சூரியனுடன் மோதி அமிழ்ந்து போகும் வால் நட்சத்திரம் ஒன்று முதன் முறையாக புகைப்பட கருவிகளில் பதிவு செய்யப்பட்டது.குறித்த வால்நட்சத்திரத்தின் இறப்பு பற்றி SDO விண்கலம் எடுத்து உயர் வரையறை படம்வரலாற்றில் இதுவே முதன் முறையாக இவ்வாறு பதிவிடப்படுகிறது.
கடந்த ஜூலை 6ம் திகதி இவ்வால் நட்சத்திரம் சூரியனுடன் நேரடியாக மோதி தனது அசுரத்தனமான மரணத்தை சந்தித்தது. இது நாசாவின் சூரிய டைனமிக்ஸ் ஆய்வகத்தின் செய்மதியினால், (SDO) படம் பிடிக்கப்பட்டது. 'சூரியனுடன் மோதி சுமார் 15 நிமிட காலத்துக்கு தீப்பற்றி எரிந்தது இவ்வால் நட்சத்திரம் என்கிறார் SDO அதிகாரி.