Wednesday, August 10, 2011

ஆகஸ்ட் - 6 ம் அமெரிக்கவும்!!!!!!!


1945 ஆகஸ்ட் 6 காலை 8 மணி. ஜப்பானில் ஹிரோசிமா நகரம் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டிருந்தது. ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போர் விமானம் ஒன்றை அங்கிருந்தவர்கள் கவனிக்கத் தவறவில்லை.
அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம், தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு வேக,வேகமாக மறைவிடங்களை நோக்கி அங்கிருந்த மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். மிகச்சரியாக காலை 8.14 மணி ஹிரோசிமா நகரின் மீது பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து அணுகுண்டு வீசப்பட்டது,அது 12,500டன் டி.என்.டி இணையான வெடிப்பாற்றலுடன் வெடித்து சிதறியது.


நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த வானளாவிய ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சில நிமிடங்களுக்குள் தரைமட்டமாயின. அடுத்த சிலநிமிடங்களில் காளான் வடிவிலான 3000 மீட்டர் பரப்பளவுள்ள ஒரு மேகத்திறள் 12000 மீட்டர் உயரத்திற்கு பொங்கி எழுந்தது. தரைமட்டத்தின் வெப்பநிலை அணுகுண்டு வெடித்த நிமிடமே 3000-_ 4000 டிகிரி செல்சியலை எட்டியது. குண்டு வெடித்த இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் வெந்து ஆவியாயினர். மரணம் பல கட்டங்களாக நடந்து சுமார் 3 லட்சத்தை தொட்டது. ஆயிரக்கணக்கானோர் நடைபிணங்களாயினர். 66 அண்டுகளை கடந்த பின்பும் அது நாச விதைகளாகவும், நோய்களாகவும் ,மரணங்களாகவும் மனிதனை வேட்டையாடிக்க கொண்டிருக்கிறது.
1939ல் இரண்டாம் உலகப்போர் வெடித்த போதே ஜெர்மனியில் ஓட்டோஹான் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு அணுவை பிளந்து, அணுகுண்டு தயாரிப்பதன் வழிமுறைகளை கண்டறிந்தனர். இந்நிலையில் ஹிட்லர் அணுகுண்டை தயாரிக்கும் முன்பாக அமெரிக்கா அணுகுண்டை தயாரிக்க வேகம் காட்டியது. ''ஹட்டன்பிராஜெட்'' என்ற பெயரில் லாஸ்அலோமாஸில், லெஸ்லிகுரோவ்ஸ் என்ற விஞ்ஞானியின் தலைமையில் நானூருக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், அறுபத்து ஜந்தாயிரம் தொழில்நுட்ப வல்லுநர்கள் இரவு பகல் இன்றி உழைத்து 1945 மத்தியில் அணுகுண்டை தயாரித்து முடித்தார்கள். தயாரித்துக்கொண்டிருக்கும் போதே அணுகுண்டு ஏற்படுத்த போகும் விளைவுகளை கண்டு விஞ்ஞானிகள் கவலை கொண்டனர்.

உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், லியோஸிலார்ட் அகியோர் அணுஆயுதத்தைப் பயன்படுபத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டிற்கு கடிதம் எழுதினர். அக்கடிதத்தை பரிசீலிப்பதற்கு முன்பே 1945 ஏப்ரல் 12ம் தேதி ரூஸ்வெல்ட் மரணமடைந்தான். அடுத்து வந்த ஜனதிபதியான ட்ரூமன் அக்கடிதத்தை அலட்சியபடுத்தி விட்டு அணுகுண்டை வீசி பரிசிலிப்தை நோக்கமாக கொண்டுருந்தார். 1945 அகஸ்ட் 6ல் ஹிரோசிமாவிலும், அகஸ்ட் 9ல் நாகசாகியிலும் அணுகுண்டு வீசப்பட்டு பல லட்சம் பேர் இறந்த நிகழ்வை ட்ரூமன் தனது நினைவு குறிப்பில் ...
''யுத்தத்தின் பின் நம்முடைய விருபத்திற்கு ஏற்ப முடிவுகளை மேற்கொள்ள இந்த குண்டு உதவும்'' என்று மகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளான்.
66 ஆண்டுகள் கடந்த பின்பு கடந்த ஜனவரி மாதத்தில் ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் அதே காலை நேரம் வேகமாக வந்த கார் ஒன்று 19 வயது இளைஞன் ஒருவனை சாய்த்து விட்டு சென்று விட்டது. கார் வேகமாக சென்றாலும் அதன் எண்ணை சிலர் குறித்து வைத்து கொண்டனர். ஜப்பான் காவல்துறை விசாரித்த போது அந்த கார் அமெரிக்க ராணுவ அதிகாரிக்கு சொந்தமானது, கார் ஒட்டிசென்ற போது அவர் மது அருந்தி இருந்தார் என்பது உட்பட பல விபரங்களை சேகரித்தனர். அனால் அவரை ஜப்பான் காவல்துறையினர் கைது செய்யவில்லை.
மேலும் கார்ஏற்றி இளைஞனை கொன்ற குற்றத்திற்காக அந்த ராணுவ அதிகாரியை ஜப்பான் நீதிமன்றம் அவரை விசாரிக்கவும் முடியாது. 1956 ல் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளுகிடையிலான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பணியில் இருக்கும் போது அமெரிக்க ராணுவத்தினர் செய்யும் குற்றங்கள், மற்றும் விபத்துக்கள் ஆகியவற்றை விசாரிக்கும் அதிகாரம் அமெரிக்க நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. இந்த ஒப்பந்த படி மதுஅருந்தியதும் ராணுவப்பணிதான் என்ற வாதத்தின்படி இளைஞனை கார் ஏற்றிக் கொன்றது குற்றமில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இப்படி சண்டியர் தனம் செய்யும் அமெரிக்காவை பொறுத்தவரையில் உலக முழுவதும் எப்பொழுதும் பதற்றம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் தனது ஆயுத விற்பனையை பெறுக்க முடியும். மேற்கு ஆசியாவில் நடைபெற்றுவரும போராட்டங்கள், ஈரான்- ஈராக் போர், வடகொரியா- தென்கொரியா, இந்தியா-பாகிஸ்தான், இந்தியா- சீனா, பாலஸ்தீனம்- இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கிடையே பதற்றத்தை உருவாக்குவதும், அதற்கு ஆயுத ஏற்றுமதி செய்வதும், இருநாடுகளுக்கிடையிலான போரில் மூக்கைநுழைத்து உலக சமாதான நாயகனாக தன்னை காட்டிகொள்வது அமெரிக்க சண்டிரே.
சர்வதேச அளவில் நடைபெறும் ஆயுத ஏற்றுமதியில் மூன்றில் ஒருபங்கு அமெரிக்காவால் செய்யப்படுகிறது. லாக்ஹ¦ட்மார்ட்டின்,போயிங், நார்த்ராப்கிரம்மன், ஜெனரல்டைனமிக்ஸ், ரேதியான்,எல்- 3 கம்யூனிகேசஷன்ஸ் மற்றும் யுனிடெக்டெக்னாலஜிஸ் ஆகிய ஏழு அமெரிக்க கம்பெனிகள் தான் உலக அயுத விற்பனையில் முதலிடம் வகிக்கின்றன. இவற்றின் கடந்த ஆண்டு ஆயுத விற்பனை இரண்டரை லட்சம்கோடி ரூபாயாகும்.நடப்பாண்டில் இதையும் தாண்டலாம் என்கிறது ஒரு ஆய்வு.
ஒசாமாபின்லேடன் கொல்லப்பட காரணமாக இருந்த அமெரிக்க அதிரடிபடையினருக்கு ''சீல்'' என்று பெயர். அதாவது கடல்,காற்று,நிலம்(sea,air,land-இதன் சுருக்கம் தான் சீல்)என்ற மூன்றிலும் அதிவேகமாக செயல்படக்கூடிய படைவீரர்களை உருவாக்கியுள்ளது. இந்த படையினர் அடுத்த நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்து அடுத்தநாட்டு விபரங்களை தெரிந்துகொள்ளுவது, படுகொலைகள், சதித்திட்டங்கள் மூலம் அரசியல் நிலைமைகளை அமெரிக்காவுக்கு சாதகமாகமாற்றி அமைக்கின்றனர்.
ஒசாமாபின்லேடன் கொல்லப்ட்டதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒசாமைவை, சிதைந்து போன சோவியத்யூனியனுக்கு எதிராக உருவாக்கியதே அமெரிக்கா தானே. ஒசாமாவை கொல்ல பாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்தது உட்பட பல முறைகேடுகளை செய்துள்ளது அமெரிக்கா. அபோதாபாத்தில் கொல்லப்பட்ட போது ட்ரூமன் சொன்னதை வேறு வார்த்தைகளில் ,அமெரிக்க அதிபர் ஒபாமா இப்படி அறிவித்தார், ''அமெரிக்கா எதைச் செய்ய நினைக்குமோ அதைச் செய்து முடிக்கும்'' என்று.அமெரிக்க சண்டியர்கள் அடங்கும் வரை அகஸ்ட் 6 ,செப்டம்பர் 11ம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் , உலகமக்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்காது.
ஆகஸ்ட்_ 6 ஹிரோசிமா தினம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF