சீன அரசின் அழைப்பில் ஜனாதிபதி தலைமையிலான குழு இன்று பயணம்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு சீனாவிற்கு இன்று திங்கட்கிழமை பயணமாகவிருக்கின்றது.
ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்.
நான்கு மாதக் குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் சவூதியில் மரணதண்டனை கைதியாக இருக்கும் திருகோணமலை மூதூர் பெண்ணான ரிசானா நபீக், பொதுமன்னிப்பு கிடைக்கப்பெற்று விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கரு ஜெயசூரிய' வின் யோசனை ரணிலிடம் இன்று கையளிப்பு! பிரச்சனை தீவிரமடையும் என எதிர்பார்ப்பு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுத்துமூலமான முன்மொழிவுக் கோரிக்கை நியாயமற்றது! அரசாங்கம்.
இனப்பிரச்சனைத் தீர்வு திட்டம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எழுத்துமூல முன்மொழிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கின்றமை நியாமற்ற விடயம் என பேச்சுவார்த்தைகளில் அரசு தரப்பு குழுவில் தலைமை வகிகு்கும் மூத்த அமைச்சரான நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல.
இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பு அரசியலுக்கு சங்கக்கார பிரவேசம்?
சரத் பொன்சேகாவை விடுவிக்கக்கோரி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் ஆர்ப்பாட்டம்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக இன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் - போர்க்குற்ற விசாரணையும் கிடையாது மகிந்தவின் சகோதரர் கோத்தபாய.
விடுதலைப்புலிகளுடனான் மோதல்களின் இறுதிக் கட்டங்களில் பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவை என்ற கோரிக்கை நியாயமற்றது என்றும் ஜனாதிபதி மகிந்தவின் சகோதரர் கோத்தபாய வாதிட்டுள்ளார்.
ஜெனீவாவில் இலங்கையை சிக்கவைக்க அமெரிக்கா முயற்சி! இலங்கை அச்சம் - சண்டே டைம்ஸ்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரின் போது அமெரிக்கா, இலங்கையை சிக்கவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. சண்டே ரைம்ஸ் செய்தித்தாள் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விமானங்கள் இலங்கைக்குள் பிரவேசித்தமை குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் - ஜே.வி.பி.
அமெரிக்க போர் விமானங்கள் இலங்கை வான் பரப்பில் பிரவேசித்தமை குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டுமென ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் இலங்கை வானில் ஊடுருவியமை தற்செயலான சம்பவம்: அன்ரூ.
அமெரிக்காவின் போர் விமானங்கள் இலங்கை வான்பரப்புக்குள் ஊடுருவியமை தற்செயலாக இடம்பெற்ற சம்பவமாகும். இந்த ஊடுருவலில் வேறு எந்த நோக்கங்களும் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார்.
61 வயது அமெரிக்க பெண் டயானா நியாத் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார். அவர் கியூபாவில் இருந்து அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் வரை கடலில் நீந்தி வருகிறார்.
உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக கத்தார் நாட்டு மன்னரின் மனைவி ஷீகா மொஸா பிந்த் நாசர் தேர்வு செய்யபப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் குடும்ப பிரச்சனையில் 8 பேர் சுட்டுக் கொலை.
அமெரிக்காவில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டதில் 11 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவரையும் பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
சீனாவின் கிழக்கு பிராந்தியத்தை முய்பா புயல் தாக்கியது. பல ஆண்டுகளில் ஏற்பட்ட புயலை காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாக இந்த சூறைக்காற்று இருந்தது.
லிபியாவில் முக்கிய எண்ணெய் குழாய் பாதையை போராட்டக்காரர்கள் தகர்த்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாகப் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பிரான்ஸ் வீரர்கள் நேற்று மரணம் அடைந்தனர். 5 வீரர்கள் காயம் அடைந்தனர்.
உலகப்புகழ் பெற்ற மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பேயர் ஜேர்மனியில் இருந்து வெளியேற்றப் போவதாக எச்சரித்து உள்ளது.
ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரால் உருக்குலைந்து போன இந்த தேசத்தின் கட்டமைப்பை மேம்படுத்தவும், அமைதி ஏற்படுத்தவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.
சிரியாவில் அரசுக்கெதிராக அப்பாவி மக்கள் தினம் தினம் கொல்லப்படுவதை கண்டித்து சவூதி அரேபியா தனது தூதர் சிரியாவிலிருந்து திரும்ப அழைத்துள்ளது.
இஸ்ரேலில் வரலாறு காணாத அளவிற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு சமூக நீதி கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் மெகா பேரணியையும் நடத்தினர்.
இரண்டாம் உலகப் போரின் போது இறந்த ஜப்பான் மக்களின் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 31 அமெரிக்க வீரர்கள் உட்பட 38 பேர் பலியானது குறித்து சர்வதேச பாதுகாப்பு துணை நிலைப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டே இந்த குழு அங்கு பயணமாகின்றது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
சீனாவில் பல்வேறு மட்டத்திலான இராஜதந்திர பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவதுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் சீன அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்படும்.
அத்துடன் இருநாடுகளுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் பலவும் ஜனாதிபதியின் முன்னிலையில் கைச்சாத்திடப்படவிருக்கின்றன. நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டை கவனத்தில் கொண்டே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவிருக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு இரண்டாவது முறையாக விஜயம் செய்வதுடன், கடந்தவருடம் பிற்பகுதியில் அவர் முதன்முறையாக சீனாவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி தலைமையிலான குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜி.எல் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, திறைச்சேரியின் செயலர் பி.பீ ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் ஆகியோரும் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் அமைச்சு மட்டக்குழு ஒன்று இதற்கான உத்தியோகபூர்வ விடயங்களுக்காக சவூதிக்கு சென்றிருப்பதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் திகதி முதல் ரிசானர் நபீக், சவூதியில் மரணதண்டனை கைதியாக இருந்து வருகிறார்.
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் திகதி முதல் ரிசானர் நபீக், சவூதியில் மரணதண்டனை கைதியாக இருந்து வருகிறார்.
சவூதியில் உள்ள சட்டத்தின்படி மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அந்த நாட்டின் மன்னர் பொதுமன்னிப்பு வழங்கமுடியாது.
அவ்வாறான ஒரு அதிகாரம் இறந்துப்போன குழந்தையின் பெற்றோருக்கே உள்ளது. அத்துடன் இரத்த நிதியும் அவர்களுக்கு செலுத்தப்படவேண்டும்.
இந்தநிலையில் ரிசானா நபீக் புட்டிப்பால் பருக்கிக்கொண்டிருந்த வேளையில் இறந்து போனதாக கூறப்படும் நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் ரிசானாவுக்கு பொதுமன்னிப்பை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் துறை அமைச்சர் டிலான் பெரேரா, மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று சவூதிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
1988 ஆம் ஆண்டு பிறந்த ரிசானா, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வயது தகுதியை பெற்றிருக்காத போதும், முகவரால் 1982 ஆம் ஆண்டு பிறந்தவராக காட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டு சவூதிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி;க்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்று தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், கட்சியை மீளமைப்பது தொடர்பில் பிரதிதலைவர் கரு ஜெயசூரிய இன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் யோசனை ஒன்றை கையளிக்கவுள்ளார்.
இந்தநிலையில் நாளை கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி முக்கிய தீர்மானங்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரு ஜெயசூரியவின் யோசனையில் என்ன விடயங்கள் அடங்கியிருக்கின்றன என்ற விடயம் தெரியவரவவில்லை. எனினும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிராக போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்பது அவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இதற்கிடையில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் கரு ஜெயசூரியவை கட்சியின் தலைவராக பிரேரிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மீளமைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க அரசாங்கத்துக்கு எதிராக மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் ரணில் விக்ரமசிங்க இன்று பங்கேற்கிறார்.
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, முன்கூட்டியே அரசாங்கத்தின் முன்மொழிவுகளைக் கோரி கால வரையறைகளை அறிவிக்கும் கடுமையான நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாகவும் நிமல் ஸ்ரீபால டி சில்வா பீபீசியிடம் தெரிவித்தார்.
அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் நேர்மையாக இருப்பதாகவும், அனைத்து இனமக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை முன்வைக்க தாம் முயன்று வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு தாராளமாக வரலாம் எனவும் அமைச்சர் கூறினார்.
ஆனால், 10 சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடந்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லையென்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையில் நியாயம் இருக்கத்தானே செய்கின்றது என்று கேட்டதற்கு பதிலளித்த நிமல் ஸ்ரீபால டி சில்வா,
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை நீண்டகாலம் எடுத்ததை நினைவில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தர்ப்பத்தை நழுவ விடாது மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, தாம் அவசரப்பட வில்லையென்று பீபீசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன், அரசியல் தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நோக்கம் இருந்தால் அரசாங்கம் தமது பதிலை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இனப்பிரச்சனை தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு காட்டுவதற்காக அரசாங்கம் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பேச்சுவார்த்தை மேசையிலும் அரச தரப்பினர் நேர்மையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழ் மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல விடயங்கள் தற்பொழுதும் வடக்கு கிழக்கில் நடந்துகொண்டிருப்பதாகவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
தாருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை உண்மையானது என ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ள நிலையில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் போது அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.
வெளிநாடு செல்லும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாய் திறப்பதில்லை. ஏனெனில், உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும், இதனால் அவர்களினால் பேசமுடியவில்லை.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை தொடர்பான தகவல்களை மூடி மறைப்பதற்கு அரசாங்கத் தரப்பினர் உள்நாட்டில் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும், சர்வதேச ரீதியில் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாகவும், இதனால் எந்தவொரு உறுப்பு நாடும் இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியும் எனவும் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு முதல் நாட்டில் பல்வேறு வழிகளில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் இலங்கை கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. எனினும், இதுவரையில் அவ்வாறான எந்தவொரு விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக யோசனை முன்வைக்கப்பட்டால் மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார அரசியலில் பிரவேசிக்கவிருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் தேர்தலொன்றில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் களமிறக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
கிரிக்கட் அணித்தலைவர் பதவியை விட்டு விலகிய பின் அவர் அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே எதிர்வரும் தேர்தலில் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவும் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு ஒன்றரை வருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
யுத்தகளத்தில் இருந்து போராடிய முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைவாசமும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட கே.பி. போன்றவர்களுக்கு அரசாங்கத்தால் சுகபோகமும் வழங்கப்படுகின்றது.
யுத்தகளத்தில் இருந்து போராடிய முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைவாசமும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட கே.பி. போன்றவர்களுக்கு அரசாங்கத்தால் சுகபோகமும் வழங்கப்படுகின்றது.
சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ளமை ஜனநாயகம் சிறை வைக்கப்பட்டது போன்றதே.
பொன்சேகா தொலைபேசியில் போர் செய்யவில்லை நேரடியாக யுத்தக்களத்தில் இருந்து போராடினார். இவரை விடுதலை செய்ய வேண்டும்
என போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்றது.
பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அனோமா பொன்சேகா உட்பட ஜே.வி.பி, ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்றது.
பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அனோமா பொன்சேகா உட்பட ஜே.வி.பி, ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
விசாரணை வேண்டும் எனக்கோரும் அமெரிக்காவோ பிரிட்டனோ மட்டும் உலகமாகி விடாது, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பல ஆபிரிக்க நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன, இந்தியாவும் ஆதரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியதாக செய்திக்குறிப்பு கூறுகிறது.
தவிரவும், அத்தகைய விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் அண்மைய தமிழக சட்ட மன்றத் தீர்மானம் இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் நிறைவேற்றப்பட்டதாகும். இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்.
உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது அவருக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் நாட்டு எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்கு வந்து மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ச கூறியதாக ஹெட்லைன்ஸ் டுடே தெரிவிக்கிறது.
இலங்கையின்; மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவே நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் நல்லிணக்கக் குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் விவாதிக்க விரும்புவதாக இலஙகை அரசாங்கத்துக்கு அமெரிக்கா இராஜதந்திர தகவல் அனுப்பியிருந்தது.
ஆனால் இலங்கை அரசு அதற்கு இன்னமும் எந்தப் பதிலையும் வழங்கவில்லை.
இந்த விவாதம் நடத்தப்பட்டால், இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, சனல் 4 வெளியிட்டுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் உள்ளிட்ட மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து உறுப்பு நாடுகள் கலந்துரையாடும் நிலை ஏற்படும் என்று இலங்கை அரசாங்கம் அஞ்சுகிறது.
எனவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முந்திய கூட்டத் தொடர்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரை பொறுத்திருக்குமாறு, இலங்கை அரசின் பிரதிநிதிகள் கூறிவந்தனர்.
இந்தநிலையில் தமது அறிக்கை எதிர்வரும் நவம்பரில் வெளியாகவுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது அறிக்கை எதிர்வரும் நவம்பரில் வெளியாகவுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் திங்கள் 20 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வரை இலங்கையின் பதிலுக்காக அமெரிக்கா காத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னமும் ஆறு வாரங்களில் ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர மாதம் 20ம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 வது கூட்டத்தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவது குறித்து இலங்கை அரசாங்கம் அதற்குள் பதிலளிக்க வேண்டும்.
அவ்வாறு இலங்கை அரசாங்கம் பதிலளிக்காது போனால், அமெரிக்கா தலைமையிலான அணி அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான வேறொரு தீர்மானத்தை கொண்டு வரவுள்ளன.
ஜெனிவாவிலும், வாசிங்டனிலும் உள்ள் இலங்கையின் இராஜதந்திரிகள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுவதாகவும், பொருளாதாரத் தடை மற்றும் பயணத் தடைகளை கொண்டு வருவதை உள்ளடக்கியதாகவும் அந்தத் தீர்மானம் அமையலாம் என்றும் இலங்கை இராஜதந்திரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்
எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 வது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாட இலங்கை அரசாங்கம் விருப்பம் வெளியிடாது என்று சண்டே டைம்ஸ் எதிர்வுகூறியுள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஜே.வி.பி.யின் அரசியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்ததத்திற்கும், போர் விமானங்கள் அத்துமீறி பிரவேசித்தமைக்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றதா என ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை வான், கடல் மற்றும் நிலப்பரப்பைப் பயன்படுத்தவதற்கு அமெரிக்காவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வான் பரப்புக்குள் அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் அண்மையில் ஊடுருவியிருந்தன. இந்த செயற்பாடு குறித்து அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கவுள்ளது. இது குறித்து கேட்டபோதே விமானப்படையின் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் அமெரிக்க விமானப்படையின் 7ஆவது படையணிக்கு சொந்தமான 10 போர் விமானங்களைக் கொண்ட அணியொன்று இலங்கை வான்பரப்பில் 380 கிலோமீற்றர் தூரத்துக்குள் ஊடுருவியதாக எமக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுடன் விமானப்படை தொடர்புகொண்டதையடுத்து தமது படைப்பிரிவு பயிற்சியில் ஈடுபடுவதாகவும் இதன்போதே தற்செயலாக இலங்கை வான்பரப்புக்குள் விமானங்கள் வந்ததாகவும் அவர்கள் எமக்கு அறிவித்தனர்.
இலங்கை விமானப்படை தலைமையகம் இலங்கை எல்லைக்குள் ஊடுருவிய போர் விமானங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இலங்கை எல்லைக்குள் ஊடுருவியமை தொடர்பில் அறிவித்ததையடுத்து அந்த விமானங்கள் இலங்கை எல்லைக்கு வெளியே சென்றுவிட்டன. இதுதொடர்பாக பதற்றம்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை வான் பரப்பிற்குள் அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் அண்மையில் ஊடுருவியமை குறித்து அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கவுள்ளது. வெளிவிவகார அமைச்சுக்கூடாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதகரத்திடம் இந்த ஆட்சேபனை தெரிவிக்ககப்படும் என்று சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையின் சமுத்திர வான் பரப்பின் மீதா அல்லது நிலப்பரப்பிற்கு மேலான வான் பரப்பின்மீதா ஊடுருவின என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிக்கிறோம் என சிவில் விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமல்சிறி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களின்படி, நாட்டின் வரப்பை எவரும் பயன்படுத்த வேண்டுமானால் விமானப் பயணத்திட்டம் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இதேவேளை, அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையின் வான் பரப்பிற்குள் அவ்வப்போது ஊடுருவுவதாக தம்மை இனங்காட்ட விரும்பாத விமானப்படை சிரேஷ்ட அதிகாரியொருவர் ஒப்புக்கொண்டுள்ளார். வெளியேறுமாறு அவர்களுக்கு நாம் கூறிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன என அவர் தெரிவித்தார்.
மேற்படி விமானங்கள் விமானந்தாங்கி கப்பலைத் தளமாகக் கொண்டவை எனவும் இவை அமெரிக்காவின் 7ஆவது படைப்பிரிவின் விமானங்கள் என நம்புவதற்கு காரணங்கள் உள்ளன எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையின் மிக உயர்ந்த மலையான பேதுருதாலகால மலைச்சிகரத்திலுள்ள வான் கண்காணிப்பு நிலையமே மேற்படி அமெரிக்க விமானங்களின் ஊடுருவலை முதலில் கண்டறிந்தது. அதன்பின் சிவில் விமான அதிகார சபைக்கும் இலங்கை விமானப் படைக்கும் தகவல் கொடுக்ககப்பட்டது.
இவ்விமான ஊடுருவல் விடயம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் மறுப்புத் தெரிவித்தார்.
முதன் முறையாக கியூபாவிலிருந்து அமெரிக்கா வரை கடலில் நீந்தும் 61 வயது அமெரிக்க பெண்.இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் அமெரிக்க விமானப்படையின் 7ஆவது படையணிக்கு சொந்தமான 10 போர் விமானங்களைக் கொண்ட அணியொன்று இலங்கை வான்பரப்பில் 380 கிலோமீற்றர் தூரத்துக்குள் ஊடுருவியதாக எமக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுடன் விமானப்படை தொடர்புகொண்டதையடுத்து தமது படைப்பிரிவு பயிற்சியில் ஈடுபடுவதாகவும் இதன்போதே தற்செயலாக இலங்கை வான்பரப்புக்குள் விமானங்கள் வந்ததாகவும் அவர்கள் எமக்கு அறிவித்தனர்.
இலங்கை விமானப்படை தலைமையகம் இலங்கை எல்லைக்குள் ஊடுருவிய போர் விமானங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இலங்கை எல்லைக்குள் ஊடுருவியமை தொடர்பில் அறிவித்ததையடுத்து அந்த விமானங்கள் இலங்கை எல்லைக்கு வெளியே சென்றுவிட்டன. இதுதொடர்பாக பதற்றம்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை வான் பரப்பிற்குள் அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் அண்மையில் ஊடுருவியமை குறித்து அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கவுள்ளது. வெளிவிவகார அமைச்சுக்கூடாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதகரத்திடம் இந்த ஆட்சேபனை தெரிவிக்ககப்படும் என்று சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையின் சமுத்திர வான் பரப்பின் மீதா அல்லது நிலப்பரப்பிற்கு மேலான வான் பரப்பின்மீதா ஊடுருவின என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிக்கிறோம் என சிவில் விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமல்சிறி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களின்படி, நாட்டின் வரப்பை எவரும் பயன்படுத்த வேண்டுமானால் விமானப் பயணத்திட்டம் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இதேவேளை, அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையின் வான் பரப்பிற்குள் அவ்வப்போது ஊடுருவுவதாக தம்மை இனங்காட்ட விரும்பாத விமானப்படை சிரேஷ்ட அதிகாரியொருவர் ஒப்புக்கொண்டுள்ளார். வெளியேறுமாறு அவர்களுக்கு நாம் கூறிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன என அவர் தெரிவித்தார்.
மேற்படி விமானங்கள் விமானந்தாங்கி கப்பலைத் தளமாகக் கொண்டவை எனவும் இவை அமெரிக்காவின் 7ஆவது படைப்பிரிவின் விமானங்கள் என நம்புவதற்கு காரணங்கள் உள்ளன எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையின் மிக உயர்ந்த மலையான பேதுருதாலகால மலைச்சிகரத்திலுள்ள வான் கண்காணிப்பு நிலையமே மேற்படி அமெரிக்க விமானங்களின் ஊடுருவலை முதலில் கண்டறிந்தது. அதன்பின் சிவில் விமான அதிகார சபைக்கும் இலங்கை விமானப் படைக்கும் தகவல் கொடுக்ககப்பட்டது.
இவ்விமான ஊடுருவல் விடயம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் மறுப்புத் தெரிவித்தார்.
61 வயது அமெரிக்க பெண் டயானா நியாத் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார். அவர் கியூபாவில் இருந்து அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் வரை கடலில் நீந்தி வருகிறார்.
இந்த இரு பகுதிகளை நீந்திக் கடக்கும் முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைக்கப் போகிறது. டயானா நியாத் நேற்று கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து சாதனை நீச்சலை துவக்கினார்.
அவர் புதன்கிழமை ப்ளோரிடாவின் கீ வெஸ்ட் பகுதியை வந்தடைவார். இருநாடுகள் இடையே ராஜிய உறவு இல்லாத நிலையில் டயானா நீந்துவதற்கு அனுமதி அளிக்க ஒரு வருடம் ஆலோசனை நடந்தது.
டயானா சுறா பாதுகாப்பு வளையம் இல்லாமலேயே தண்ணீரில் வேகமாக நீந்தி வருகிறார். 1970ம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற நீண்ட தூர நீச்சல் வீராங்கனையாக திகழ்ந்தவர் டயானா நியாத் ஆவார்.
டயானாவுக்கு 28 வயது இருக்கும் போது 1978ம் ஆண்டில் கியூபாவில் இருந்து அமெரிக்கா வரை நீந்தி கடக்க முயன்றார். அந்த முயற்சி உரியபலன் தரவில்லை. தனது 61 வயதில் டயானா மீண்டும் சாதனை முயற்சியை துவக்கி உள்ளார்.
சுறாக்கள் அதிகம் உள்ள தண்ணீர் பகுதியில் 103 மைல் தொலைவை ஹவானா கீவெஸ்ட் இடையே டயானா நீந்தி கடக்கிறார்.
நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 30 ஆண்டுகள் ஆனாலும் தனது வாழ்க்கை கனவான கியூபா அமெரிக்கா நீச்சலை இப்போது மேற்கொள்கிறேன் என டயானா பெருமிதத்துடன் கூறுகிறார்.
உலகின் மிக ஸ்டைலான பெண்ணாக கத்தார் மன்னரின் மனைவி தெரிவு.உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக கத்தார் நாட்டு மன்னரின் மனைவி ஷீகா மொஸா பிந்த் நாசர் தேர்வு செய்யபப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற பேஷன் பத்திரிக்கைளில் ஒன்று வானிட்டிபேர். இந்த இதழின் வாசகர்கள் சேர்ந்து உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக மொஸாவைத் தேர்வு செய்துள்ளனர்.
இஸ்லாமிய உலகைச் சேர்ந்த ஒரு பெண் இந்தப் பெருமையைப் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
கத்தார் நாடு ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும் மொஸா புர்கா அணிவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அழகழகான உடைகளையும், பேஷன் டிசைனர் உடைகளையும் அணிவது வழக்கம்.
அடிப்படை மற்றும் உயர் கல்விக்கான யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதுவராகவும் அவர் இருக்கிறார்.
உலக அளவில் சிறந்த முறையில் டிரஸ் செய்யும், ஸ்டைலான பெண்மணிகள் வரிசையில் அவருடன், பிரெஞ்சு அதிபரின் மனைவி கார்லா ப்ரூனி, மொனாக்கோ நாட்டு இளவரசி சார்லீன் ஆகியோரும் இணைந்து தேர்வாகியுள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஒரு கருத்துக் கணிப்பிலும் மொஸாவின் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டதில் 11 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவரையும் பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
ஓகியோ மாகாணத்தில் அக்ரான் நகருக்கு வெளியே காப்லேவில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்தது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் அங்கு விரைந்து சென்ற பொலிசார் துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பி ஓடுவதைக் கண்டனர்.
பின்னர் அந்த நபரை சுற்றிவளைத்த பொலிசார் அவரை சுட்டுக் கொன்றனர் என காப்லே பொலிஸ் தலைவர் மைக்கேல் மீயர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்கான நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்ற அவர் குடும்பப் பிரச்னை காரணமாக அவர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்றார்.
சீனாவில் முய்பா புயல் தாக்கியது: மக்கள் வெளியேற்றம்.சீனாவின் கிழக்கு பிராந்தியத்தை முய்பா புயல் தாக்கியது. பல ஆண்டுகளில் ஏற்பட்ட புயலை காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாக இந்த சூறைக்காற்று இருந்தது.
இந்த புயல் லியானிஸ் மாகாணத்தில் உள்ள ஜீவான்கே மற்றும் வட கொரியா இடையே இன்று மாலை தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் கன மழையால் ஷாங்காய் நகரம் பெரும் சேதம் அடைந்தது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
முய்பா புயலால் தென்கொரியாவில் மரங்கள், மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் பல ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சீனாவின் நகரமான ஷாங்காய் முய்பா புயலால் நேரடி பாதிப்பு அடையாத போதும் பலத்த காற்றால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. விளம்பரப் பலகைகள் உடைந்து விழுந்தன.
புயல் சீற்றத்தை தொடர்ந்து சீனாவில் 30 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான கப்பல்கள் தரையிலேயே நிறுத்தப்பட்டன.
முய்பா புயலால் ஏற்கனவே பிலிப்பைன்சில் 4 பேர் இறந்தனர். ஜப்பானில் உள்ள ஒகினாவோ தீவில் 27 பேர் காயம் அடைந்தனர்.
லிபியாவில் முக்கிய எண்ணெய் குழாய் பாதை தகர்ப்பு.லிபியாவில் முக்கிய எண்ணெய் குழாய் பாதையை போராட்டக்காரர்கள் தகர்த்தனர்.
கடாபிக்கு இந்த தாக்குதல் பலத்த அடியாக அமைந்தது. இந்த எண்ணெய் குழாய் தகர்ப்பால் தலைநகர் திரிபோலியில் பெரும் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
லிபியாவில் சமீப நாட்களாக மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போராட்டக்காரர்கள் முன்னேறி வருகிறார்கள். பிர்கானம் பகுதியை கைப்பற்றி விட்டதாக போராட்டக்காரர்கள் கூறினர். இந்த பகுதி துனிஷிய மற்றும் கத்தார் ஆயுதக் கப்பல் செல்ல உதவும் கடல் வழி சாலையாகும்.
போராட்டக்காரர்களின் தாக்குதல் குறித்து லிபிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காலித் கய்ம் கூறுகையில்,"மின்நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு செல்லும் எண்ணெய் குழாய் பாதையில் போராட்டக்காரர்கள் சேதம் ஏற்படுத்தி உள்ளனர். எனவே மின் உற்பத்தி திறனில் பெரும் பாதிப்பு உள்ளது" என்றார்.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் கடந்த வாரம் துவங்கிய நிலையில் 40 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் மின்உற்பத்தி நிறுத்தம் மக்களை பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது.
போராட்டக்காரர்கள் எண்ணெய் குழாய் மீது பெருமளவு சிமிண்ட் பொருளை கொட்டினர். அதனை சரிசெய்ய இரண்டு நாட்கள் ஆகும் என அரசு தெரிவித்தது.
தீவிரவாதிகள் தாக்குதலில் 2 பிரான்ஸ் வீரர்கள் மரணம்.ஆப்கானிஸ்தானில் உள்ள தாகப் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பிரான்ஸ் வீரர்கள் நேற்று மரணம் அடைந்தனர். 5 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்த மரணத்தை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆப்கானிஸ்தானில் இறந்த பிரான்ஸ் வீரர்களின் எண்ணிக்கை 72ஆக அதிகரித்தது. காபூலுக்கு வடக்கே உள்ள காபிசா மாகாணத்தில் உள்ள தாகப் பள்ளத்தாக்கில் பிரான்ஸ் வீரர்கள் இறந்த தகவலை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தான் தெற்குப் பகுதியில் நேற்று நடந்த மற்றொரு தாக்குதலில் 4 நேட்டோ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக நேட்டோ வீரர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. சனிக்கிழமையன்று காபூலின் பிரச்சனைக்கு உரிய வார்டக் பகுதியில் ஹெலிகொப்டர் மோதியது. இதில் 30 அமெரிக்க சிறப்பு நடவடிக்கை வீரர்களும், 7 ஆப்கன் வீரர்களும் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் வீரர்கள் மரணம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி அறிக்கை வெளியிட்டார். வீரர்கள் உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார். ஆப்கானிஸ்தானில் 4 ஆயிரம் பிரான்ஸ் வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப்புகழ் பெற்ற பேயர் நிறுவனம் ஜேர்மனியில் இருந்து வெளியேற முடிவு.உலகப்புகழ் பெற்ற மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பேயர் ஜேர்மனியில் இருந்து வெளியேற்றப் போவதாக எச்சரித்து உள்ளது.
ஜேர்மனியில் உள்ள அணுமின் நிலையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளதால் பேயர் நிறுவனம் இந்த முடிவை எடுத்து உள்ளது. மிகக் குறைந்த விலையில் மின்சார எரிசக்திகளை பெறுவதற்காக பேயர் நிறுவனம் ஜேர்மனியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 11ஆம் திகதி ஜப்பான் புகுஷிமாவில் ஏற்பட்ட சுனாமியால் முதன்மை அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டது. இந்த அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு பரவியதைத் தொடர்ந்து மக்களுக்கு உயிர் அபாயம் ஏற்பட்டது.
அதே போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க தற்போது உள்ள அணுமின் நிலையங்களை ஜேர்மனி மூட முடிவு செய்துள்ளது. எனவே அணு அல்லாத இதர வகை மின்சார உற்பத்திக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய வகை மின் உற்பத்தி அதிக செலவினம் மிக்கதாக இருக்கும். எனவே பேயர் போன்ற நிறுவனங்கள் எரிசக்தி செலவினத்தை கடடுப்படுத்த ஜேர்மனியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளன.
மருந்து பொருட்கள் தயாரிப்புக்கு அதிக எரிசக்தி செலவினம் செய்து மருந்துகள் விலையை ஏற்ற முடியாது. எனவே எரிசக்தி விலை குறைவாக உள்ள நாடுகளுக்கு இடம் மாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம் என பேயர் நிறுவனத்தின் தலைவர் மார்ஜின் டெக்சர்ஸ் கூறினார்.
பேயர் நிறுவனம் முதல் ஆஸ்பிரின் மருந்தை 1897ஆம் ஆண்டு உருவாக்கியது. ஜேர்மனியில் இந்நிறுவனத்திற்கு 35 ஆயிரம் ஊழியர்கள் உள்ளன. உலகம் முழுவதும் தமது நிறுவனத்தின் 4500 பணி இடங்களை குறைக்க உள்ளதாக டெக்சர் கூறினார்.
இதில் ஜேர்மனியில் 1700 ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள். பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவில் 2500 புதிய வேலைகளை இந்நிறுவனம் ஏற்படுத்துகிறது.
ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரால் உருக்குலைந்து போன இந்த தேசத்தின் கட்டமைப்பை மேம்படுத்தவும், அமைதி ஏற்படுத்தவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ள சர்வதேச ராணுவ வீரர்களில் கனடா ராணுவ வீரர்களும் உள்ளனர். கனடாவின் பெருமையை நிலைநாட்ட கனடா வீரர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பாதுகாப்புப் பணியின் போது அயல்நாடுகளில் 156 கனடா வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கனை நினைவு கூரும் வகையில் ஓவியக்கலைஞர் தேவ் சோபா 2 ஆண்டுகளுக்கு முன்னர் போரில் மரணம் அடைந்த கனடா வீரர்களின் ஓவியங்களை வரையத் துவங்கினார்.
ஆப்கானிஸ்தான் போரில் மரணம் அடைந்த விரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த ஓவியம் குறித்து மனம் நெகிழ்ந்து உள்ளனர். வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் மிக்கவர்களாக இருப்போம் என அவர்கள் கூறினர் என தேவ் சோபா கூறினார்.
இந்த ஓவியங்கள் போரில் மரணம் அடைந்த வீரர்களை என்றும் அழியாதவர்களாக மாற்றி உள்ளது என 2008ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வீரரின் பெற்றோர் கூறினர்.
இந்த ஓவியங்களை தவிர சாஸ்க்டுன் விமான நிகழ்ச்சியில் முதல் உலகப் போர் முதல் இதுவரை உயிர் நீத்த 1 லட்சத்து 10 ஆயிரம் வீரர்களை நினைவு கூறும் பாப்பி தாவரங்கள் இடம் பெறுகின்றன.
சிரியாவிலிருந்து சவுதி தூதர் திரும்ப அழைப்பு: மன்னர் கடும் கண்டனம்.சிரியாவில் அரசுக்கெதிராக அப்பாவி மக்கள் தினம் தினம் கொல்லப்படுவதை கண்டித்து சவூதி அரேபியா தனது தூதர் சிரியாவிலிருந்து திரும்ப அழைத்துள்ளது.
சிரியாவில் அதிபருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் போக்கினை கண்டித்து சவூதி அரேபியா தனது தூதரை திரும்ப அழைத்துள்ளது.
இது குறித்து சவூதி மன்னர் அப்துல்லா கூறியதாவது: சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத் மக்கள் கிளர்ச்சியை மதிக்க வேண்டும். மாறாக அப்பாவிகளை கொல்லும் இயந்திரமாக அரசு இருக்க கூடாது. உடனடியாக நிறுத்த வேண்டும்.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிரியாவின் டாமாஸ்கஸ் நகரில் உள்ள சவூதி தூதரை திரும்ப அழைத்துள்ளோம்.
மன்னரின் அறிவிப்பை அடுத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளும், சிரியாவின் பிடிவாதத்தை கண்டித்துள்ளன. முன்னதாக சிரியாவுக்கான அமெரிக்க தூதர் ரூபர்ட் போர்ட் கடந்த வியாழன் அன்று தான் திரும்ப அழைக்கப்பட்டார்.
இஸ்ரேலில் நீதி கேட்டு மக்கள் நடத்திய மெகா பேரணி.இஸ்ரேலில் வரலாறு காணாத அளவிற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு சமூக நீதி கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் மெகா பேரணியையும் நடத்தினர்.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களான சுகாதாரம், கல்வி, கடுமையான வரிவிதிப்பு, குழந்தைகள் நலம் போன்றவற்றில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நேற்று முன்தினம் தலைநகர் ஜெருசலேம் நகரில் பொதுமக்கள் ஒன்று கூடினர்.
நகர சதுக்கத்தில் திரண்ட இவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். மொத்தம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாகவும், இஸ்ரேல் வரலாற்றில் முதன் முதலாக 3 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டது இதுவே முதல் முறை என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் வரிவிதிப்பு, அரசு செலவினங்கள் குறித்து வாரந்தோறும் அமைச்சரவை கூட்டத்தினை கூட்டி விவாதித்து வருகிறார்.
எனினும் வீட்டுவரி பலமடங்கு உயர்ந்துவிட்டதாகவும், வாழ்க்கை செலவினம் பலமடங்கு அதிகரித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே இஸ்ரேலில் தேசிய பட்ஜெட்டில் அதிகப்படியான செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்கள் விமர்சனத்தின் எதிரொலி: நினைவுச் சின்னத்தை அகற்றிய சீனா.இரண்டாம் உலகப் போரின் போது இறந்த ஜப்பான் மக்களின் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சின்னமானது சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் பாங்ஷெங் பகுதியில் ஜப்பானிய முதலீடுகளைக் கவரும் வகையில் அம்மாகாண அரசு ஒரு லட்சம் டொலர் செலவு செய்து அமைத்தது.
இதுகுறித்து சீனாவின் பிரபல(weibo.com) என்ற வலைப்பூவில் மக்கள் கடும் விமர்சனம் செய்திருந்தனர். இதையடுத்து அந்த நினைவுச் சின்னம் அகற்றப்பட்டது.
நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு.ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 31 அமெரிக்க வீரர்கள் உட்பட 38 பேர் பலியானது குறித்து சர்வதேச பாதுகாப்பு துணை நிலைப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கனின் மைதான் வார்டாக் மாகாணத்தின் ஸ்யேதாபாத் பகுதியில் நேற்று நேட்டோ ஹெலிகாப்டர் ஒன்று தலிபான்களைத் தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
அதில் 31 அமெரிக்க வீரர்கள், ஏழு ஆப்கன் வீரர்கள் இருந்தனர். அப்போது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் பலியாயினர்.
ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் வெளியிட்ட அறிக்கையில் இத்தாக்குதல் தலிபான்களால் நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
பலியான வீரர்களுக்கு நேற்று தலைநகர் காபூலில் அஞ்சலி செலுத்திய ஐ.எஸ்.ஏ.எப் தளபதி ஜான் ஆர் ஆலன் விபத்து நடந்தது பற்றி தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பலியான அமெரிக்க வீரர்களுக்கு நேற்று அமெரிக்காவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.