டீன் ஏஜ் வயதினர் பேஸ்புக் மற்றும் ஏனைய சமூகத் தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பரீட்சைகளில் கோட்டை விடுவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அவர்களின் நன்னடத்தைகளும் கேள்விக்குறியாவதாக கல்வியலாலர்களும் எச்சரித்துள்ளனர்.
அவர்கள் வளர்ந்து ஒரு நிலையை அடையும் போது பேஸ்புக் போன்ற சமூகத் தளங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் மாணவர்களின் நினைவுத்திறனும் குறைகிறதாம்.உளவியல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது அந்த ஆய்வு.