
கடலுக்கடியில் சென்று வாழும் உலகை கற்பனை செய்து பார்த்திருப்பீர்கள். இப்போது சில அதிஷ்டவசமான பயணிகளுக்கு அதை நிஜமாகவே அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஐந்து வருடங்களுக்கு முன்னர், மாலைதீவின் கோர்னாட் ரங்காலி தீவில் உலகின் முதல் கடலுக்கு அடியிலான உணவகம் அமைக்கப்பட்டது. இப்போது இதன் ஆண்டு விழா கொண்டாட்டங்களின் போது, இங்கேயே தங்கி ஓய்வெடுத்துக்கொள்ளும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 16 அடி ஆழத்தில் புதிதாக திறக்கப்பட்ட இரவு நேர விருந்துணவு அறை, இரண்டு படுக்கை அறைகள் ஆகியன சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.


