்.
தலைவரை மாற்றுவதற்காக கட்சியின் செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம். ரணிலின் ஆதரவாளர்களும் கரு ஜயசூரியவைத் தலைவராக்க விரும்புவதே நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாகக் கூறக் காரணம் என்றார்.
அரசு கூட்டமைப்புக்கு இடையிலான பேச்சுகள் தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
அரசு கூட்டமைப்புக்கிடையிலான பேச்சுகள் ஓரிரண்டு சுற்றுகள் சாதகமான பதிலைத் தரும் என எதிர்பார்க்க முடியாது.
கூட்டமைப்பு, அரசிடம் சில விடயங்கள் தொடர்பாகவும், தீர்வு குறித்த அரசின் யோசனைகளை எழுத்து மூலம் தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கான பதிலை அரசு எழுத்து மூலம் வழங்கும் என நான் உறுதியாக நம்புகின்றேன் என்றார்.
விமர்சனங்களுக்கு பதிலளித்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது கட்சியை பலப்படுத்துவதே பிரதான இலக்காகும் என்றும் அவர் கூறினார்.
ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தவைர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: எவர் எவர் எம்மை விமர்சிக்கின்றார்களோ அவர்களும் தலைவர்களே! விமர்சனங்களுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
கூட்டம் கூட்டமாக தேர்தல்களை நடத்தும் புதிய கலாசாரம் தோன்றியுள்ளது. அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மத்தியில் ழுமையான அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டே கடந்த உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்பட்டன.
இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையிலேயே நீங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றீர்கள். எனவே சபைகளில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க வேண்டும்.
அதேவேளை எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த சரத் பொன்சேகா கட்டைக்காற்சட்டையுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் புலிகளின் உறுப்பினரான கே. பி. சிவப்பு சேர்ட் அணிந்து கொண்டு சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். இன்று நாட்டில் ஊழல் மோசடிகள் மலிந்து விட்டது.
அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு கப்பல் வராது. சூரிய வௌ மைதானம் அமைக்க 3 1/2 மில்லியன் செலவு செய்யப்பட்டது.
காலிமுகத்திடல் காணி விற்பனை செய்யப்பட்டது. இந்தப் பணமெல்லாம் யாரது சட்டைப்பைக்குச் சென்றது.
வருமானம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் நஷ்டத்திற்கு மக்கள் மீதே சுமைகள் சுமத்தப்படுகின்றது.
நீர் கலந்த பெற்றோலை இறக்குமதி செய்து விற்பனை, செய்ததால் பல வாகனங்கள் சேதமடைந்தன. எனது வாகனமும் சேதமடைந்தது.
இலஞ்சம் ஊழல் மோசடிகளை வெளியிடுவதால் இன்று ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது.
உண்மையை எழுத முடியாது பேச முடியாது ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இணங்குவதா அல்லது போராடுவதா? போராட்டமே இதற்கு சிறந்த வழி எனவே சால்வையின் சாபத்திற்கு எதிரான போராட்டத்தை நாடு பூராகவும் முன்னெடுப்போம்.
ஊழல் மோசடி மிக்க இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம். ஐ.தே.க. ஆட் சியை மலரச் செய்வோம். அதற்காக ஒன்றுபட்டு கட்சியை பலப்படுத்துவோம் என் றார்.
இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய:
நாட்டிலுள்ள காணிகள் வெள்ளளைக்காரர்களுக்கும் அரசாங்கத் தலைமையின் உறவினர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை நிறுத்த வேண்டும். அதற்காக ஐ.தே.கட்சியினரான நாம் ஒற்றுமைப்பட வேண்டும். ஒற்றுமையின் மூலமே கட்சியை பலப்படுத்த முடியும்.
நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லை. அவ்வாறானதோர் நிலையிலும் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.
இங்கு உரையாற்றிய ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்,
சனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சிக்கு எதிராக பதிலளிப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் அரச வைபவமொன்றை நடத்தினார். ஆனால் இவ் ஆவணத்தில் யுத்தத்தை வெற்றிகொண்ட சரத் பொன்சேகாவை பற்றி ஒருவரியேனும் எழுதப்படவில்லை.
சபைகளுக்கு சென்றதும் நீங்கள் ஐ.தே. கட்சி உறுப்பினர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அரசாங்கத்தின் சிறப்புரிமைகளுக்காக விலை போகக் கூடாது என்றார்.
அமெரிக்க காங்கிரஸில் உள்ள பல உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கும் இலங்கை மேற்கொள்ளும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
எனினும் சில தொண்டர் நிறுவனங்களும் புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலரும் இலங்கையின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்துள்ள அவர், ஆனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிக்க முடியாது எனவும்கூறினார்.
இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க வர்த்தகர்கள் குழுவொன்று இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகள் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
உதாரணமாக போயிங் நிறுவனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு விமானங்களை விற்பனை செய்யவுள்ளது.
அத்துடன், ஜோன் டீரே கெட்டபில்லர் போன்ற நிறுவனங்கள் இலங்கையில் காலூன்ற ஆர்வம் கொண்டுள்ளன. வேறு சிலர் சிறிய தொழிற்சாலைகளை அமைக்க விரும்புகிறார்கள்.
அமெரிக்காவின் முன்னணி ஹோட்டல் நிறுவனங்கள் பல ஏற்கனவே இலங்கையில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் சில பத்திரிகைகள் அமெரிக்கா எமக்கு ஆதரவில்லை என்பதுபோல் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் எமக்கு அமெரிக்காவில் பலமான ஆதரவு உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் கிழக்குப் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்ற எச்சரிக்கை காரணமாக சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்த சூறாவளிக்கு "மைபா" என்று பெயரிடப்பட்டுள்ளது.
சீன வானியல் ஆராய்ச்சி மையத்தின் இந்த எச்சரிக்கை காரணமாக, அரசு எந்திரங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் துரிதமான முறையில் ஈடுபட்டு செயல்படுமாறும், எதிர்கொள்ளவேண்டிய மீட்புப்பணிகள் தடையின்றி நடைபெறவும் ஷிஜியாங் மாகாண அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் இந்த ஆண்டு வீசும் ஒன்பதாவது சூறாவளி இதுவாக இருக்குமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுத்துள்ளது.நேட்டோவின் விமான படைகள் நடத்திய குண்டுவீச்சில் கடாபி மகன் சாகவில்லை என்று லிபியா அரசு மறுத்துள்ளது.
ஜிலிட்டன் நகரில் உள்ள கடாபி செயலகஅறை மீது நேட்டோவின் விமான படைகள் குண்டுவீசி தாக்கியதில் கடாபியின் இளைய மகன் காமிஸ் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர் என புரட்சிப்படை தெரிவித்திருந்தது.
ஆனால் இதை லிபியா அரசு மறுத்துள்ளது. அதிபர் கடாபி மகன் காமிஸ் சாகவில்லை என்று அரசின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 38 பேர் பலி.கிழக்கு ஆப்கானிஸ்தானில் நோட்டோ படையினரின் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில், குறைந்தது 38 பேர் பலியாகியிருக்கலாம் என்று ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் 31 பேர் நேட்டோ படையினர் (அமெரிக்க ராணுவ வீரர்கள்) என்றும் 7 பேர் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரியவந்துள்ளது. ஆப்கனின் மத்தியகிழக்கு பகுதியில் வார்துக் மாகாணத்தில் இந்த ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தங்கள் தரப்பு தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்றும், இந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு தாங்களே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். ஆப்கனில் நிகழ்ந்த மிகப் பெரிய உயிர்ச்சேதம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜஸ்டின் ப்ரோக்ஹாப் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் மேற்கொண்டு தகவல் எதுவும் தர மறுத்துவிட்டார்.
வெனிசுலாவில் 2 ஆயிரம் கைதிகள் விடுதலை.வெனிசுலா நாட்டில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதன் பேரி்ல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை உடனடியாக விடுவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
வெனிசுலாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இரு வேறு சிறைகளி்ல் கைதிகளிடையே நடந்த கலவரத்தில் 22 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததே இந்த கலவரத்திற்கு காரணம் என தெரியவந்தது.
மேலும் அந்நாட்டின் மனித உரிமை அமைப்பைச் சமூக ஆர்வலர்கள் குழுவினர் பல்வேறு சிறைகளில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இவற்றில் 13 ஆயிரம் பேர் மட்டுமே இருக்க கூடிய கைதிகளில், 50 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிறிய குற்றங்களுக்காக சிறையில் உள்ள பல்வேறு கைதிகளின் நிலமை குறித்தும் அவர்களின் தண்டனை காலத்தை குறைத்து விடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். வெனிசுலாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது.
இச்சூழ்நிலையி்ல் வெனிசுலா அரசு முதற்கட்டமாக சிறிய வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.செவ்வாய்க் கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுக்கு முன்பே சூரிய குடும்பத்தில் நான்காவது கிரகமாக கருதப்படும் செவ்வாய்க் கிரகத்தில், தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர்.
இருந்த போதிலும் அது உறைந்து இருப்பதாகவே இதுவரை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், செயற்கைக்கோள் மூலம் மார்ட்டியன் எரிமலை பகுதியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரத்தை தற்போது அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நிலத்துக்கடியில் இருந்த நீரோட்டம் இருப்பதற்கான படிமங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பனிகட்டிகளாக உறைந்து கிடக்கும் படுகைகள், பின்னர் வெப்ப காலத்தில் உருகி தண்ணீராக ஒடுவதையும் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தற்போதுள்ள இந்த படுகைகள் உருகி தண்ணீராக மாறினால் அது செவ்வாய் கிரகம் முழுவதையும் ஆக்கிரமித்து கடல்போன்று இருக்குமென்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இத்தகவல்கள் விஞ்ஞான ஆராயச்சி குறித்த இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஊழல் வழக்கில் உக்ரைன் பிரதமர் யூலியா டைமோஷென்கோ கைதுசெய்யப்பட்டார்.
ரஷ்யாவுடன் மேற்கொண்ட காஸ் விநியோக ஒப்பந்தத்தில் ஊழல் புரிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கோர்ட் உத்தரவை அடுத்து உக்ரைன் நாட்டின் முன்னாள் பிரதமர் யூலியா டைமோஷென்கோ நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்தியாவையும், கங்கை நதியையும் இழிவுபடுத்திய அவுஸ்திரேலிய வானொலி நிலையம், மன்னிப்புக் கேட்டுள்ளது.
தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பியூ தாய் கட்சியைச் சேர்ந்த இங்லக் ஷினவத்ரா வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரிட்டன் மெர்சே சைடு பொலிசின், உயர் ஆயுதப் படை பிரிவை சேர்ந்த 5 அதிகாரிகள் அதிரடி சோதனையின் போது, முறைகேடாக நடந்து கொண்டனர்.
அமெரிக்க கடன் உச்ச வரம்பு விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும், குடியரசுக் கட்சியனருக்கும் இடையே கடும் மோதல் நீடித்தது.
ரஷ்யாவுடன் மேற்கொண்ட காஸ் விநியோக ஒப்பந்தத்தில் ஊழல் புரிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கோர்ட் உத்தரவை அடுத்து உக்ரைன் நாட்டின் முன்னாள் பிரதமர் யூலியா டைமோஷென்கோ நேற்று கைது செய்யப்பட்டார்.
உக்ரைன் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் யூலியா டைமோஷென்கோ (51) இவர் கடந்த 2005, 2007-2010 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு அந்நாட்டு பாராளுமன்றம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் படி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு இவர் பிரதமராக இருந்த போது ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனமான கேஸ்புரோம் நிறுவனத்துடன் 425 மில்லியன் டாலர் அளவு ஒப்பந்தம் மேற்கொண்டார்.
இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து உக்ரைன் கோர்டில் வழக்கு நடந்து வந்தது. இவர் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டது. எனினும் ஜாமினில் இருந்ததால் வழக்கு விசாரணையில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் யூலியா டைமோஷென்கோவை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இவர் மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது.
அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட யூலியா டைமோஷென்கோ கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிபர் விக்டர் யானுகோவைச் என்னை பழிவாங்கிவிட்டதாக கூறினார்.
இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட அவுஸ்திரேலிய வானொலி நிலையம்.இந்தியாவையும், கங்கை நதியையும் இழிவுபடுத்திய அவுஸ்திரேலிய வானொலி நிலையம், மன்னிப்புக் கேட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த "டுடே எப்.எம்.,' என்ற வானொலி நிலையத்தில் சமீபத்தில் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சியில், தொகுப்பாளர் கைல் சேண்டிலேண்ட்ஸ் என்பவர், இந்தியா ஒரு மலக் குழி, கங்கை நதி ஒரு சாக்கடை என, இழிவாக விமர்சித்திருந்தார்.
இதனால், அவுஸ்திரேலிய இந்தியர்கள் கவுன்சில் குறிப்பிட்ட வானொலி நிலையமும், தொகுப்பாளரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, நேற்று அந்த வானொலி நிலையத்தின் மன்னிப்பு அறிக்கையை, கவுன்சில் தலைவர் யது சிங் நேற்று வெளியிட்டார்.
அதில்,"நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் இந்தியர்களை நேசிப்பவன். கங்கை நதி மாசுபட்டுள்ளதைக் குறிக்கும் விதத்தில்தான் நான் அதை சாக்கடை என்று சொன்னேன். அதேநேரம் அது புனித நதியாக மதிக்கப்படுவது எனக்குத் தெரியாது என கைல் சேண்டிலேண்ட் தெரிவித்திருந்தார். வானொலி நிலையமும் கடிதத்தில் மன்னிப்புக் கோரியுள்ளது.
தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் இங்லக் ஷினவத்ரா.தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பியூ தாய் கட்சியைச் சேர்ந்த இங்லக் ஷினவத்ரா வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் கடந்த ஜூலை 3-ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் இங்லக்கின் பியூ தாய் கட்சி ஆளும் கட்சியான ஜனநாயக் கட்சியைத் தோற்கடித்தது. நாட்டின் மொத்த வாக்கில் ஐந்தில் மூன்று பங்கு வாக்கைப் பெற்று வெற்றி வாகை சூடியது.
இந்நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 296 எம்.பி.க்கள் இங்லக்குக்கு ஆதரவாகவும், 3 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். 197 எம்.பி.க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். இதையடுத்து 50 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் சோம்சாக் அறிவித்தார்.
தாய்லாந்தில் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்தே மறைமுக ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. 2006-ல் பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவத்ராவைப் பதவி இறக்கிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் சுராயுத் சுலனான்ட் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2008-வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார்.திடீரென அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சொம்சாய் வோங்சாவத் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜனநாயக ரீதியிலான அரசைத் தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை 3-ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தலில் ராணுவத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தி பிரதிபலித்தது.
தாய்லாந்து இக்கட்டான சூழலை சந்தித்துவரும் நிலையில் இங்லக் ஷினவத்ரா பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தை உருவாக்குவதுடன் ஜனநாயக அரசிடமிருந்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்டாய நிலையில் அவர் உள்ளார்.
மெர்சேசைடு பொலிசின் 5 ஆயுத அதிகாரிகள் நீக்கம்.பிரிட்டன் மெர்சே சைடு பொலிசின், உயர் ஆயுதப் படை பிரிவை சேர்ந்த 5 அதிகாரிகள் அதிரடி சோதனையின் போது, முறைகேடாக நடந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது ஒழுங்கீன நடவடிக்கைகளால் எரிச்சல் அடைந்த நிர்வாகம், எந்த வித முன் அறிவிப்பும் பணி நீக்கம் செய்தது.
அந்த காண்ஸ்டபிள்கள் உயரிய மேட்ரிக் அணி பிரிவில் இருந்தவர்கள் ஆவார்கள். முறைகேடாக நடந்து கொண்ட அதிகாரிகளின் படம், லிவர்பூல் எக்கோ டுடேவில் வெளியானது. இந்த பணி நீக்க நடவடிக்கை குறித்து, கான்ஸ்டபிள் துணைத் தலைவர் பெர்னார்டு லாசன் கூறுகையில் எங்கள் ஓபிசர்கள் உயர் நிலையை கடைபிடிக்க வேண்டும்.
இந்த அதிகாரிகள் தங்கள் நிலையில் இருந்து, இறங்கி தரக்குறைவாக நடந்து கொண்டு உள்ளனர் என்றார். மேட்ரிக்ஸ் படைபிரிவு போதை மருந்து மற்றும் துப்பாக்கி குற்ற நிகழ்வுகளை கையாளுகிறது.
மேட்ரிக்ஸ் பிரிவில் இருந்த, இந்த 5 அதிகாரிகள், சந்தேகத்துக்கு உரிய நபரின் வீட்டை சோதனையிடும் போது, முறைகேடாக நடந்து கொண்டதை செல்போன் கமிராவில் படம் பிடிக்கப்பட்டது. தற்போது அந்த அதிகாரிகள் பரிதவித்த நிலையில் உள்ளனர்.
நாடாளுமன்றம் மீது அமெரிக்க மக்கள் அதிருப்தி.அமெரிக்க கடன் உச்ச வரம்பு விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும், குடியரசுக் கட்சியனருக்கும் இடையே கடும் மோதல் நீடித்தது.
உச்சவரம்பு கெடு தேதியதன ஓகஸ்ட் 2 ஆம் திகதிக்கு ஒரு நாள் முன்பாக அமெரிக்க நாடாளுமன்க் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க ஒப்புக் கொண்டது. நாடாளுமன்றத்தின் காலதாமதமான இந்த நடவடிக்கை 82 சதவீத அமெரிக்க மக்களுக்கு அதிருப்பதியை தந்துள்ளது.
கடன் உச்ச வரம்பு குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் மேற்கொண்ட செயல்பாடு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 14 சதவீத மக்கள் மட்டுமே நாடாளுமன்ற செயல்பாட்டை ஏற்றுக்கொண்டன.
அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு 14.3 லட்சம் கோடி டொலர். இதனாலட உசடசவரம்பை அதிகரிக்க வேண்டிய நிலையில், குடியரசுக் கட்சியினர் வாக்கு வாதம் செய்தனர். கடைசி நேரத்திலேயே 2.3 லட்சம் கோடி டொலர் வரம்பை மேலும் அதிகரிக்க ஒப்புதல் தரப்பட்டது.
கடந்த 34 ஆண்டுகளில், முதன்முறையாக நாடாளுமன்றம் மீது, மிக அதிகபட்ச அதிருப்தி தற்போது மக்களிடையே ஏற்பட்டது. இதற்கு முன்னர் 2010 ம் ஆண்டில் 77 சதவீத மக்கள் அமெரிக்க நாடாளுமன்ற செயல்பாடு குறித்து விமர்சித்தனர்.